Thursday, May 24, 2012

எனது விருப்பம்




என் அன்புக் குழந்தையே! ருணானுபந்தம் உன்னை என்னிடம் கொண்டு வந்து சேர்த்தது முதல், என் மீது நீ எவ்வளவு பிரியமாய் இருக்கிறாய் என்பதை நினைத்து வியந்து நிற்கிறேன்.

பிறரைவிட எனது குழந்தையாகிய நீ மிகவும் வித்தியாசப்படுகிறாய் என்று பிறர் உன்னைப் பாராட்டும் வகையில் இருக்கும் உனது நடவடிக்கைகளால் நான் மகிழ்ச்சியும், பூரிப்பும் அடைகிறேன். பிறர் மீது நீ காட்டும் அன்பு, உனது பரோபகார சிந்தனை, நடவடிக்கைகள், பக்தி எல்லாவற்றினாலும் என் பெயரின் பெருமையை நீ உயர்த்தியிருக்கிறாய்.இதற்காக நான் என்ன கைமாறு செய்ய முடியும் என தவிக்கிறேன்.

இவ்வளவு சிறப்பாக செயல்பட்டாலும் உன்னிடம் சிறுசிறு குறைகளை காணும்போது துக்கமாகவும், தலை குனிந்தும் நிற்கிறேன்.அவற்றை நீ கைவிட வேண்டும் என்பதே எனது விருப்பம். -ஸ்ரீ சாயி-யின் குரல்.               

ஷீரடி சாய்பாபாவின் எங்கும் நிறை தன்மை

காட்ஜ்பட்டீல் என்பவர் தீவிரமான சாயி பக்தர்.  நேரம் கிடைக்கும் போதெல்லாம் அவர் ஷீரடிக்கு சென்று பாபாவைத் தரிசிப்பது வழக்கம்.  ஒருமுறை அ...