Saturday, November 19, 2011

தரிசு நிலத்தின் மதிப்பு


வீரபத்ரனின் கேள்வி: "பாபா, செல்வம் என்னை அலட்சியப்படுத்துகிறது. மனைவியோ, இதை கொண்டுவா, அதைக் கொண்டுவா என்று முடிவேயில்லாமல் உரிமையுடன் கேட்கிறாள். போதும், போதும் இந்த அவமானம். எனக்கு இந்த இல்லறத்தின் கெளரவமே வேண்டாம்"
பாபா பதில்: "உன்னுடைய பாக்கியகாலம் நெருங்குகிறது; வீணாக துவண்டுவிடாதே. கையைக் கழுவுவது எவ்வளவு சுலபமோ அவ்வளவு சுலபமாக உனக்கு செல்வம் வந்து சேரும். பெரும் செல்வத்திற்கு அதிபதி ஆவாய்". (பாபாவின் நல்வாக்கு)
பின்னர் நடந்தது: வீரபத்ரனின் தரிசு நிலத்தின் மதிப்பு திடிரென்று உயர்ந்தது. 1 லட்சம் ருபாய் (100 வருடங்களுக்கு முன்பு) கொடுக்கத்தயார் என்று சொல்லிக்கொண்டு வாங்குபவர் ஒருவர் வந்தார்.        

பக்தனின் சாயி நாமஜெபத்தை கேட்கும் பாபா

எப்பொழுதெல்லாம் நேரம் கிடைக்கிறதோ, அப்பொழுதெல்லாம் சாயி நாமஜெபத்தில் ஈடுபடுங்கள். நீங்கள் சாயி சாயி என்று சொல்லும்போது, பாபா மிக ஆனந்தத்...