
அனைத்து சாய் அன்பர்களுக்கும் மற்றும் ஆன்மிக அன்பர்களுக்கும், ஷிர்டி சாய்பாபா-வின் பேச்சு சூத்திரங்களை போன்றது; அர்த்தமோ மிகவும் கம்பிரமானது; வெகு ஆழமான வியாபகமுள்ளது; இருப்பினும் பேச்சு சுருக்கமானது, அவரது திரு வாயின் முலம் உதிர்ந்த உபதேசங்களை, தினமும் பாபாவின் ஒரு செய்தி-யை இந்த வலைத்தளத்தில் தமிழில் வெளியிடப்படும். சாயி அன்பர்கள் கிழே தங்களது இ-மெயில் முகவரியை பதிவு செய்யலாம். ஓம் சாய் ராம்.
Thursday, December 30, 2010
அந்தரங்க வழிபாடு
அந்தரங்க வழிபாடு, ஒரு நூதன வழிபாட்டை ஹேமத்பந்த் நமக்கு கொடுத்திருக்கிறார். சத்குரு வின் பாதங்களை கழுவும் வென்நீராக நமது ஆனந்தக் கண்ணீரை உபயோகித்து, பரிசுத்தமான அன்பு என்னும் சந்தனத்தை அவர் மேனியில் பூசிவிட்டு, உண்மை, நம்பிக்கை என்னும் உடையை அவர் மேனிக்கு உடுத்தி. "ஒருமை மனது" என்னும் கனியை அவருக்கு சமர்பிப்போம். சத்ச்சரித்ரா - 26
Wednesday, December 29, 2010
சாயி-யின் முன்னால் எவன்
சாயி-யின் முன்னால் எவன் சாஷ்டாங்க சரணம் செய்து, தனது இதயத்தையும் உயிரையும் அவரிடம் சமர்பிக்கிறானோ, அவன் வாழ்கையின் நான்கு முக்கிய குறிக்கோளாகிய அறம் (தருமம்), பொருள் (செல்வம்), இன்பம் (ஆசை), வீடு (முக்தி) இவைகளை எளிதில் அடைகிறான்- ஷிர்டி சாய்பாபா (சாயி சத்ச்சரித்ரா 6 )
Tuesday, December 28, 2010
Monday, December 27, 2010
உனக்கு ஒவ்வொரு
உனக்கு ஒவ்வொரு வினாடியும் என்மேல் நம்பிக்கையுண்டாவதற்கு, நான் நீங்கள் செய்யும் எல்லா வேலைகளிலும் உதவி செய்கிறேன். - ஷிர்டி சாய்பாபா
Sunday, December 26, 2010
Saturday, December 25, 2010
என்னை எப்படி ஆராதிக்க
என்னை எப்படி ஆராதிக்க வேண்டும், எப்படி அர்ச்சனை செய்யவேண்டும் என்ற விஷயத்தில் நீங்கள் குழப்பம் அடையவேண்டாம். நான் உங்களிடமிருந்து எதிர்பார்ப்பது மிகுந்த விஸ்வாசமே. - ஷிர்டி சாய்பாபா
Friday, December 24, 2010
உங்கள் கோரிக்கைகளை
உங்கள் கோரிக்கைகளை நிறைவேறச் செய்யவே இரவும், பகலும் நான் உழைக்கிறேன். இதை தெரிந்து கொண்டு பாரத்தை என் மேல் சுமத்துபவனின் காரியங்கள் விரைவாக நிறைவேற்றபடுகின்றன. ஷிர்டி சாய்பாபா
Thursday, December 23, 2010
யார் எப்படி என்னை ஆராதிக்கிறார்களோ
யார் எப்படி என்னை ஆராதிக்கிறார்களோ அவர்களுக்கு அதே விதத்தில் நான் கிடைக்கிறேன். விஸ்வாசம் இருக்கும் இடத்தில நான் விஸ்வாசமாகவே இருப்பேன். என்னுடைய மூலசொருபமே விஸ்வாசமாகும்.- ஷிர்டி சாய்பாபா
Tuesday, December 21, 2010
மனதை லயமாக்கு
உன் கடமைகளான தர்மத்தை நீ செய், உன் கரங்களால் வேலை செய், வாயினால் பேசு, கண்களால் பார், அவ்விதமாக உன் தேவைகளை பூர்த்தி செய்துகொள். மனதை மட்டும் என்னிடம் லயமாக்கு. - ஷிரிடி சாய்பாபா
நான் இந்த பெளதீக உடலுடன்
நான் இந்த பெளதீக உடலுடன் ஷிரிடியில் மாத்திரம் இருக்கிறேன் என்ற எண்ணத்தை விட்டு விடுங்கள். நான் எங்கும் வியாபித்துள்ளேன்- ஷிர்டி சாய்பாபா.
Monday, December 20, 2010
Subscribe to:
Posts (Atom)
விசுவாசத்தின் ஆழத்திற்க்கேற்றவாறு பக்தனின் பக்தியை கௌரவிக்கிறார் பாபா !
பாபா, தன் பக்தன் தன்மேல் வைக்கும் "நம்பிக்கை மற்றும் விசுவாசத்தின் ஆழத்திற்கேற்றவாறு", அவருக்கு மிகச்சிறந்த அனுபவங்களைக் கொடுத்த...
