Sunday, December 25, 2011

நாம் பொம்மைகளே


குணம் (சிறப்பாக) தெரிந்தால் அது சாயி-யினுடையது. குணத்தில் பிழை ஏதாவது இருப்பினும் அதுவும் அவருடையதே! நாம் பாபாவின் கையிலிருக்கும் பொம்மை. நூல்களின் இழுப்புக்கேற்ப நடனமாடுகிறோம். நூல்கள் அனைத்தும் பொம்மலாட்டக்காரரின் கைகளில் இருக்கின்றன. கதைக்கேற்றவாறு பலவிதமான வண்ணங்களிலும், உருவங்களிலும் உள்ள விசித்தரமான பொம்மைகளை கதாபாத்திரங்களாக்கி நடிக்கவைக்கிறார்.     

விரதம் என்ற பெயரில் பட்டினியை விட்டுவிடு

ஒரு தினம் பகல் ஆராத்திக்காக மசூதியில் மக்கள் குழுமியிருந்தனர். அக்கூட்டத்தில் நானும் ஒருவன். பாபா என்னை அழைத்து சாப்பிட்டுவிட்டு வரச்சொன்னார...