Saturday, March 31, 2012

பாபா பரீட்சை

காகா சாஹேபின் (பிராம்மணர்)  முறை வந்தது. அவர் நல்ல "தங்கம்" தான் என்பதில் ஐய்யமில்லை இருந்தாலும் பரீட்சிக்கப்படவேண்டும். கத்தி ஒன்றை அவரிடம் கொடுத்து ஆட்டைக் கொல்லும்படி பாபா அவரைக் கேட்டார்.  

காகாவின் கைகள் வெட்டுவதற்குத் தயாராக கீழே இறக்கப்படவிருந்த அதே தருணம் பாபா "நிறுத்து, எவ்வளவு கொடுமையானவனாய் இருக்கிறாய்! பிராமணனாய் இருந்துகொண்டு ஆட்டைக் கொல்கிறாய்" என்றார்.

காகா சாஹேப் கீழ்படிந்து கத்தியைக் கீழே வைத்துவிட்டு பாபாவிடம் கூறினார், "தங்கள் சொல்லே எங்களுக்கு சட்டமாகும். எங்களுக்கு வேறு எவ்விதச் சட்டமும் தெரியாது. எப்போதும் தங்களையே நினைவு கூர்கிறோம். தங்கள் ரூபத்தைத் தியானிக்கிறோம்.இரவும்,பகலும் தங்களுக்கே கீழ்ப்படிகிறோம்.கொல்வது சரியா, தப்பா என்பது எங்களுக்கு தெரியாது அல்லது அதை நாங்கள் கருதவில்லை.பொருட்களுக்கான காரணத்தை ஆராயவோ, விவாதிக்கவோ நாங்கள் விரும்பவில்லை. ஆனால் (பாபாவின்) தங்கள் கட்டளைகளுக்கு நம்பிக்கையுடனும், மாறாத உறுதியுடனும், ஒழுங்கான பணிவுடன் நடத்தலே எங்களது கடமையும், தர்மமும் ஆகும்"
பின்னர் காகா விடம் இருந்து கத்தி திரும்பப் பெறப்பட்டது. ஆடு தாமாகவே இறந்து விட்டது.
- ஸ்ரீ சாயி சத்ச்சரித்ரா 23                        

Friday, March 30, 2012

மிகச்சிலவே மிஞ்சுகின்றன


தாமு அண்ணா கேட்ட கேள்வி "சாயி பாபாவைச் சுற்றி இவ்வளவு பேர் கூடுகிறார்களே, இவர்கள் அனைவரும் அவரிடமிருந்து பலன் பெறுகிறார்களா?"

பாபா அவர்தம் வாய் மொழியிலேயே பதிலுரைத்தார் "பூத்திருக்கும் போது அம்மரத்தைப் பார். எல்லாப் பூக்களுமே கனியாகிவிட்டால் அது எத்தகைய அற்புதமான அறுவடையாகும். ஆனால் அவ்வாறாகிறதா?பெரும்பாலானவை மலர்களாகவோ,கனியாத காய்களாகவோ காற்று ஆகிவற்றால் விழுந்துவிடுகின்றன. மிகச்சிலவே மிஞ்சுகின்றன" ஸ்ரீ சாயி சத்ச்சரித்ரா 25           

Thursday, March 29, 2012

பசியோடிருத்தலோ மிகவும் உண்பதோ ஆகாது


நமது எல்லா உறுப்புகளும் அவைகளுக்குரிய போஷிப்பைப் பெற்று நன்றாக இருக்கும்போது கடவுளை அடைவதற்குரிய பக்தி மற்றும் பல சாதனைகளையும் நான் பெற முடியும். எனவே பசியோடிருத்தலோ மிகவும் உண்பதோ ஆகாது. ஸ்ரீ சாயி சத்ச்சரித்ரா 32 

Wednesday, March 28, 2012

பட்டினியை விட்டுவிடுங்கள்

பாபாவுக்கு பிடித்த ஒரு சிறுவன் ஒருவன் இருந்தான் அவனது பெயர் பாபு. அவனது முதல் ஆண்டு பிறந்தநாள் விழா மாதவராவ் தேஷ்பாண்டே வீட்டில் சிறப்பாக நடந்தது. இந்த விழாவுக்கு பாலா சாகேப் பாடே என்ற பாபா பக்தரும் அழைக்கப்பட்டிருந்தார். அவர் வர இயலாமையைத் தெரிவித்துவிட்டு, பாபாவை பார்க்கச் சென்றிருந்தார்.

"பிறந்தநாள் விழா விருந்தில் சாப்பிட்டாயா? என்று கேட்டார் பாபா." இன்று வியாழக் கிழமை ஆதலால் நான் சாப்பிடவில்லை! என்றார் பாலா சாகேப்.

"இருந்தால் என்ன?" என்றார் பாபா. "குருவுக்கு உகந்த நாட்களில் நான் வெளியே சாப்பிடுவதில்லை. அது என் வழக்கம்!" என்றார் பாலா சாகேப்.

"யாரை திருப்திப்படுத்த இந்த விதி?" என்று பாபா கேட்ட போது, "தங்களைத் திருப்திப்படுத்தவே !" என்றார் பாலா சாகேப்.

"அப்படியானால் நான் சொல்கிறேன், மாதவராவ் அளிக்கும் விருந்தில் சாப்பிடு!" எனக் கூறி திருப்பி அனுப்பினார். பாலா சாகேப் விருந்துக்கு வந்து சாப்பிட்டார். 

நான் உன்னோடு தானே இருக்கிறேன். நடப்பவற்றை நான் பார்த்துக் கொள்கிறேன். விரதம் என்ற பெயரில் பட்டினியை விட்டுவிடுங்கள். ஸ்ரீ ஷிர்டி சாய்பாபா                      

Tuesday, March 27, 2012

உள்ளத்தால் தள்ளி நிற்கிறார்கள்


என்றைக்கு என் பெயரைச் சொல்ல ஆரம்பித்தீர்களோ அன்றைக்கே உங்கள் பாவங்கள் தொலைந்து விட்டன. கெட்ட காலம் முடிந்துவிட்டன என்பதை கேள்விப்பட்டும் நம்பாமல் இருக்கிறவர்கள் என்னை நம்புகிறேன் என உதடுகளால் சொல்லி உள்ளத்தால் தள்ளி நிற்கிறார்கள் என்பதை உணர்ந்து கொள்ளுங்கள். ஸ்ரீ சாயி தரிசனம்  

Monday, March 26, 2012

இமைப்பொழுதும் மறந்தறியேன்


யாருக்கு எதன் மீது பற்று அதிகமோ அதன் மீது முழு கவனமும் இருக்கும். லோபி ஏதோ ஓரிடத்தில் தான் மறைத்து வைத்திருக்கும் பொருளைப் பற்றியே இரவும், பகலும் மனதில் அசை போட்டுக்கொண்டிருப்பான். காதலன் காதலியைப் பற்றியும், காதலி காதலனையும் சதா நினைத்துக்கொண்டே இருப்பார்கள். இதே போலத்தான் சாயியை எப்போதும் மனதில் அதே ஏக்கத்தோடும், தவிப்போடும் தேடும் மன நிலை நமக்கு வரவேண்டும்.இமைப் பொழுதும் மறந்தறியேன் என்று சொல்லும் அளவுக்கு அவனை நினைவில் நிறுத்தும் வகையில் மாற்றிக்கொள்ள வேண்டும். ஸ்ரீ சாயி தரிசனம்    

Sunday, March 25, 2012

எல்லோரையும் ஒன்று போலவே சமமாக பாருங்கள்நண்பனையும், விரோதியையும் சரிசமமாகவே பாருங்கள். எள்ளளவும் வித்தியாசம் காட்டாதீர்கள். எல்லோரையும் ஒன்று போலவே சமமாக பாருங்கள். அதிர்ஷ்டமோ, துரதிருஷ்டமோ சமநிலையில் இருந்து பாருங்கள். ஷிர்டி சாய்பாபா  

Saturday, March 24, 2012

போதனை மார்க்கங்களாகும்


யார் என்னுடைய கதைகளின் மீது ஆர்வம் கொண்டிருப்பார்களோ, அவர்களுக்கு என் லீலைகள், சில செயல்கள் ஆச்சர்யமாகவும், விசித்திரமாகவும், கற்பனையாகவும் தோன்றவே தோன்றாது. என் லீலைகளை யார் எப்போதும் மனத்தில் இருத்திக்கொள்கிறார்களோ அவர்களின் வாழ்க்கை புனிதமடைகிறது. எனது லீலைகள் எனது பக்தர்களுக்கு போதனை மார்க்கங்களாகும். ஷிர்டி சாய்பாபா       

Friday, March 23, 2012

பாபாவிடம் ஒரு வேண்டுகோள்


பாபாவிடம் இங்ஙனம் வேண்டுவோம்; "எங்களது புத்தியை திசை திருப்பிவிடுங்கள். அந்தர்முகமாகச் செய்யுங்கள்.நித்ய (வேண்டுவன) - அநித்ய (வேண்டாதவை) வஸ்துக்களை பகுத்துணரும் விவேகம்,எல்லா உலகப் பொருட்களின் மீது பற்றின்மை ஆகியவைகளை எங்களுக்கு நல்கி ஆத்ம உணர்வை அடைய இவ்விதமாக எங்களை ஊக்குவியுங்கள்.


ஆன்மாவையும், உடலையும் உம்மிடம் ஒப்புவித்தோம் (உடலுணர்வு மற்றும் அஹங்காரம்).எங்களது கண்களை தங்களதாக்குங்கள்.அதன் முலம் நாங்கள் இன்ப - துன்பங்களையே உணராதிருப்போம். தங்கள் சங்கல்பத்தின்படி,விருப்பத்தின்படி எங்களது மனதையும்,உடலையும் கட்டுப்படுத்துங்கள்.தங்கள் பாதத்தில் எங்கள் மனது ஆறுதல் பெறட்டும்" ஸ்ரீ சாய் சத்ச்சரித்ரா 26.        

Thursday, March 22, 2012

நான் உங்கள் தந்தை


"எனது பக்தர்களே! நீங்கள் எனது குழந்தைகள், நான் உங்கள் தந்தை. என்னிடமிருந்து அனைத்தையும் நீங்கள் பெறவேண்டும்". என்னிடமிருந்து அனைத்தையும் பெற்றுக்கொள்ள முன் வந்துவிடுங்கள்.


என்னிடமிருந்து பெறுவதற்கு விரதங்கள் தேவையில்லை, கடுமையான முயற்சி தேவையில்லை.பிறரிடம் ஓட வேண்டும் என்ற அவசியம் இல்லை.தனி அறையில் உட்கார்ந்தோ,நின்றோ,நடந்தோ என்னிடம் முழு மனதோடு கேட்டால் போதும். சாயியின் குரல்           

Wednesday, March 21, 2012

நான் ஏற்றுக்கொள்கிறேன்


மனிதர்கள் எவ்விதம் என்னை நம்புகிறார்களோ அவ்விதமே நான் அவர்களை ஏற்றுக்கொள்கிறேன். ஷிர்டி சாய்பாபா 

Tuesday, March 20, 2012

பேராசை


பேராசையும் கடவுளும் எதிரெதிர் துருவங்கள். எங்கே பேராசை நிலவுகிறதோ, அங்கே கடவுள் இருப்பதில்லை. ஷிர்டி சாய்பாபா   

Monday, March 19, 2012

பத்தாகத் திரும்பப் பெறுங்கள்


பெறுவதற்கு மிகச்சிறந்த வழி கொடுத்தலே ஆகும். தக்ஷிணை கொடுத்தல் வைராக்கியத்தை (பற்றின்மை) வளர்க்கிறது. அதன் மூலம் பக்தி, ஞானம் இவற்றை விருத்தி செய்கிறது. ஒன்றைக் கொடுத்துப் பத்தாகத் திரும்பப் பெறுங்கள். சாயி சத்சரிதம்.    

Sunday, March 18, 2012

பாபாவை முழு மனதோடு தேடுங்கள்.


உனக்கு எந்த ரூபத்தில் உதவி செய்ய முடியுமோ, உன் மனதை எந்த வடிவில் தோன்றி ஈர்க்க முடியுமோ அந்த வடிவத்தில் தோன்றி உன்னை ஈர்த்து உனக்கு நன்மை செய்துகொண்டிருக்கிறேன். அவனே இவன், இவனே அவன். இவனும் அவனுமாக இருப்பவனும்,எப்பொருளிலும் ஊடுருவி நிற்பவனுமாகிய அந்த பரம்பொருளுக்குப் பேதம் கற்பிப்பதை தவிர்த்து, ஒன்றேயான இறைவனை - பாபாவை முழு மனதோடு தேடுங்கள்.          

Saturday, March 17, 2012

அனைவரும் ஒன்றேகுலம் ஏதானாலும் அனைவரிலும் இருக்கும் சீழ், ரத்தம் ஒன்றே. உண்ணும் உணவும் ஒன்றே. குலப்பிராப்பால் ஒருவர் உயர்ந்தவர் என்ற எண்ணம், பரிபூரண  அஞ்ஞானத்தால் உண்டாகிறது என்பது பொருந்தும். ஷிர்டி சாய்பாபா  

Friday, March 16, 2012

கஷ்டத்திலிருந்து விடுதலை அடைவாய்உனது நம்பிக்கை, பொறுமையின் அளவை நான் சோதித்துக்கொண்டே இருக்கிறேன். நீ இன்னும் பக்குவப்படவில்லை.படபடவெனப் பேசுவதையும்,குழப்பமடைவதையும்,கோபப்படுவதையும்,
குறைகூறுவதையும் குறைத்துக்கொள்ளும்வரை என்னால் உனக்கு ஏற்றதை செய்ய இயலாது.

உன் வாயிலிருந்து பிறரைப் பற்றிய அவதூறான வார்த்தைகள் வராமல் இருந்தால்,எப்போதும் எனது நாமம் உனது வாயின் துதிகளாக இருந்தால் விலை ஏதும் இல்லாமல் கஷ்டத்திலிருந்து விடுதலை அடைவாய் என்பதை உறுதியாகச் சொல்கிறேன். சாயியின் குரல்    

Thursday, March 15, 2012

கோரிக்கை நிறைவேறும்


பாபாவை வணங்குபவர்களுக்கும், மற்ற கடவுள்களை வணங்குவதற்கும் வித்தியாசம் இருக்கிறது. மற்ற கடவுள்களை நாம் பக்தியோடு வணங்குகிறோம். அப்போதுதான் வேண்டுதல் நிறைவேறும். பாபாவை மட்டும் பாசத்தோடு நினைத்தால் போதும். கோரிக்கை நிறைவேறும்.      

Wednesday, March 14, 2012

பக்தி பாசமாக மாறிவிடுகிறது


முதலில் பக்தியோடுதான் பாபாவை நெருங்குகிறோம். ஆனால் அந்த பக்தி பாசமாக மாறிவிடுகிறது. இந்த பாசம் எதையும் தாங்கிக் கொள்ளவும், எதையும் இழக்கவும், எதையும் விட்டுக் கொடுக்கவும் நம்மை தயார் செய்துவிடுகிறது.
       

Tuesday, March 13, 2012

நான் உன்னுடன் இருப்பேன்


கல்லறைக்குள் இருந்தாலும் நான் உயிரோடும் சக்தியோடும் இருப்பேன். நீ எங்கு இருந்தாலும் என்னை நினைத்தால், நான் உன்னுடன் இருப்பேன். ஷிர்டி சாய்பாபா    

Monday, March 12, 2012

நலனை கொடுக்கும்ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு மனோபாவம் இருக்கும், எங்கு உன் மனம் சாந்தி அடைகிறதோ அங்கு இறைவன் இருப்பது போலவேயாகும். இதை அறிந்து நடப்பது நலனை கொடுக்கும். ஷிர்டி சாய்பாபா

Sunday, March 11, 2012


நான் நுழைவதற்கு கதவும் தேவையில்லை, எனக்கு வடிவமோ, இடமோ தேவையில்லை. நான் எங்கும் எப்பொழுதும் நிறைந்திருக்கிறேன் -ஷிர்டி சாய்பாபா.    

Saturday, March 10, 2012

மகத்தான அனுபவங்களை பெறுகின்றனர்


பாபா சகஜமாகவும் வேடிக்கையாகவும் பேசுவார். ஆனால், அந்த வார்த்தைகளின் பொருளோ பூரணமான நீதிநெறிகள் நிறைந்திருக்கும். எவர் நித்தியசாந்தியில் முழ்கியிருந்தாரோ, அவரை தியானம் செய்பவர்கள் மகத்தான அனுபவங்களை பெறுகின்றனர்.    

Friday, March 9, 2012

பொய்மை பாபாவிடத்தில் செல்லாதுபாபாவின் பக்தரான நானா சாகேப் சந்தோர்க்கர் ஒருமுறை தொழுகைக்குரிய தேவரான தத்தாத்ரேயரின் தரிசனத்தை புறக்கணித்துவிட்டு  நேரடியாக ஷிர்டி சென்று பாபாவின் தரிசனத்தை பெற பாபாவிடம் சென்ற போது;

பாபா "நானா, இதை எப்படி நீர் மறந்து போகலாம்? என்னுடன் இவ்வளவு நாட்கள் பழகி இதைத்தான் கற்றுக்கொண்டீரா? என்னுடைய கூட்டுறவில் இவ்வளவு காலம் கழித்தபிறகு இதைத்தான் கற்றுக்கொண்டீரா? என்னுடைய சங்கத்தில் வருடக்கணக்காகக் கழித்த பிறகும் உம்முடைய நடத்தை ஏன் இப்படி இருக்கிறது? உம்முடைய மூளைக்கு என்ன ஆயிற்று?"

இதைக் கேட்டவுடன் நானாவுக்கு விஷயமென்ன என்பது புரிந்துவிட்டது. இங்கே கண்ணாம்பூச்சி ஆட்டம் செல்லாது என்பதை அறிந்துகொண்டு நடந்ததை அனைத்தையும் விவரமாகச் சொன்னார்.

பாபா " உமக்கு இந்த அவசரம் உதவாது, தொழுகைக்குரிய தேவரான தத்தர், நீங்கள் எவ்வித முயற்சியும் செய்யாமல் தரிசனம் தரக் காத்துக்கொண்டிருக்கும்போது அவரைப் புறக்கணித்துவிட்டு இங்கு வந்தால் நான் மகிழ்ச்சியடைவேனா!

அஸத்தியம் (பொய்மை) பாபாவிடத்தில் செல்லாது. பொய்யைச் சொல்லி பாபாவின் அருளை என்றுமே சம்பாதிக்கமுடியாது.
     

Thursday, March 8, 2012

தாரை தாரையாய் அழுகிறேன்


நீங்கள் உருகும்போது நான் தாரை தாரையாய் அழுகிறேன். இந்தக் கிழவனின் கன்னங்கள் ஒட்டிப் போகும் வரை உங்களுக்காக நான் விரதமிருக்கிறேன். உங்களுடைய தேவைகளுக்காக நான் ஓடியாடிக் கொண்டிருக்கிறேன். உங்களுடைய உணர்வுகளை மதித்து, மரியாதையோடும், உனக்கு கண்ணியக் குறைவு வரக்கூடாது என்பதற்காகவும் நல்ல வழிகளை உருவாக்கிச் செய்து கொண்டிருக்கிறேன்.       

Wednesday, March 7, 2012

கலங்க விட மாட்டேன்

பிறர் முயற்சியை குறை சொல்வதையும், பிறரை பார்த்து பிரம்மிப்பு (ஆச்சர்யப் படுவதையும்) அடைவதையும் தவிர்த்து விடு. யார் என்ன கேட்டாலும் அவர்கள் தகுதிக்கு ஏற்ப தருகிறேன் என்பதை மறந்து விடாதே! உன்னுடைய பங்கும் என்னிடம் பத்திரமாக இருக்கிறது. உனக்கு எப்போது தேவையோ அப்போது கண்டிப்பாக அதைத் தருவேன். உன்னை ஒருபோதும் கலங்க விட மாட்டேன்.      

Tuesday, March 6, 2012

ஷிர்டி


பாபா பூதவுடலில் இருந்தபோது என்னவெல்லாம் நடந்தனவோ அவையெல்லாம் அங்கே இப்போதும் நடந்து வருகின்றன. அன்ன தானமா? பஜனையா? பக்தர் குறை தீர்த்தலா? பிரார்த்தனையா? சத்சங்கமா? எதற்கும் அங்கே குறை இருக்காது. துயரத்தோடும், கஷ்டத்தோடும் வருவோரின் துயர் துடைக்கும் நிவாரண மையமாக, இறைவன் சாயி பாபா நேரில் வந்து ஆறுதல் அளிக்கும் மையமாக, ஓர் அரசாங்கம் செய்யவேண்டிய மக்கள் சேவைகளை செயல்படுத்தி மக்கள் குறைகளைத் தீர்க்கும் மன்றமாக ஷிர்டி விளங்கிக் கொண்டிருக்கிறது.     

Sunday, March 4, 2012

சுபம் ஏற்படும்நீங்கள் அனுபவிப்பது, உங்களிடமிருப்பது, நான் உங்களுக்கு ஆசிர்வதித்து கொடுத்ததாகும் என்பதை நீங்கள் அறிந்தால் உங்களுக்கு சுபம் ஏற்படும்- ஷிர்டி சாய்பாபா

Saturday, March 3, 2012

புதிய வழிகளை உருவாக்கித் தருவேன்


உனக்குள் இருக்கும் கவலைகளை தூக்கி உனது தந்தையான இந்த சாயி மீது வைத்துவிடு. இருப்பதை வைத்து திருப்தியாக வாழ்வதற்குப் பார். பிறரது ஆலோசனை உனக்குப் பலன் தராது. என் மீது நம்பிக்கை வைத்து வழி நடத்துமாறு வேண்டி, முழு மனதோடு என்னை சரணடைந்து விடு. உன்னுடைய பொறுப்பை நான் சுமப்பேன். உன் குடும்பத்தை தாங்குவேன். உன் கண்ணீரை என் விரல்கள் துடைப்பதை அப்போது நீ உணர்ந்துகொள்வாய். புதிய வழிகளை உருவாக்கித் தருவேன். நீயாக எந்த சிக்கலிலும் மாட்டிக்கொள்ளாதே. ஸ்ரீ சாயி-யின் குரல்.       

Friday, March 2, 2012

நான் உன்னை ஆசீர்வதிக்கிறேன்


நீ என்னை அடைந்தால் நான் உன்னை கடாஷிக்கிறேன் (ஆசீர்வதிக்கிறேன்).
 

Thursday, March 1, 2012

தருமவழியில் நடப்பீராக


செல்வம் என்றுமே நிரந்திரமில்லை. சரீரமோ (உடம்பு) ஒரு நீர்க்குமிழி. மரணம் எப்பொழுதுமே பக்கத்தில் உட்கார்ந்திருக்கிறது என்பதை அறிந்து தருமவழியில் நடப்பீராக. ஸ்ரீ சாயி சத்ச்சரித்ரம்

விசுவாசத்தின் ஆழத்திற்க்கேற்றவாறு பக்தனின் பக்தியை கௌரவிக்கிறார் பாபா !

பாபா,  தன் பக்தன் தன்மேல் வைக்கும் "நம்பிக்கை மற்றும் விசுவாசத்தின் ஆழத்திற்கேற்றவாறு",  அவருக்கு மிகச்சிறந்த அனுபவங்களைக் கொடுத்த...