Thursday, March 31, 2011

உறுதி மொழி


"நான் உங்களுடைய அடிமைக்கு அடிமை, உங்களிடம், உங்களிடம் மாத்திரமே விசுவாசம் வைப்பதில் நான் நிறைவு பெறுகிறேன்". பிறகு அவர் செய்யும் அற்புதங்களை பாருங்கள், உம்மீது கருணைகூர்ந்து உம்மை அலைகளுக்கு மேலே தூக்கிப் பிடித்துக்கொள்வார்.  ஸ்ரீ சாயி சத்ச்சரித்ரா.

Wednesday, March 30, 2011

பொறுமை தேவை


ஒரு கணத்தில் உன் மனம் சபலமடைந்தால் (நம்பிக்கை இழந்தால்) நான் என்ன செய்ய முடியும்? குழந்தை மடிமீது இருந்தால் அல்லவா தாய் பாலூட்ட முடியும்? பொறுமை மிகவும் தேவை. -ஷிர்டி சாய்பாபா

Tuesday, March 29, 2011

கஜானாஎன்னுடைய கஜானா நிரம்பியிருக்கிறது; யார் வந்து எதை வேண்டினாலும் கொடுக்கிறேன். ஆனால், வாங்கிக்கொள்பவருடைய தகுதியை நிர்ணயித்து அவரால் சமாளிக்கமுடிந்த அளவே கொடுப்பேன். -ஷிர்டி சாய்பாபா  

Monday, March 28, 2011

பாபா-விற்கும் மாயை


"எதற்கும் அடங்காத மாயை என்னை விடாது துன்புறுத்துகிறது, நான் அவளை உதறிவிட்டாலும், அவள் என்னை உதறாது நிரந்தரமாக ஒட்டிக்கொள்கிறாள்", இடைவிடாது சாயி பஜனையின்றி மாயையிலிருந்து விடுதலை கிடைக்காது   -ஷிர்டி சாய்பாபா.   

Sunday, March 27, 2011

தாஸ்கணு

பாபாவை தரிசனம் செய்யுங்கள்; அவருடைய பாதங்களில் வந்தனம் செய்யுங்கள்; உம்முடைய உள்ளத்து ஆசையை அவரிடம் விளக்கமாகச் சொல்லுங்கள். அவர் உங்களை ஆசீர்வாதம் செய்வார். - தாஸ்கணு, ஸ்ரீ சாயி சத்சரித்ரா.

Saturday, March 26, 2011

ரகசியம்


ஓய்வெடுப்பதோ, பேசுவதோ, நடப்பதோ, காலையிலும், மாலையிலும் ஒரு சுற்று எங்காவது போய் வருவதோ, எந்தக் காரியமாக இருந்தாலும் சரி, ஒவ்வொரு கணமும் அசைக்கமுடியாத சிரத்தைக் (நம்பிக்கையைக்) கடைபிடித்தால், பக்தன் தான் விரும்பிய அனைத்திலும் வெற்றிபெறுவான். -ஷிர்டி சாய்பாபா

Friday, March 25, 2011

தரிசனம்


நான் அழைக்காமல் எவரும் இங்கு வருவதில்லை. -ஷிர்டி சாய்பாபா

Thursday, March 24, 2011

மேகாவை சாடுதல்

"ஒ, நீரோ உயர்குலத்து பிராமணன். நானோ நீசனிலும் நீசனான யவனன்(முஸ்லிம்). உம்மேல் தீட்டு ஒட்டிக்கொண்டுவிடும். போம் வெளியே; இக்கணமே திரும்பிவிடும்!" இந்தக் கோபம் என்னவோ ஒரு நடிப்புதான்; உள்ளே இதயம் தயையால் நிரம்பி வழிந்துகொண்டிருந்தது. இதன் முலம் பாபா மேகாவின் மனத்தில் நினைத்ததை அவருக்கு புரியவைத்தார். - ஸ்ரீ சாயி சத்ச்சரித்ரா.

Wednesday, March 23, 2011

சுயநலம்


நானும் கூட என்னிடம் வருகின்ற சாந்தியற்ற மனத்தை உடையவர்களுக்கு நல்ல கதைகளை சொல்லுகிறேன், லீலைகளை செய்துகாட்டுவேன். அது ஒரு ஆனந்தம். தாய்க்கு சிறுவனின் விஷயத்தில் இருக்கும் சுயநலமே என்னிலும் இருக்கும். - ஷிர்டி சாய்பாபா

Tuesday, March 22, 2011

பந்தம்


இந்த பந்தம் நிரந்தரமாக இருக்க வேண்டுமானால் வேறுமார்க்கம் இல்லை, நீங்கள் என்னை பரிபுரணமாக நம்புங்கள். ஒளிவு, மறைவு விளையாட்டுகள் என்னிடம் வேண்டாம். யாருடைய இதயக் கதவுகள் எனக்காக திருந்துள்ளனவோ, அவர்களுடைய இதயத்தில் நானே நிறைந்திருப்பேன். ஷிர்டி சாய்பாபா 

Monday, March 21, 2011

ஷாமா

 ஷாமா கேட்டார், "ஒ, தேவா ! இதென்ன உம்முடைய புரிந்துகொள்ளமுடியாத விளையாட்டு ! எங்களை நிம்மதியாக தூங்கவும் விடமாட்டேன் என்கிறீர்கள். தூக்கத்திலும் எங்களை உணர்ச்சிவசப்படுத்தி அழவைகிறீர்கள். ஸ்ரீ சாயி சத்சரித்ரா - 35

Sunday, March 20, 2011

தட்சிணை


எனக்கு யார் ஒரு ரூபாய் தட்சிணையாகக் கொடுக்கிறாரோ, அவருக்கு நான் 10 மடங்கு திருப்பிக் கொடுக்கவேண்டும். ஷிர்டி சாய்பாபா

Saturday, March 19, 2011

பலன்


உனக்கு கிடைக்கும் பலன் கடுகளவு பரிமாணத்தில் இருப்பினும், ஒரு பனங்காய் அளவில் உனக்கு தருவேன். நான் விக்கிரமாக இருக்கிறேன் என்று நினைத்தால் நான் என்ன செய்ய முடியும்? -ஷிர்டி சாய்பாபா

Friday, March 18, 2011

ராமனும், ரஹீமும்


 ஒ! என்ன மூடத்தனமான குழந்தைகள் நீங்கள்! நட்புறவின் பந்தங்கள் ஹிந்துக்களையும், முஸ்லிம்களையும் ஒன்றுசேர்க்கட்டும். ஸ்ரீ சாயி ஸத்சரித்ரா.

Thursday, March 17, 2011

காலத்தை கடந்தவர்


பாபாவை ஒரு திருடு சம்பந்தமாக விசாரிக்க ஷிர்டி கிராமத்துக்கு ஒரு கமிஷன் வந்தது. 
கேள்வி:- தங்கள் பெயர்?
பாபா :- சாயிபாபா என்று அழைகின்றனர்
கேள்வி:- தங்கள் தந்தையின் பெயர்?
பாபா :- அதுவும் சாயிபாபா
கேள்வி :- இனம், குலம்
பாபா :- ஆண்டவன் 
கேள்வி :- வயது?
பாபா :- லக்ஷக்கணக்கான ஆண்டுகள். 
காலாதீதரான (காலத்தை கடந்தவரான) அவரை அறிவது எங்கனம்? அவரே கருணைகூர்ந்து அறியவைதால்தான் உண்டு. ஸ்ரீ சாயி சத்சரித்ரா

Wednesday, March 16, 2011

இறந்தகால, நிகழ்கால, எதிர்கால


யார் பாபா-வை  தரிசனம் செய்யச் சென்றாலும், அவருடைய இறந்தகால, நிகழ்கால, எதிர்கால ரகசியங்கள் அனைத்தையும் அவர் கேட்காமலேயே அவருக்கு சொல்லப்படும். ஸ்ரீ சாயி சத்சரித்ரா - 10  

Tuesday, March 15, 2011

ஆடம்பரம்


நூறு இடங்களில் தையல்போட்ட கப்னியை (குர்தா) அணிந்து கொண்டும், கரடுமுரடான கோணிப்பையை ஆசனமாகவும், படுக்கையாகவும், செங்கல்லை தலையணையாகவும் உபயோகித்துக்  கொண்டிருந்தார், அவர் என்றும் ஆடம்பரத்தை விரும்பவில்லை.
ஸ்ரீ சாய் சத்சரித்ரா - 10     

Monday, March 14, 2011

பொறுமை, நம்பிக்கை


பாபா யோகாசனத்தையோ, பிராணாயாமத்தையோ, இந்திரியங்களைப் பலவந்தமாக அடக்குவதையோ, மந்திரத்தையோ, தந்திரத்தையோ, யந்திர பூஜையையோ, யாருக்கும் போதிக்கவோ, விதிக்கவோ இல்லை. பாபா வின்  ஓரே போதனை பொறுமை மற்றும் நம்பிக்கை. ஸ்ரீ சாயி சத்சரித்ரா - 10  

Sunday, March 13, 2011

காமமும், குரோதமும்


பாபா எப்பொழுதும் இடுப்பில் ஒரு லங்கோடு (துண்டு) உடுத்திக்கொண்டிருந்தார். சிறுநீர் கழிப்பதை தவிர பிறவி உறுப்புக்கு வேறு வேலையே இல்லை. காமமும், குரோதமும் அவருடைய காலடிகளில் ஓய்வெடுத்தன. ஸ்ரீ சாய் சத்சரித்ரா - 10 

Saturday, March 12, 2011

திடமான பற்று


என் மீது உங்கள் நம்பிக்கையில் திடமான பற்றுதல் இல்லாதபோது என் வார்த்தைகள் நல்ல பலன்களை தராது. குரு சரணங்கள் மீது தலை வைத்து, அவர்கள் வார்த்தைகள் மேல் நம்பிக்கை வைத்தால் நிறைவேறாத காரியம் ஒன்றும் இருக்க முடியாது. - ஷிர்டி சாய்பாபா


நிலநடுக்கப் பிரார்த்தனை.

சாயி அன்பர்களே,

ஜப்பானில் நிகழ்ந்த நில நடுக்கத்திற்காக, பாதிக்கப்பட்ட அனைத்து மக்களின் துயர் துடைக்க, அவர்கள் இந்த துயரத்திலிருந்து மிள, இனி இப்படி ஒரு சம்பவம் நடக்காமல் இருக்க, மனித உயிர்களை காக்க, பஞ்ச சக்தியையும் தன் வசத்தில் வைத்துள்ள சத்குரு ஷிர்டி சாய்பாபா-வை பிரார்த்தனை செய்வோம். 

ஓம் சாய் ராம்.    

Friday, March 11, 2011

பாபா உன்னுடையவர்

 
குழந்தை தாயின் கர்ப்பத்தில் எவ்வளவு தூரத்தில் இருக்குமோ அவ்வளவு தூரத்திலேயே நானும் இருப்பேன். நான் உங்களுடையவன் என்று திடமான விஸ்வாசத்துடன் என்னை நம்புங்கள். உங்களை விட்டு ஒரு நொடியும் எங்கும் போகமாட்டேன். பாபா உன்னுடையவர். உங்களுடனேயே இருப்பார். ஷிர்டி சாய்பாபா

Thursday, March 10, 2011

எளிமையின் உருவம்....


"உங்களுடைய மஹா கருணையினால்தான் நான் உங்களை சந்திக்க நேர்ந்தது. உங்களுடைய மலத்தில் இருக்கும் புழு நான். இந்த அந்தஸ்தினால் நான் மிக்க பாக்கியசாலி. உங்களுடைய தரிசனத்தை நாடுகிறேன்" - ஷிர்டி சாய்பாபா - ஸ்ரீ சாயி சத்சரித்ரா அத்தியாயம் - 10
சத்குரு சாயிநாதர் எவ்வளவு அடக்கமுடையவராக இருந்தார்! எளிமையாக இருப்பதற்கு எவ்வளவு ஆவல்! எவ்வளவு தூய்மையான, அஹங்காரமற்ற நிலை! என்பதற்கு சிறந்த உதாரணம். ஓம் சாய் ராம்.

Wednesday, March 9, 2011

சீரஞ்சீவி


எனக்கு பிறவியும் இல்லை, மரணமும் இல்லை, என்றும் இருப்பவன். மனிதர்கள் பிறப்பதற்கு முன்பும் இருந்தேன், இப்போதும் இருக்கிறேன், எப்போதும் இருப்பேன்.-ஷிர்டி சாய்பாபா  

Tuesday, March 8, 2011

மசூதி


ஏதோ ஒரு பிறவியில் புண்ணியம் செய்திருந்தால் மட்டுமே இந்த மசூதித் தாயின் படிகளில் காலடி எடுத்து வைக்க முடியும். அவ்விதமாக அவர்கள் மசூதி படிகளின் மேல் காலடி எடுத்து வைத்த மறு நிமிடமே அவர்கள் துன்பம் ஒரு முடிவை அடைகிறது. - ஷிர்டி சாய்பாபா

Monday, March 7, 2011

ஒருமித்த பார்வைஎன்னை முழுமையாக சரணடைந்தவர்கள் எங்கிருந்த போதும் என் ஒருமித்த பார்வை அவர்கள் மீதே இருக்கும். தங்களுடைய காரியமாக அவர்கள் எங்கு சென்றாலும், அவர்களுடன் பாதுகாவலனாக இருப்பேன். - ஷிர்டி சாய்பாபா.

Sunday, March 6, 2011

முக்தன்

 பசி, உறக்கம், பயம், காமம் இந்த நான்கு காரியங்களுக்கும் ஆயுள் முடிந்துவிட்டால் மற்ற ஜீவர்களுக்கும், மனிதர்களுக்கும் வித்யாசம் என்ன இருக்க முடியும்? முக்தன் (இறைவனை அடைவதற்கு) ஆவதற்கு மானிடருக்கு மாத்திரமே அவகாசம் உள்ளது. - ஷிர்டி சாய்பாபா

Saturday, March 5, 2011

தாயைப் போன்றவன்

 \

உன் கோரிக்கைகள் நிறைவேறாத விஷயத்திலும் கூட நான் தாயைப் போன்றவனே. கோபித்து உட்கார்ந்தால் தாய் தாலாட்டி உணவூட்டுகிறாள். நானும் அப்படியே. இவ்விதமாக நீ என்னை அறிய முடிந்தால் என் மீது உன் நம்பிக்கை குறையாது. -ஷிர்டி சாய்பாபா.  

Friday, March 4, 2011

ஒவ்வொரு நிமிடமும்என் பக்தர்களை ஒவ்வொரு நிமிடமும் கவனித்துக் காப்பாற்றிக்கொண்டு வருகிறேன். அவர்கள் எந்த வேலையாக சென்றாலும், அவர்களை விட முன்பாகவே நான் அங்கு சென்று இருப்பது அவர்களுக்கு ஆச்சர்யத்தை உண்டாக்கும். - ஷிர்டி சாய்பாபா

Thursday, March 3, 2011

கண நேரம்உன் வேலையாகவே வந்த எனக்கு, வேறு வேலை என்ன இருக்க முடியும்? கண நேரம் அமைதியாய் அமர்ந்து ஆலோசனை செய். -ஷிர்டி சாய்பாபா 

Wednesday, March 2, 2011

உடல்துர்வாசனைகள் நிறைந்த இந்த உடலை பார்த்து பரவசமடைதல் உண்மையில் அறிவற்ற செயலேயல்லவா? இந்த உடல் சிறிது காலத்தில் நசிந்து விடும். ஆனால் மங்களம் நிறைந்த இறைவனை அடைவதற்கு இந்த உடலே உற்ற சாதனமாகும்.- ஷிர்டி சாய்பாபா 

Tuesday, March 1, 2011

உனக்கும், எனக்கும் தூரம்

    
நீங்கள் ஏதோ ஒரு வடிவத்தை மனதில் இருத்திக் கொண்டு, நான் அவ்விதமாக இருப்பேன் என்ற மயக்கத்தில் இருந்து வெளியே வா. நான் எல்லா ஜீவர்களிலும் இருக்கிறேன். இந்த சத்தியத்தை நீங்கள் உணர்ந்த கொண்டபோது  நான் ரகசியமாகவும், மறைமுகமாகவும் எங்கிருக்க முடியும்? உங்களுக்கும் எனக்கும் தூரம் எனபது இல்லவே இல்லை.-ஷிர்டி சாய்பாபா.

"குருபூர்ணிமா - சப்தாக பாராயணம் "

சாய் பக்தர்கள் அனைவருக்கும் வணக்கம்.. 🙏🙏 "குருபூர்ணிமா -  சப்தாக பாராயணம்" வரும் 13-07-2022ம் தேதி குருபூர்ணிமா தினம் கொண்டாடப்ப...