
அனைத்து சாய் அன்பர்களுக்கும் மற்றும் ஆன்மிக அன்பர்களுக்கும், ஷிர்டி சாய்பாபா-வின் பேச்சு சூத்திரங்களை போன்றது; அர்த்தமோ மிகவும் கம்பிரமானது; வெகு ஆழமான வியாபகமுள்ளது; இருப்பினும் பேச்சு சுருக்கமானது, அவரது திரு வாயின் முலம் உதிர்ந்த உபதேசங்களை, தினமும் பாபாவின் ஒரு செய்தி-யை இந்த வலைத்தளத்தில் தமிழில் வெளியிடப்படும். சாயி அன்பர்கள் கிழே தங்களது இ-மெயில் முகவரியை பதிவு செய்யலாம். ஓம் சாய் ராம்.
Thursday, January 20, 2011
யாராவது பண உதவி கேட்டோ
யாராவது பண உதவி கேட்டோ, பசியின் காரணமாக உணவு கேட்டோ, அல்லது உடைக்காகவோ,அல்லது இருக்க இடம் கேட்டோ உன்னிடம் வரலாம்.ருணானுபந்தம் இருந்தாலொழிய ஒருவரிடம் மற்றவர் வரமாட்டார். அப்படி யாராகிலும் வந்தால், உன்னால் முடிந்தால் உதவு, இல்லையேல் மிருதுவான மொழியில் பேசி அனுப்பிவிடு, கண்டிப்புடன் பேசி அவர்கள் இதயத்தில் காயம் உண்டாகாதே. ஷிர்டி சாய்பாபா
எனது பார்வை என்னை நேசிப்பவர்கள் மீது எப்போதும் இருக்கும்
பாபாவின் அருட்கரங்களால் அளித்த ஒரு விபூதிப் பொட்டலத்தை ஷாமா தன் வீட்டு பூஜையறையில் பத்திரமாக வைத்திருந்தார். ஒருமுறை அவர் வீட்டை பழுதுபார்த...

