
அனைத்து சாய் அன்பர்களுக்கும் மற்றும் ஆன்மிக அன்பர்களுக்கும், ஷிர்டி சாய்பாபா-வின் பேச்சு சூத்திரங்களை போன்றது; அர்த்தமோ மிகவும் கம்பிரமானது; வெகு ஆழமான வியாபகமுள்ளது; இருப்பினும் பேச்சு சுருக்கமானது, அவரது திரு வாயின் முலம் உதிர்ந்த உபதேசங்களை, தினமும் பாபாவின் ஒரு செய்தி-யை இந்த வலைத்தளத்தில் தமிழில் வெளியிடப்படும். சாயி அன்பர்கள் கிழே தங்களது இ-மெயில் முகவரியை பதிவு செய்யலாம். ஓம் சாய் ராம்.
Saturday, December 31, 2011
Friday, December 30, 2011
பரஸ்பர அன்பு
பாபாவுக்கும், பக்தனுக்கும் இடைவெளி ஏதும் இல்லை. அவர்கள் இருவரும் எப்பொழுதும் இணைந்தேயிருக்கிறார்கள். பக்தன் பாபாவின் பாதங்களில் தலைசாய்ப்பது உடலளவில் செய்யப்படும் மரியாதையே. பக்தன், தான் பாபாவோடு ஒன்றியவன் என்ற எண்ணத்திலேயே பாபாவை வழிபடுகிறான். பாபாவும் பக்தனை தன்னில் ஒன்றியவன் என்றே வழிபாட்டை ஏற்றுக்கொள்கிறார். இவ்வாறான பரஸ்பர அன்பை பக்தன் புரிந்துகொள்ளவேண்டும்.
Thursday, December 29, 2011
பாபாவின் வழிமுறை
வெல்லம் இனிப்புதான்; சந்தேகமேயில்லை. ஆனால், அது நோயாளியின் உடல்நலத்துக்குக் கெடுதல் விளைவிக்கும். உண்மை இவ்வாறிருப்பினும், நோயாளி வெல்லம் பெறாமல் கஷாயத்தைக் (மருந்து) குடிக்கமாட்டேன் என்று பிடிவாதம் பிடிக்கிறார். கையில் முதலில் வெல்லக்கட்டி வைக்கப்பட வேண்டும். வெல்லத்தின் கெடுதலை முறியடிக்கும் வகையில், கஷாயத்தில் வெல்லத்தின் முறிவுமருந்தையும் சேர்த்துக் கஷாயத்தின் குணப்படுத்தும் சக்தி குறையாதவாறு வைத்தியர் செய்துவிடுகிறார். பாபாவின் வழிமுறையும் இவ்வாறே!
Wednesday, December 28, 2011
Tuesday, December 27, 2011
இன்னல் தரும் நிகழ்ச்சிகளும் விலகும்
எதெல்லாம் நடக்கவேண்டுமோ, அதெல்லாம் அதன்வழி நடக்கட்டும். ஆனால், நம்முடைய நல்வாழ்வு பாபாவை பற்றிய சிந்தனையில்தான் இருக்கவேண்டும். அப்படியிருக்க, விதியால் நிர்ணயிக்கப்பட்ட விபத்துக்களும் இன்னல் தரும் நிகழ்ச்சிகளும் விலகும்.! இளகிய மனம் படைத்த சாயி பக்தர்களின் எண்ணங்களைக் கண்டு அவர்களுடைய நம்பிக்கை (பக்தியை) பாராட்டும் வண்ணம் ஒன்றன்பின் ஒன்றாகச் சீரிய அனுபவங்களை அளிக்கிறார்.
Monday, December 26, 2011
காப்பாற்ற ஓடிவருகிறார்
ஒருமுறை பாபாவை அன்புடன் நோக்கினால், அவர் ஆயுள் முழுவதற்க்கும் நம்முடையவர் ஆகிவிடுகிறார். உண்மையான அன்பைத் தவிர நம்மிடம் அவர் வேறெதையும் எதிர்பார்ப்பதில்லை. நாம் கூப்பிடும்போது காப்பாற்ற ஓடிவருகிறார். அந்நேரத்தில் காலமோ, நேரமோ அவருக்குக் குறுக்கே நிற்கமுடியாது. சதாசர்வ காலமும் அவர் நமக்குப் பின்னால் உறுதியாக நிற்கிறார். அவர் எங்கு, எவ்வாறு, எந்த விசையை இயக்குவார் என்று நமக்குத் தெரியாது. அவருடைய செயல்கள் புரிந்துகொள்ளமுடியாதவை.
Sunday, December 25, 2011
நாம் பொம்மைகளே
குணம் (சிறப்பாக) தெரிந்தால் அது சாயி-யினுடையது. குணத்தில் பிழை ஏதாவது இருப்பினும் அதுவும் அவருடையதே! நாம் பாபாவின் கையிலிருக்கும் பொம்மை. நூல்களின் இழுப்புக்கேற்ப நடனமாடுகிறோம். நூல்கள் அனைத்தும் பொம்மலாட்டக்காரரின் கைகளில் இருக்கின்றன. கதைக்கேற்றவாறு பலவிதமான வண்ணங்களிலும், உருவங்களிலும் உள்ள விசித்தரமான பொம்மைகளை கதாபாத்திரங்களாக்கி நடிக்கவைக்கிறார்.
Saturday, December 24, 2011
என் மீது ஏவுக
காமம் எழும்போது என் விஷயமாக காமப்படு. கோபம் வரும்போது கோபத்தை என்மீது காட்டு. மனத்துள் தோன்றும் கேட்ட எண்ணங்களையும், விருப்பமில்லாமல் வலிய நிகழ்த்தும் செயலையும் பக்தர்கள் என்னுடைய பாதங்களை நோக்கியே செலுத்தட்டும். காமம், கோபம், கேட்ட எண்ணங்கள் போன்ற இயற்கையான உணர்ச்சிகள் பொங்கி எழும்போது என்னைக் குறியாக ஆக்கி அவற்றை என் மீது ஏவுக.
Friday, December 23, 2011
Thursday, December 22, 2011
சுகமாகிவிடும்;பக்கீர் தயாளகுணமுள்ளவர்
அப்போது சுமார் இரவு 7 மணி இருக்கலாம். சாமாவின் சுண்டுவிரலை தீடிரென்று ஒரு நாகம் தீண்டிவிட்டது. கையில் விஷம் ஏறி எரிச்சல் எடுத்தது. சாமா மசுதிக்கு ஓடினார். சாமாவைக் கண்டதும் பாபா படியேறவும் விடாது திட்டினார்; சாபமிட்டார். "ஒ சாமா (பாபா கூறியது இங்கே விஷத்தை) ! ஏறாதே ஏறாதே, ஏறினால் தெரியும் சேதி! போ வெளியே உடனே ! இறங்கி ஓடு!" என கர்ஜனை செய்தார். பாபாவின் கோபம் சாமாவுக்கு வியப்பை அளித்தது. சற்றும் எதிர்பாராத நெருப்பைகக்கும் சொற்கள் வெளிவந்தன. சிறிது நேரம் கழித்து பாபா சொன்னார். "தைரியத்தை இழந்துவிடதே; உன் மனத்தில் எந்தவிதமான கவலையும் வேண்டாம்; சுகமாகிவிடும்; கவலையை விடு. பக்கீர் தயாளகுணமுள்ளவர்;உன்னை ரட்சிப்பார்"
Wednesday, December 21, 2011
என்னை கேள்வி கேள்
நீ எங்கு இருக்கின்றாயோ அங்கேயே இருந்துகொண்டு என்னை கேள்வி கேள் ! தேவையில்லாது எதற்காகக் காட்டிலும், வனத்திலும் திரிந்து விடைகளைத் தேடுகிறாய்? நான் உன்னுடைய ஞான நாட்டத்தை திருப்தி செய்கிறேன். அந்த அளவிற்கு என்னை நம்புவாயாக.- நான் அனைவருள்ளும் வியாப்பித்திருக்கிறேன். நான் இல்லாத இடமே இல்லை. பக்தர்களுக்காக நான் எங்கும் , எப்படியாவது தோன்றுவேன்.
Tuesday, December 20, 2011
பாபாவின் வழிகள் எண்ணிலடங்கா
ஒருவருக்கு ஒன்று, மற்றொருவருக்கு வேறு. தீஷை (உபதேசம்) அளிக்கும் வழிகள் எண்ணிலடங்கா. ஒருவரை தம்முடைய காலடியிலேயே கிடக்கச்சொன்னார். அச்சமயத்திலேயே மற்றொருவரை கண்டோபா கோவிலுக்கு அனுப்பினார். குடிப்பழக்கத்திற்கு அடிமையான ஒருவரின் கனவிலும் தோன்றினார். அவருடைய மார்பில் அமர்ந்துகொண்டு கைகளாலும், கால்களாலும் அவரை அமுக்கினார். குடிகாரர் தம்முடைய கைகளை காதுகளில் வைத்துக்கொண்டு இனி மதுவை தொடமாட்டேனென்றும் அறவே விட்டுவிடுவேன் என்றும் சத்தியம் செய்த பின்னரே அவரை விடுதலை செய்தார்.
Monday, December 19, 2011
வினை விதைத்தவன் வினை அறுப்பான்
இறைவனின் அருள் இருந்தால் உட்கார்ந்த இடத்திலேயே சுண்டுவிரலைக் கூட அசைக்காமல் நான் அனைத்தையும் பெறுவேன் என்னும் பழமொழி சந்தேகமில்லாமல் உண்மையே. ஆனால், அது உணவுக்கும், உடைக்கும் மட்டும் தான் பொருந்தும். பாபாவை பொறுத்தவரையில் இந்த விதியை பொருத்த முயல்பவன் எவ்வித முன்னேற்றமும் இன்றி ஏமாறிப்போவான். 'தினை விதைத்தவன் தினை அறுப்பான்; வினை விதைத்தவன் வினை அறுப்பான்' இது பாபாவின் விலைமதிக்கமுடியாத உபதேசம்.
Sunday, December 18, 2011
Saturday, December 17, 2011
மனத்தின் இனிய விருப்பங்கள்
அல்லவே எஜமானர்; அல்லவே எஜமானர்! அவரைத் தவிர துன்பங்களிலிருந்து விடுதலை அளிப்பவர் வேறு எவரும் இல்லை. அவருடைய செய்கைகள் உலகியலுக்கு அப்பாற்பட்டவை; விலைமதிப்பற்றவை; கற்பனைசெய்து பார்க்கமுடியாதவை! அவர் நினைப்பதே நடக்கும்; அவரே வழியைக் காட்டுவார். நம்முடைய மனத்தின் இனிய விருப்பங்கள் ஒரு கணமும் தானதமின்றி நிறைவேறும் நாள் வரும்.
Friday, December 16, 2011
Thursday, December 15, 2011
Wednesday, December 14, 2011
Tuesday, December 13, 2011
Monday, December 12, 2011
Sunday, December 11, 2011
Saturday, December 10, 2011
Friday, December 9, 2011
Thursday, December 8, 2011
Wednesday, December 7, 2011
Tuesday, December 6, 2011
Monday, December 5, 2011
Saturday, December 3, 2011
Friday, December 2, 2011
Thursday, December 1, 2011
இதயத்தில் காயம் உண்டாகாதே
யாராவது பண உதவி கேட்டோ, பசியின் காரணமாக உணவு கேட்டோ, அல்லது உடைக்காகவோ,அல்லது இருக்க இடம் கேட்டோ உன்னிடம் வரலாம்.ருணானுபந்தம் இருந்தாலொழிய ஒருவரிடம் மற்றவர் வரமாட்டார். அப்படி யாராகிலும் வந்தால், உன்னால் முடிந்தால் உதவு, இல்லையேல் மிருதுவான மொழியில் பேசி அனுப்பிவிடு, கண்டிப்புடன் பேசி அவர்கள் இதயத்தில் காயம் உண்டாகாதே. ஷிர்டி சாய்பாபா
Subscribe to:
Posts (Atom)
குருசரணம்
"இடையறாத குருநினைவே நமக்கு இகவுலக க்ஷேமமும் பரவுலக க்ஷேமமும். குருசரணங்களில் பணிவதே செய்யவேண்டிய செயல்கள் அனைத்தும்; அடையவேண்டிய பலன்கள...

