Thursday, December 29, 2011

பாபாவின் வழிமுறை


வெல்லம் இனிப்புதான்; சந்தேகமேயில்லை. ஆனால், அது நோயாளியின் உடல்நலத்துக்குக் கெடுதல் விளைவிக்கும். உண்மை இவ்வாறிருப்பினும், நோயாளி வெல்லம் பெறாமல் கஷாயத்தைக் (மருந்து) குடிக்கமாட்டேன் என்று பிடிவாதம் பிடிக்கிறார். கையில் முதலில் வெல்லக்கட்டி வைக்கப்பட வேண்டும். வெல்லத்தின் கெடுதலை முறியடிக்கும் வகையில், கஷாயத்தில் வெல்லத்தின் முறிவுமருந்தையும் சேர்த்துக் கஷாயத்தின் குணப்படுத்தும் சக்தி குறையாதவாறு வைத்தியர் செய்துவிடுகிறார். பாபாவின் வழிமுறையும் இவ்வாறே!     

குருவின் மீதான திடமான நம்பிக்கை

ஒருநாள் ஒரு பக்தர் ஸ்ரீதேம்பே மகாராஜ் ஸ்வாமி அவர்களிடம்,  "ஸ்வாமி ! ‌இவ்வுலக வாழ்க்கை எனும் சமுத்திரத்தில் இருந்து என்னைக் காப்பாற்றுங்...