Wednesday, February 29, 2012

சிட்டுக்குருவி


"என்னுடைய பக்தன் (மனிதன்) வேறு தேசத்திலிருந்தாலும் சரி, ஆயிரக்கணக்கான மயில்களுக்கு அப்பால் இருந்தாலும் சரி, சிட்டுக்குருவியின் காலில் நூல்கட்டி இழுப்பதுபோல் அவனை என்னிடம் கொண்டு வந்து சேர்பேன்" ஷிர்டி சாய்பாபா   

Tuesday, February 28, 2012

குறிக்கோளை நான் அழிப்பதே இல்லை


என் பெயரை எப்போதும் சொல்கிறவர்கள், என்னையே அனைத்திற்குமாக நம்பிகிறோம் என்று சொல்கிறவர் என் வார்த்தையின் மீது முழு நம்பிக்கையை வைத்து காத்திருப்பார்கள். இந்த உலகமும் அதனுடைய ஆசை வலைகளால் உண்டான அனைத்தும் அழிந்துவிடும். அனால் என்னை நம்புகிறவர்களின் நம்பிக்கை ஒரு நாளும் அழிந்துவிடாது.

ஜீவனத்திற்காக (வாழ்கையை சார்ந்து) நீங்கள் கவலைப்படுகிற எல்லா விஷயங்களும் அழிந்துவிடும்.என்னையே எப்போதும் பற்றிக் கொண்டிருப்பவருடைய குறிக்கோளை நான் அழிப்பதே இல்லை. அவனுக்கும், எனக்கும் அவநம்பிக்கை என்ற தடையில்லாமல் இருப்பதால் நான் வேகமாக நுழைந்து அவனைக் காத்துக்கொள்ள என்னால் முடிகிறது. ஸ்ரீ சாயி தரிசனம். 

Monday, February 27, 2012

ஆராய்ச்சி தேவையில்லை


பாபாவின் வசனத்தின் பொருளை எவர் வணக்கத்துடன் ஏற்றுக்கொள்கிறாரோ, அவர்களுக்கு எப்போதும் நன்மையே நிகழும். எவர் அதில் தோஷமும், குதர்க்கமும் காண்கிறாரோ, அவர் அதலபாதாளத்தில் வீழ்கிறார். பாபாவின் ஆணைக்குக் கீழ்ப்படிபவர், நன்மை பயக்கும் செயலா/தீமைபயக்கும் செயலா என்பது பற்றிய எண்ணத்தை பாபாவின் தலைச்சுமைக்கு விட்டுவிடுகிறார்.பாபாவின் ஆணைக்கு அவர் அடிமை; சுதந்திரமான கருத்தென்பது அவருக்கு இல்லை.பாபாவின் வசனத்தை (சத்ச்சரித்ரா) தவிர எதிலும் நல்லதா / கெட்டாத என்ற ஆராய்ச்சியும் அவர்களுக்கு இல்லை.    

Sunday, February 26, 2012

அபாயங்கள் துடைக்கப்படுகின்றனபாபாவின் மீது எந்த பக்தனுக்கு முழு பக்தி ஏற்படுகிறதோ அவனது கேடுகளும், அபாயங்களும் துடைக்கப்படுகின்றன. 

Saturday, February 25, 2012

பத்து மடங்கு


பாபா-வுக்கு ஒன்று கொடுத்தால் பத்தாகத் திருப்பிக் கொடுக்கிறார். பத்து மடங்கு அதிகாரம், பத்து மடங்கு சக்தி. பெரும்பாலான பக்தர்கள் இந்த அனுபவத்தை அவ்வப்போது அடைந்தார்கள். அதுமட்டுமல்லாமல், அதுமாதிரியான செயல்களிலிருந்து ஆன்மிக நாட்டம் வளர ஆரம்பிக்கிறது. இது என்ன சாமானியமான லாபமா? பாபா-வின் அளிக்கும் திறன் விசித்திரமானது அன்றோ!
- அப்பாஸாஹெப்-  ஸ்ரீ சாயி சத்ச்சரித்ரா. 

Friday, February 24, 2012

பறித்து கொள்கிறேன்என்னிடம் வரும் பக்தர்களுக்கு உடனடியாக நான் வாரி வழங்கி விடுவதாகச் சொல்கிறார்கள். அது உண்மையல்ல. யாருக்கு நான் அனுக்கிரகம் (அருள்) செய்ய விரும்புகிறேனோ அவனை முற்றிலும் பரிசுத்தப்படுத்த அவனிடமிருந்து அனைத்தையும் பறித்து கொள்கிறேன். அது பணமாக இருந்தாலும் சரி, பாவமாக இருந்தாலும் சரி, அல்லது புண்ணியமாக இருந்தாலும் சரி. ஸ்ரீ சாயியின் குரல்       

Thursday, February 23, 2012

உன் சந்ததியை வளமாகவும் வைப்பேன்


நானே கர்த்தா (காரணமாவேன்)  என்ற எண்ணத்தை ஒதுக்கிவிட்டு, அதற்கு சாயி தான் கர்த்தா என்பதை புரிந்துகொண்டு என்னிடம் அனைத்தையும் ஒப்படைத்தால் நான் பார்த்துக்  கொள்வேன். இப்படியெல்லாம் செய்து, உன்னை முற்றிலுமாக என்னிடம் ஒப்படைத்து சரணாகதி செய்யும்போது, நான் நிரந்தரமாக உன்னிடம் தங்கி, உன் பிள்ளைகளை வளர்த்து, உன் பிரச்னைகளைப் போக்கி, உன் மனக் கவலையை தீர்த்து உனக்குள்ள அனைத்தையும் மாற்றி உன்னை இந்த உலகத்தில் நிம்மதியாகவும், உன் சந்ததியை வளமாகவும் வைப்பேன். ஸ்ரீ சாயியின் குரல்.     

Wednesday, February 22, 2012

சாவின் வாயிலிருந்து இழுத்து விடுவேன்என் நாமத்தை உச்சரிப்பவர், என்னை வணங்குபவர், என் நிகழ்ச்சிகளையும், வாழ்வைப்பற்றியும் எண்ணி என்னை நினைவில் இருத்திக் கொள்பவர் ஆகியோர் உலகப் பொருள்கள், உணர்ச்சிகளில் கவனம் செலுத்த மாட்டார்.என் அடியவர்களை சாவின் வாயிலிருந்து இழுத்து விடுவேன். ஸ்ரீ ஷிர்டி சாய்பாபா   

Tuesday, February 21, 2012

பொறு, உன்னுடைய கவலைகளைத் தூர எறி


பொறு, உன்னுடைய கவலைகளைத் தூர எறி, உன்னுடைய துன்பங்கள் ஒரு முடிவுக்கு வந்து விட்டன. ஒருவன் எவ்வளவு தான் நசுக்கப்பட்டு வேதனைப்பட்டவனாக இருப்பினும், இச் சமாதியில் கால் வைத்தவுடனே அவன் மகிழ்ச்சியின் பாதையில் செல்கிறான். ஷிர்டி சாய்பாபா  

Monday, February 20, 2012

பாபாவை உற்றுப்பார்


தாய் ஆமை இந்தக் கரையில் இருக்கிறது, குட்டிகள் அந்தக் கரையில் பாலும், அரவணைப்பின் கதகதப்பும் இன்றி இருக்கின்றன. தாயினுடைய அன்பான கடைக்கண் பார்வையே குட்டிகளுக்குப் போஷாக்கையளித்து வளர்ச்சியடையச் செய்கிறது.

குட்டி ஆமைகள் எப்போதும் தாயைப் பற்றியே நினைத்துக் கொண்டிருக்கின்றன. குட்டிகள் வேறு எதையும் செய்யத் தேவையில்லை. அவற்றுக்குப் பாலும் வேண்டாம், புல்லும் வேண்டாம், வேறெந்த உணவும் தேவையில்லை. தாயை உற்றுப் பார்த்துக் கொண்டிருப்பதே அவற்றுக்கு போஷாக்கு. 

நான் ஒன்பது வார விரதமிருக்கலாமா? சப்தாகம் செய்யலாமா? நேர்ந்து கொள்ளலாமா? ஷீரடிக்கு போய் வரலாமா? என்ன செய்தால் என் கஷ்டம் தீரும்? என்று யோசிக்கவே வேண்டாம். 

நீங்கள் எதையும் செய்யத் தேவையில்லை. தாயான சாயியை உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தால்போதும்! அது உங்களுக்கு போஷாக்கு தரும். வறுமையிலிருந்தும், பிரச்சினை போன்றவற்றிலிருந்தும் உங்களை மீட்டுவிடும்.        

Saturday, February 18, 2012

குறிக்கோளை எய்துவாய்இந்தப் பாதங்கள் தோன்மையானவை, புனிதமானவை இப்போது உங்களுக்கு கவலை இல்லை என் மீது முழு நம்பிக்கையையும் வை. நீங்கள் சீக்கிரத்தில் உங்கள் குறிக்கோளை எய்துவாய். ஸ்ரீ ஷிர்டி சாய்பாபா  

Friday, February 17, 2012

மஹாத்மாக்கள் "வாக்கு"

இந்த உலகில் மற்றவர்களுக்கு நீதி போதனை செய்வதை விட சுலபமானது வேறொன்றுமில்லை. அதனால் மனிதர்கள் பக்குவத்திற்கு வராத காய் போன்றவர்கள். மஹாத்மாக்கள் இதற்க்கு மாறுபட்டு இருப்பார்கள். அவர்கள் பேசுவதை பேச்சு என்று சொல்லவதில்லை. மஹாத்மாக்கள் சொற்கள் "வாக்கு" எனப்படும். அவர்கள் சொல்லவதை செய்து காட்டுவார்கள். ஸ்ரீ சத்குரு வாணி.      
F

Thursday, February 16, 2012

நிறைவாக இருக்கவேண்டும்எனக்கு படையல் போடுவதைவிட, பசித்தவனுக்கு உணவு கொடுப்பதையும், ஆதரவில்லாதவனுக்கு உதவி செய்வதையுமே நான் விரும்புகிறேன். ஏனென்றால், நீ சுகமாக இருப்பதால் உலகத்திற்கு நன்மை விளையும் என்பதால் நீ எல்லாவற்றிலும் வாழ்ந்து நிறைவாக இருக்கவேண்டும்.    

Wednesday, February 15, 2012

சுமூகமாக முடியும்விதைத்தவுடன் அறுவடைக்கு செல்வது எப்படி மடத்தனமோ, அப்படித்தான் வேண்டியது உடனடியாக பலிக்க வேண்டும் என நினைப்பது. உனது வேண்டுதல் கேட்கப்பட்டாகிவிட்டது. அதற்கான வழிகள் உருவாகிக் கொண்டிருக்கின்றன. ஏற்ற காலத்தில் எல்லாமே சுலபமாக, சுமூகமாக முடியும் என்பதை என்னிடம் வேண்டியவுடனே தெரிந்துகொள்ளவேண்டும். ஸ்ரீ சாயியின் குரல்.    

Tuesday, February 14, 2012

நான் செயல்படுவேன்


நீ வீட்டிற்குள் நுழையும்போது உனக்கு முன் நான் வாசலில் வந்து வரவேற்பதும், நீ வெளியில் செல்லும்போது உன்னை வழியனுப்பி விட்டு, துணையாகவும் வருவதும், உன் குரலுக்கு பதில் கொடுப்பதும் நானே! உன் வேண்டுதல் தாமாக நிறைவேறும் என்பதை புரியவைக்க இனி வெளிப்படையாக நான் செயல்படுவேன். ஸ்ரீ சாயியின் குரல்.     

Monday, February 13, 2012

சத்குருவின் பாதங்களை,


சத்குருவின் பாதங்களை உறுதியாக பிடித்துக் கொள்பவர், மற்றவர்கள் பலவிதமாக சிரமப்பட்டும் அடையமுடியாததை சொற்பமான முயற்சியாலேயே அடைந்துவிடுவர். ஸ்ரீ சாயி சத்ச்சரித்ரா.

Sunday, February 12, 2012

(இடைவிடாது) இருக்கிறேன்


யார் என்னைப் பெரிதும் நேசிக்கிறாரோ அவருடைய பார்வையில் நான் அகண்டமாக (இடைவிடாது) இருக்கிறேன். நான் இல்லாது அவருக்கு இவ்வுலகம் அனைத்தும் சூனியமாகத் தெரியும். அவருடைய வாயிலிருந்து என்னுடைய பெருமை மட்டுமே வெளிவரும் - ஸ்ரீ ஷிர்டி சாய்பாபா

Saturday, February 11, 2012

எங்கும் நிறைந்ததும்இருக்கிறது என்னும் குணாதிசயமோ, இல்லை என்னும் குணாதிசயமோ, இரண்டுமே இல்லாததும் லிங்க (ஆண்/பெண்) பேதம் இல்லாததும் எந்த குணமும் இல்லாததும் எங்கும் நிறைந்ததும் ஒலியாலும், ஒலியினுள்ளும் பலவிதமாக வர்ணிக்கப்பட்டது-பாபா ரூபத்தில் இருக்கிறது.  

Friday, February 10, 2012

பளுவை நான் நிச்சயமாக அதை தாங்குவேன்


நீ என் பேரில் உன் பளுவை சுமத்தினால் நான் நிச்சயமாக அதை தாங்குவேன். -ஷிர்டி சாய்பாபா

Thursday, February 9, 2012

மனப்பாடம் செய்துகொள்


"பயப்படாதே. நான் உன்னோடு இருக்கிறேன். எப்போது எங்கே என்னை நீ நினைத்தாலும் நான் உன்னோடு இருப்பேன். பயப்படாதே, இதை நன்றாக மனப்பாடம் செய்துகொள்" - ஸ்ரீ ஷிர்டி சாய்பாபா.    

Wednesday, February 8, 2012

வெறுங்கையுடன் திருப்பி அனுப்பமாட்டார்


உங்களை இங்கு இழுப்பதற்காக கடும் முயற்சி செய்தவர் பாபா. அவர் உங்களை வெறுங்கையுடன் திருப்பி அனுப்பமாட்டார். உங்களுக்கு நன்மை செய்வதற்காகவே அவர் மெனக்கெட்டு உங்கள் மனதில் மாற்றத்தை ஏற்படுத்தி அழைத்து வந்திருக்கிறார்.    

Monday, February 6, 2012

முன் ஜென்ம பந்தம்


நாயாயினும், பன்றியாயினும், ஈயாயினும் சரி, யாரையும் எதையும் அவமரியாதையாக வெறுக்கவோ, ஒதுக்கவோ செய்யாதீர்கள். ஏனெனில் முன் ஜென்ம பந்தம் இல்லாமல் யாரும் எதுவும் நம்மிடம் வருவதில்லை. ஸ்ரீ ஷிர்டி சாய்பாபா          

Sunday, February 5, 2012

சர்வ சக்தியுடன் வேலை செய்வேன்


இவ்வுலகை விட்ட பிறகும் சர்வ சக்தியுடன் வேலை செய்வேன். -ஷிர்டி சாய்பாபா

Saturday, February 4, 2012

தடுப்புச் சுவர்


உனக்கும், எனக்கும் நடுவேயுள்ள மதிற்சுவரை உடைத்து, முழுக்க நாசம் செய்வாயாக. அப்பொழுது நமக்குப் போகவும், வரவும் பயமில்லாத ஒரு பாதை கிடைத்துவிடும். 'நீங்கள், நான்' என்னும் மனோபாவமே அந்த தடுப்புச் சுவர். அதை உடைத்தெறியாவிட்டால் இருவரும் ஒன்றே என்னும் நிலையை அடையமுடியாது. - ஷிர்டி சாய்பாபா  

Friday, February 3, 2012

செலவில்லாமல் பரிகாரம்


நீங்கள் எந்த செயலை செய்தாலும் அதை எனக்கு அர்ப்பணித்து விடு. அப்போது அதற்குக் காரண கர்த்தாவாக நானிருப்பதால், உன்னை எந்த கேடும் அணுகுவதில்லை. எனக்குக் கிடைக்கிற எல்லா புண்ணியமும் உன்னை வந்து சேர்ந்துவிடும். நீ செலவில்லாமல் பரிகாரத்தை தேடிக் கொண்டவராக ஆகிவிடுகிறாய். 
      
       

Thursday, February 2, 2012

கவனத்தை என் மீது திருப்புகிறானோஎவன் தன் கவனத்தை என் மீது திருப்புகிறானோ அவன் எந்த சங்கடமும் படமாட்டான். என்னை மறந்து விடுபவன் மாயையிடம் இரக்கமின்றி சவுக்கடிபடுவான். ஸ்ரீ ஷிர்டி சாய்பாபா. 

Wednesday, February 1, 2012

சந்திரா பாய்


சந்திரா பாய் பாபாவை முதன் முதலாக 1892-ல் ஷீரடிக்கு வந்து பல தெய்வீக லீலைகளை கண்டார். இவை அவளுக்கு பாபாவின் மேல் இருந்த நம்பிக்கை, பக்தி, அன்பு ஆகியவற்றை உறுதி செய்தன. 

பாபா அவளுக்கு பல் ஒன்று கொடுத்தார். அதை ஒரு தாயத்தில் போட்டு பூஜித்து வந்தாள். அவள் கணவர் ஷிரிடிக்கே சென்றதில்லை. இருந்தாலும் தன் பக்தையின் கணவருக்கு ஏதேனும் ஆபத்து நேர்வதாக இருந்தால் அதை முன்கூட்டியே தெரியப்படுத்தி எச்சரிக்கை செய்யுமளவுக்கு பாபா அவள் மீது மிகுந்த தயை காட்டினார்.

சந்திரா பாய் 20 வருடங்களாக ஷீரடிக்கு வந்து கொண்டிருந்தாள். 1918-ல் ஷீரடிக்கு வந்தபோது பாபா அவளிடம், "உன் ஆசை என்ன?" எனக் கேட்டார். அவளோ, "பாபா நீங்கள் சர்வ வியாபி, எல்லாம் அறிந்தவர். என் ஆசைகளையும் அறிந்தவர். எதைச் சொல்ல? " என்றாள். அப்போது அவளுக்கு வயது 48.குழந்தையில்லை. குழந்தை ஆசையிருந்தது. ஆனால் பாபாவிடம் கேட்டதில்லை.

இக்காலக்கட்டத்தில் பாபா மகா சமாதி அடைந்தார். முன்று ஆண்டுகள் கழித்து அவளின் 51 வது வயதில் மாதவிலக்கு நின்றது. இதற்கு 5 மாதம் கழித்து அவளது வயிறு சற்று உப்பியிருந்தது.கால்கள் வீங்கின,வாந்தி வந்தது.குடும்ப மருத்துவர் பரிசோதித்து, வயிற்றில் கட்டியிருக்கிறது,அதை உடனே அகற்றிவிட வேண்டும் என்றார். சந்திரா பாய் ஒப்புக்கொள்ளவில்லை. இது பாபா தந்த குழந்தை 10 மாதம் பொறுத்து பார்க்கலாம் என்றாள்.டாக்டர் 51 வயதில் குழந்தை பிறப்பது சாத்தியமற்ற செயல் என அடித்துக் கூறினார்.

பாபாவின் தயை சாத்தியம் இல்லாத எதையும் சாத்தியமாக்கும் என்றாள் அவள். இதற்கிடையில் அவள் உடல்நிலை சற்று மோசமடைந்தது.இதை சரி செய்ய மாதக் கணக்கில் உதியும் நீரும் அருந்தி வந்தாள்.

பாபா சமாதியாகி 3 வருடம் 2 நாட்கள் கழித்து ஒரு த்ரயோதசி நாளில் அவளுக்கு ஒரு மகன் பிறந்தான். 

ஒருமுறை சந்திராபாயை பற்றி தாதா சாகேப் தீட்சித்திடம், "நான் எங்கே சென்றாலும் இவள் என்னை தேடி வந்துவிடுகிறாள்.7 பிறவிகளில் இவள் என் சகோதரி" என்றார் பாபா. 1918 ல் சந்திரா பாய் பாபாவை சந்தித்த போது, "பாய், இனி என்னை பார்க்க ஷிர்டிக்கு வந்து கஷ்டப்பட வேண்டாம். நீ எங்கு இருக்கிறாயோ அங்கே நான் இருப்பேன்" என்றார். இதைக் கேட்ட சந்திரா பாய் அழுது விட்டாள்.              
       

விசுவாசத்தின் ஆழத்திற்க்கேற்றவாறு பக்தனின் பக்தியை கௌரவிக்கிறார் பாபா !

பாபா,  தன் பக்தன் தன்மேல் வைக்கும் "நம்பிக்கை மற்றும் விசுவாசத்தின் ஆழத்திற்கேற்றவாறு",  அவருக்கு மிகச்சிறந்த அனுபவங்களைக் கொடுத்த...