Wednesday, August 31, 2011

நம்மை பக்குவப்படுத்துவார்


நமது முதலாளி தன்னைப் பிடித்து நெருப்பில் போட்டுவிடு! என்று கூறினால் நாம் செய்வோமா? உளைச்சேற்றில் இறக்கிவிடு என்று கூறினால் அதைச் செய்வோமா? அப்படித்தான், பாபாவும் நாம் கேட்டுக்கொண்டாலும் கூட நமக்கு எது நல்லதோ, எது நன்மை உயர்த்துமோ அதைச் செய்வார். தவறாக நாம் கேட்பதைத் தராமல் தட்டிக்கழிப்பதைப் போல காலம் தாழ்த்துவார். அந்த இடைக்காலம் வரை அனுபவங்களையும், உணர்வு மாற்றங்களையும் கொடுத்து நம்மை பக்குவப்படுத்துவார். ஸ்ரீ சாயி தரிசனம்.   

Tuesday, August 30, 2011

என்னை சரணாகதி


என்னை சரணாகதி அடைந்தவர்களுடைய கோரிக்கைகள் நிறைவேறாமல் போவது என்ற பேச்சே என் சங்கல்பத்தில் இல்லை. ஷிர்டி சாய்பாபா

Monday, August 29, 2011

அறியாதது ஒன்றுமே இல்லை


எவ்வளவு ஆழமாக ஓடும் எண்ணங்களாக இருந்தாலும் சரி, எல்லாருடைய எண்ணங்களையும் பாபா அறிந்திருந்தார். இவ்வுலகில் அவர் அறியாதது ஒன்றுமே இல்லை. ஸ்ரீ சாயி சத்ச்சரித்ரா  

Sunday, August 28, 2011

சேவை


நாம் பாபா மீது அன்பு  செலுத்தினால், இப்போதுள்ள கஷ்டத்தை பொறுத்துக் கொள்கிறவர்களாக இருந்து, அவர் நமக்கு பதில் தரும் வரை காத்திருப்போம். அவர் மீது உண்மையாக அன்பு செலுத்தினால், நமது தேவையை மட்டுமே நாடாமல் அவருக்குச் சேவை செய்வதற்கு முன்னுரிமை கொடுப்போம். ஸ்ரீ சாயி தரிசனம்  

Saturday, August 27, 2011

நீங்கள் எனக்கு தூரமாக


நீங்கள் எனக்கு தூரமாக இருந்தாலும், நான் உங்களுக்கு மிக அருகாமையிலேயே இருக்கிறேன். நீங்கள் என்ன செய்கிறீர்கள், எங்கு இருக்கிறீர்கள் என்று எல்லாம் எனக்கு தெரியும். - ஷிர்டி சாய்பாபா 

Friday, August 26, 2011

சவுக்கடி


எவன் தன் கவனத்தை என் மீது திருப்புகிறானோ, அவன் எந்த சங்கடமும் படமாட்டான். ஆனால் என்னை மறந்துவிடுபவன் மாயையிடம் இரக்கமின்றிச் சவுக்கடி படுவான். ஸ்ரீ ஷிர்டி சாய்பாபா  

Thursday, August 25, 2011

பேராசை


பேராசை பிடித்த செல்வந்தன் தான் எங்கிருந்த போதும் மறைத்து வைத்த புதயலைப்பற்றியே நினைத்துக்கொண்டிருப்பான். அதேவிதமாக, சாயி நம்முடைய இதயத்தில் வீற்றிருக்கட்டும். ஸ்ரீ சாயி சத்ச்சரித்ரா  

Wednesday, August 24, 2011

பாபாவின் பக்தர்கள் வெறும் பார்வையாளர்களே


எதிர்காலத்தில் எவ்வித சக்திகள் எவ்விதமான சோதனைகளைக் கொண்டுவரும் என்பதை நாம் அறியோம். ஏனெனில், இவை அனைத்தும் அல்லாமியாவின் லீலையாகும். பாபாவின் பக்தர்கள் வெறும் பார்வையாளர்களே. ஸ்ரீ சாயி சத்ச்சரித்ரா    

Tuesday, August 23, 2011

சாயி சத்ச்சரித்திரத்தை கேளுங்கள்


விரதங்கள் வேண்டா, விரத முடிவு விழாக்களும் வேண்டா, உபவாசம் வேண்டா, உடலை வருத்தவும் வேண்டா. புண்ணியத் தலங்களை தரிசனம் செய்ய பிரயாணமும் தேவையில்லை. சாயி சத்ச்சரித்திரத்தை கேளுங்கள். அதுவே போதுமானது. ஸ்ரீ சாயி சத்ச்சரித்ரம்        

Monday, August 22, 2011

வெற்றி உறுதி அளிக்கப்படுகிறது


சத்குருவின் பாதங்களில் நாம் அகங்காரத்தை சமர்ப்பித்தாலன்றி நமது வேலையில் நாம் வெற்றி பெறமாட்டோம். நம் அகங்காரத்தை ஒழித்தால் நமது  வெற்றி உறுதி அளிக்கப்படுகிறது. ஸ்ரீ சாயி தரிசனம்

Sunday, August 21, 2011

வருத்தப்படாதே! அழாதே! குற்றமாகக்கருததே!


வருத்தப்படாதே! அழாதே! குற்றமாகக்கருததே! தோல்வி வரும் போது துவண்டு போகாதே. துன்பத்தை பெரிதாக நினைத்து இன்பத்தை இழந்து போகாதே. உனக்கு நிறைய வாய்ப்புகளும், காலங்களும் உள்ளன. அவற்றை உனக்கு சாதகமாக மாற்றிக்கொள்வதற்காகவே இந்த சின்னச் சறுக்கல் என்பதை உணர்ந்து புத்துணர்ச்சியோடு எழுந்து நடமாடு. ஸ்ரீ சாயி தரிசனம்           

Saturday, August 20, 2011

என் பக்தன் ஆயிரம்


என் பக்தன் ஆயிரம் மயில்களுக்கு அப்பால் இருந்தாலும், ஒரு குருவி யின் கால்களுக்கு கயிறு கட்டி இழுப்பது போல். இந்த மசுதி தாயிடம் இழுத்துக்கொண்டு வருவேன். ஷிர்டி சாய்பாபா

Friday, August 19, 2011

எப்பொழுதும் ஆதரவாய் இருப்பவர்

  
இந்த உலகம் உங்களை கைவிட்டாலும், உறவு உங்களை  வெறுத்தாலும், பெற்ற பிள்ளைகளே பகைத்தாலும், அக்கம் பக்கத்தினர் உங்களுக்கு எதிராக மாறினாலும், எப்பொழுதும் ஆதரவாய் இருப்பவர் பாபா. அவரது ஆதரவு எப்போதும் அவரது  பக்தர்களுக்கு உண்டு. ஸ்ரீ சாயி தரிசனம் 

Thursday, August 18, 2011

பதில் கொடுப்பதற்காகவே நான் அவதரித்து வந்தவன்


என் வார்த்தைகள் மீது நம்பிக்கை வையுங்கள். இல்லாவிட்டால் நான் செய்யும் அற்புதங்களின் காரணமாகவாவது என் மீது நம்பிக்கை வைத்து என் நாமத்தை துதி செய்யுங்கள். உங்கள் கோரிக்கைகளை நிறைவேற்றி உங்கள் பிரார்த்தனை  அனைத்திற்கும் பதில் கொடுப்பதற்காகவே நான் அவதரித்து வந்தவன் என்பதை உணர்ந்துகொள்ளுங்கள். ஷிர்டி சாய்பாபா 

Wednesday, August 17, 2011

பத்து மடங்கு


பாபா-வுக்கு ஒன்று கொடுத்தால் பத்தாகத் திருப்பிக் கொடுக்கிறார். பத்து மடங்கு அதிகாரம், பத்து மடங்கு சக்தி. பெரும்பாலான பக்தர்கள் இந்த அனுபவத்தை அவ்வப்போது அடைந்தார்கள். அதுமட்டுமல்லாமல், அதுமாதிரியான செயல்களிலிருந்து ஆன்மிக நாட்டம் வளர ஆரம்பிக்கிறது. இது என்ன சாமானியமான லாபமா? பாபா-வின் அளிக்கும் திறன் விசித்திரமானது அன்றோ!
- அப்பாஸாஹெப்-  ஸ்ரீ சாயி சத்ச்சரித்ரா. 

Tuesday, August 16, 2011

துவாரகமாயி


இந்த மசுதிமாயீ அன்பே உருவானவள்; எளியவர்களின் தாய், யார் எவ்வளவு பெரிய ஆபத்தில் மாட்டிக்கொண்டாலும், அங்கேயே அப்பொழுதே காப்பாற்றுவாள். ஸ்ரீ சாயி சத்ச்சரித்ரா     

Monday, August 15, 2011

நீ என் செல்லக்குழந்தை


நீ என்ன செய்தாலும் நான் உன் மீது கோபம் கொள்ளவே மாட்டேன். நீ என் செல்லக்குழந்தை. உனக்கு இன்னும் பக்குவத்தைப்  போதிக்கவே நான் தோல்வியை அனுமதித்தேன், உனது சிந்தனை இன்றைய காலக்கட்டத்தை பார்க்கிறது, எனது நோக்கமோ உனது  எதிர்காலம் தொடர்பானது. நீ அந்தக்காலத்தில் சிறப்பாக வாழவேண்டும் என்பதற்காக உன்னால் சகித்துக்கொள்ளக் கூடிய வகையில் இத்தகைய சின்னச் சின்ன பிரச்சனைகளை தந்து உன்னை பக்குவப் படுத்துகிறேன். ஸ்ரீ ஷிர்டி சாய்பாபா. 

Sunday, August 14, 2011

பக்தர்களின் அடிமை


பக்தனை தனக்கு அடிமையாக்கி தன் பணி செய்யவைக்காமல், தான் அவனுக்கு அடிமையாகி அவனது பணிகளை பொறுப்பேற்று, எந்த கேள்விகளுக்கும், ஆசா பாசங்களுக்கும் இடமளிக்காமல் பக்தன் கட்டளையிடும் வேலைகளை அடிமை போல் செய்வேன். ஷிர்டி சாய்பாபா     

Saturday, August 13, 2011

என் பக்தன் ஆயிரம்


என் பக்தன் ஆயிரம் மயில்களுக்கு அப்பால் இருந்தாலும், ஒரு குருவி யின் கால்களுக்கு கயிறு கட்டி இழுப்பது போல். இந்த மசுதி தாயிடம் இழுத்துக்கொண்டு வருவேன். ஷிர்டி சாய்பாபா

Friday, August 12, 2011

பொறு, உன்னுடைய கவலைகளைத்


பொறு, உன்னுடைய கவலைகளைத் தூர எறி, உன்னுடைய துன்பங்கள் ஒரு முடிவுக்கு வந்து விட்டன. ஒருவன் எவ்வளவு தான் நசுக்கப்பட்டு வேதனைப்பட்டவனாக இருப்பினும், இச் சமாதியில் கால் வைத்தவுடனே அவன் மகிழ்ச்சியின் பாதையில் செல்கிறான். ஷிர்டி சாய்பாபா  

Thursday, August 11, 2011

தோல்வியின் பாடம்


தோல்வியிலிருந்து தப்பிக்க நினைப்பது அனுபவப் பாடங்களைக் கற்பதிலிருந்து தவறுவதாகும். ஆகவே, தோல்வியைப் பார்த்து பயப்படாதீர்கள், தோல்வி வேண்டாம் என ஓடாதீர்கள், தோல்வியை எதிர்கொள்ளுங்கள். அதிலிருந்து நிறைய பாடங்களை கற்கலாம். ஸ்ரீ சாயி தரிசனம்       

Wednesday, August 10, 2011

எவருடைய கணக்கற்ற


எவருடைய கணக்கற்ற புண்ணியச் செயல்கள் பழுத்துப் பலனளிக்க ஆரம்பித்து விட்டனவோ, அவர் தான் சாயி-யின் தரிசனத்திற்கு வரமுடியும். ஸ்ரீ சாயி சத்ச்சரித்ரா  

Tuesday, August 9, 2011

எது உனக்கென்று விதிக்கப்பட்டிருக்கிறதோ


எது உனக்கென்று விதிக்கப்பட்டிருக்கிறதோ, அதை அறிந்து கொண்டு நட. எப்பொழுதும் திருப்தி உள்ளவனாக இரு. சஞ்சலத்திற்கோ கவலைக்கோ எப்பொழுதும் இடம் கொடுக்காதே. ஷிர்டி சாய்பாபா     

Monday, August 8, 2011

நான் என் பக்தர்களின்


நான் என் பக்தர்களின் பிடியில்தான் இருக்கிறேன்; அவர்கள் பக்கத்திலேயே நிற்கிறேன். எப்போதும் அவர்களுடைய அன்பை தாகத்துடன்  நாடுகிறேன்; துன்பத்தில் அவர்கள் கூப்பிடும்போது ஓடிவருகிறேன். ஷிர்டி சாய்பாபா     

Sunday, August 7, 2011

ஸ்ரீஹரி நிஜமான பக்தர்களுடன்


ஸ்ரீஹரி நிஜமான பக்தர்களுடன் விளையாடுகிறான்; அவர்களுடைய தாளத்திற்கு ஆடுகிறான், அன்புக்கு அடிமையாகி கள்ளங்கபடமற்ற எளிமையான பக்தனை தேடி அலைகிறான். பாஷாண்டிகளுக்கு (வெளிவேஷம் போடுபவர்களுக்கு) அவன் என்றுமே அகப்படுவதில்லை. ஸ்ரீ சாயி சத்ச்சரித்ரா      

Saturday, August 6, 2011

எதற்க்கெடுத்தாலும் வாதம்


எதற்க்கெடுத்தாலும் வாதம் செய்யும் இயல்போ மற்றவர்களுடன் போட்டிபோடுவதோ நற்குணம் அன்று. உள்ளார்ந்த நம்பிக்கையும், தைரியமும், பொறுமையும் இல்லையனில் என்னை அடைவது சாத்தியமில்லை. ஸ்ரீ சாயி சத்ச்சரித்ரா    

Friday, August 5, 2011

இடைவிடாது என்னை


இடைவிடாது என்னை விசுவாசத்துடன் தொடரும் பக்தனுடைய உணவு தட்டு என்றும் நிறைந்திருக்கும் உயிருள்ள வரையில் காலி ஆகவே ஆகாது.  ஷிர்டி சாய்பாபா

Thursday, August 4, 2011

பொறுமை, நம்பிக்கை


எங்கு பொறுமை, நம்பிக்கை இரண்டுமே இருக்கின்றனவோ, அங்கு நான் சேவகனாக என்றும் இருக்கிறேன்; சந்தேகமே வேண்டாம். இவ்விரண்டும் இல்லையெனில் நான் என்றுமே எட்டிப்பிடிக்க முடியாதவனாகவே ஆகிறேன்.-ஷிர்டி சாய்பாபா     

Wednesday, August 3, 2011

வாதப்பிரதிவாதங்களும், சண்டையும்


வாதப்பிரதிவாதங்களும், சண்டையும், சச்சரவும் நமக்கு வேண்டாம். ஒருவரோடு ஒருவர் போட்டி போடுவதும் வேண்டாம். அவரவர் அவர்களுடைய ஷேமத்தைப் பற்றி  நினைத்தால் போதும். அனைவரையும் அல்லா பாதுகாப்பார். ஸ்ரீ சாயி சத்ச்சரித்ரா 

Tuesday, August 2, 2011

பாபா-வின் ஆணை


பாபா-வின் ஆணை தெளிவாக இருக்கும்போது, இது செய்யக்கூடிய செயலா, செய்யத்தகாத செயலா, இது பிடித்தது, பிடிக்காதது என்றெல்லாம் கேள்வி எழுப்பும் பக்தன் கடமையிலிருந்து விழ்ந்தவன். பக்தன் ஒருமுறை பூரண விசுவாசத்துடன் குருவின் பாதங்களில் புகலிடம் தேடி தன்னை ஏற்றுக் காப்பாற்றும்படி வேண்டினால், பாபா பக்தனுடைய பாரத்தை ஏற்றுக்கொள்கிறார். அதன் பிறகு அவன் செய்யவேண்டியது ஏதுமில்லை. ஸ்ரீ சாயி சத்ச்சரித்ரா             

Monday, August 1, 2011

அளவுகோல் ஒன்றே

அரசனாயினும் சரி, ஆண்டியாயினும் சரி, எல்லோரும் பாபா-வின் முன் எல்லாவிதங்களிலும் ஒரே மாதிரியாக நடத்தப்பட்டனர். லட்சுமியின் புத்திரனாக இருப்பினும் சரி, ஓட்டாண்டியாக இருப்பினும் சரி, அவருடைய அளவுகோல் ஒன்றே. ஸ்ரீ சாயி சத்ச்சரித்ரா     

விசுவாசத்தின் ஆழத்திற்க்கேற்றவாறு பக்தனின் பக்தியை கௌரவிக்கிறார் பாபா !

பாபா,  தன் பக்தன் தன்மேல் வைக்கும் "நம்பிக்கை மற்றும் விசுவாசத்தின் ஆழத்திற்கேற்றவாறு",  அவருக்கு மிகச்சிறந்த அனுபவங்களைக் கொடுத்த...