Tuesday, January 31, 2012

உன்னால் முடியும்உனக்கு எதிராக தொடுக்கப்படும் எந்தவிதமான அஸ்திரமும் உன்னை நெருங்காது. உன்னிடம் உள்ள இறைவன் சாயி மிகப் பெரியவன். நீதிபதியான அவன் உனது மனதை தினந்தோறும் படித்துக்கொண்டு உட்கார்ந்திருப்பவன்.

நீ பயப்படவேண்டியது கோர்ட்டுக்கோ, வழக்கு போன்றவற்றுக்கோ, தண்டனைக்கோ அல்ல. உன்னை நம்பி பொறுப்பை ஒப்படைத்துவிட்டு, உன்னால் முடியும் என உட்கார்ந்து வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கிறாரே சாயி பாபா, அந்தக் கடவுளுக்கு மட்டுமே என்பதை நினை. ஸ்ரீ சாயி தரிசனம்.

          

Monday, January 30, 2012

உலக ஆதாய நன்மை


ஒருமுறை பக்தர் ஒருவர், உலக ஆதாய நன்மையை நாடி பாபாவிடம் மக்கள் போவதை ஆட்சேபித்தபோது, பாபா "ஒருபோதும் அப்படி செய்யாதே. எனது மக்கள் முதலில் அதற்காகத்தான் என்னை நாடி வருகிறார்கள். தமது ஆசைகள் நிறைவேறி, வாழ்க்கையில் சவுகரியத்தை அடைந்த பிறகு, அவர்கள் என்னை பின்பற்றி ஆத்மீகத் துறையிலும் முன்னேறுகிறார்கள். என்னைச் சேர்ந்தவர்களை தொலை தூரத்தில் இருந்தெல்லாம் பல்வேறுவித முகாந்திரமாக இங்கே வரவழைக்கிறேன். நானேதான் அவர்களை என்னிடம் வரவழைக்கிறேன். அவர்கள் தம் இச்சைப்படி தாமே வருவதில்லை. நான் அவர்களை என்னிடம் இழுத்துக்கொள்கிறேன்" என்றார். இச்சொற்கள் இன்றும் பலித்து வருகின்றன.                

Sunday, January 29, 2012

உன் கடமைகளை நீ செய்


உன் கடமைகளை நீ செய், உன் கரங்களால் வேலை செய், வாயினால் பேசு, கண்களால் பார், அவ்விதமாக உன் தேவைகளை பூர்த்திசெய்துகொள். மனத்தை மட்டும் என்னிடம் லயமாக்கு. உன் சிரமத்திற்கு அதிகமாக 100 மடங்கு நான் கொடுக்கிறேன். ஷிர்டி சாய்பாபா 

Saturday, January 28, 2012

முக்கால் அங்குலம் போட்டோ


சாயி ராம்! சாயி ராம்! என்று உதடுகளால் சொல்லி உள்ளத்தால் என்னைவிட்டு தள்ளி நிற்காதே! நான் உன் உள்ளத்தை பிட்சையாகக் கேட்டு நிற்கிறவன். எதற்காக பிச்சை எடுக்கிறேன். என் குழந்தை உனக்காக! நீ வெறும் உள்ளத்தை கொடுத்தால் அதை மிகவும் உயர்ந்ததாக, பொக்கிஷம் நிறைந்ததாக நான் திருப்பித் தருவேன்.

என்னை மூன்று முழ சரீரம் என்றோ, முக்கால் அங்குலம் போட்டோ என்றோ நினைத்துக் கொள்ளாதே! என்னை முழுமையாக சரணடைந்துவிடு! உன் துன்பங்களை வெகு சில நாட்களில் மாற்றிக் காட்டுகிறேன். ஸ்ரீ சாயி-யின் குரல்           
 

Friday, January 27, 2012

போதனை போதாது, பயிற்சி வேண்டும்


வரிவிதிப்புத் துறையில் குமாஸ்தாவாக இருந்த வி.எச். தாகூர் என்பவர் தமது வேலை நிமித்தமாக வட்கான் என்ற இடத்துக்குச் சென்றபோது, புகழ்பெற்ற கன்னட மகானான அப்பா என்பவரை தரிசித்தார். தாகூர் அவரை வணங்கியபோது, அவர் ஆசீர்வதித்துவிட்டு, "நீ வடக்கே உன் அலுவலக விஷயமாக சுற்றுப்பயணம் போகும்போது ஒரு பெரிய மகானை சந்திப்பாய். அவர் உனக்கு அமைதியடையும் வழியை காட்டுவார்" என்றார்.

தாகூருக்கு ஜூன்னார் என்ற இடத்துக்கு மாற்றல் கிடைத்தது. அங்கு மிக செங்குத்தான நானேகாட் என்ற மலையை எருமை மேல் ஏறி கடக்கவேண்டியிருந்தது. சவாரி அவரது உடலை மிகவும் வலிக்குள்ளாகியது.பின்னர் அங்கிருந்து கல்யான் என்ற இடத்திற்கு மாற்றல் பெற்று வேலை செய்தபோது நானா சாகேப் சந்தோர்க்கர் அறிமுகம் கிடைத்தது. அவருடன் ஷீரடிக்கு சென்று பாபாவை தரிசித்தபோது, அவரைப் பார்த்து

பாபா - "இங்கே காட்டப்படும் வழியானது கன்னட மகானான அப்பாவின் போதனைகளைப் போலவோ, நானேகாட் மலைப்பாதையில் செய்யும் எருமைச் சவாரியைப் போலவோ அவ்வளவு எளிதானதல்ல. இந்த ஆத்மீக வழியில் உன்னால் முடிந்த அளவு முழுமுயற்சி செய்ய வேண்டும். அப்பா கூறிய யாவும் சரியே. இவை எல்லாவற்றையும் பயிற்சியில் கொண்டுவந்து வாழவேண்டும். வெறும் படிப்பு மட்டும் உதவாது. பயிற்சி இல்லாமலும், குருவின் அருள் இல்லாமலும் இருக்கும் வெறும் படிப்பினால் பயன் இல்லை". ஷிர்டி சாய்பாபா   
             

Thursday, January 26, 2012

ஓரே போதனை


பாபா யோகாசனத்தையோ, பிராணாயாமத்தையோ, இந்திரியங்களைப் பலவந்தமாக அடக்குவதையோ, மந்திரத்தையோ, தந்திரத்தையோ, யந்திர பூஜையையோ, யாருக்கும் போதிக்கவோ, விதிக்கவோ இல்லை. பாபா வின்  ஓரே போதனை பொறுமை மற்றும் நம்பிக்கை. ஸ்ரீ சாயி சத்சரித்ரா - 10  

Wednesday, January 25, 2012

பாலாஜி பாடீல் நெவாஸ்கர்

பாலாஜி பாடீல் நெவாஸ்கர்; பாபா ஸ்நானம் (குளிப்பது) செய்ததும், கை, கால், முகம் கழுவியதுமான நீரைத் தவிர வேறெந்த நீரையும் நெவாஸ்கர் அருந்தமாட்டார். - ஸ்ரீ சாயி சத்ச்சரித்ரா.

Tuesday, January 24, 2012

உன்னில் இருப்பது நீயல்ல, நான்


யார் வேண்டுமானாலும், எதை வேண்டுமானாலும் பேசட்டும். உங்கள் பாதையில் உறுதியாகச் செல்லுங்கள். அவரிடம் நம்பிக்கை வையுங்கள் இவரிடம் நம்பிக்கை வையுங்கள் என்றெல்லாம் பிறர் சொல்வதைக் கேட்டு மயங்காதீர்கள். முதலில் உங்கள் மீது நம்பிக்கை வையுங்கள். உங்கள் மீது வைக்கிற அசைக்க முடியாத நம்பிக்கையே என் மீது நீங்கள் வைக்கிற நம்பிக்கையாகும். என்னால் எதுவும் முடியும் என்று சொல்லுங்கள், நிச்சயம் அது முடியும். காரணம், உன்னில் இருப்பது நீயல்ல, நான்! - ஷிர்டி சாய்பாபா           

Monday, January 23, 2012

சந்தர்ப்பவசமாக நான் பேசுவேன்


சாயி பாபா சந்தர்ப்ப வசமாகப் பேசுவதையும், சந்தர்ப்பத்திற்கு ஏற்ப நமக்குக் காட்சியளிப்பதையும் நாம் உணர்ந்திருப்போம். சில வேளைகளில் நம்மையும் மீறி பாபா பேசுவதை நாம் உணரவில்லை. நம்புவதும் இல்லை. 

தாமு அண்ணா (சேட்) க்கு பாபா எழுதிய கடிதம்.
"கடவுள் கொடுத்ததைக் கொண்டு திருப்தியடையாமல் ஆகாயத்தை பிடிக்க முயற்சி செய்கிறான் போலிருக்கிறது. சேட்டுக்கு பைத்தியம் பிடித்துவிட்டது. இப்போது அவன் வீட்டில் எதுவும் தேவையிருக்கவில்லை. இருப்பதைக் கொண்டு திருப்தியடையச் சொல். லட்சங்களைப் பற்றி கவலைப்படாமல் இருக்கும் படி பதில் எழுது" பாபா கூறினார்.   

கடிதத்தில் உள்ளது ஏற்கனவே தெரியும் என்றாலும் எதற்காக அவர் படிக்கச் சொன்னார் என பாபாவிடம் ஷாமா கேட்டபோது. "சந்தர்ப்பவசமாக நான் பேசுவேன்.. அதை யார் நம்பப் போகிறார்கள் " -பாபா.     

Sunday, January 22, 2012

சாயி சத்சரிதம் எழுதிய ஹேமாட்பாந்த்


ஷிர்டி சாய்பாபா எந்த காலக்கட்டத்தில், யாரை தன் பக்கம் இழுப்பார், அவர்களுக்கு என்ன செயல் முறைகளை தருவார் என்பது அவருக்கே தெரியும். சாயி சத்சரிதம் எழுதிய ஹேமாட்பாந்த் என்னும் தபோல்கர் 1910 -ம் ஆண்டுதான் பாபாவை தரிசிக்க வந்தார். அதுவும் அவராக விருப்பப்பட்டு  வரவில்லை. அவரது மேலதிகாரி நானா சாகேப் சந்தோர்க்கர் வற்புறுத்தலின் பேரில் வந்தார். 

தபோல்கர் மும்பையின் புறநகர் பகுதியான பாந்த்ராவில் ஒரு ஊர்காவலர். அந்தக் காலத்தில் பாந்த்ரா ஒரு சிறிய கிராமம். பின் படிப்படியாக பதவி உயர்வு பெற்று கிராம நியாயாதிபதி (மேஜிஸ்ட்ரேட்) ஆனார். அதிக படிப்பறிவு கிடையாது. ஆனால் ஆன்மிக இலக்கியத்தில் நல்ல புலமை பெற்றவர். இப்படிப்பட்டவரிடம்தான் பாபா தன் வரலாற்றை எழுத அனுமதி கொடுத்தார்.        

Saturday, January 21, 2012

ஆச்சர்யத்தை உண்டாக்கும்என் பக்தர்களை ஒவ்வொரு நிமிடமும் கவனித்துக் காப்பாற்றிக்கொண்டு வருகிறேன். அவர்கள் எந்த வேலையாக சென்றாலும், அவர்களை விட முன்பாகவே நான் அங்கு சென்று இருப்பது அவர்களுக்கு ஆச்சர்யத்தை உண்டாக்கும். - ஷிர்டி சாய்பாபா

Friday, January 20, 2012

நடப்பதெல்லாம் நல்லதாகும்


பாபா "நீங்கள் என்னை தேடி வரவே இல்லை, நான் தான் தேடி வந்திருக்கிறேன். உங்களுக்கு சேவகம் செய்யும் அடிமை நான்." அடிமையின் வேலை எஜமானனுக்கு சேவை செய்வது. நமக்கு நம்பிக்கையான அடிமை கிடைத்திருக்கிறான். கொஞ்சம் விட்டுப்பிடிக்கும் குணம் தான் அவனிடம் அதிகமாக இருக்கிறது. அவனை வழிக்குக் கொண்டுவருவதைப் (பொறுமை குணத்துடன்) பழக்கப்படுத்துங்கள். நடப்பதெல்லாம் நல்லதாகும்.      

Thursday, January 19, 2012

ஸ்ரீஹரி


கள்ளம் கபடமற்ற எளிய பக்தர்களுக்காக ஸ்ரீஹரி மிகவும் ஏங்குகிறார். அன்பு வலையில் ஒரு முழுமையாக கைதியாக இருக்கிறார். ஆனால் பெருமை கொள்பவர்களுக்கு, போலிகளுக்கு, வேஷதாரிகளுக்கு ஸ்ரீஹரி எட்டாத தூரத்தில் இருப்பார்.- ஷிர்டி சாய்பாபா

Wednesday, January 18, 2012

சரணாகதி


பாபா யாரை எப்போது தன் பக்கம் இழுப்பார், என்ன செய்யச் சொல்வார் என்பது அவருக்கே வெளிச்சம், அவர் அருள் இன்றி எதுவும் நடப்பதில்லை, நாம் நம்மை அவரிடம் ஒப்படைத்துவிடுவோம். அவர் குயவன் போன்றவர். அவர் விருப்பப்படி நம்மை எப்படியாவது செய்யட்டும்.        

Monday, January 16, 2012

கற்கண்டைப்போலவே சுவையுள்ளதாகும்


என்னை நினைவில் வைத்துக் கொண்டிருப்பவனை நான் எப்போதும் நினைத்துக் கொண்டிருக்கிறேன். எனக்கு எவ்வித வாகனமோ, வண்டியோ, ரயிலோ அல்லது விமானமோ தேவையில்லை. என்னை எவன் அன்புடன் கூப்பிடுகிறானோ அவனிடம் ஓடிச்சென்று நானே வெளிப்படையாகக் கலந்துகொள்கிறேன். 

தங்கள் வாழ்கை நிலையும் கற்கண்டைப்போலவே சுவையுள்ளதாகும். உங்களது எல்லா விருப்பங்களும் நிறைவேற்றப்படும். நீங்களும் சந்தோஷமாய் இருப்பீர்கள். ஷிர்டி சாய்பாபா  
   

Sunday, January 15, 2012

சாவடி, சமாதிமந்திர், துவரகமாய்


தினமும் காலை நேரத்தில் பாபா பிச்சை (மற்றவர் துன்பங்களை பெற்றுக்கொள்வது) எடுக்கச் செல்லும்போது சாவடி வழியாகத்தான் செல்வார்.  அதுபோலவே, தினமும் மாலை நேரத்தில் பாபா சாவடிக்கெதிரே வந்து நிர்பார். தலையையும், ஆட்காட்டி விரலையும் ஆட்டிக்கொண்டே பரவச நிலையில் எல்ல திசைகளுக்கும் வந்தனம் செய்வார். அங்கிருந்து புட்டிவாடாவின் (சமாதி மந்திர்) மூலைக்கு வருவார். பிறகு அங்கிருந்து பக்தர்கள் சூழ மசுதிக்கு (துவரகமாய்) திரும்பிவிடுவார்.  

Saturday, January 14, 2012

மசூதி


என்னுடைய மசூதி என் பக்தர்களுக்கு அநேக ஆசிர்வாதங்களையும், புத்திமதிகளையும் கொடுக்கும்

Friday, January 13, 2012

பாபா அருள்


பாபா அருள் செய்த பாணியே அலாதியானது. பலனடையும் பக்தருக்கு தீட்சை (மந்திர உபதேசம்) பெறுகிறோம் என்று தெரியாமற்கூடப்    போகலாம். சிலருக்கு கேலிக்கும், சிரிப்பிற்கும் இடையே தீட்சை அளிக்கப்பட்டது. பாபா பக்தர்களை கையாண்ட விதமே மிகவும் அற்புதமானது.  

Thursday, January 12, 2012

அதிகமாக சந்தோஷப்படுத்துகிறான்


"எவன் ஒருவன் பிறர் மீது குறை கூறி குற்றம் கண்டு குதர்க்கம் செய்கிறானோ, அவன் என்னை உள்ளத்தில் துளைத்து காயம் ஏற்படுத்துகிறான். ஆனால் எவன்  கஷ்ட்டப்பட்டு பொறுமையுடன் இருக்கிறானோ, அவன் என்னை மிக அதிகமாக சந்தோஷப்படுத்துகிறான்"  ஷிர்டி சாய்பாபா.

Wednesday, January 11, 2012

பிரச்சனைகளை களையப்போகிறார்


"சாயியின் நிழற்படத்தை தரிசனம் செய்வது சாயி-யை நேரடியாக தரிசனம் செய்வதற்கு சமம். ஆனால் எண்ணம் என்னவோ பூரணமாக இருக்கவேண்டும். " ஸ்ரீ சாயி சத்ச்சரித்ரா.

பாபா ஒரு படம் மூலமாகவோ, விக்ரஹ வடிவிலோ நம்மிடம் வருகிறார் என்றால், தான் வருகிற இடத்தை வளப்படுத்தப்போகிறார், அந்த இடங்களில் இருக்கிற அனைத்து இடையூறுகளையும், பிரச்சனைகளையும் களையப்போகிறார் என்பது பொருள்.

பிரச்சனைகளை களையப்போகிறார்


"சாயியின் நிழற்படத்தை தரிசனம் செய்வது சாயி-யை நேரடியாக தரிசனம் செய்வதற்கு சமம். ஆனால் எண்ணம் என்னவோ பூரணமாக இருக்கவேண்டும். " ஸ்ரீ சாயி சத்ச்சரித்ரா.

பாபா ஒரு படம் மூலமாகவோ, விக்ரஹ வடிவிலோ நம்மிடம் வருகிறார் என்றால், தான் வருகிற இடத்தை வளப்படுத்தப்போகிறார், அந்த இடங்களில் இருக்கிற அனைத்து இடையூறுகளையும், பிரச்சனைகளையும் களையப்போகிறார் என்பது பொருள்.  
 

Tuesday, January 10, 2012

ஷீரடியின் மகிமை


ஷீரடியின் மண்ணும், புல்லும் புண்ணியம் செய்தவை. பிரயத்தனம் (யோக சாதனை) ஏதும் இன்றியே பாபாவின் பாதங்களைத் தினமும் மூத்தமிட்டு, அவரது பாததூளியை சிரசின்மேல் ஏற்றுக்கொண்டன.  ஷிர்டியே நமது பண்டரிபுரம், ஷிர்டியே நமது ஜகந்நாதாபுரி, ஷிர்டியே நமது துவாரகை, ஷிர்டியே நமது கயை, காசி விச்வேச்வரம், ஷிர்டியே நமது ராமேஸ்வரம், ஷிர்டியே நமது பத்ரிநாதம், கேதாரநாதம், நாசிக்கின் திரியம்பகேச்வரம், உஜ்ஜைனியின் மகாகாலேச்வரம். 

சாயியின் ஷிர்டியே நமது வாழ்க்கையின் துன்பங்களையும், வலிகளையும் போக்கும். எளிதான முக்திமார்க்கமும் சாயியின் அண்மையே.         

Monday, January 9, 2012

முடிவில்லாத செல்வம்"பிறர் கொடுப்பது நமக்கு எப்படி போதும்? எவ்வளவு கொடுக்கப்பட்டாலும் அது குறைவாகத்தான் இருக்கும். ஆனால், இறைவன் நமக்கு அளிப்பதோ முடிவில்லாத செல்வம். யுகம் முடிந்தாலும் முடியாத செல்வம்" - ஷிர்டி சாய்பாபா.

Sunday, January 8, 2012

பரப்பிரம்மம்


பாபா பரப்பிரம்மம், அந்தர்யாமி; சகல இடங்களிலும் அவர் நீக்கமற நிறைந்திருப்பவர். உயிருள்ள அனைத்தின் புலன்களினுள்ளே புகுந்தும், உணர்வுகளில் கலந்தும், உள்ளத்தில் ஒளிந்தும், ஆத்மாவினுள் தெளிந்தும் இருப்பவர். நாயாக, நரியாக, பரியாக, புழுவாக, பறவை இனங்களுமாய், அந்தணனாய், புலனாய், அனைத்து ஜாதிகளுமாய் தோன்றுபவர். கல்லாய், மண்ணாய், கடலாய், அலையாய், சிலையாய், தாளாய், நூலாய், மேடாய், பள்ளமாய், மலையாய், மடுவாய் மலிந்து கிடப்பவர். 

பார்க்கும் அனைத்தும் பாபாவே என்ற உண்மை நிலையைத் தெளிந்து கொள்ளும் உணர்வு வரப்பெற்று விட்டால், எதையும் அன்புடன் நேசிக்கும் உள்ளம் நமக்கு கிடைத்துவிட்டால், உள்ளம் அன்பால் நிறைந்து உடைந்துகொண்டிருந்தால் அங்கே பாபாவை பார்க்கமுடியும். 

குறிப்பு: மேலும் ஒரு அற்புதம் பாபாவின் தினசரி காட்சியை நாம் கிடைக்கப் பெற்றாலும். அவர் இன்னும் நம்முடன் வாழ்ந்துகொண்டிருக்கிறார் என்பதை விளக்கும் காட்சியை அவர் நமது மூட கண்ணிற்கு அருளியது நாள் ஜனவரி-05-2012 (மேல இணைக்கப்பட்ட படம்)
நன்றி : http://www.saibabadwarkamai.com/forum/index.php?topic=5263.௦


   
 
 
      

Saturday, January 7, 2012

நம்பிக்கை வையுங்கள்


அல்லாவிடம் நம்பிக்கை வையுங்கள். இங்கு (துவரகமாய்) வந்தவர் நிவாரணம் பெறவில்லை என்பது, சென்ற காலம், நிகழ் காலம், எதிர் காலம் ஆகிய முக்காலங்களிலும் நடக்காத விஷயம்." - ஷிர்டி சாய்பாபா. 

Friday, January 6, 2012

ரூஸோ மம ப்ரியாம்பிகா...


எனது தாய், தந்தை, மனைவி, குழந்தைகள், சகோதர, சகோதரி, மாமனார், மாமியார் எவர் என்மீது கோபப்பட்டாலும் குருவான தாய் சாயிமாத்திரம் என்மீது எப்போதும் கோபப்படாமல் இருக்கட்டும். - ஸ்ரீ குருப்ரசாத யாசன தசகம். 

Thursday, January 5, 2012

தாரக மந்திரம்


ஆன்மிகப் பாதையில் முன்னேற முயற்சிக்கும் லெளகீக (சாதாரண) மக்களை கர்மவினை, சிறிய மற்றும் பெரிய சம்பவங்களை தடைகளாக ஏற்படுத்தி, அச்சம்பவங்களின் பிடியில் மனதை சிக்க வைத்து வாழ்வின் சில காலத்தை விழுங்கி விடுகிறது. இச்சம்பவங்கள் நமது சக்தியையும் அறிவின் எல்லையையும் மீறி வாழ்க்கை துன்பங்களால் வெவ்வேறு ரூபங்களில் நம்மை கட்டுப்படுத்துகிறது.  இதற்காக பாபாவால் அறிவுறுத்தப்பட்ட தாரக மந்திரமே "நம்பிக்கை" மற்றும் "பொறுமை" ஆகும். 

லெளகீக (சாதாரண) மக்களுக்கு பாபாவால் அளிக்கப்பட்ட ஒரே சக்தி துன்ப வேளையில் பொறுமை காத்து, பாபாவின் மேல் நம்பிக்கை சிதறாமல் போராடுவதுதான்.

   

Wednesday, January 4, 2012

மகிழ்ச்சிப்பாதையில் நடப்பார்கள்


"ஒருவர் எவ்வளவு அநீதி இழைத்திருந்தாலும், கொடுமையை செய்திருந்தாலும், எனது மசூதியில் கால் வைத்த உடனே, அவர் மகிழ்ச்சிப்பாதையில் நடப்பார்கள்." - ஷிர்டி சாய்பாபா

மேற்கூறிய பாபாவின் உத்திரவாதப்படி எண்ணற்ற பக்தர்கள், பாபாவின் மசூதியில் காலடி வைத்து பாபாவின் தரிசனத்தை பெற்று மகிழ்ச்சியான வாழ்க்கையை தழுவியுள்ளனர். பாபாவின் மசூதி அமைப்போடு கூடிய ஆன்மிகச் சிறப்பு ஈடு இணையற்ற அம்சமாகும். இந்து-முஸ்லீம் மதங்கள் சங்கமிக்கும் இடமாக தனது மசூதியினை பாபா அவர்கள் வெளியுலகிற்கு அடையாளம் காட்டியுள்ளார்.   

Tuesday, January 3, 2012

உதவி கிடைக்கும்

துன்பம் வந்தபோதும் கூட என் மீது நம்பிக்கை குறைவுபடாமல் இருந்தால் அவர்களுக்கு என் உதவி கண்டிப்பாக கிடைக்கும்.-ஷிர்டி சாய்பாபா

Monday, January 2, 2012

பாபா விரும்புவது


ஒருமுறை ராம் பாபா என்ற மகா யோகி ஷீரடிக்கு பாபாவை தரிசிக்க வந்தார். அவர் யோகாவை நன்கு கற்றுத் தேர்ச்சிப்பெற்றவர். ஆகவே தனது சமாதி நிலைக்கு பாபா உதவுவார், அருள் புரிவார் என்றுதான் ஷீரடிக்கு வந்தார். அங்கே பாபா மக்கிப் போன ரொட்டியையும், வெங்காயத்தையும் சாப்பிட்டுகொண்டிருந்தார். இதைப் பார்த்த யோகி, இவரா எனக்கு சமாதிநிலையை கற்றுத்தரமுடியும் என சந்தேகித்தார். இவரது எண்ணத்தை அறிந்த பாபா, வெங்காயத்தை சாப்பிட்டு யாரால் செரிக்க முடியுமோ அவர்கள் மட்டுமே அதை சாப்பிடவேண்டும் என்றார். இதைக்கேட்ட யோகி பாதத்தில் வீழ்ந்து பணிந்தார். 

வைதீகம், பட்டினி, சிலவற்றை ஒதுக்கி வைக்கும்முறை - இவற்றுக்கு பாபா முக்கியத்துவம் கொடுத்ததில்லை. அவர் விரும்புவது எல்லாம் தன் பக்தனிடம் உளப்பூர்வமான நம்பிக்கையை மட்டுமே.   

Sunday, January 1, 2012

விருப்பங்கள் நிறைவேறுதல்


விருப்பங்கள்  நிறைவேறுவதற்காக நாம் பாபாவை பார்க்கிறோம், வேண்டுதல் வைக்கிறோம், ஆசி பெறுகிறோம். பல சமயங்களில் நிறைவேறும் வேண்டுதல்கள் சில சமயங்களில் கேட்க்கப்படுவதில்லை. அப்படியானால் நம் வேண்டுதல்களை அவர் நிராகரிக்கக் காரணம் என்ன? இந்த வேண்டுதல்களின் பலன் நமக்கு வேண்டாம் என பாபா தீர்மானிப்பதுதான். அந்த தீர்மானத்தை கண்டிப்பாக நிறைவேற்றிக்கொள்ள விரும்பினால், பாபா இந்த பொருளை அடைவதற்கு என்னை தகுதிபடுத்து, இந்த பொருள் என்னிடத்தில் வந்தால் அதை வைத்துக் காப்பாற்றும் மன திடத்தையும் வேறு வழி வகைகளையும் உருவாக்கிக்கொடு என்று வேண்டுதல் வையுங்கள்.       

விசுவாசத்தின் ஆழத்திற்க்கேற்றவாறு பக்தனின் பக்தியை கௌரவிக்கிறார் பாபா !

பாபா,  தன் பக்தன் தன்மேல் வைக்கும் "நம்பிக்கை மற்றும் விசுவாசத்தின் ஆழத்திற்கேற்றவாறு",  அவருக்கு மிகச்சிறந்த அனுபவங்களைக் கொடுத்த...