Monday, April 30, 2012

உதவத் தயாராக இருக்கிறார்


பாபா பக்தர்களுக்கு மட்டுமே சாத்தியமாகிற விஷயம். தன் பக்தனுக்கு அருளை மட்டுமின்றி பொருளையும் நம்மை கேட்க வைத்து கொடுக்கிறார், அழவைத்து தீர்வு தருகிறார். சிரிக்க வைத்து சிந்திக்க வைக்கிறார். தனக்காக வேண்டிக்கொள்ள வரவழைத்து பிறருக்காக வேண்ட வைக்கிறார்.

தந்தையாக, தாயாக, சகோதரியாக, சகோதரனாக,பிள்ளையாக, நண்பனாக எல்லா உறவு முறைகளிலும் அவர் உதவத் தயாராக இருக்கிறார். ஆனால் உணர்வுகளை சேதப்படுத்தும் எந்த வடிவத்தையும் அவர் ஏற்பதில்லை என்பதை புரிந்து கொள்ளவேண்டும். 

பாபா நான்கு வழிகளை (தவம், தானம், கேள்வி, யோகம்) நமக்கு கற்பித்து, ஐந்து புலன்களை தாமாக அடங்க வைத்து ஆறுதலைத் தருகிறார். ஆத்மார்த்தமாக அவரை வணங்கும்போது அவற்றை நாம் பெற்றுக்கொள்கிறோம். ஸ்ரீ சாயி தரிசனம்.                   

Sunday, April 29, 2012

உண்மையை உணர வேண்டும்பாபாவின் பாதத்தை தஞ்சம் அடைந்தபிறகு, பொறுமையை சோதிக்கும் நிகழ்வுகள் நடக்கும்.எல்லாமே கழுத்தைப் பிடித்து நெறிப்பது போல இருக்கும். அதை கண்டோ, கேட்டோ தளராமல் உறுதியுடன் இருந்து நம் உறுதியைக் குலைக்கும் மனக் கவலையை விட வேண்டும்.

என் பேரில் உன் பளுவை சுமத்தினால் அதை நான் நிச்சயம் தாங்குவேன் என உறுதியளித்துள்ளார். நான் இருக்க பயம் எதற்கு? என்றவர் அவர். அவரை நம்புகிறவன், அவர் வார்த்தையின் மீது நம்பிக்கை வைத்து, தன் கவலைகளை விட்டு விட வேண்டும். சாயி மீது பாரத்தை ஏற்றியாகிவிட்டது. அவர் பார்த்துக் கொள்வார்.ஒருவேளை பார்க்காமல் போனாலும் நான் கவலைப்படமாட்டேன். என்னைப் பற்றி கவலைப்பட வேண்டியது அவர், நானல்ல! என்ற உண்மையை உணர வேண்டும். ஸ்ரீ ஷிர்டி சாய்பாபா.             

Saturday, April 28, 2012

பாபாவின் நல்வாக்குவீரபத்ரனின் கேள்வி: "பாபா, செல்வம் என்னை அலட்சியப்படுத்துகிறது. மனைவியோ, இதை கொண்டுவா, அதைக் கொண்டுவா என்று முடிவேயில்லாமல் உரிமையுடன் கேட்கிறாள். போதும், போதும் இந்த அவமானம். எனக்கு இந்த இல்லறத்தின் கெளரவமே வேண்டாம்"
பாபா பதில்: "உன்னுடைய பாக்கியகாலம் நெருங்குகிறது; வீணாக துவண்டுவிடாதே. கையைக் கழுவுவது எவ்வளவு சுலபமோ அவ்வளவு சுலபமாக உனக்கு செல்வம் வந்து சேரும். பெரும் செல்வத்திற்கு அதிபதி ஆவாய்". (பாபாவின் நல்வாக்கு)
பின்னர் நடந்தது: வீரபத்ரனின் தரிசு நிலத்தின் மதிப்பு திடிரென்று உயர்ந்தது. 1 லட்சம் ருபாய் (100 வருடங்களுக்கு முன்பு) கொடுக்கத்தயார் என்று சொல்லிக்கொண்டு வாங்குபவர் ஒருவர் வந்தார்.        

Friday, April 27, 2012

சுமைகளை என் மீது இறக்கிவிடு


ஒருவன் தனது சுமைகளை என் மீது இறக்கிவிட்டு என்னையே நினைத்திருப்பானாகில், நான் அவனது எல்லா பொறுப்புகளையும் ஏற்றுக்கொள்கிறேன். ஸ்ரீ ஷிர்டி சாய்பாபா  

Thursday, April 26, 2012

தோழமை நெறிபாபாவை நண்பனாக பாவித்து பக்தி செலுத்துவது நட்பு முறையிலான வழிபாடு, இந்த வழிபாடு செய்கிறவன், தனது ஐம்புலன்களையும் அடக்கி, அவற்றை உடம்பின் செயல்பாடுகள் வழியே விடாமல் தடுத்து, மூச்சை அடக்கி, நமது உடலிலுள்ள ஆறு ஆதாரங்களையும் அறிந்து அவற்றை எழுப்பி அதனுள்ளிருந்து இறைவனை வணங்குவதாகும். சதா சர்வ நேரமும் பாபாவை நினைக்கவே கிடைத்தல் தோழமை நெறி. இது போன்று இறைவனுடைய தோழமை நெறியில் நின்றவன் அர்ஜுனன். ஸ்ரீ சாயி தரிசனம்.         

Wednesday, April 25, 2012

ஒவ்வொரு செயலையும் நான் அறிவேன்


அயராத கண்காணிப்புடன் கூடிய எனது பார்வை என்னை நேசிப்பவர்கள் மீது எப்போதும் இருக்கும். செய்வது யாதாயினும், எங்கு இருப்பினும், எப்போதும் இதை நினைவில் வை. உனது ஒவ்வொரு செயலையும் நான் அறிவேன். ஸ்ரீ ஷிர்டி சாய்பாபா.      

Tuesday, April 24, 2012

உறுதியோடு கேளுங்கள்


என் மீது நம்பிக்கை முழு அளவில் இருந்தால், நீங்கள் பொறுமை காக்கவேண்டும். என்னை ஏன் கைவிட்டீர்கள் எனக் கேட்டு உன் அருகில் இருக்கும்போதே, நீங்கள் தூரவிலகிச் செல்லாதீர்கள்.

எந்த நேரத்திலும் முடியாது, கூடாது, நடக்காது, நடக்கவில்லை, நேரவில்லை, வாய்ப்பு இல்லை, முடியவில்லை, பொறுமையில்லை என இல்லை, இல்லை என்ற வார்த்தைகளை உங்கள் வாயிலிருந்தும், மனதிலிருந்தும் முற்றிலுமாக நீக்கிவிடுங்கள்.

நாளை தருவார், அடுத்த ஆண்டு தருவார், இனிமேல் செய்வார் என்று என் அற்புதத்தை நீங்கள் தள்ளிப்போடாதீர்கள். நான் எப்போது செய்ய வேண்டும் என்பதை தீர்மானிக்க விரும்பினால் இப்போதே செய் என உறுதியோடு கேளுங்கள். ஸ்ரீ சாயி தரிசனம்.                 

Monday, April 23, 2012

விழவிடவே மாட்டேன்


என் பக்தர்களுக்கு தீங்கு நேரிட விடமாட்டேன். என் பக்தர்களை நானே கவனித்துக் கொள்ளவேண்டும். ஒரு பக்தன் விழும் நிலையிலிருந்தால், நான் நான்கு, நான்கு கரங்களை அத்தருணத்தில் நீட்டி காக்கிறேன். அவனை விழவிடவே மாட்டேன். ஸ்ரீ ஷிர்டி சாய்பாபா      

Sunday, April 22, 2012

பக்தர்களின் உணர்வுகளை அறிந்திருப்பார்பாபா எப்பொழுதும் தன்னுடைய பக்தர்களின் உணர்வுகளை அறிந்திருப்பார். ஒரு முறை ஸ்ரீ ராம நவமியன்று பாபாவை தரிசனம் செய்வதற்கு பெரிய அளவில் மக்கள் துவாரகா மாயியில் கூடி இருந்தார்கள். அங்கு வயதான ஒரு பெண்மணியும் பாபாவின் தரிசனத்திற்கு வந்திருந்தாள். அந்தக் கூட்டத்தில் பாபாவை பார்க்க முடியாததால் ஏங்கினாள்.

அதை அறிந்த பாபா, ஷாமாவை அழைத்து, அந்த பெண்மணியை அழைத்து வருமாறு அனுப்பினார். அவள் வந்ததும், அவளிடம், "தாயே, நான் காலையிலிருந்து பட்டினியோடு உன் வருகைக்காகக் காத்திருக்கிறேன். நீ எனக்காக கொண்டு வந்ததை உடனே கொடு" என்றார்.

அந்தப் பெண்மணி தன் பையிலிருந்து ஒரு ரொட்டியையும், பாதி வெங்காயத்தையும் பாபாவின் கையில் வைத்தாள். பாபா அதை மிகவும் ஆவலுடன் ருசித்து சாப்பிட்டுக் கொண்டே, "தாயே, நான் சாப்பிடுவதற்காக எவ்வளவு ருசியான உணவை கொண்டுவந்திருக்கிறாய். தொண்டைக்குழி வரை உணவு நிறைந்துவிட்டது.. ஆஹா!" என்றார்.                    

Saturday, April 21, 2012

எங்கும் வியாபித்துள்ளேன்


நான் இந்த பெளதீக உடலுடன் ஷிரிடியில் மாத்திரம் இருக்கிறேன் என்ற எண்ணத்தை விட்டு விடுங்கள். நான் எங்கும் வியாபித்துள்ளேன்- ஷிர்டி சாய்பாபா.

Friday, April 20, 2012

தலையையே தந்துவிடுவேன்


ஒருவன் என்னையே இடையறாது நினைத்து, என்னையே ஒரே புகலாகக் கொள்வான் என்றால், நான் அவனுக்கு கடன்பட்டவனாகி, அவனை காப்பதற்கு என் தலையையே தந்துவிடுவேன். ஸ்ரீ ஷிர்டி சாய்பாபா      

Thursday, April 19, 2012

லட்சியம் நிறைவேறும்"இந்த மசூதியை அணுகியவர்களுக்கு நொடிப்பொழுதும் கெட்டது நடக்காது. இப்பொழுது கவலையை விட்டுவிடுங்கள். கடவுள் மேல் நம்பிக்கை வையுங்கள். இது மசூதி இல்லை. துவாரகா வதி. இங்கு கால் வைத்தவர்கள் சீக்கிரமே ஆரோக்கியத்தையும், ஷேமத்தையும் பெறுவார்கள். இதுவே உங்களுக்கு அனுபவமாகும். இங்கே வந்தவர்களுக்கெல்லாம் நல்லதே நடக்கும். இந்த மசூதியின் படியில் ஏறியவர்களின் லட்சியம் நிறைவேறும்" - ஸ்ரீ ஷிர்டி சாய்பாபா          

Wednesday, April 18, 2012

தன்னை மட்டுமே நினைக்கும்படி செய்துவிடுகிறார்


பாபா யாரை எப்போது எப்படி இழுக்க வேண்டும் என திட்டமிடுகிறாரோ, அதை முடிப்பதற்காக தானே முன்கூட்டி அங்கு சென்று கவனிக்கப்படாத காட்சியாளனாக அமர்ந்து விடுகிறார். அவர் அங்கே ஆண்டுக் கணக்கில் இருந்தாலும் நாம் அவரை அடையாளம் கண்டு கொள்வதில்லை. நமக்கு விதிக்கப்பட்ட நேரம் எப்போது வருகிறதோ, அப்போது அவர் நமக்குத் தென்படுகிறார், அது மட்டுமல்ல, நம்மை பக்தனாக்கி, பித்தேற்றி எல்லாவற்றையும் துறந்து தன்னை மட்டுமே நினைக்கும்படி செய்துவிடுகிறார். ஸ்ரீ சாயி தரிசனம்.        

Tuesday, April 17, 2012

என்ன தவம் செய்தோமோஎந்த ஜென்மத்தில், எந்த சந்தர்ப்பத்தில், எந்த நேரத்தில், எவ்விதத்தில், என்ன தவம் செய்தோமோ அறியோம், சாயி பாபா தம் சிறகுகளுள் நம்மை அணைத்துக்கொண்டார்.

ஓ! பிறவியிலிருந்தே கள்ளனாகிய நாம் இதை தவம் செய்து பெற்றோம் என்று எவ்வாறு சொல்வோம்? தயாள குணம் கொண்ட சாயியின் அருளைத் தவிர, இதற்கு வேறு காரணம் இல்லை. ஸ்ரீ சாயி சத்ச்சரித்ரா 4        

Monday, April 16, 2012

உன்னை திருப்தி படுத்துவேன்எவன் ஒருவன் பாபாவை முழு மனத்துடன் நேசிக்கிறானோ அவன் எந்த நேரத்திலும், எந்த இடத்திலும், அவரிடமிருந்து பதிலைப் பெறுகிறான். நமது அருகிலேயே அவர் எப்போதும் இருக்கிறார். எந்த ரூபத்தையும் அவர் எடுத்துக் கொள்கிறார். பிரியமுள்ள பக்தனிடத்துத் தோன்றி அவனை திருப்திப் படுத்துகிறார். ஸ்ரீ சாயி சத்ச்சரித்ரா 33

Saturday, April 14, 2012

கோரிக்கை
நான் இருப்பது நீ விரும்பிய கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்கே, அதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை. - ஷிரிடி சாய்பாபா

Friday, April 13, 2012

நான் எப்பொழுதும் உயிருடன் இருக்கிறேன்என்னிடம் வருபவர்களுக்கும் என்னை தஞ்சம் அடைபவர்களுக்கும்,  என் உபதேசத்திற்காக என்னிடம் தீவிர நம்பிக்கை உள்ளவர்களுக்கும் நான் எப்பொழுதும் உயிருடன் இருக்கிறேன். - ஷிர்டி சாய்பாபா

Thursday, April 12, 2012

மன சாந்தியை அளிப்பேன்மன சாந்தி இல்லாத என்ற ஒரு அங்குல இடம் கூட இவ்வுலகில் எங்கும் கிடையாது. உன் பாரத்தை என் மேல் வை. என் மீது உன் பார்வையை திருப்பு. என்னையே தியானி, நிச்சயமாய் நான் உனக்கு சாந்தியை அளிப்பேன்.- ஷிர்டி சாய்பாபா

Wednesday, April 11, 2012

அல்லா அளிப்பதை ஏற்றுக்கொள்'நான்' 'என்னுடையது' என்னும் உணர்வுகளை அறவே ஒழித்துவிட்டு அல்லா அளிப்பதைத் தியாக பூர்வமான உணர்வுடன் ஏற்றுக்கொள். எவருடைய உடமைக்கோ சொத்துக்கோ ஆசைப்படாதே. ஷிர்டி சாய்பாபா    

Tuesday, April 10, 2012

மனம் ஒரு உருதிப்பாட்டையே அறிந்ததில்லை


"நிலையற்ற புத்தியுள்ள ஒரு மனிதன் இருந்தான். அவன் செல்வம், ஆரோக்கியம் முதலியவை வாய்க்கப்பெற்றிருந்தான். மனோ வேதனைகளிருந்து விடுபட்டவனாக இருந்தான். எனினும் தேவையற்ற கவலைகளையும், பாரங்களையும் தன்மீது போட்டுக்கொண்டு, மன அமைதியை இழந்து இங்குமங்கும் சுற்றித் திரிந்தான். சில சமயம் பாரத்தையெல்லாம் இறக்கிவிட்டும், சில சமயம் அவற்றை மீண்டும் சுமந்தவனாயும் இருந்தான். அவனது மனம் ஒரு உருதிப்பாட்டையே அறிந்ததில்லை. அவனது நிலைகண்டு நான் இரக்கம் கொண்டேன். அவனிடம் "இப்போது நீ விரும்பும் ஏதாவது ஒரு இடத்தின் (குறிக்கோள்) மீது உனது நம்பிக்கையைத் தயவுசெய்து வைப்பாயாக, ஏன் இவ்வாறு சுற்றவேண்டும்? அமைதியாக ஏதாவதொரு இடத்தைப் பற்றிக்கொள்" ஸ்ரீ சாயி சத்ச்சரித்ரா 35            

Monday, April 9, 2012

அல்லாவின் மிகப் பணிவான அடிமை

"விதியின் வலிமையால் என்னென்ன நிகழ்ச்சிகள் நேர்கின்றனவோ அவற்றிற்கு நான் சாட்சி மாத்திரமே. செயல்புரிபவனும், செயல் புரியவைப்பவனும் இறைவன் ஒருவனே"


"நான் தேவனுமல்லேன், ஈஸ்வரனுமல்லேன். நான் 'அனல் ஹக்' குமல்லேன் (கடவுளுமல்லேன்). நான் 'யாதே ஹக்' (இறைவனை எப்பொழுதும் மனதில் இருத்தியவன்). நான் அல்லாவின் மிகப் பணிவான அடிமை" ஸ்ரீ ஷிர்டி சாய்பாபா          

Sunday, April 8, 2012

ஸ்ரீ சாயி சத்ச்சரித்ரா 25


நண்பருடன் கூட்டாகப் பருத்தி வியாபாரம் செய்யலாமா என்று கேட்டு தாமு அண்ணா பாபாவுக்கு கடிதம் எழுதியது - அனுமதி தர பாபா மறுத்தது  - தாமு அண்ணா நேரடி விஜயம் - லாபத்தில் பாபாவுக்கு பங்கு தரலாம் என்று நினைத்தது - இந்த விவகாரத்திலெல்லாம் என்னை இழுக்காதீர், தானிய வியாபாரமும் வேண்டாம் (பாபா திருவாய்மொழி) - வேறு கூட்டாளிகளுடன் பருத்தி வியாபாரத்தில் இறங்கிய நண்பருக்கு பெருத்த நட்டம் - தாமு அண்ணாவுக்காக நான்கு மாம்பழங்களை பாபா ஒதுக்கீடு செய்தது - தாமு அண்ணா எதிர்பாராது ஷீரடிக்கு வந்தது - இரண்டு மனைவிகள் இருந்தும் பல ஆண்டுகளாகப் பிள்ளைபேறு இல்லாதிருந்த நிலை - இந்த மாம்பழங்களை இளைய மனைவியிடம் கொடும் (பாபா திருவாய்மொழி) - மாம்பழ அற்புதம் குழந்தைகள் பிறந்தன! - என்னுடைய சமாதியும் உங்களுடன் பேசும்! மங்களங்களை விளைவிக்கும் (பாபா திருவாய்மொழி) - ஸ்ரீ சாயி சத்ச்சரித்ரா 25  

Saturday, April 7, 2012

ஒரு இலையும் அசையாது


எனது அருள் இல்லாமல் ஒரு இலையும் அசையாது. - ஸ்ரீ ஷிர்டி சாய்பாபா  

Friday, April 6, 2012

இதயத்தில் ஆழமாகப் பதிந்துவிட்டது


எந்த உருவம் தெய்வீக உயிரோட்டத்துடன் இயங்கியதோ, அந்த உருவம் பக்தர்களுடைய இதயத்தில் ஆழமாகப் பதிந்துவிட்டது. பக்தர்களுக்காக கைதூக்கி வாழ்த்து கூறியவர் தம்முடைய பூதவுடலை ஷீரடியில் நீத்துவிட்டபோதிலும், நகரும், நகராப்பொருள் அனைத்திலும் நிறைந்திருக்கிறார். லீலைக்காக அவதாரம் எடுக்கக்கூடிய சாமர்த்தியம் உடையவர் பாபாவே. ஸ்ரீ மத் சாயி ராமாயணம்.      

Thursday, April 5, 2012

பக்தியே எனக்கு உணவு


நான் என் பக்தனின் அருகிலேயே தாசனாக நின்றிருப்பேன். அவர்களின் அன்பு கொண்ட பக்தியே எனக்கு உணவு. அதற்காக நான் பசியுடன் தவித்துக்கொண்டிருப்பேன். ஸ்ரீ சாயி சத்ச்சரித்ரா    

Wednesday, April 4, 2012

வேண்டுதலை தவிர்ப்போம்


எதைப் பற்றியும் கவலைப்படாமல் உடனே என் கோரிக்கையை நிறைவேற்று என பாபாவிடம் வேண்டுதலை தவிர்ப்போம். அப்படி வேண்டும் தருவாயில் நீண்ட காலம் பாபாவின் மீது பக்தியாக இருக்கும் வாய்பை இழக்க நேரிடலாம். வேர் பிடிக்காத மரத்தைப் போலவும், நீர் சுமக்காத வறண்ட மேகத்தைப் போலவும் நமது பக்தி முடிந்துவிடும்.


பாபாவிடம் உங்கள் விருப்பப்படி எங்களுக்கு தேவையானதை செய்யுங்கள். அதுவரை நாங்கள் அனுபவிக்க வேண்டியிருப்பதை அனுபவிக்க சக்தியை கொடுங்கள், பொறுமையை கொடுத்து, உங்கள் மீதுள்ள நம்பிக்கை பட்டுப்போகாமல் பார்த்துக் கொள்ளுங்கள் என வேண்டுதல் விடுப்போம்.

உங்கள் கோரிக்கை எதுவாக இருந்தாலும் பாபா உடனடியாக நிறைவேற்றித் தருவார்.    

Tuesday, April 3, 2012

சந்தேகம் ஏதுமின்றி குறிக்கோளை அடைவீர்கள்
எவரிடமிருந்தும் மந்திரமோ, உபதேசமோ பெற முயலவேண்டாம். குறி சொல்பவர்களையும், ஜோதிடம் கணிப்பவர்களையும் நாடாதீர்கள். கோவில் பூசாரிகளையும், கோவிலுக்குள் துணிகரமாக என் திரு முன்னர் உங்களை தங்கள் காலடியில் விழ வைக்கும் துன்மார்கரிடமும் ஓடாதீர்கள்.


என்னையே உங்களது எண்ணங்கள், செயல்கள் இவற்றின் ஒரே குறிக்கோளாக அமைத்துக் கொள்ளுங்கள். சந்தேகம் ஏதுமின்றி உங்கள் குறிக்கோளை அடைவீர்கள். ஸ்ரீ சாயியின் குரல்         

Monday, April 2, 2012

இவ்வுடம்பைப் பராமரிக்கவேண்டும்


உடம்பைப் புறக்கணிக்கவோ, விரும்பிச் செல்லமாகப் பராமரிக்கவோ கூடாது. ஆனால் முறையாகப் பராமரிக்க வேண்டும். குதிரையில் சவாரி செய்யும் ஒரு வழிப்பயணி, தான் போகுமிடத்தை அடைந்து வீடு திரும்பும் வரையில் தனது குதிரையை எவ்வாறு பராமரிக்கிறானோ, அதைப் போல் இவ்வுடம்பைப் பராமரிக்கவேண்டும். ஸ்ரீ சாய் சத்ச்சரித்ரா 6         

Sunday, April 1, 2012

எனது சமாதியும் பேசும்


நான் இறந்துவிட்டபோதிலும் என்னை நம்புங்கள். எனது சமாதியிலுள்ள எலும்புகள் உங்களுக்கு நம்பிக்கையையும், தைரியத்தையும் அளிக்கும். நான் மட்டுமல்ல, என்னிடம் முழு இதயத்தோடு சரணடைபவர்களுடன் எனது சமாதியும் பேசும், கூடச் செல்லும், தொடர்புகொள்ளும். நான் உங்களிடத்து இல்லை என்பதாகக் கவலைகொள்ளாதீர்கள். எனது எலும்புகள் உங்களது நலத்தைக் குறித்துப் பேசி விவாதிப்பதைக் கேட்பீர்கள். ஆனால் என்னையே எப்போதும் நினைவுகூருங்கள். உள்ளம், உயிர் இவற்றால் என்னை நம்புங்கள். அப்போதுதான் நீங்கள் மிகுந்த பலனை அடைவீர்கள். ஸ்ரீ ஷிர்டி சாய்பாபா. 

விசுவாசத்தின் ஆழத்திற்க்கேற்றவாறு பக்தனின் பக்தியை கௌரவிக்கிறார் பாபா !

பாபா,  தன் பக்தன் தன்மேல் வைக்கும் "நம்பிக்கை மற்றும் விசுவாசத்தின் ஆழத்திற்கேற்றவாறு",  அவருக்கு மிகச்சிறந்த அனுபவங்களைக் கொடுத்த...