Monday, October 31, 2011

யாரையும் துன்புறுத்துவது


"யாரையும் துன்புறுத்துவது தகாத செயல். அது என்னை நோயுரச்செய்கிறது".  ஷிர்டி சாய்பாபா 

Sunday, October 30, 2011

எங்கும் வியாபித்துள்ளேன்நான் இந்த பெளதீக உடலுடன் ஷிரிடியில் மாத்திரம் இருக்கிறேன் என்ற எண்ணத்தை விட்டு விடுங்கள். நான் எங்கும் வியாபித்துள்ளேன்- ஷிர்டி சாய்பாபா.

Saturday, October 29, 2011

பாபாவின் காட்சியாக தெரியும்


நம்பிக்கையுள்ள வெகுளிகளுக்கு மனத்தில் என்ன இருக்கிறதோ அதுவே பாபாவின் காட்சியாகவும், செயலாகவும் தெரியும். ஸ்ரீ சாயி சத்ச்சரித்ரா.

Friday, October 28, 2011

10 மடங்கு


எனக்கு யார் ஒரு ரூபாய் தட்சிணையாகக் கொடுக்கிறாரோ, அவருக்கு நான் 10 மடங்கு திருப்பிக் கொடுக்கவேண்டும். ஷிர்டி சாய்பாபா

Thursday, October 27, 2011

நான் நின்று நடத்துகிறேன்


என்னை நம்பி என்பால் லயமாகும் பக்தனின் எல்லா காரியங்களையும் பொம்மலாட்டத்தைபோன்று நான் நின்று நடத்துகிறேன். ஷிர்டி சாய்பாபா 

Wednesday, October 26, 2011

தேவை என்பதே இருக்காது


என்னுடைய பக்தர்களுடைய வீட்டில் ஒரு போதும் தேவை என்பதே இருக்காது. - ஷிர்டி சாய்பாபா

Tuesday, October 25, 2011

அல்லா நல்லதே செய்வார்அல்லாவே இறைவன், நான் அவனின் சேவகனே. அல்லா நல்லதே செய்வார்.-   ஷிர்டி சாய்பாபா

Monday, October 24, 2011

இதயத்தே அமர்ந்துகொண்டிருக்கிற


பெருமையையும், அகங்காரத்தையும் ஒழித்து விட்டு  எள்ளளவும் அவற்றின் அடையாளம் கூட இருக்காதபடி விலக்கு. உங்கள் இதயத்தே அமர்ந்துகொண்டிருக்கிற என்னிடம் உங்களை பூரணமாக சமர்ப்பிப்பீர்களாக. ஷிர்டி சாய்பாபா    

Sunday, October 23, 2011

கண் கொட்டாமல் விழித்துக்கொண்டிருகிறேன்


எங்கே பக்தர்கள் என்னுடைய பெருமையைப் பாடுகிறார்களோ, அங்கு கண் கொட்டாமல் விழித்துக்கொண்டிருகிறேன். ஷிர்டி சாய்பாபா  

Saturday, October 22, 2011

பசியால் வாடும்


"பசியால் வாடும் எந்த உயிருக்கும் அன்னதானம் செய்பவர் உண்மையில் அதை என்னுடைய வாயில் இடுகிறார் என்று அறிவாயாக ! இது எங்கும், என்றும், சத்தியம் என்று அறிவாயாக". ஷிர்டி சாய்பாபா  

Friday, October 21, 2011

தீர்வு நிச்சயம் கிடைக்கும்


பாபாவிடம்  ஜாதி, உடம்பு, நிறம்,பணக்காரன், ஏழை, ஆண், பெண், திருநங்கை என்ற எந்தஒரு பேதமும் இருந்ததில்லை. சுத்தமான பக்தி, தூய்மையான மனம், நான் இந்த உடலல்ல, புனிதமான ஆன்மா என்ற ஒரு உணர்வு ஆகியவையே முக்கியம். இந்த உணர்வுகளோடு செல்பவருக்கு தீர்வு நிச்சயம் கிடைக்கும். ஸ்ரீ சாயி தரிசனம்.              

Thursday, October 20, 2011

வெற்றி


நீ எந்த காரியத்தை செய்து கொண்டிருந்தாலும், எங்கிருந்தாலும், எதைச் செய்தாலும் என்னையே நினைவில் நிறுத்தி உன் வேலையைச் செய். அதை நான் வெற்றியடையும் படி செய்வேன். ஷிர்டி சாய்பாபா     

Wednesday, October 19, 2011

விவரமாகத் தெரியும்


நீங்கள் எங்கிருந்தாலும் சரி, என்ன செய்தாலும் சரி, இதை நன்கு ஞாபகம் வைத்துக்கொள்ளுங்கள். நீங்கள் என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள் என்பது எனக்கு நிரந்தரமாக, விவரமாகத் தெரியும். -ஷிர்டி சாய்பாபா  
   

Tuesday, October 18, 2011

எப்போதும் ஜெயிப்பீர்கள்


என்னை நம்புகிறவர்களே! உங்களுக்கு சொல்வது இதுதான்.. முதலில் எனக்கு உங்கள் உள்ளத்தில் இடம் கொடுத்து, எனக்கே முக்கியத்துவம் தாருங்கள். நான் அங்கே ஆசனம் போட்டு அமர்ந்து கொண்டபின், உங்கள் உலக விஷயங்களுக்காக நான் லெளகீகத்திற்கு உரியவனாக என்னை மாற்றிக்கொண்டு உங்கள் சார்பில் வாதாடுவேன். எனது வாதம் வெற்றியைத் தரும். நீங்கள் எப்போதும் ஜெயிப்பீர்கள். ஸ்ரீ சாயி தரிசனம்          

Monday, October 17, 2011

பிறர் மீது குறை


எவன் ஒருவன் பிறர் மீது குறை கூறி குற்றம் கண்டு குதர்க்கம் செய்கிறானோ, அவன் என்னை உள்ளத்தில் துளைத்து காயம் எற்படுத்துகிறான். அனால் எவன் கஷ்டப்பட்டு பொறுமையுடன் இருக்கிறானோ, அவன் என்னை மிக அதிகமாக சந்தோஷப்படுத்துகிறான்.- ஸ்ரீ சாயி சத்ச்சரித்ரா      

Sunday, October 16, 2011

அன்னதானம்


அன்னதானம் இல்லாது செய்யப்படும் தருமத்தைப் பக்தி இல்லாத பஜனைக்கும், குங்குமத் திலகம் இட்டுக்கொள்ளாத சுமங்கலிக்கும், குரலினிமை இல்லாதவனின் பாட்டுக்கும், உப்பு இடப்படாத மோருக்கும் ஒப்பிடலாம். ஆகவே, பாபா உலகியல் ரீதியைக் கடைப்பிடிக்கும் வகையில் ஜனங்களுக்கு உணவளித்து திருப்தி செய்தார். ஸ்ரீ சாயி சத்ச்சரித்ரா

       

Saturday, October 15, 2011

அந்தர்யாமி (எங்கும் நிறைந்தவர்)


பாபாவின் பக்தர்களுக்கு "உடல்தான் நான் (பாபா)" என்னும் உணர்விருக்கும்வரைதான் பக்தர்களுக்கு மனித வடிவில் தேவைப்படுகிறார். "நான்(பாபா) கேவலம் இவ்வுடல் அல்லேன்" என்னும் விழிப்பை பெற்றவருக்கு நிராகாரமான (உருவமில்லாத) பாபாவே தேவையை நிறைவேற்றுகிறார். ஸ்ரீ சாயி சத்ச்சரித்ரா.          

Friday, October 14, 2011

பாமரன்


"பாமரனாகிய என்னால் என்மீது காட்டப்பட்ட கருணைக்கு பிரதி பலனாக எதுவுமே என்றுமே செய்ய இயலாது. ஆகவே, நான் என்னுடைய சிரத்தை உம்முடைய பாதங்களில் வைப்பதிலேயே திருப்திகொள்கிறேன். இந்த வழியில்தான் நான் சிறிதளவாவது என்னுடைய நன்றிக்கடனை கழிக்கமுடியும்; வேறு வழி எதுமே இல்லை, பாபா" - பாடீல், ஸ்ரீ சாயி சத்ச்சரித்ரா.        

Thursday, October 13, 2011

நல்வாழ்வு பெறுவார்கள்


யாருடைய பாவங்கள் விலக்கப்பட்டுவிட்டனவோ அந்த புண்ணியசாலிகளே என்னை அறிந்துகொள்கிறார்கள்; என்னை வழிபடுகிறார்கள். நான் என்னுடைய அருளால் உங்களுக்கு ஏழு கடல்களையும் அளிப்பேன் (ஏழு கடல்களுக்கு அப்பாலும் வந்து உங்களைக் காப்பாற்றுவேன்). எவர்கள் என்னுடைய இவ்வார்த்தைகளில் நம்பிக்கை வைக்கிறார்களோ, அவர்கள் நிச்சயமாக நல்வாழ்வு பெறுவார்கள்.- ஷிர்டி சாய்பாபா         

Wednesday, October 12, 2011

ஏன் கண்ணீர் சிந்துகீறிர்


என்னிடம் நம்பிக்கை இருக்கும் பொழுது இவ்விடத்தில் (துவாரகாமாயீ)  உங்களுடைய தலைமுடி ஒன்றுக்குகூடச் சேதம் விளையாது. நிலைமை இப்படிஇருக்க நீர் ஏன் கண்ணீர் சிந்துகீறிர்? ஷ்ரிடி சாய்பாபா.      
 

Tuesday, October 11, 2011

விரும்பியதை அடைவான்


நீங்கள் எதைத் தேடுகிறீர்களோ அதை உடனே உங்களுக்கு காட்டிக்கொடுக்கிறேன். ஆனால் என்னுடைய சொல்லுக்கு கட்டுப்பட்டவனே தான் விரும்பியதை அடைவான். ஸ்ரீ ஷிர்டி சாய்பாபா 

Monday, October 10, 2011

மனச் சந்தியை அளிப்பார்


சாயி தர்பாருக்கு யார் வேண்டுமானாலும் வரலாம். இங்கு வருவதற்கு எவருக்குமே தடை கிடையாது. முயற்சி செய்வது நம்முடைய  கடமை; வெற்றியை அளிப்பவர் மங்களங்களுக்கு அடித்தளமானவர். கடைசியில் அவரே மனச் சந்தியை அளிப்பார். ஸ்ரீ சாயி சத்ச்சரித்ரா    

Sunday, October 9, 2011

சிரிக்கவும் வேண்டா, அழவும் வேண்டா


வேண்டுவதோ, வேண்டாததோ, சுகமோ, துக்கமோ, அமிருதமோ, விஷமோ - இந்த இரட்டைச் சுழல்கள் நாம் சேர்த்த வினைகளுக்கு ஏற்றவாறு வெள்ளம் போல் நம்மை நோக்கிப் பாய்கின்றன, ஆகவே அவற்றை கண்டு சிரிக்கவும் வேண்டாம், அழவும் வேண்டாம். ஸ்ரீ சாயி சத்ச்சரித்ரா        

Saturday, October 8, 2011

என் பக்தன்


என் பக்தன் ஆயிரம் மயில்களுக்கு அப்பால் இருந்தாலும், ஒரு குருவி யின் கால்களுக்கு கயிறு கட்டி இழுப்பது போல். இந்த மசுதி தாயிடம் இழுத்துக்கொண்டு வருவேன். ஷிர்டி சாய்பாபா

Friday, October 7, 2011

கள்ளம் கபடமற்ற


கள்ளம் கபடமற்ற எளிய பக்தர்களுக்காக ஸ்ரீஹரி மிகவும் ஏங்குகிறார். அன்பு வலையில் ஒரு முழுமையாக கைதியாக இருக்கிறார். ஆனால் பெருமை கொள்பவர்களுக்கு, போலிகளுக்கு, வேஷதாரிகளுக்கு ஸ்ரீஹரி எட்டாத தூரத்தில் இருப்பார்.- ஷிர்டி சாய்பாபா.

Wednesday, October 5, 2011

காத்து அருள்கிறேன்


நீ என்னை அடைந்தால் நான் உங்களை காத்து அருள்கிறேன். ஷிர்டி சாய்பாபா 

Tuesday, October 4, 2011

ஷிர்டி எந்த விதத்தில் உதவி செய்யமுடியும்?


உனக்கு தேவையானவற்றையும், உனக்கு அறுகதை உள்ளவற்றையும் நான் கொடுத்துக்கொண்டே இருக்கிறேன். அதை போதாதென்று இன்னும் ஏதோ வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு ஷிர்டி எந்த விதத்தில் உதவி செய்யமுடியும்?. ஸ்ரீ சத்குரு வாணி.   

Monday, October 3, 2011

மசூதியிலிருந்து பேசும்


என்னுடைய பூத உடல் என் மசூதியிலிருந்து பேசும். ஷிர்டி சாய்பாபா

Saturday, October 1, 2011

தேவை


என்னுடைய பக்தர்களுடைய வீட்டில் ஒரு போதும் தேவை என்பதே இருக்காது. - ஷிர்டி சாய்பாபா 

விசுவாசத்தின் ஆழத்திற்க்கேற்றவாறு பக்தனின் பக்தியை கௌரவிக்கிறார் பாபா !

பாபா,  தன் பக்தன் தன்மேல் வைக்கும் "நம்பிக்கை மற்றும் விசுவாசத்தின் ஆழத்திற்கேற்றவாறு",  அவருக்கு மிகச்சிறந்த அனுபவங்களைக் கொடுத்த...