பாபாவின் பாதத்தை தஞ்சம் அடைந்தபிறகு, பொறுமையை சோதிக்கும் நிகழ்வுகள் நடக்கும்.எல்லாமே கழுத்தைப் பிடித்து நெறிப்பது போல இருக்கும். அதை கண்டோ, கேட்டோ தளராமல் உறுதியுடன் இருந்து நம் உறுதியைக் குலைக்கும் மனக் கவலையை விட வேண்டும்.
என் பேரில் உன் பளுவை சுமத்தினால் அதை நான் நிச்சயம் தாங்குவேன் என உறுதியளித்துள்ளார். நான் இருக்க பயம் எதற்கு? என்றவர் அவர். அவரை நம்புகிறவன், அவர் வார்த்தையின் மீது நம்பிக்கை வைத்து, தன் கவலைகளை விட்டு விட வேண்டும். சாயி மீது பாரத்தை ஏற்றியாகிவிட்டது. அவர் பார்த்துக் கொள்வார்.ஒருவேளை பார்க்காமல் போனாலும் நான் கவலைப்படமாட்டேன். என்னைப் பற்றி கவலைப்பட வேண்டியது அவர், நானல்ல! என்ற உண்மையை உணர வேண்டும். ஸ்ரீ ஷிர்டி சாய்பாபா.