Monday, February 27, 2012

ஆராய்ச்சி தேவையில்லை


பாபாவின் வசனத்தின் பொருளை எவர் வணக்கத்துடன் ஏற்றுக்கொள்கிறாரோ, அவர்களுக்கு எப்போதும் நன்மையே நிகழும். எவர் அதில் தோஷமும், குதர்க்கமும் காண்கிறாரோ, அவர் அதலபாதாளத்தில் வீழ்கிறார். பாபாவின் ஆணைக்குக் கீழ்ப்படிபவர், நன்மை பயக்கும் செயலா/தீமைபயக்கும் செயலா என்பது பற்றிய எண்ணத்தை பாபாவின் தலைச்சுமைக்கு விட்டுவிடுகிறார்.பாபாவின் ஆணைக்கு அவர் அடிமை; சுதந்திரமான கருத்தென்பது அவருக்கு இல்லை.பாபாவின் வசனத்தை (சத்ச்சரித்ரா) தவிர எதிலும் நல்லதா / கெட்டாத என்ற ஆராய்ச்சியும் அவர்களுக்கு இல்லை.    

பாபா படத்திலிருந்து விபூதி வருகிறது, குங்குமம் கொட்டுகிறது

பம்பாயில் வசித்த எஸ்.என்.பிரதானும், அவர் மனைவியும் பாபாவின் பக்தர்கள்.  அவர்கள் தினமும் பாபாவின் வாழ்க்கைச் சரித்திரத்தை படிப்பதை வழக்கம...