உனது நம்பிக்கை, பொறுமையின் அளவை நான் சோதித்துக்கொண்டே இருக்கிறேன். நீ இன்னும் பக்குவப்படவில்லை.படபடவெனப் பேசுவதையும்,குழப்பமடைவதையும்,கோபப்படுவதையும்,
குறைகூறுவதையும் குறைத்துக்கொள்ளும்வரை என்னால் உனக்கு ஏற்றதை செய்ய இயலாது.
உன் வாயிலிருந்து பிறரைப் பற்றிய அவதூறான வார்த்தைகள் வராமல் இருந்தால்,எப்போதும் எனது நாமம் உனது வாயின் துதிகளாக இருந்தால் விலை ஏதும் இல்லாமல் கஷ்டத்திலிருந்து விடுதலை அடைவாய் என்பதை உறுதியாகச் சொல்கிறேன். சாயியின் குரல்