
அனைத்து சாய் அன்பர்களுக்கும் மற்றும் ஆன்மிக அன்பர்களுக்கும், ஷிர்டி சாய்பாபா-வின் பேச்சு சூத்திரங்களை போன்றது; அர்த்தமோ மிகவும் கம்பிரமானது; வெகு ஆழமான வியாபகமுள்ளது; இருப்பினும் பேச்சு சுருக்கமானது, அவரது திரு வாயின் முலம் உதிர்ந்த உபதேசங்களை, தினமும் பாபாவின் ஒரு செய்தி-யை இந்த வலைத்தளத்தில் தமிழில் வெளியிடப்படும். சாயி அன்பர்கள் கிழே தங்களது இ-மெயில் முகவரியை பதிவு செய்யலாம். ஓம் சாய் ராம்.
Thursday, May 31, 2012
Wednesday, May 30, 2012
அழுவீர்கள்..
ஒருவரை நான் உங்கள் முன் வைத்திருப்பதும், அவர்களை செயல்படவைப்பதும் ஏதோ ஒரு காரணத்திற்காக என்பதை அறிந்துகொள்ளுங்கள். காரண காரியங்கள் இல்லாமல் விளைவுகள் இல்லை.
"என் மீது நம்பிக்கை வை. அனைத்தையும் அறிந்தவன் நான், அனைத்தையும் செய்பவன் நான், செயலும் நானே! விளைவுகளும் நானே!" என் அனுமதி இல்லாமல் ஒரு இலை கூட அசையாது என்கிற போது, எதற்காக நீங்கள் தேவையில்லாமல் வருத்தப்படவேண்டும்? நீங்களே, உங்களை விரோதியாகிக் கொள்வதற்காகவா உங்களை படைத்து, காத்து, உங்களைத் தேடி நான் வந்தேன்?
நீங்கள் தான் செயல்படுகிறீர்கள் நான் செயல்படாதவன் என்று நினைக்கவே நினைக்காதீர்கள். மனதார யாரையும் சபிக்காதீர்கள்! யாரைப் பற்றியும் குறையாய் சொல்லாதீர்கள்! அப்போது நான் கொடுக்கும் ஆசீர்வாதங்களை முழுமையாக அனுபவிப்பீர்கள்.
அன்றைக்கும் அழுவீர்கள்... பாபா உன்னை காண முடியவில்லையே என்றல்ல... பாபா, நான் கேட்டதையெல்லாம் உடனுக்குடனேயே தந்துவிடுகிறாயே... என்ற மகிழ்ச்சியில்.. -ஸ்ரீ சாயி-யின் குரல்
http://www.shirdisaibabasayings.com
Tuesday, May 29, 2012
Monday, May 28, 2012
Sunday, May 27, 2012
பாபா தமிழ் பாடல்கள்
பாபா தமிழ் பாடல்கள்: எழுத்து, குரல் பாபா வசந்த் நடராஜன்:
மேலும் பாடலகளுக்கு: http://www.shirdisaibabasayings.com
http://www.shirdisaibabasayings.com
என் பெயரை உச்சரித்து வா
அறியாமை(வெகுளி) உள்ளவர்களை நான் அதிகம் நேசிக்கிறேன். மேதையைத் தள்ளி பேதையிடம் என் ஞானத்தை வெளிப்படுத்துகிறேன். குழந்தைகளின் வார்த்தைகளால் உலகத்தோடு பேசுகிறேன்.
இதையெல்லாம் புரிந்துகொண்டு, எழுந்து தைரியமாகப் போ! எதையும் தாங்கிப் பார் வாழ்ந்துவிடலாம். இந்த சாயி உன் பின்னாலும், உனக்கு முன்னாலும், உன்னை பக்கவாட்டுகளிலும் சூழ்ந்துகொண்டு உடன் வருகிறான் என்பதை நினைவில் வைத்துக்கொண்டு என் பெயரை உச்சரித்து வா! - ஸ்ரீ சாயி-யின் குரல்.
http://www.shirdisaibabasayings.comSaturday, May 26, 2012
Friday, May 25, 2012
Thursday, May 24, 2012
எனது விருப்பம்
என் அன்புக் குழந்தையே! ருணானுபந்தம் உன்னை என்னிடம் கொண்டு வந்து சேர்த்தது முதல், என் மீது நீ எவ்வளவு பிரியமாய் இருக்கிறாய் என்பதை நினைத்து வியந்து நிற்கிறேன்.
பிறரைவிட எனது குழந்தையாகிய நீ மிகவும் வித்தியாசப்படுகிறாய் என்று பிறர் உன்னைப் பாராட்டும் வகையில் இருக்கும் உனது நடவடிக்கைகளால் நான் மகிழ்ச்சியும், பூரிப்பும் அடைகிறேன். பிறர் மீது நீ காட்டும் அன்பு, உனது பரோபகார சிந்தனை, நடவடிக்கைகள், பக்தி எல்லாவற்றினாலும் என் பெயரின் பெருமையை நீ உயர்த்தியிருக்கிறாய்.இதற்காக நான் என்ன கைமாறு செய்ய முடியும் என தவிக்கிறேன்.
இவ்வளவு சிறப்பாக செயல்பட்டாலும் உன்னிடம் சிறுசிறு குறைகளை காணும்போது துக்கமாகவும், தலை குனிந்தும் நிற்கிறேன்.அவற்றை நீ கைவிட வேண்டும் என்பதே எனது விருப்பம். -ஸ்ரீ சாயி-யின் குரல்.
Wednesday, May 23, 2012
Tuesday, May 22, 2012
Monday, May 21, 2012
மாயையிடம் சவுக்கடி
"நீங்கள் எங்கிருந்தாலும் சரி, என்ன செய்தாலும் சரி, இதை நன்கு ஞாபகம் வைத்துக்கொள்ளுங்கள். நீங்கள் என்ன செய்துகொண்டிருக்கிறீர்கள் என்பது எனக்கு நிரந்தரமாக, விவரமாகத் தெரியும்.
நீங்கள் இவ்வாறென நிதர்சனமாக உணரும் நான், எல்லோருக்கும் மிக அருகில் இருப்பவன்; ஒவ்வொருவருடைய இதயத்திலும் உறைபவன்;எங்கும் செல்பவன்; எல்லோருக்கும் கடவுள்.
நான் இவ்வுலகத்திற்கும் அதனுள் இருக்கும் அனைத்து உயிர்களுக்கும் தாய்; முக்குணங்கள் சந்திக்கும் இடமும் நானே; இந்திரியங்களைத் தூண்டிவிடுபவனும் நானே; நானே இப் பிரபஞ்சத்தைப் (உலகத்தை) படைப்பவனும், காப்பவனும், அழிப்பவனுமாம்.
எவன் தன் கவனத்தை என்மீது திருப்புகிறானோ, அவன் எந்த சங்கடமும் படமாட்டான். ஆனால், என்னை மறந்துவிடுபவன் மாயையிடம் இரக்கமின்றி சவுக்கடிபடுவான்".- ஸ்ரீ ஷிர்டி சாய்பாபா, ஸ்ரீ சாயி சத்ச்சரித்ரா அத்தியாயம் - 3
Sunday, May 20, 2012
குழந்தை வரம்
சோலாபூரிலிருந்து ஸாகாராம் என்பவர் குழந்தை வரம் கேட்டு பாபாவை தரிசிக்க ஷிர்டி வந்தார். திருமணமாகி 27 வருடங்களுக்கு குழந்தை இல்லை. அவரை சுற்றி எப்போதும் பக்தர்கள் சூழ்ந்திருக்கிறார்களே, நான் என்னுடைய இதயத்தில் இருப்பதை எப்படி தெரிவிப்பேன், என்று ஏக்கம் கொண்டு 2 மாதம் ஷீரடியில் தங்கினார்.
இந்த விவரத்தை அவர் மாதவராவ் தேஷ்பாண்டேயிடம் தெரிவித்தார். அதற்கு மாதவராவ், "இதோ பாருங்கள், இந்த மசூதி காலியாக இருப்பதென்பதே கிடையாது. பாபாவை தரிசனம் செய்ய யாராவது ஒருவர் வந்துகொண்டே இருப்பார்." இருப்பினும், பாபா உணவு உண்டபிறகு இளைப்பாறும் தருணம் நான் சைகை செய்கிறேன் நீங்கள் வந்து பாபாவிடம் தேங்காய், ஊதுவத்தி சமர்ப்பித்து உங்கள் மனதில் இருப்பதை தெரிவியுங்கள் என்று கேட்டுக்கொண்டார்.
பாபா வாயைக் கழுவிக்கொண்டபின் மாதவராவ் கைகளை துணியால் துடைத்துக் கொண்டுடிருந்தார். பாபா ஆனந்தமான மனநிலையில் இருந்தார். மாதவராவ் மீது அன்பு பொங்க அவருடைய கன்னத்தை கிள்ளினார் பாபா.
மாதவராவ் பொய்க்கோபம் கொண்டு, "இது என்ன லட்சணமான செயலா?" என்று கேலியாகக் கேட்டார்.
மாதவராவ்,"எங்களுக்கு கன்னத்தை அழுத்திக் கிள்ளும் குறும்புத்தனமான கடவுள் வேண்டா!, பசிக்கும்போதெல்லாம் புதிது புதிதாக இனிப்புகள் வழங்கும் கடவுளே எங்களுக்கு தேவை. உங்களிடமிருந்து கெளரவமோ, சுவர்க்கலோகத்தில் புஷ்பகவிமானமோ எங்களுக்குத் தேவை இல்லை. உங்களுடைய பாதத்தில் விசுவாசம் என்னும் ஒரே வரத்தை கொடுங்கள், அது போதும்".
பாபா சொன்னார், "இதற்காகவேதான் நான் இங்கு வந்திருக்கிறேன். உங்களிடமுள்ள அளவுகடந்த அன்பிற்காக உங்களனைவருக்கும் உணவூட்டவே வந்திருக்கிறேன். என்று கூறி வெளியிருந்த அந்தப் பெண்மணியை அழைத்து தேங்காய் குடுகுடு வென்று உருளுவதைப் போல் 12 மாதங்களில் உங்களுக்கு பிள்ளை பிறக்கும் என்று கூறி தேங்காய் உடைத்து ஒரு மூடியை அப்பெண்மணிக்கும் மற்றொன்றை கணவருக்கும் அளித்து ஆசிவழங்கினார். "
பன்னிரண்டு மாதங்களில் பாபா தம்முடைய வாக்கை நிறைவேற்றினார். பாபா ஆசிர்வதித்த 3 மாதத்தில் அப்பெண்மணி கருத்தரித்து, ஒரு மகன் பிறந்தான்.
Saturday, May 19, 2012
Friday, May 18, 2012
நினைப்பது நடக்கும்
என் பக்தனோ, பக்தையோ எங்கிருந்தாலும், என்ன செய்தாலும் நான் அறிவேன். இதை அவர்கள் புரிந்துகொண்டு தர்மத்தின் வழியில் நடக்கவேண்டும். தர்மத்தின் வழி என்பது நேர்மையான வழி. அது உள்ளும், புறமும் வெவ்வேறாகச் செயல்படாது. என்ன நினைக்கிறோமோ அதையே சொல்லும், அதையே செய்யும்.இதை பழக்கப் படுத்திக்கொண்டே வந்தால் நினைப்பது நடக்கும். ஸ்ரீ சாயி தரிசனம்.
Thursday, May 17, 2012
மேன்மையை நாடுபவர்
நம் மேன்மையை நாடுபவர் பாபா மாத்திரமே. ஆகையால் பாபாவிடம் வினயம், நம்பிக்கை, பொறுமை, சகித்துக் கொள்ளுதல் முதலானவற்றைக் கொண்டு தெரியாத விஷயத்தை மிக்க வினயத்துடன் தெரிந்து கொள்ள முயற்சி செய்ய வேண்டும். பாபாவின் ஒவ்வொரு வார்த்தையையும், சாதாரணமாகச் சொல்லும் விஷயங்களையும் (சத்ச்சரித்ரா) மிக்க அக்கறையுடன் கேட்டு, படித்து அதனுடைய உட்கருத்தை மூட்டை கட்டிக் கொள்ளவேண்டும். ஸ்ரீ சத்குரு வாணி
Wednesday, May 16, 2012
கைது வாரண்ட்
திரு. ஸ்ரீ கணேஷ் கபர்தே (ஜி.எஸ்.கபர்ததே) இவர் சுதந்திர போராட்ட வீரர் திரு.பாலகங்காதர திலகரின் புகழ்பெற்ற உதவியாளராக இருந்தவர்.
இவரின் ஷிர்டி விஜயத்தின் போது பாபாவிடம் தாம் திரும்ப செல்ல அனுமதி கேட்டபோது,
பாபா கபர்தே விடம் கூறியது , "கவர்னர் ஈட்டியுடன் வந்ததாகவும் தம்மிடம் உள்ள சூலத்தால் சண்டையிட்டு அவரை விரட்டி விட்டதாகவும் முடிவாக கவர்னரை சமாதானப்படுத்தி அவர் அகன்று செல்வதற்கு இணங்க வைத்ததாக கூறினார்"மேலும் 2 மாதங்கள் ஷீரடியில் தங்க வேண்டும் என்று கூறி அனுமதி மறுத்துவிட்டார்.
அதே நாளில் அவர் இல்லத்தில் கபர்தே விடுதலை கிளர்ச்சி நடவடிக்கைக்கு கவர்னர் கைது வாரண்ட் பிறப்பித்ததாகவும் தெரியவந்தது.
எங்கும் வியாபித்திருக்கும் பாபாவின் பார்வையில் "கவர்னரின் ஈட்டி" என்பது "கைது வாரண்ட்" என்றும் "தீரிசூலம்" என்பது பக்தர்களை காக்கும் பாபாவின் எங்கும் நிறைதன்மை என்பதை தெளிவாக உரைக்கிறது. - ஷிர்டி டைரி 29.12.1911
Tuesday, May 15, 2012
Monday, May 14, 2012
குழந்தையின் தெளிவான பதில்
தாதாகேல்கரின் சகோதரி மகன் பாபு என்பவர். சாயி மகாராஜ் அவனிடம் மிகவும் அன்புடன் இருந்தார். அவன் இறந்த பின்பும் பாபா இன்றளவும் அவனை நினைவில் கொள்கிறார்.
பம்பாயில் வழக்கறிஞர் தொழில் செய்யும் திரு.மோரேஷ்வர் விஸ்வநாத் பிரதான் என்பவர் சாயி மஹராஜைத் தரிசிக்க வந்தார். அவள் மனைவியை கண்டவுடன் பாபா அவள்தான் பாபுவின் தாயார் என்று கூறினார். பின்னால் அவள் கருவுற்றாள். பம்பாயில் அவள் பிரசவித்த அதே நாளில் பாபா தமக்கு வலி ஏற்ப்பட்டுள்ளதாகவும் இரட்டையர்கள் பிறப்பார்கள் என்றும் அவர்களுள் ஒருவர் இறந்துவிடுவார் என்றும் கூறினார். இம்மாதிரியாகவே நடைபெற்றது.
திருமதி பிரதான் தமது இளம் புதல்வனுடன் ஷிர்டி வந்தபோது பாபா அவனைத் தமது மடியின் மீது எடுத்து வைத்துக்கொண்டு "நீ இங்கு வந்துவிடுவாயா?" என்று கேட்டார். இரண்டு மாத குழந்தை தெளிவாக "ஆம்" என்று பதில் கூறியது. 07-12-1911, ஷிர்டி டைரி.
Sunday, May 13, 2012
பரீசையிலும் வெற்றி
ஸபட்ணேகர் என்ற பெயர் கொண்ட வக்கீலுக்கும், சேவடே என்ற சட்டப்பயிற்சி (படிப்பில் சற்று மந்தமான) மாணவருக்கும் பரஸ்பரம் கருத்துப் பரிமாற்றம் நடந்தது, ஆண்டு 1903;
சேவடே, "பிரசித்தி பெற்ற அகமத்நகர் ஜில்லாவில் ஷிர்டி என்னும் கிராமத்தில் மசூதியில் ஒரு பக்கிர் வாழ்ந்து வருகிறார். அவர் ஒரு புகழ் பெற்ற சத்புருஷர். அவரிடம் எனக்குப் பூரணமான விசுவாசம் இருக்கிறது. அவர் சொன்னபடிதான் எல்லாம் நடக்கும். அவர் சொல்லும் வார்த்தைகள்தாம் நடந்தேறும். நடக்காமல் தடுக்க எந்த சக்தியாலும் யுகமுடிவுவரை முயன்றாலும் இயலாது.
இது அவர் எனக்களித்த வாக்குறுதி, எனக்கு அவரிடம் முழு நம்பிக்கை உண்டு. அவருடைய வார்த்தைகள் என்றும் பொய்யாக. இதை நான் உறுதியாக முடிவுகட்டிவிட்டேன். நான் அதிசயம் ஏதுமின்றி இந்தப் பரீட்சை மட்டுமின்றி, இதற்கடுத்த பரீசையிலும் வெற்றி பெறப்போகிறேன்."
சிலகாலம் கடந்த பிறகு, சேவடே கூறியது அனுபவபூர்வமாக உண்மையாகியது.சேவடே இரண்டு பரீசைகளிலும் வெற்றி பெற்றார்.ஸபட்ணேகர் ஆச்சர்யத்தில் மூழ்கினார். ஸ்ரீ சத்ச்சரித்ரா அத்தியாயம் 48.
Saturday, May 12, 2012
நீங்களே என் குறிக்கோள்
நீங்கள் சுயநினைவின்றி உலக சுகங்கள், தேகபந்தம், சம்சார சாகரத்தில் அனைத்தையும் மறந்து உலவுகிறீர்கள். இந்தப் பிறவி கடலை கடப்பதற்கு நான் தோணியாய் இருக்கிறேன். அந்த தோணியை நடத்துபவனும் நானே. சுக்கானி படகை நடத்துபவனிடம் இருப்பது போல் கர்ம சூத்திரம் என் கையிலேயே இருக்கிறது. வேலைகள் எதுவானாலும் எனக்கு அர்ப்பணமாக செய்யுங்கள். நான் உங்கள் நலன் பேணுபவன், காப்பாற்றுபவன். நீங்களே என் குறிக்கோள். ஸ்ரீ ஷிர்டி சாய்பாபா
Friday, May 11, 2012
பிளேக் கட்டி
பாபாவின் வியத்தகு லீலை; அம்ரோதியைச் சேர்ந்த திரு. தாதாசாஹேப் கபர்தேயின் மனைவி ஷீரடியில் தன் இளம் புதல்வனுடன் சில நாட்கள் தங்கியிருந்தாள். அப்போது அவள் புதல்வனுக்கு அதிக காய்ச்சல் வந்து, அது நெறிகட்டி பிளேக்காகப் பெரியதானது. தன் இளம் மகன் பிளேக்கால் பீடிக்கப்பட்டிருப்பதை அவள் பாபாவிடம் தெரிவித்தாள்.
பாபா அவளிடம் அன்பாகவும், மிருதுவாகவும், "வானம் மேகங்களால் சூழப்பட்டிருக்கிறது. அவைகள் உருகி ஓடிவிடும், எல்லாம் எளிதாகவும் தூயதாகவும் ஆகிவிடும்" என்று கூறினார். இவ்வாறு கூறிக்கொண்டே தமது கப்னி உடையை இடுப்பு வரை தூக்கி அங்கு இருந்த அனைவருக்கும், நன்றாக முட்டை அளவிற்கு தோன்றியிருந்த பிளேக் கட்டிகளை காண்பித்து. "பாருங்கள், எனது பக்தர்களுக்காக நான் எங்ஙனம் கஷ்டப் படவேண்டியிருக்கிறது. அவர்களது கஷ்டங்களெல்லாம் எனதேயாகும்" என்றார். - ஷிர்டி டயரி.
Thursday, May 10, 2012
கவசம் போல் காப்பேன்
இந்த மாயா உலகத்தில் என் இருப்பை அறிந்து கொள்ள முடியாமல் இருக்கிறீர்கள். மாயை எந்த வடிவத்தில் இருக்கும் என்ற சந்தேகம் உங்களுக்கு வரலாம். மாயை உண்மையில் உன் வடிவிலேயே இருக்கிறது. ஆகையால் இந்த உடம்பை நம்பாதே, இந்திரியங்களை நம்பாதே, இந்திரியங்களால் உண்டாகும் சுகத்தை விரும்பாதே. அப்படிப்பட்ட நன்மையளிக்காத கர்மங்களை மேற் கொள்ளும் முன்பு என்னை நினைத்திடு. நான் உங்களுக்கு கவசம் போல் இருந்து காப்பேன். ஸ்ரீ சத்குரு வாணி.
Wednesday, May 9, 2012
Tuesday, May 8, 2012
கர்மாக்களின் வடிவங்களே
முதல் கவளத்திலேயே ஈ விழுந்தது போல, சாதனையைத் துவங்கிய உடனே ஏதேதோ தடங்கல்கள், வேண்டாத எண்ணங்கள், வெறுப்புணர்வு போன்றவை ஆரம்பமாகின்றன. அவைகள் கர்மாக்களின் வடிவங்களே. அதற்காக உங்கள் பாதையை மாற்றிக்கொள்ளவேண்டிய அவசியம் இல்லை. அவற்றின் வழியில் அவைகளை வரவிடு. உங்கள் சித்தத்தை என் பாதங்களின் மேல் ஸ்திரமாக வைத்துவிடு. சபல சித்தனாக இராதே. உங்களுக்கு சந்தேகமற்ற விசுவாசம் என் மேல் இருந்தால் உங்கள் சாதனைகளில் உங்களை வெற்றி பெறச்செய்கிறேன். உங்களுக்கு அந்த சக்தியை கொடுக்கிறேன்.உங்கள் குறிக்கோளை அடையச் செய்யும் பொறுப்பு என்னுடையதாக இருக்கும். எப்படிப்பட்ட உதவி வேண்டுமானாலும் நான் உங்களுக்குச் செய்கிறேன். உங்கள் லட்சியம் நானாக இருக்கட்டும். - ஸ்ரீ சத்குரு வாணி.
Monday, May 7, 2012
Sunday, May 6, 2012
ஸ்ரீ சத்வன மஞ்சரி
எந்த ப்ரம்மத்தைப் பற்றி வேதங்களில் கூட வர்ணிக்கப்படவில்லையோ அத்தகைய பிரம்மத்தை உலகத்தில் ஸகுணமாகச் (எளிய முறையில்) செய்து வெட்கப்படவைத்தார்கள் மகான்கள் (பாபா).
ஏழு சாண் நீளமுள்ள குறுகிய மரப்பலகையை நீங்கள் படுத்துக்கொள்ளும் கட்டிலாக்கி, உங்கள் யோக சாமர்த்தியத்தின் சக்தியை பக்தர்களுக்கு காட்டினீர்கள்.
அனேக பெண்மணிகளின் மலட்டுத்தன்மையை நீக்கியருளினீர்கள், எத்தனையோ வியாதிகளை உதியின் மூலம் குணப்படுத்தினீர்கள்.
இவ்வுலக சம்பந்தமான துன்பங்களை நீக்குவது உமக்கு ஒரு பொருட்டே அன்று. யானை ஒன்று எறும்பை ஒரு சுமையாக எவ்வாறு கருதும்? இப்போது, குருநாதா இந்த எளியவர்களின் பால் கருணை காட்டுவீராக. நாங்கள் உமது பாதங்களை அண்டியுள்ளோம். எங்களை திருப்பி அனுப்பி விடாதீர்கள். - தாஸ்கணு மகாராஜ், 1918, செப்டம்பர் 9 ஸ்ரீ சாயி நாத சத்வன மஞ்சரி.
Saturday, May 5, 2012
அஹங்காரம்
மானிடர்கள் தூய்மையுடனும், நிர்மலமாகவும் பிறக்கின்றனர். தீயவர்களின் நட்பினாலோ, சுபாவ சித்தத்தின் பாவனையாலோ, வாழ்க்கை முறையின் காரணமாகவோ, அல்லது மற்ற கேடு விளைவிக்கும் காரணத்தினாலோ அஹம் (அஹங்காரம்) என்ற கிரகணத்தால் பீடிக்கப்படுகின்றனர்.அஹம் மனதில் தோன்றிய மறு நிமிடமே நாசமடைதல் ஆரம்பமாகிறது.
"நான் மற்ற எல்லோரையும் விட கீழ்மையானவன். என் சக்தி கட்டுக்குள் அடங்கியதாகும், நான் தெரிந்து கொள்ளவேண்டியது அளவற்றதாகவுள்ளது" என்று யார் எண்ணுகிறார்களோ அவர்களுக்கு அஹம் (அஹங்காரம்) மிகுந்த தொலைவிலேயே இருக்கும்." ஸ்ரீ சத்குரு வாணி.
Friday, May 4, 2012
Thursday, May 3, 2012
பொறுப்புகளை நாமே ஏற்க வேண்டும்
அல்லா உனக்கு தாராளமாக அளிப்பார். எல்லாவித நன்மைகளையும் செய்வார். உறுதியான நம்பிக்கையும், பக்தியும் பெறும்போது ஒரு பக்தனின் விருப்பங்கள் விரைவில் நிறைவேறுகின்றன. பாபாவின் மீது எந்த பக்தனுக்கு முழு பக்தி ஏற்படுகிறதோ அவனது கேடுகளும், அபாயங்களும் துடைக்கப்படுகின்றன. பிறருக்கு ஏதாவது செய்ய வேண்டுமென நினைத்தால், அதன் சுமைகளையும் பொறுப்புகளையும் நாமே ஏற்க வேண்டும். ஸ்ரீ சாயி சத்ச்சரித்ரா.
Wednesday, May 2, 2012
அகக்கண்ணிற்கு தெரிவதில்லை
வேதம் படித்தாலும் பேதம் காணும் உலகில் நீ கீதம் பாடி, சாதம்போட்டு, பாதமிரண்டை பற்றும் படி செய்கிறாய். அடி உதவுவது போல் அண்ணன் தம்பி கூட உதவமாட்டார்கள். உண்மைதான் பாபா, உன் அடி (திருவடி) பற்றியவர்களை ஒருபோதும் மறக்கமாட்டாய். வாழ்வில் இன்னல் பல வந்தாலும் பக்தனின் குரல் கேட்டு மின்னல் நேரத்தில் களைந்திடுவாய். கூவி அழைத்தால் ஆட்களை ஏவி அழைத்து குறைதனைத் தீர்ப்பாய். கண்கள் அருகே இமையிருந்தாலும் கணங்கள் இமையைப் பார்ப்பதில்லை. சாயி நம் அருகே இருந்தாலும் நம் அகக்கண்ணிற்கு தெரிவதில்லை.
http://www.shirdisaibabasayings.com/
http://www.shirdisaibabasayings.com/
Tuesday, May 1, 2012
Subscribe to:
Posts (Atom)
ஸாயீ அனைத்து உயிர்களுக்குள்ளும் வாசம் செய்கிறார்
"ஸாயீ ஓரிடத்தில் மட்டும் வசிப்பவர் அல்லர் ; அவர் அனைத்து உயிர்களுக்குள்ளும் வாசம் செய்கிறார் ; பிரம்மதேவரிலிருந்து, ஈ, எறும்ப...

