Saturday, April 30, 2011

வெல்லம்


வெல்லத்தை விட்டு இனிப்பு வெளியே சென்று விடலாம். கடல், அலைகளை பிரிந்து விடலாம். கண், கருமணியைப் பிரியலாம். என் கபடமற்ற, விசுவாசமுள்ள பக்தன் என்னிலிருந்து வேறுபடமாட்டான். -ஸ்ரீ ஷிர்டி சாய்பாபா    

Friday, April 29, 2011

மதில் சுவர்


உனக்கும், எனக்கும் நடுவேயுள்ள மதிற்சுவரை உடைத்து, முழுக்க நாசம் செய்வாயாக. அப்பொழுது நமக்குப் போகவும், வரவும் பயமில்லாத ஒரு பாதை கிடைத்துவிடும். 'நீங்கள், நான்' என்னும் மனோபாவமே அந்த தடுப்புச் சுவர். அதை உடைத்தெறியாவிட்டால் இருவரும் ஒன்றே என்னும் நிலையை அடையமுடியாது. - ஷிர்டி சாய்பாபா  

Thursday, April 28, 2011

சாஸ்திரங்கள்


யோக சாதனைகள் ஏதும் தேவையில்லை; ஆறு சாஸ்திரங்களை அறியவேண்டிய அவசியமும் இல்லை. காப்பவரும், அழிப்பவரும் குருவே என்னும் ஒரே உறுதியான நம்பிக்கையும், விசுவாசமும் இருந்தால் போதும். -ஷிர்டி சாய்பாபா  

Wednesday, April 27, 2011

மனிதனின் மனதில்


பிரம்மாவிலிருந்து புல்பூண்டு வரை, சிருஷ்டியனைத்திலும்  (கண்களுக்கு புலப்படும்) சாயி சூட்சுமத்தை விட சூட்சுமமானவர்; மிகப் பெரியதைவிடப் பெரியவர். அம்மாதிரியான பர பிரம்மத்திற்கு, ஓர் உருவமும், வடிவமும், வண்ணமும் அளித்து ஊனக் கண்களாலும் பார்க்கவேண்டுமென்ற ஆசை ஏற்பட்டது(மனிதனின் மனதில்). -ஸ்ரீ சாயி சத்ச்சரித்ரா - 19

Tuesday, April 26, 2011

கடன் பாக்கி


"தேவைப்படும் நேரத்தில் மிகப் பணிவாகவும், இரக்கமாகவும், கெஞ்சுகிறாய்; காரியம் கைகூடிய பிறகு அதைப்பற்றிச் சிறிதும் கவலைபடுவதில்லை! என் பக்தர்களில் எவர் கடன் பாக்கி இல்லாதவரோ அவரே எனக்கு சந்தோஷத்தை அளிக்கிறார்". -ஷிர்டி சாய்பாபா

Monday, April 25, 2011

மிக்க அதிர்ஷ்டசாலி

பாலாஜி பாடீல் நெவாஸ்கர்; பாபா ஸ்நானம் (குளிப்பது) செய்ததும், கை, கால், முகம் கழுவியதுமான நீரைத் தவிர வேறெந்த நீரையும் நெவாஸ்கர் அருந்தமாட்டார். - ஸ்ரீ சாயி சத்ச்சரித்ரா.

Sunday, April 24, 2011

காகா மஹாஜனி


பாபா தட்சிணை பற்றி காகா மஹாஜனி -யிடம் கூறியது, "உம்முடைய மனதில் கொடுக்கவேண்டும் என்ற விருப்பம் இல்லை; ஆகவே நான் கேட்கவில்லை. இப்போது உமக்கு கொடுக்க மனமிருந்தால் கொடுக்கலாம்". உடனே காகா மஹாஜனி பதினேழு ரூபாயை பாபாவின் பாதங்களில் வைத்தார். -ஸ்ரீ சாயி சத்ச்சரித்ரா.  

Saturday, April 23, 2011

முக்காலம்


"இப்பொழுது நீங்கள் கவலையை விடுங்கள். இந்த உதீயை எடுத்துக்கொண்டு போய் ரணத்தின் மீது தடவுங்கள். எட்டு நாட்களுக்குள் குணம் தெரியும். இறைவனிடம் நம்பிக்கை வையுங்கள். இங்கு வந்தவர் நிவாரணம் பெறவில்லை என்பது, சென்ற காலம், நிகழ் காலம், எதிர் காலம் ஆகிய முக்காலங்களிலும் நடக்காத விஷயம்." - ஷிர்டி சாய்பாபா.  

Friday, April 22, 2011

உதீ


ஷிர்டியிலிருந்து வீடு திரும்பும் பக்தர்கள் பாபா-விடம் அனுமதி பெற வந்தபோது, அவர்களுக்கு உதீ அளிப்பது பாபா-வின் பழக்கம். பாபா "உதீ கொண்டு வா" என்று சொன்னாலே, வீடு திரும்ப அனுமதி கிடைத்துவிட்டதென்று அறிந்துகொள்வார்கள். - ஸ்ரீ சாயி சத்ச்சரித்ரா.    

Thursday, April 21, 2011

பத்து மடங்கு


பாபா-வுக்கு ஒன்று கொடுத்தால் பத்தாகத் திருப்பிக் கொடுக்கிறார். பத்து மடங்கு அதிகாரம், பத்து மடங்கு சக்தி. பெரும்பாலான பக்தர்கள் இந்த அனுபவத்தை அவ்வப்போது அடைந்தார்கள். அதுமட்டுமல்லாமல், அதுமாதிரியான செயல்களிலிருந்து ஆன்மிக நாட்டம் வளர ஆரம்பிக்கிறது. இது என்ன சாமானியமான லாபமா? பாபா-வின் அளிக்கும் திறன் விசித்திரமானது அன்றோ!
- அப்பாஸாஹெப்-  ஸ்ரீ சாயி சத்ச்சரித்ரா. 

Wednesday, April 20, 2011

செல்வம்


"பிறர் கொடுப்பது நமக்கு எப்படி போதும்? எவ்வளவு கொடுக்கப்பட்டாலும் அது குறைவாகத்தான் இருக்கும். ஆனால், இறைவன் நமக்கு அளிப்பதோ முடிவில்லாத செல்வம். யுகம் முடிந்தாலும் முடியாத செல்வம்" - ஷிர்டி சாய்பாபா.

Tuesday, April 19, 2011

தற்கொலைநம்முடைய பூர்வஜன்ம வினைகளை ரோகங்களாகவும், குஷ்டமாகவும், வலியாகவும், கவலையாகவும் முழுவதும் அனுபவித்துத் தீர்க்கும்வரை தற்கொலை எதை சாதிக்கமுடியும்? ஆகவே இந்த துன்பத்தை இன்னும் கொஞ்சம் பொறுத்துக்கொள். பாபா எழை ஆம்ப்டேகர்-ரிடம் போதித்தது. ஸ்ரீ சாயி சத்ச்சரித்ரா.

Monday, April 18, 2011

ரூஸோ மம ப்ரியாம்பிகா...


எனது தாய், தந்தை, மனைவி, குழந்தைகள், சகோதர, சகோதரி, மாமனார், மாமியார் எவர் என்மீது கோபப்பட்டாலும் குருவான தாய் சாயிமாத்திரம் என்மீது எப்போதும் கோபப்படாமல் இருக்கட்டும். - ஸ்ரீ குருப்ரசாத யாசன தசகம்.

Sunday, April 17, 2011

வாழைப்பழம்

பாபா வாழைப்பழங்களை கையாண்டவிதம் அபூர்வமானது. பக்தர்களுக்கு உள்ளிருக்கும் பழத்தை கொடுத்துவிட்டு தாம் தோலைத் தின்பார். ஒ, அவருடைய விளையாட்டுகள் அற்புதமானவை! - ஸ்ரீ சாயி சத்ச்சரித்ரா.

Saturday, April 16, 2011

இரவு,பகலாக


நீங்கள் எங்கிருந்தாலும் சரி, என் முன்னர் மன்றாடி பக்தியுடனும், விசுவாசத்துடனும் கை நீட்டினால், நான் உங்களுடைய பக்திக்கும், விசுவாசத்திற்கும் ஏற்றவாறு இரவு, பகலாக உங்கள் பின்னால் திடமாக நிற்கிறேன். - ஷிர்டி சாய்பாபா. 

Friday, April 15, 2011

நேர்த்திக்கடன்


சோல்கர் என்பவர் சர்க்கரையை உணவில் சேர்த்துக்கொள்வதை விட்டுவிட்டார், இதனை அவர் எவரிடமும் சொல்லவேயில்லை, அப்படியிருக்க, "சோல்கர்! நீர் நேர்த்திக்கடன் ஏற்றுக்கொண்ட கற்கண்டு என்னிடம் வந்து சேர்ந்துவிட்டது. ஆகவே உம்முடைய விரதமும் நிறைவேறிவிட்டது". ஸ்ரீ சாயி சத்ச்சரித்ரா.

Thursday, April 14, 2011

எளிய வழி


சத்குருவின் பாதங்களை உறுதியாக பிடித்துக் கொள்பவர், மற்றவர்கள் பலவிதமாக சிரமப்பட்டும் அடையமுடியாததை சொற்பமான முயற்சியாலேயே அடைந்துவிடுவர். ஸ்ரீ சாயி சத்ச்சரித்ரா. 

Wednesday, April 13, 2011

அல்லா மாலிக்


'நான் இறைவன்' என்று பாபா ஒருபோதும் சொன்னதில்லை. 'நான் இறைவனுடைய அடிமை' என்றும் 'நான் இறைவனை எப்போதும் மனத்தில் இருத்திக்கொண்டிருக்கும் ஏழை' என்றே சொல்லிக்கொண்டார். 'அல்லா மாலிக், அல்லா மாலிக்' (அல்லாவே எஜமானர்) என்று எப்போதும் ஜபம் செய்து கொண்டிருந்தார்.   

Tuesday, April 12, 2011

பாகோஜி


பாபா தினமும் லெண்டிக்கு (தோட்டம்) நீ ஊற்ற செல்லும் பொழுது, பாகோஜி அவருக்கு குடை பிடித்துக்கொண்டே செல்வார். உடலெங்கும் குஷ்டரோகத்தினால் ஏற்பட்டு புண்கள் நிறைந்திருந்தன; இருந்தபோதும் பாபாவை அணுகத்தகுந்த தொண்டர்களில் முதல்வர் அவரே! பின்னர் அவர் பாபாவின் அருளால் பரிபுரணமாக குணமடைந்தார். ஸ்ரீ சாயி சத்ச்சரித்ரா. 

Monday, April 11, 2011

ஹக்கீம் (முஸ்லிம் மருத்துவர்)


சாயி தரிசனத்தினால் சிலர் ஆரோக்கியமாகவும், திடகாத்திரமாகவும் ஆனார்கள், பலர் குஷ்டரோகத்திலிருந்து  நிவாரணமடைந்தார்கள். பாபாவின் பாதங்களை பணிந்ததாலேயே மை ஏதும் இட்டுக்கொள்ளாமல் பல குருடர்கள் கண் பார்வை பெற்றனர். பாபாவினுடைய மகிமை அபாரமானது, எவராலும் அளவிடமுடியாது, நான்கு திசைகளிலிருந்தும் மக்கள் அவருடைய தரிசனத்திற்காக ஷிர்டியை நோக்கி வந்தனர். ஸ்ரீ சாயி சத்ச்சரித்ரா.    

Sunday, April 10, 2011

யோகசாதனை


பாபாவுக்கு தோதீ-போதி (யோகசாதனை) தெரிந்திருந்தது. எவரும் அறியாமல் ஏதாவதொரு மறைவிடத்திற்கு சென்று குளியலை முடித்துவிட்டு, குடல்களை (வாய்வழியாக) வெளியே கொண்டுவருவார், பிறகு குடலை நன்றாக கழுவி உலர்வதற்காக தொங்கவிடுவார். - ஸ்ரீ சாயி சத்ச்சரித்ரா.

Saturday, April 9, 2011

ஏக்கம்


உன் பரிசுத்தமான இருதயம் கொள்ளும் ஏக்கமே எனக்குச்  செய்யும் பூஜையாகும்.
என் பக்தன் வசிக்குமிடமே என் இருப்பிடம், என்னை துதிப்பவர் இருக்குமிடம், என்னிடம் அன்பு கொண்டோர் இருப்பிடத்திலேயே, மசூதி, துவாரகமாயி, சாவடி, தூணி, ஷிர்டி ஆகியவையும் இருக்கும். அப்படிபட்டவர்களுடைய இல்லமே என்னுடைய சமாதி மந்திரம். - ஷிர்டி சாய்பாபா 

Friday, April 8, 2011

உணவு


உணவு கொடுப்பவர், உணவு உண்பவர் என் வடிவங்களே, காரியநிமித்தம் நீங்கள் சிரமப்பட்டுக் கொண்டிருகையில் நான் அவ்விதமாக அங்கு தோன்றிக் கொண்டிருப்பேன், எனக்கு ஒரு வடிவம் என்பதும் இல்லை, பெயரும் இல்லை. அப்படி அன்பு மழை பெய்விப்பவர் நானே என்று என்னை அறிந்து கொள்பவர் என் பக்தர்கள்.- ஷிர்டி சாய்பாபா  

Thursday, April 7, 2011

குருவின் பாதை


யார் எதைச் சொன்னாலும் சொல்லட்டும். அவையனைத்தையும் நாம் கேட்டுக்கொள்வோம். ஆனால், நம்முடைய லட்சியப் பாதையிலிருந்து தடம்புரளக்கூடாது. நம் குருவின் வார்த்தைகளை மறந்துவிடக்கூடாது. -ஷிர்டி சாய்பாபா.        

Wednesday, April 6, 2011

ஆகாய விமானம்


பாபா காகா ஸாஹேப்பிடம் கூறியது, "உம்முடைய நம்பிக்கையும், விசுவாசமும் பலன் அளிக்கும். நான் உமக்கு ஓர் ஆகாய விமானம் அனுப்பி அதில் உம்மை அமரவைத்துக்கொண்டு செல்வேன்! நீர் நிச்சிந்தயான (கவலையற்ற) மனத்துடன் இரும்". ஷிர்டி சாய்பாபா

Tuesday, April 5, 2011

தாழ்மை உணர்ச்சி


காகா ஸாஹேபிடம் கழிவிரக்கமும், இழிநிலை உணர்வும் ஆட்கொண்டதை ஷாமா-வால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. "சாயி-யை போன்ற ஒரு ஆபரணத்தை அணியும் பாக்கியம் பெற்றவர் எக்காரணத்துக்காக முகம் கவிழ வேண்டும்? அவர் உயிரோடிருப்பதே வீண்".-ஷாமா,ஸ்ரீ சாயி சத்ச்சரித்ரா. 

Monday, April 4, 2011

சகித்துக்கொள்ளுதல்


யாரவது யாரையாவது கெட்ட வார்த்தைகளால் திட்டும்போது அது உடனே என்னை துன்பத்தில் ஆழ்த்துகிறது. அதை ஒருவர் தைரியத்துடன் சகித்துக்கொண்டால், அச்செய்கை என்னை வெகுகாலத்திற்கு திருப்தி உள்ளவனாக செய்கிறது.-ஷ்ரிடி சாய்பாபா  

Sunday, April 3, 2011

அகண்டமாக இருக்கிறேன்


யார் என்னை பெரிதும் நேசிக்கிறாரோ அவருடைய பார்வையில் அகண்டமாக (இடைவிடாது) இருக்கிறேன். நான் இல்லாது அவருக்கு சிருஷ்டியனைதும் (இவ்வுலகம்) சூனியமாகத் தெரியும். அவருடைய வாயிலிருந்து என்னுடைய பெருமை மட்டுமே வெளிவரும். -ஷிர்டி சாய்பாபா

Saturday, April 2, 2011

அனைத்தும் அறிவேன்


நீங்கள் எனக்கு தூரமாக இருந்தாலும், நான் உங்களுக்கு மிக அருகாமையிலேயே இருக்கிறேன். நீங்கள் என்ன செய்கிறீர்கள், எங்கு இருக்கிறீர்கள் எனக்கு எல்லாம் தெரியும்.-ஷிர்டி சாய்பாபா 

Friday, April 1, 2011

சாவடி


தாத்யா ஸாஹேப் இடக்கையை பிடித்துக்கொள்வார். மஹால்ஸபதி வலக்கையைப் பிடித்துக்கொள்வார். பாபு ஸாஹேப் ஜோக் ஜி ஒரு பெரிய குடையை பாபாவின் தலைக்குமேல் உயரமாக பிடித்துக்கொள்வார். இவ்வாறு பாபா சாவடியை நோக்கி ஊர்வலமாக செல்வார்.

விசுவாசத்தின் ஆழத்திற்க்கேற்றவாறு பக்தனின் பக்தியை கௌரவிக்கிறார் பாபா !

பாபா,  தன் பக்தன் தன்மேல் வைக்கும் "நம்பிக்கை மற்றும் விசுவாசத்தின் ஆழத்திற்கேற்றவாறு",  அவருக்கு மிகச்சிறந்த அனுபவங்களைக் கொடுத்த...