Tuesday, May 31, 2011

பாபா வின் உபதேசம் 11


என்னுடைய பக்தர்களுடைய வீட்டில் ஒரு போதும் தேவை என்பதே இருக்காது. - ஷிர்டி சாய்பாபா 

Monday, May 30, 2011

பாபா வின் உபதேசம் 10


நீ என் உபதேசத்திற்காகவும் உதவிக்காகவும் என்னை அடைந்தால், அவைகளை உடனே நான் உனக்கு கொடுப்பேன். - ஷிர்டி சாய்பாபா

Sunday, May 29, 2011

பாபா வின் உபதேசம் 9


நீ என் பேரில் உன் பளுவை சுமத்தினால் நான் நிச்சயமாக அதை தாங்குவேன். -ஷிர்டி சாய்பாபா

Saturday, May 28, 2011

பாபா வின் உபதேசம் 8


நீ என்னை அடைந்தால் நான் உன்னை கடாஷிக்கிறேன்.

Friday, May 27, 2011

பாபா வின் உபதேசம் 7


என்னிடம் வருபவர்களுக்கும் என்னை தஞ்சம் அடைபவர்களுக்கும்,  என் உபதேசத்திற்காக என்னிடம் தீவிர நம்பிக்கை உள்ளவர்களுக்கும் நான் எப்பொழுதும் உயிருடன் இருக்கிறேன். - ஷிர்டி சாய்பாபா

Thursday, May 26, 2011

பாபா வின் உபதேசம் 6


என்னுடைய மசூதியிலிருந்து கொண்டே நான் மிகவும் சுறுசுறுப்பாகவும் தீவிரமாகவும் இருப்பேன். ஷிர்டி சாய்பாபா 

Wednesday, May 25, 2011

பாபா வின் உபதேசம் 5


என்னுடைய பூத உடல் என் மசூதியிலிருந்து பேசும். ஷிர்டி சாய்பாபா

Tuesday, May 24, 2011

பாபா வின் உபதேசம் 4

 
என்னுடைய மசூதி என் பக்தர்களுக்கு அநேக ஆசிர்வாதங்களையும், புத்திமதிகளையும் கொடுக்கும். ஷிர்டி சாய்பாபா

Monday, May 23, 2011

பாபா வின் உபதேசம் 3

இவ்வுலகை விட்ட பிறகும் சர்வ சக்தியுடன் வேலை செய்வேன். - ஷிர்டி சாய்பாபா

Sunday, May 22, 2011

துவாரகாமாயீ


துவாரகாமாயீயை அடைந்த மாத்திரத்தில் பெரும் துன்பத்திற்கு உள்ளானவர்களும் மிகுதியான சந்தோஷத்தை அடைவார்கள். - ஷிர்டி சாய்பாபா

Saturday, May 21, 2011

ஷிர்டி


ஷீரடி ஸ்தலத்தை எவன் மிதிக்கிறானோ, அவனுடைய துன்பம் ஒரு முடிவை அடைந்து சௌகர்யத்தை அடைகிறான். - ஷிர்டி சாய்பாபா

Friday, May 20, 2011

இறைவனின் ஆணை


என்ன நடக்கிறதோ, அது இறைவனின் ஆணைப்படியே நடக்கிறது. அவரே தூக்கிவிடுகிறார்; அவரே தள்ளியும்விடுகிறார், அவரே சண்டைபோடுகிறார், அல்லது மற்றவர்களை சண்டையிடவைக்கிறார். அவரே காரியங்களை செய்பவரும், செய்யவைப்பவரும் ஆவார். -ஸ்ரீ சாயி சத்ச்சரித்ரா. 

Thursday, May 19, 2011

பாரத்தை என்மேல் சுமத்து


உங்களுடைய பாரத்தை என்மேல் போட்டுவிட்டு என்னுடன் ஒருவர் ஒன்றிவிட்டால், அவருடைய உலக சம்பந்தமான அனைத்து வேலைகளுக்கும் நானே பொறுப்பு. -ஷிர்டி சாய்பாபா  

Wednesday, May 18, 2011

மங்களம் விளையும்


விசுவாசம் நிறைந்த இதயத்துடன் என்னை நினைத்தால் போதும். சுயநலம் கருதாது என்னை வழிபடுங்கள்; எல்லா மங்களங்களும் விளையும். - ஷிர்டி சாய்பாபா.    

Tuesday, May 17, 2011

எலும்புகளும் பேசும்


நான் இல்லாமல் போய்விடுவேன் என்று ஒரு காலமும் கவலைபடாதீர்கள். உங்கள் நலன் கொண்ட விஷயங்களைபற்றி என்னுடைய எலும்புகள் பேசுவதை கேட்பீர்கள். - ஷிர்டி சாய்பாபா      

Monday, May 16, 2011

மாம்பழம்


ஒருமுறை கோவா-விலிருந்து ராலே என்னும் பெயர் கொண்ட மாமல்தார் (சப்-கலெக்டர்) பாபா விற்கு, மாம்பழப் பார்சல் அனுப்பி இருந்தார். பாபா அந்த அனைத்து பழங்களையும் தாமு அண்ணா என்ற பக்தருக்கு கொடுத்துவிட்டார். "யாருக்குச் சொந்தமோ அவர்தான் இந்த மாம்பழங்களை எடுத்துக்கொண்டு போகவேண்டும். மற்றவருடைய பொருள் நமக்கெதற்கு? தின்றுவிட்டு சரிப்பதானாலும் சரி, யாருக்கு சொந்தமோ அவர்தான் அதை தின்னவேண்டும்"  - ஷ்ரிடி சாய்பாபா.   

Sunday, May 15, 2011

எங்கும் இருக்கிறேன்


நான் எங்கும் இருக்கிறேன் - நீரிலும், நிலத்திலும், காய்ந்துபோன கொம்பிலும், மனிதர்களிடையேயும், வனத்திலும், இந்த தேசத்திலும், வெளிதேசங்களிலும் எங்கும் இருக்கிறேன். நான் எந்த தேசத்தின் எல்லைகளுக்கும் உட்பட்டவன் அல்லன். - ஷிர்டி சாய்பாபா  

Friday, May 13, 2011

பிரச்சனைகளும், ஆபத்துகளும்


பக்தர்களுக்கு வரவிருக்கும் பிரச்சனைகளையும், ஆபத்துகளையும் முன்கூட்டியே தெரிந்துகொண்ட சாயி என்னும் கருணைக்கடல், சரியான நேரத்தில் எச்சரிக்கை விடுத்து ஆபத்துக்கள் வராது தடுத்தார். ஸ்ரீ சாயி சத்ச்சரித்ரா. 

Wednesday, May 11, 2011

உழைப்பின் மதிப்பு


யாருடைய உழைப்பையும் எப்பொழுதும் இலவசமாக பெறக்கூடாது என்னும் விதியைக் கடைப்பிடி. மற்றவர்களிடம் வேலை வாங்கிக்கொள். ஆனால், அவர்களுடைய உழைப்பின் மதிப்பு எவ்வளவு என்பதை அறிந்துகொள். ஸ்ரீ சாயி சத்ச்சரித்ரா - 19

Tuesday, May 10, 2011

சேட்ஜியின் வேண்டுதல்


நான் தெய்வ அருள் பெற்றவனில்லை; அல்ப ஞானம் படைத்தவன். எனக்கு பூஜையோ,யாகங்களை பற்றியோ எதுவும் தெரியாது. விதிவசத்தால் இன்று நான் முக்காலத்தையும் அறிந்த ஒரு ஞானியை தரிசனம் செய்கிறேன். என்னுடைய மனக்குறையை நீங்கள் நன்கு அறிவீர்கள். கிருபாநிதியே! தயாளரே! இந்த விசுவாசமுள்ள அடியவனை உம்முடைய பாதங்களிலிருந்து என்றும் விலக்கிவிடாதீர்கள். - சேட்ஜி . ஸ்ரீ சாயி சத்ச்சரித்ரா.

Monday, May 9, 2011

தாஸ்கணு


பாபாவை தரிசனம் செய்யுங்கள்; அவருடைய பாதங்களில் உங்களுடைய மனக் குறைகளையும், உள்ளது ஆசைகளையும் அவரிடம் விளக்கமாக சொல்லுங்கள். அவர் உங்களை நிச்சயம் ஆசிர்வாதம் செய்து நிறைவேற்றுவார்.- தாஸ்கணு, ஸ்ரீ சாயி சத்ச்சரித்ரா.

Sunday, May 8, 2011

ஏழு கடல்

என்னுடைய உடலுடன் நான் இங்கு இருக்கலாம்; நீங்கள் தொலைதூரத்தில் இருக்கலாம்; ஏழு கடல் தாண்டியும் செல்லலாம். இருப்பினும், நீங்கள் அங்கு என்ன செய்தாலும் அந்த கணமே எனக்கு இங்கு அது தெரிந்துவிடும்.- ஷிர்டி சாய்பாபா.

Saturday, May 7, 2011

சர்வாந்தர்யாமி (எங்கும் நிறைந்திருப்பவர்)


நான் ஒருவனே இருக்கிறேன்; நான் இல்லாதே இடமே இல்லை;பத்துத் திசைகளிலும் நான் வியாபித்திருக்கிறேன்;என்னை தவிர வேறு எதுவுமே இல்லை. -ஷிர்டி சாய்பாபா  

Friday, May 6, 2011

உடனே தோன்றுகிறேன்


எனக்கு வண்டியோ, குதிரையோ, ஆகாயவிமானமோ, ரயில்வண்டியோ தேவையில்லை. என்னை யார் அன்புடன் கூவி அழைக்கிறாரோ அவருக்கு நான் தாமதமின்றி உடனே தோன்றுகிறேன். - ஷிர்டி சாய்பாபா

Thursday, May 5, 2011

நிதர்சனமாக உடன் இருக்கிறார்


பாபா யாரை அரவணைக்கிறாரோ, அவர் தம்முடைய வீட்டிலிருந்தாலும், ஏதோ தீவிலிருந்தாலும், வேறு எங்கு இருந்தாலும், நிதர்சனமாக சாயி அவரருகில் இரவும் , பகலும் உடன் இருக்கிறார். ஸ்ரீ சாயி சத்ச்சரித்ரா.   

Wednesday, May 4, 2011

சமாதி

 
நான் மட்டும் அல்ல; என்னுடைய சமாதியும் உங்களிடம் பேசும். எவர் என் சமாதியை சரணாகதி அடைகிறாரோ அவருடன் அது ஊஞ்சலாடும். - ஷிர்டி சாய்பாபா.  

Tuesday, May 3, 2011

முன்ஜன்ம தொடர்பு

 முன்ஜன்ம தொடர்பில்லாமல்  எவரும், எங்கும் போவதில்லை. ஆகவே, மனிதனாயினும், மிருகமாயினும், பறவையாயினும் அவமதிப்பு செய்து விரட்டிவிடாதே. - ஷிர்டி சாய்பாபா   

Monday, May 2, 2011

சர்க்கரைஷீரடியில் செய்வதாக வேண்டிக்கொண்ட நேர்த்திக்கடன் நிறைவேறும்வரை, சர்க்கரை இருக்கும் எந்தப் பண்டமும் சோல்கருக்கு விலக்காகிவிட்டது. அவர் தேநீரை கூட சர்கரையின்றி அருந்தினார்.சோல்கரின் விசுவாசத்தை உறுதிப்படுத்துவதற்காகவும், பக்தியினுடைய முத்திரையை அவருடைய இதயத்தில் ஆழமாக பதிப்பதற்காகவும், சர்க்கரை போடப்பட்ட தேநீரை அவருக்கு அளித்து பாபா ஆசி வழங்கினார். ஸ்ரீ சாயி சத்ச்சரித்ரா. 


Sunday, May 1, 2011

பிரம்மம்


நான் உமக்கு பிரம்மத்தை மட்டும்மின்றி, பிரம்மச்சுருளையே காட்டுகிறேன். நகத்திலிருந்து, சிகைவரை உம்மை மூடிக்கொண்டிருக்கும் அச்சுருளை விரித்துப் பிரித்துக்காட்டுகிறேன். -ஷிர்டி சாய்பாபா. 

"குருபூர்ணிமா - சப்தாக பாராயணம் "

சாய் பக்தர்கள் அனைவருக்கும் வணக்கம்.. 🙏🙏 "குருபூர்ணிமா -  சப்தாக பாராயணம்" வரும் 13-07-2022ம் தேதி குருபூர்ணிமா தினம் கொண்டாடப்ப...