
அனைத்து சாய் அன்பர்களுக்கும் மற்றும் ஆன்மிக அன்பர்களுக்கும், ஷிர்டி சாய்பாபா-வின் பேச்சு சூத்திரங்களை போன்றது; அர்த்தமோ மிகவும் கம்பிரமானது; வெகு ஆழமான வியாபகமுள்ளது; இருப்பினும் பேச்சு சுருக்கமானது, அவரது திரு வாயின் முலம் உதிர்ந்த உபதேசங்களை, தினமும் பாபாவின் ஒரு செய்தி-யை இந்த வலைத்தளத்தில் தமிழில் வெளியிடப்படும். சாயி அன்பர்கள் கிழே தங்களது இ-மெயில் முகவரியை பதிவு செய்யலாம். ஓம் சாய் ராம்.
Monday, January 31, 2011
நான் அன்புக்கு கட்டுப்பட்டு
நான் அன்புக்கு கட்டுப்பட்டு இருப்பவன். என்னிடம் உன்னை சேர்க்கும் எளிய வழி இதுவே. உண்மையை சொல்கிறேன். என் வார்த்தைகளை நம்பு. -ஷிர்டி சாய்பாபா
Sunday, January 30, 2011
உனக்கும், எனக்கும்
உனக்கும், எனக்கும் இடையே உள்ள பந்தத்தை வார்த்தைகளால் வர்ணிக்க இயலாது. நான் ஒரு பக்கிரி, வீடு வாசல் இல்லாதவன். மனைவி, மக்களும் இல்லை. என்னை நான் மறந்து தியான நிலையில் இருக்கும் தருவாயிலும் கூட உங்களை மறக்கமுடியாமல் இருக்கிறேன். -ஷிர்டி சாய்பாபா
Saturday, January 29, 2011
Friday, January 28, 2011
பசியாக இருக்கிறது
பசியாக இருக்கிறது சாப்பாடு போடுங்கள் என்று யாராவது உன் வீட்டு வாசல் முன் நின்று கேட்டால், அந்த பசிக்கிறவன் உனக்கு மிகப்பெரிய உதவி செய்வதற்காக வந்திருக்கிறான் என்பதை மறவாதே.- ஷிர்டி சாய்பாபா.
Thursday, January 27, 2011
சுகத்தில் இறைவனுக்கு
சுகத்தில் இறைவனுக்கு சம்மந்தம் இல்லை. துக்கத்தில் இருக்கும்போது உன் இஷ்ட தெய்வம் யாராய் இருப்பாரோ அவர் உனக்கு தாங்கும் சக்தியை ரகசியமாகக் கொடுப்பார். இறைவன் கருணை வடிவானவர். இதை மறந்து விடாதே.- ஷிர்டி சாய்பாபா
Wednesday, January 26, 2011
நான் உன்னுடனேயே
நான் உன்னுடனேயே, உனக்குள்ளே, மற்றும் நீ பார்க்கும் அனைத்துமாய் இருக்கிறேன். நீ என்னவாக இருந்தாலும், என்ன செய்துகொண்டிருந்தாலும். ஷிர்டி சாய்பாபா
Tuesday, January 25, 2011
Monday, January 24, 2011
என்னை சரணாகதி
என்னை சரணாகதி அடைந்தவர்கள், துன்பத்தில் விழும் தருவாயில் எனது நான்கு கரங்களையும் கொடுத்து அவனை மேல எழசெய்வேன். என்றும் அவனை கண் இமை காப்பது போல் காப்பேன். ஷிர்டி சாய்பாபா.
Sunday, January 23, 2011
Saturday, January 22, 2011
ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு
ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு மனோபாவம் இருக்கும், எங்கு உன் மனம் சாந்தி அடைகிறதோ அங்கு இறைவன் இருப்பது போலவேயாகும். இதை அறிந்து நடப்பது நலனை கொடுக்கும். ஷிர்டி சாய்பாபா
Friday, January 21, 2011
இறைவன் பக்தனுக்கு தாசன்
இறைவன் பக்தனுக்கு தாசன். பக்தன் கானம் செய்து கொண்டிருப்பதால் இறைவனின் இருப்பு உலகிற்கு தெரிய வருகிறது. பக்தன் இறைவனின் தூதுவன். ஷிர்டி சாய்பாபா
Thursday, January 20, 2011
யாராவது பண உதவி கேட்டோ
யாராவது பண உதவி கேட்டோ, பசியின் காரணமாக உணவு கேட்டோ, அல்லது உடைக்காகவோ,அல்லது இருக்க இடம் கேட்டோ உன்னிடம் வரலாம்.ருணானுபந்தம் இருந்தாலொழிய ஒருவரிடம் மற்றவர் வரமாட்டார். அப்படி யாராகிலும் வந்தால், உன்னால் முடிந்தால் உதவு, இல்லையேல் மிருதுவான மொழியில் பேசி அனுப்பிவிடு, கண்டிப்புடன் பேசி அவர்கள் இதயத்தில் காயம் உண்டாகாதே. ஷிர்டி சாய்பாபா
Wednesday, January 19, 2011
என் பக்தன் ஆயிரம்
என் பக்தன் ஆயிரம் மயில்களுக்கு அப்பால் இருந்தாலும், ஒரு குருவி யின் கால்களுக்கு கயிறு கட்டி இழுப்பது போல். இந்த மசுதி தாயிடம் இழுத்துக்கொண்டு வருவேன். ஷிர்டி சாய்பாபா
Tuesday, January 18, 2011
குலம் ஏதானாலும் அனைவரிலும்
குலம் ஏதானாலும் அனைவரிலும் இருக்கும் சீழ், ரத்தம் ஒன்றே. உண்ணும் உணவும் ஒன்றே. குலப்பிராப்பால் ஒருவர் உயர்ந்தவர் என்ற எண்ணம், பரிபூரண அஞ்ஞானத்தால் உண்டாகிறது என்பது பொருந்தும். ஷிர்டி சாய்பாபா
Monday, January 17, 2011
என் உடல், மனம்
என் உடல், மனம், புத்தி குருவின் ஆதீனத்தில் உள்ளன. நான் சுதந்திரமானவன் அல்லன் என்ற எண்ணத்துடன் குருசேவை செய்யுங்கள். ஷிர்டி சாய்பாபா
Sunday, January 16, 2011
பசுவின் நிறம் எதுவாக
பசுவின் நிறம் எதுவாக இருந்தாலும் சுத்தமான பாலையே தருகிறது என்ற எண்ணம் இருந்தால், துவரகமாய் அப்படிப்பட்டவர்களுக்கு பாதுகாப்பாக இருக்கும்.-ஷிர்டி சாய்பாபா
Saturday, January 15, 2011
Friday, January 14, 2011
சர்வம் சாயிமயம்
சர்வம் சாயிமயம் என்ற எண்ணம் உன்னில் இருந்தால் நான் தனியாக எங்கிருக்க முடியும்? உன் இதய பீடமே என் இருப்பிடம். ஷிர்டி சாய்பாபா
Thursday, January 13, 2011
வார்த்தைகளால் மனிதர்களையோ
வார்த்தைகளால் மனிதர்களையோ, ஜீவராசிகளையோ, அடித்தோ இம்சிப்பதால் எனக்கு மிகவும் வருத்தம் ஏற்படுகிறது. ஷிர்டி சாய்பாபா
Tuesday, January 11, 2011
Monday, January 10, 2011
மண்தட்டில் உயிரினங்களுக்கு
மண்தட்டில் உயிரினங்களுக்கு வைக்கப்படும் ஒரு கவளம் உணவு, எனக்கு தங்கத்தட்டில் வைப்பதற்கு சமம்.- ஷிர்டி சாய்பாபா
Sunday, January 9, 2011
உன் நட்பு, காதல்
உன் நட்பு, காதல், அனுராகம், விஸ்வாசம் முதலியவற்றை என் மேல் வைத்திரு, நன் உன் கண் இமையைப் போன்றவன். உன் முயற்சி இல்லாமலேயே நான் உன்னை காப்பாற்றுவேன். ஷிர்டி சாய்பாபா
Saturday, January 8, 2011
யார் எனக்கு உணவு
யார் எனக்கு உணவு அளிக்காமல் உட்கொள்ளமாட்டார்களோ, யார் என்னை எல்லா காரியங்களிலும் நினைத்துகொள்வார்களோ, அவர்களின் முன் புறத்திலும், பின் புறத்திலும், நான் தென்படுவேன்.- ஷிர்டி சாய்பாபா
Friday, January 7, 2011
துன்பம் வந்தபோதும்
துன்பம் வந்தபோதும் கூட என் மீது நம்பிக்கை குறைவுபடாமல் இருந்தால் அவர்களுக்கு என் உதவி கண்டிப்பாக கிடைக்கும்.-ஷிர்டி சாய்பாபா
Thursday, January 6, 2011
Wednesday, January 5, 2011
எனக்கு கேட்கும்படி
எனக்கு கேட்கும்படி மிக சப்தமாக நீ என்னை அழைக்கிறாய். நான் தெரியாமல் மிக ரகசியமாக உன்னிடம் வருகிறேன்- ஷிர்டி சாய்பாபா
Tuesday, January 4, 2011
மனதில் ஏதேதோ
மனதில் ஏதேதோ கோரிக்கைகளை வைத்துகொண்டு என்னை ஆராதிக்கிறாய். அந்த கோரிக்கைகளின் நன்னமை, தீமை உனக்கு தெரியாது, நிறைவேற வேண்டும் என்ற ஆவல் மட்டுமே உன்னிடம் இருக்கிறது. உனக்கு நன்மை பயக்கும் கோரிக்கைகளை நான் நிறைவேற்றுகிறேன். ஷிர்டி சாய்பாபா
Monday, January 3, 2011
மாயை கூட
மாயை கூட இறைவனின் அம்சமே, மாயையின் காரணமாக என்னை பார்க்கமுடியாமல் இருகின்றனர். என்னை எப்போதும் ஸ்மரணை செய்துகொண்டிருந்தால் மாயை மாயமாய் மறைந்தேபோகும்- ஷிர்டி சாய்பாபா
Sunday, January 2, 2011
நீ எந்த காரியத்தை செய்து கொண்டிருந்தாலும்
நீ எந்த காரியத்தை செய்து கொண்டிருந்தாலும், எங்கிருந்தாலும், எதை செய்தாலும் என்னையே ஸ்மரணை செய்து, தியானம் செய்து உன் வேலையை செய், அதை நான் வெற்றி அடையும் படி செய்வேன். -ஷிர்டி சாய்பாபா
Saturday, January 1, 2011
உன் இதயத்தை தூய்மை படுத்திகொள்
காமம், குரோதம், மதம், மாச்சரியம் ஆகியவற்றிற்கு தூரமாக இருந்து இயங்குபவன் உத்தம புருஷன் ஆகிறான். உன் இதயத்தில் என்னை ஸ்தாபிதம் செய். என் சுத்த தத்துவ வடிவத்தால் உன் இதயத்தை தூய்மை படுத்திகொள்- ஷிர்டி சாய்பாபா
Subscribe to:
Posts (Atom)
Fake Photographs displayed in Web Media and Social Networks as original Photographs of Shri Sai Baba
Fake Photographs displayed in Web Media and Social Networks as original Photographs of Shri Sai Baba http://www.shirdisaibabasayings.com ...

