Wednesday, November 30, 2011

ஆடம்பரம்


நூறு இடங்களில் தையல்போட்ட கப்னியை (குர்தா) அணிந்து கொண்டும், கரடுமுரடான கோணிப்பையை ஆசனமாகவும், படுக்கையாகவும், செங்கல்லை தலையணையாகவும் உபயோகித்துக்  கொண்டிருந்தார், அவர் என்றும் ஆடம்பரத்தை விரும்பவில்லை.
ஸ்ரீ சாய் சத்சரித்ரா - 10  

Tuesday, November 29, 2011

பளுவை நான் நிச்சயமாக அதை தாங்குவேன்


நீ என் பேரில் உன் பளுவை சுமத்தினால் நான் நிச்சயமாக அதை தாங்குவேன். -ஷிர்டி சாய்பாபா

Monday, November 28, 2011

நினைத்தே பார்க்காதவற்றையும் அருள்செய்வார்


சிந்தாமணி நாம் கேட்பதைக் கொடுக்கும். கற்பக விருட்சம் நாம் மனதில் நினைத்ததைக் கொடுக்கும். காமதேனு நாம் ஆசைப்படுவதை உற்பத்தி செய்யும். ஆனால், குருவாகிய பாபாவோ நாம் நினைத்தே பார்க்காதவற்றையும் அருள்செய்வார்.    

Sunday, November 27, 2011

என்னுடைய உயிரையும் கொடுப்பேன்


நீங்கள் ஒரு வார்த்தை சொன்னால் என்னுடைய நோக்கம் வேகமாக முடியும். சந்தேகமே இல்லாமல் நீங்கள் வெற்றி பெறுவீர்கள். என் வாயிலிருந்து வெளிப்பட்ட வார்த்தையைக் காப்பாற்றுவதற்க்காக என்னுடைய உயிரையும் கொடுப்பேன். ஷிர்டி சாய்பாபா   

Saturday, November 26, 2011

சுபம் ஏற்படும்


நீங்கள் அனுபவிப்பது, உங்களிடமிருப்பது, நான் உங்களுக்கு ஆசிர்வதித்து கொடுத்ததாகும் என்பதை நீங்கள் அறிந்தால் உங்களுக்கு சுபம் ஏற்படும்- ஷிர்டி சாய்பாபா

Friday, November 25, 2011

நாயைப்போலக் குறைக்கவும் வேண்டாம்


யாராவது உன்னிடம் பணம் கேட்டால், உனக்குக் கொடுப்பதற்கு விருப்பமில்லை என்றால் கொடுக்க வேண்டாம். ஆனால் பணம் கேட்ட நபர் மீது நாயைப்போலக் குறைக்கவும் வேண்டாம். ஷிர்டி சாய்பாபா.    

Thursday, November 24, 2011

ஒவ்வொரு நிமிடமும்


என் பக்தர்களை ஒவ்வொரு நிமிடமும் கவனித்துக் காப்பாற்றிக்கொண்டு வருகிறேன். அவர்கள் எந்த வேலையாக சென்றாலும், அவர்களை விட முன்பாகவே நான் அங்கு சென்று இருப்பது அவர்களுக்கு ஆச்சர்யத்தை உண்டாக்கும். - ஷிர்டி சாய்பாபா

Wednesday, November 23, 2011

ஒவ்வொரு நிமிடமும்


என் பக்தர்களை ஒவ்வொரு நிமிடமும் கவனித்துக் காப்பாற்றிக்கொண்டு வருகிறேன். அவர்கள் எந்த வேலையாக சென்றாலும், அவர்களை விட முன்பாகவே நான் அங்கு சென்று இருப்பது அவர்களுக்கு ஆச்சர்யத்தை உண்டாக்கும். - ஷிர்டி சாய்பாபா

Tuesday, November 22, 2011

அபாரமான சுகம் கிடைக்கும்


"மற்றவர்கள் உன்னை எத்தனை வழிகளில் வசைபாடினாலும் கண்டனம் செய்தாலும் நீ எதிர்த்துக் கசப்பாகவோ, மனம்புண்படும்படியாகவோ பேசாதே. அதை பொறுமையுடன் சகித்துக்கொள்வாயாக; அதனால் உனக்கு அபாரமான சுகம் கிடைக்கும்". ஷிர்டி சாய்பாபா   

Monday, November 21, 2011

அமீர் சக்கரின் பொறுமையும், நம்பிக்கையும்


கசாப்புக் கடைக்கார குடும்பத்தில் பிறந்த அமீர்சக்கர் பாந்த்ராவில் (மும்பை) மிகப்பெரிய தரகராக இருந்தார். தம்மை பீடித்திருந்த முடக்குவாத நோய்க்கு பரிகாரம் கேட்டார். பாபா பதில் சொன்னார், "போங்கள், போய்ச் சாவடியில் நிம்மதியாக உட்காருங்கள்". 

ஆனால் இந்தச் சாவடியோ புராதானமானது. மேற்கூரையும், கிழ்த்தளமும் சிதிலமடைந்திருந்தன. பல்லியும், பாம்பும், தேளும், ஒணானும் சுதந்திரமாக வாழ்ந்துகொண்டிருந்தன. மேலும், குஷ்டரோகிகள் சிலர் அங்கு வாழ்ந்து கொண்டிருந்தனர். எச்சிலிலையோடு எறியப்பட்ட உணவைத் தின்று வாழ்ந்த சில நாய்களும் அங்கு இருந்தன. அமீர் சோகமடைந்தார்; ஆயினும், பாபாவின் பேச்சுக்கு எதிர்பேச்சு ஏது? கூரையிலிருந்து மழை நீர் ஒழுக்கு; தரை மேடும், பள்ளமும், குழிகளுமாக இருந்தது. இது போதாதென்று குளிரும், வாடைக்காற்றும் உடலை வாட்டின. அமீர்சக்கர் மனமுடைந்து போனார். 

மழை காற்றும், குளிரையும் தாங்க முடியாமல், அவருடைய மூட்டுகளெல்லாம் விறைத்துப் போயின. கடைசியில் மருந்து என்னவென்று பார்த்தால், பாபாவினுடைய சொல்லைத்தவிர வேறெதும் இல்லை.  ஸ்ரீ சாயி சத்ச்சரித்ரா.

Sunday, November 20, 2011

இதயத்தில் இடம் செய்துகொள்ளுங்கள்


வயிறு நிரம்பப் பாலைக் குடித்த பிறகும் கன்று தாயிடமிருந்து பிரிவதற்கு விரும்பாது. கன்றைத் தாயிடமிருந்து பிரிக்கக் கயிறு கொண்டுதான் கட்டவேண்டும். அதுபோலவே, நம்முடைய மனத்தை உலக இன்பங்களிலிருந்து பிரித்து, பாபாவின் பாதங்களில் கட்டிவிடவேண்டும். பாபா ஒவ்வொரு கட்டத்திலும் அவர் அருளும் நலம்தரும் போதனையை ஏற்ப்பதற்க்கு இதயத்தில் இடம் செய்துகொள்ளுங்கள்.      

Saturday, November 19, 2011

தரிசு நிலத்தின் மதிப்பு


வீரபத்ரனின் கேள்வி: "பாபா, செல்வம் என்னை அலட்சியப்படுத்துகிறது. மனைவியோ, இதை கொண்டுவா, அதைக் கொண்டுவா என்று முடிவேயில்லாமல் உரிமையுடன் கேட்கிறாள். போதும், போதும் இந்த அவமானம். எனக்கு இந்த இல்லறத்தின் கெளரவமே வேண்டாம்"
பாபா பதில்: "உன்னுடைய பாக்கியகாலம் நெருங்குகிறது; வீணாக துவண்டுவிடாதே. கையைக் கழுவுவது எவ்வளவு சுலபமோ அவ்வளவு சுலபமாக உனக்கு செல்வம் வந்து சேரும். பெரும் செல்வத்திற்கு அதிபதி ஆவாய்". (பாபாவின் நல்வாக்கு)
பின்னர் நடந்தது: வீரபத்ரனின் தரிசு நிலத்தின் மதிப்பு திடிரென்று உயர்ந்தது. 1 லட்சம் ருபாய் (100 வருடங்களுக்கு முன்பு) கொடுக்கத்தயார் என்று சொல்லிக்கொண்டு வாங்குபவர் ஒருவர் வந்தார்.        

Friday, November 18, 2011

எண்ணவோட்டத்தை அறிந்தவர்


தரிசனம் செய்தபோதே அவர்களுடைய எண்ணவோட்டத்தை அறிந்து அவர்களை வெட்கப்படும்படி செய்து, ஜன்மாந்தர பாவங்களை அழித்துத் தம்முடைய சேவடிகளுக்கு இழுத்துக்கொண்டார் சாயி.  

Thursday, November 17, 2011

உம் திருவடிக்கு இழுத்துவந்துவிடுகிறீர்


எவ்வளவு முயற்சி செய்யினும் எங்கள் கண்களுக்குப் புலப்படாதவாறு செய்துவிடுகிறீர்; அவ்வளவு மெல்லியதான நூலைப் பிடித்திருக்கிறீர். எப்படி இருந்தால் என்ன? இந்த தேசத்தில் இருப்பினும், அல்லது வேறு தேசத்தில் வசிப்பினும், பக்தர்களை இந்நூலால் உம் திருவடிக்கு இழுத்துவந்துவிடுகிறீர். அவ்வாறு இழுத்துவந்து அவர்களை கட்டியணைக்கிறீர், ஒரு தாய் தம் குழந்தையை பராமரிப்பதுபோல சிரமமின்றி அவர்களை சுலபமாக கவனித்துகொள்கிறீர். ஸ்ரீ சாயி சத்ச்சரித்ரா.        

Wednesday, November 16, 2011

பாபாவின் தரிசனம்


நேருக்குநேராக  தரிசனம் செய்தவர் சிலர். காட்சியாக தரிசனம் பெற்றவர் பலர். வேறு உருவத்திலும் மாறுவேஷத்திலும் அற்புத தரிசனம் பெற்றவர் அநேகர். நம்பிக்கை இல்லாதவர்களுக்கு அவர் தெரிவதில்லை, நம்பிக்கை உள்ளவர்களுக்கு அவர்கள் எங்கிருந்தாலும் தரிசனம் தருவார். மக்களுடைய மனச்சாய்வு எப்படியோ அப்படியே நேரிடை அனுபவம் ஏற்படுகிறது.        

Tuesday, November 15, 2011

திருட்டு பொருள் உதவாது


பாலா ஸாஹீப் தேவ்-விடம், பாபா கூறியது;   "உமக்குத் தங்கச்சரிகை போட்ட அழகான சால்வையை அளிக்க நான் இங்கு உட்கார்ந்திருக்கும்போது, நீர் ஏன் கந்தல் துணிகளைத் திருடச் செல்கிறீர்? ஏன் இந்த திருட்டு வேலையில் இறங்குகிறீர்?  உன்னுடைய மனத்தில் என்னென்ன தோன்றுகின்றனவோ அன்னன்ன விருப்பங்களை பூர்த்திபண்ணுபவன் நானே, திருட்டு பொருள் வேலைக்கு உதவாது" - ஸ்ரீ சாயி சத்ச்சரித்ரா.   

Monday, November 14, 2011

மசுதிஇந்த மசுதியின் கதவுகள் யாருக்காகிலும், எப்போதும் திறந்தே இருக்கும்.
-ஷிர்டி சாய்பாபா

Sunday, November 13, 2011

செல்வம் தேவை

 
புலனின்பங்களை அனுபவிப்பதற்குச் செல்வம் தேவை. செல்வத்தை தேடுவதற்கு வானளாவிய முயற்சிகள் எடுக்கப்படும்போது சுகபோகங்களுக்கான தாகம் மேலும் மேலும் அதிகரிக்கிறது. அதிலிருந்து விடுபடவே முடிவதில்லை! நிலைமை இப்படி இருக்க,  உன்னுடைய பணத்திலிருந்து நீ மனமுவந்து ஒரு பைசா கொடுத்தாலும் அது எனக்கு ஒரு லட்சத்திற்கு ஈடாகும். கொடுப்பதை மனமுவந்து கொடுக்கவேண்டும். உனக்கு எது சொந்தமோ அதிலிருந்து எவ்வளவு சிறியதானாலும், அதை பெறுவதில் நான் திருப்தி அடைகிறேன். ஸ்ரீ சாயி சத்ச்சரித்ரா     

Saturday, November 12, 2011

இமாலய அறியாமை


எனக்கு ஞானத்தைப்பற்றிய உபநியாசம் தேவையில்லை. என்னுடைய இமாலய அறியாமையை அழித்து என்னை கிருபையுடன் நோக்குங்கள். அந்தக் கடைக்கண் பார்வையில்தான் என்னுடைய சுகமும் பூரணமான திருப்தியும் இருக்கின்றன. - நானா சந்தோர்கர், ஸ்ரீ சாயி சத்ச்சரித்ரா.   

Friday, November 11, 2011

10 மடங்கு


எனக்கு யார் ஒரு ரூபாய் தட்சிணையாகக் கொடுக்கிறாரோ, அவருக்கு நான் 10 மடங்கு திருப்பிக் கொடுக்கவேண்டும். ஷிர்டி சாய்பாபா

Thursday, November 10, 2011

இரவு பகலாக திடமாக நிற்கிறேன்


நீங்கள் எங்கிருந்தாலும் சரி, என் முன்னர் பக்தியுடனும், விசுவாசத்துடனும் கை நீட்டினால், நான் உங்களுடைய பக்திக்கும், விசுவாசத்திற்க்கும் ஏற்றவாறு இரவு பகலாக உங்களுடன் திடமாக நிற்கிறேன். ஷிர்டி சாய்பாபா     

Wednesday, November 9, 2011

நீ பார்க்கும் அனைத்துமாய் இருக்கிறேன்


நான்  உன்னுடனேயே, உனக்குள்ளே, மற்றும் நீ பார்க்கும் அனைத்துமாய் இருக்கிறேன். நீ என்னவாக இருந்தாலும், என்ன செய்துகொண்டிருந்தாலும். ஷிர்டி சாய்பாபா

Tuesday, November 8, 2011

சொர்க்கம்


வியாதிகளுக்கும், கவலைகளுக்கும், வலிகளுக்கும், இன்னல்களுக்கும் எங்கு இடமில்லையோ, யாருமே பசியாலும், தாகத்தாலும், முதுமைபற்றிய பயத்தாலும் எங்கு வருத்தப்படுவதில்லையோ, எவ்விடத்தில் மரணபயம் இல்லையோ, எவ்விடத்தில் விதிக்கப்பட்டது, விதிக்கப்படாதது என்னும் பேதத்திற்கு இடமில்லையோ, எவ்விடத்தில் ஜீவன்கள் பயமற்று உலவுகின்றனவோ, அவ்விடமே துவாரகை (சொர்க்கம்).             

Monday, November 7, 2011

தேரோட்டுபவன் திறமைசாலியாக


தேரோட்டுபவன் திறமைசாலியாக இருக்கும்போது தேரில் அமர்ந்திருப்பவர் ஏன் சஞ்சலப்படவேண்டும்? என்னில் சரணடைந்தவர்களுக்கு அவர்களுடைய தேவைகளை பூர்த்தி செய்வது என்னுடைய வேலையே ஆகும்.

Sunday, November 6, 2011

பாபாவுக்கு காரண காரியங்கள் தெரியும்


பாபாவுக்கு காரண காரியங்கள் தெரியும். காரண காரிய தொடர்பையும் நன்கு அறிந்தவர். பாபாவின் மனத்தில் என்ன தோன்றுகிறதோ, அது நடந்துவிடும் என்பதை உறுதியாக அறியவும்.   
 

Saturday, November 5, 2011

நான் உனக்கு சாந்தியை அளிப்பேன்


மன சாந்தி இல்லாத என்ற ஒரு அங்குல இடம் கூட இவ்வுலகில் எங்கும் கிடையாது. உன் பாரத்தை என் மேல் வை. என் மீது உன் பார்வையை திருப்பு. என்னையே தியானி, நிச்சயமாய் நான் உனக்கு சாந்தியை அளிப்பேன்.- ஷிர்டி சாய்பாபா

Friday, November 4, 2011

இன்னல்களும்,துயரங்களும் ஒழிந்துபோகும்


பாபா-வின் திருவாய் முலம் உதிர்ந்த கதைகளை கேட்கவேண்டும். ஆராய்ச்சிக்கு அப்பாற்பட்ட அவருடைய லீலைகளை அனுபவிக்கவேண்டும். எத்தனை லீலைகளைச் சேகரிக்கமுடியுமோ அத்தனையையும் சேகரித்து மற்றவர்களுக்கு எடுத்துச் சொல்லவேண்டும். சாயியின் அற்புதமான சரித்திரத்தை பக்தியுடன் கேட்கப்பட்டால், எடுத்துச் சொல்பவர், கேட்பவர்கள், இவர்களுடைய இன்னல்களும், துயரங்களும் ஒழிந்துபோகும்.       

Thursday, November 3, 2011

ஸ்ரீ சாயி சத்ச்சரித்ரா


எந்த அளவிற்க்கு பாபாவின் (சத்ச்சரித்ரா) கதை கேட்பவர்களின் நம்பிக்கையும், விசுவாசமும் அதிகரிக்கின்றதோ அந்த அளவிற்க்கே சாயி-யின் பொக்கிஷம் அவர்களுக்குத் திறக்கும். குதர்க்கிகளுக்கும் தொந்தரவு கொடுப்பவர்களுக்கும் இந்த லாபம் கிடைக்காது. அன்பார்ந்த, நம்பிக்கையுள்ள பக்தனே இதை அனுபவிக்க முடியும். ஸ்ரீ சாயி சத்ச்சரித்ரா      

Wednesday, November 2, 2011

நான் வழிகாட்டுகிறேன்


நிலையற்ற புத்தியுள்ள மனிதன், ஒரு முறை கவலையை இறக்கிவைப்பான். இன்னொரு முறை அதை தன் மீது ஏற்றிக்கொண்டு திரிவான். அவனது மனதுக்கு உறுதி என்றால் என்ன என்பதே தெரியாது. அவனுக்கு உதவி செய்ய நான் இறக்கம் கொண்டுள்ளேன். உங்களுடைய நம்பிக்கையை என் மீது வைத்து அதை பற்றிக்கொள் நான் வழிகாட்டுகிறேன். ஷிர்டி சாய்பாபா       

Tuesday, November 1, 2011

பாபாவின் மனோரதம்


பக்தர்களின் விருப்பங்களைப் பூர்த்திசெய்வதும், அவர்களை தரிசனத்திற்கு அழைத்து அவர்களுடைய உலகியல் தேவைகளையும், ஆன்மீகத் தேடல்களையும் நிறைவேற்றிவைப்பதுமே பாபாவின் மனோரதமாக இருந்தது. - ஸ்ரீ சாயி சத்ச்சரித்ரா       

"குருபூர்ணிமா - சப்தாக பாராயணம் "

சாய் பக்தர்கள் அனைவருக்கும் வணக்கம்.. 🙏🙏 "குருபூர்ணிமா -  சப்தாக பாராயணம்" வரும் 13-07-2022ம் தேதி குருபூர்ணிமா தினம் கொண்டாடப்ப...