
அனைத்து சாய் அன்பர்களுக்கும் மற்றும் ஆன்மிக அன்பர்களுக்கும், ஷிர்டி சாய்பாபா-வின் பேச்சு சூத்திரங்களை போன்றது; அர்த்தமோ மிகவும் கம்பிரமானது; வெகு ஆழமான வியாபகமுள்ளது; இருப்பினும் பேச்சு சுருக்கமானது, அவரது திரு வாயின் முலம் உதிர்ந்த உபதேசங்களை, தினமும் பாபாவின் ஒரு செய்தி-யை இந்த வலைத்தளத்தில் தமிழில் வெளியிடப்படும். சாயி அன்பர்கள் கிழே தங்களது இ-மெயில் முகவரியை பதிவு செய்யலாம். ஓம் சாய் ராம்.
Saturday, June 30, 2012
நான் துணையாக இருப்பேன்
சதா என்னை நினை.நான் நடத்துகிறேன் என திடமாக நம்பு.எனக்கு நானாகவே செய்கிறேன் என்ற பாவத்தை வரவிடாதே.நான் துணையாக இருப்பேன்.நீ நடக்கும் பாதையில் முட்கள் இருந்தால் நான் முன்பாகவே களைந்து விடுகிறேன்.நான் உன்னுடனேயே வந்து கொண்டிருப்பதை நீ மறந்தால் நான் என்ன செய்ய முடியும்?
உன் முன்னாலும் பின்னாலும் நான் நிழலைப் போல் இருக்கிறேன்.-ஷீரடி சாய்பாபா.
Friday, June 29, 2012
நான் உன்னைக் காப்பாற்றுகிறேன்
என் திறமையை நீ தெரிந்து கொள்ளாமலிருக்கிறாய்.
புற உலகை நம்பி என்னை உதாசீனபடுத்துகிறாய்.அப்படியிருக்கையில் என் உதவி உனக்கு எப்படி கிடைக்கும்? நான் இருக்கிறேன் என்ற விஷயத்தை நீ மறந்துவிடாதே,நீ இருப்பதையும் நான் மறக்க மாட்டேன்.நம்முடைய இருவரின் அனுபந்தத்திலேயே நான் இருக்கிறேன்.அதை தெரிந்துகொள் போதும்.நான் உன்னைக் காப்பாற்றுகிறேன்-ஷீரடி சாய்பாபா.
புற உலகை நம்பி என்னை உதாசீனபடுத்துகிறாய்.அப்படியிருக்கையில் என் உதவி உனக்கு எப்படி கிடைக்கும்? நான் இருக்கிறேன் என்ற விஷயத்தை நீ மறந்துவிடாதே,நீ இருப்பதையும் நான் மறக்க மாட்டேன்.நம்முடைய இருவரின் அனுபந்தத்திலேயே நான் இருக்கிறேன்.அதை தெரிந்துகொள் போதும்.நான் உன்னைக் காப்பாற்றுகிறேன்-ஷீரடி சாய்பாபா.
Thursday, June 28, 2012
நாமஜெபம்
நீ என்னை மிகவும் சிரத்தையோடு பார்த்துக் கொண்டிருக்கும் வரையில் நான் உன்னை இருமடங்கு
சிரத்தையுடன் பார்த்துக் கொண்டிருப்பேன்.சாதாரணமாக என்னை ஸ்மரித்தாலும் நான் கவனத்துடன் கேட்பேன்.நான் இருக்கிறேன் என்பதை ஏன் அறியமுடியாமல் இருக்கிறாய்?நிரந்தரமாக செய்யப்படும் என் நாமஜெபம் உங்களை என்னிடம் சேர்க்கிறது. -ஷீரடி சாய்பாபா.
சிரத்தையுடன் பார்த்துக் கொண்டிருப்பேன்.சாதாரணமாக என்னை ஸ்மரித்தாலும் நான் கவனத்துடன் கேட்பேன்.நான் இருக்கிறேன் என்பதை ஏன் அறியமுடியாமல் இருக்கிறாய்?நிரந்தரமாக செய்யப்படும் என் நாமஜெபம் உங்களை என்னிடம் சேர்க்கிறது. -ஷீரடி சாய்பாபா.
http://www.shirdisaibabasayings.com
Wednesday, June 27, 2012
Tuesday, June 26, 2012
பரிகாரம்
உன் பிரச்சனை எதுவானாலும் அதற்குப் பரிகாரம் என்னிடமுண்டு.பரிகாரம் என்னிடமிருக்கையில்,நீ எங்கோ ஓடி கொண்டிருந்தால்,நான் என்ன செய்ய இயலும்?என்னைப் பரிபூரணமாக நம்பு,உன் உடல்,மனம்,
செல்வத்தை என் பாதத்தில் வை.உன்னை விட்டு நான் எங்கே செல்வேன்?என் இருப்பிடம் உன் இதயமே.உன் இருதயமே என் கோவில்.-சாய் சத்குருவாணி.
செல்வத்தை என் பாதத்தில் வை.உன்னை விட்டு நான் எங்கே செல்வேன்?என் இருப்பிடம் உன் இதயமே.உன் இருதயமே என் கோவில்.-சாய் சத்குருவாணி.
http://www.shirdisaibabasayings.com
Monday, June 25, 2012
Sunday, June 24, 2012
Saturday, June 23, 2012
Friday, June 22, 2012
Thursday, June 21, 2012
Wednesday, June 20, 2012
Tuesday, June 19, 2012
கூட்டு பிராத்தனை
ஒரு வேண்டுகோள்,
ஜூன் 17 அன்று ஷிர்டி பேருந்து விபத்தில் காலஞ்சென்ற அனைத்து சாயி அன்பர்களின் ஆத்மா சாந்தியடைய மற்றும் இது போல் மேலும் விபத்து நிகழாமல் இருக்க அனைவரும் பாபாவை மனதார தயவுகூர்ந்து 1 நிமிடம் பிராத்தனை செய்வோம்.
ஓம் சாயி ராம்.
http://www.shirdisaibabasayings.com
ஜூன் 17 அன்று ஷிர்டி பேருந்து விபத்தில் காலஞ்சென்ற அனைத்து சாயி அன்பர்களின் ஆத்மா சாந்தியடைய மற்றும் இது போல் மேலும் விபத்து நிகழாமல் இருக்க அனைவரும் பாபாவை மனதார தயவுகூர்ந்து 1 நிமிடம் பிராத்தனை செய்வோம்.
ஓம் சாயி ராம்.
http://www.shirdisaibabasayings.com
அவசரக்குடுக்கை
சில சமயங்களில் புரிந்துகொள்ளவே முடியாதவாறு இருந்தார் சாயி பாபா, கப்னிகள் (உடைகள்) தைப்பதற்காக ஒரு வியாபாரி துணி கொண்டு வருவார். கடைவீதியில் சாமான்களை வாங்குவதில் அனுபவம் மிக்க ஒருவரைப்போல் பேரம் பேசி துணி விலையை கஜம் எட்டணா அல்லது ஐந்து அணாவாகக் குறைத்து 40 கஜம் துணியை வாங்குவார். இதைப் பார்த்துக் கொண்டிருக்கும் ஒரு அசட்டு மனிதர் பாபா கஞ்சன், பேராசை பிடித்தவர் அல்லது செல்வத்தின் மீது பற்று கொண்டவர் என்ற முடிவுக்கு வரக்கூடும். சிறிது நேரம் பொறுத்து அந்த வியாபாரிக்கு பணம் கொடுப்பார் சில சமயங்களில் நிர்ணயிக்கப்பட்ட விலையைப் போல் நான்கு மடங்கு பணமும் கொடுத்து விடுவார்.
இதைப் பார்த்துக்கொண்டிருக்கும் அவசரக்குடுக்கை ஒரு தீர்மானத்துக்கு வரக்கூடும். அதாவது பாபா பித்து பிடித்தவர் அல்லது மூளைக் கோளாறு உள்ளவர் அல்லது அவசியமில்லாமல் தகுதியற்ற இடத்தில் தாராளத்தை காண்பிக்கும் அளவுக்கு பகட்டானவர் என்று. இந்த இரண்டு அவசர முடிவுகளுமே உண்மைக்கு மிகவும் அப்பாற்பட்டவை. தம்முடைய நடத்தையின் உள்நோக்கம் யாருக்கு புரியவேண்டும் என பாபாவின் சங்கல்பமோ, அவரைத் தவிர மற்ற எல்லோருக்கும் பாபா நடந்து கொள்வதின் பின்னணி வியப்பளிப்பதாகவே இருக்கும். - சாயி பாபாவின் பக்தர் அனுபவங்கள், பூஜ்யஸ்ரீ நரசிம்ம சுவாமிஜி.
http://www.shirdisaibabasayings.com
Monday, June 18, 2012
Sunday, June 17, 2012
உடனே அற்புதம்
சாயி பாபா கோவில்களில் மட்டும் வசிப்பவர் அல்லர். தம்மை உண்மையாக நம்பி தன்னிடம் அடைக்கலம் புகும் பக்தரின் உள்ளத்திலும் வாழ்பவர். தான் ஒருவரின் உள்ளத்தில் இருக்கும்போது, அந்த பக்தரின் வாழ்வை மாற்றும் விதத்தில் ஆலோசனைகள் வழங்குவது, அனைத்திலும் நல்லதையே பெற்றுத்தருவது போன்றவற்றை செய்கிறார் பாபா.
சில சமயம் பல்வேறு சூழல்களால் பிரச்சினைகளில் சிக்கிக்கொள்ளும் பக்தர்களை யார் மூலமாவது தன்னிடம் வருமாறு செய்து அவருக்குத் தீர்வு தருகிறார். இதனால் பல பக்தர்கள் சாயி பாபா உடனே அற்புதம் செய்துவிடுவார் என நினைக்கிறார்கள். ஸ்ரீ சாயி-யின் குரல்.
மேலும் ஒரு பாடல் பதிவேற்றம் "எல்லாமே நீதான் அய்யா எங்களோட சாயி பாபா.." http://youtu.be/lcUu3Su_4C4
http://www.shirdisaibabasayings.com
Saturday, June 16, 2012
தேநீர்

ஷீரடியில் செய்வதாக வேண்டிக்கொண்ட நேர்த்திக்கடன் நிறைவேறும்வரை, சர்க்கரை இருக்கும் எந்தப் பண்டமும் சோல்கருக்கு விலக்காகிவிட்டது. அவர் தேநீரை கூட சர்கரையின்றி அருந்தினார்.சோல்கரின் விசுவாசத்தை உறுதிப்படுத்துவதற்காகவும், பக்தியினுடைய முத்திரையை அவருடைய இதயத்தில் ஆழமாக பதிப்பதற்காகவும், சர்க்கரை போடப்பட்ட தேநீரை அவருக்கு அளித்து பாபா ஆசி வழங்கினார். ஸ்ரீ சாயி சத்ச்சரித்ரா.
http://www.shirdisaibabasayings.com
Friday, June 15, 2012
Thursday, June 14, 2012
2000 மைல்கள்
ரகுவீர் புரந்தரே, முதன் முதலாக 1909-ல் நான் சாயி பாபாவைப் பற்றி கேள்வியுற்று அவரை தரிசிக்க மனைவி, குழந்தை முற்றும் தாயாருடன் விஜயம் செய்தேன். பாபாவை சென்று தரிசித்தபோது,
பாபா, "ஏழு நூற்றாண்டுகளாக அவருக்கும், எனக்கும் தொடர்பு உள்ளது என அவர் என் தாயாரிடம் கூறினார், மேலும் 2000 மைல்களுக்கு அப்பால் என் பக்தன் இருப்பினும் நான் அவனை மறக்க மாட்டேன்; எப்போதும் அவனை நினைத்திருப்பேன், அவனில்லாமல் ஒரு துளியும் உண்ண மாட்டேன்" என்றார். ஸ்ரீ சாயிபாபாவின் பக்தர்கள் அனுபவங்கள், - பூஜ்யஸ்ரீ நரசிம்ம சுவாமிஜி.
http://www.shirdisaibabasayings.com
Wednesday, June 13, 2012
Tuesday, June 12, 2012
Monday, June 11, 2012
நடிக்காதே
எண்ணங்களை ஒழுங்கு படுத்தி வா. செயல்கள் ஒழுங்காகும். எதற்காகவும், எந்த நிலையிலும் நடிக்காதே. உன்னால் ஒரு துரும்புக்கும் துரோகம் நேரிடக் கூடாது. எதற்கும் கவலை கொள்ளாதே. மானுட மேன்மைக்கான உன் கடமையிலிருந்து அணுஅளவும் விலகாதே.உன்னை மிகவும் பிடிக்கும். தயவு செய்து என்னிடம் நடித்துவிடாதே! . ஸ்ரீ சாயி-யின் குரல்.
http://www.shirdisaibabasayings.com
Sunday, June 10, 2012
Saturday, June 9, 2012
Friday, June 8, 2012
பிரச்சினை
நாம் அடையவேண்டிய இலக்கை, நமது பிரச்சினையை கைக்கு எட்டும் தூரத்தில் வைத்துவிட்டு, அதை முடிக்கிறேன் என தள்ளிப் போட்டுக்கொண்டே செல்வார் பாபா. அதன் தன்மையை அறிந்து உணர்ந்து, அதை பழக்கப்படுத்திக் கொள்ளவேண்டும் என்ற பிரச்சினையை குரு அளிப்பதால்.
மனம் பக்குவப்பட, பக்குவப்பட, தலை கீழாக இருப்பது கடினமாக இல்லாமல் அதுவே இன்பமாக மாறிவிடும், அதன் பிறகு நமது தேவைகள் அனைத்தும் பாபா ஏற்றுக்கொண்டு விடுவார். அப்போது பாபா நமக்கு எப்படி இருப்பார் தெரியுமா?
தாய்ப்பறவை தனது குஞ்சைப் பேணுதல் போன்று நம்மை அன்புடன் கவனிப்பார். அங்கே நாம் பெற்றோரை மறப்போம். பாசத்தை துறப்போம். எளிதாக உலக பந்தத்திலிருந்து விடுவிக்கப்படுவோம். குருவையே நினைத்து, அவரையே உற்றுநோக்கிக்கொண்டிருக்க வேண்டும் என நினைப்போம். அவரது ரூபம் நமது கண்மணியில் பதிக்கப்படாவிட்டால், அதைவிட குருடாயிருப்பதே நலம் என நினைக்க ஆரம்பிப்போம். தாய், தந்தை, குரு, வீடு, சுகம், சொத்து என அனைத்துமாக அவரே இருப்பார். நமது ஒரே லட்சியமாக அவர் இருக்கும் போது அங்கே பிரச்சினை என்ற பேச்சுக்கே இடம் கிடையாது.- ஸ்ரீ சாயி-யின் குரல்.
http://www.shirdisaibabasayings.com
Thursday, June 7, 2012
Wednesday, June 6, 2012
சரணடைதல்
மனிதனாகப் பிறந்தால் இன்பமும், துன்பமும் வரத்தான் செய்யும், வந்தவை போகத்தான் செய்யும். எந்த இன்பத்தையும், துன்பத்தையும் நீயாக உருவாக்கவில்லையோ அதற்காக உன்னை வருத்திக் கொள்ளவேண்டாம். இதற்கெல்லாம் காரண கர்த்தாவான பாபா வசம் அவற்றை விட்டு விட்டு, "நீ சும்மா இரு.." என்று சொல்வதைத்தான் உனக்கு பரிபாஷையாக சரணடை என்கிறேன். சும்மா இரு என்றால் மனதில் கவலையை வைத்துக்கொண்டு உட்கார் என்று அர்த்தமில்லை. மனதை அடக்கி அவன் பால் செலுத்தி அமைதியாக இரு எனபது பொருள். ஸ்ரீ சாயி தரிசனம்.
http://www.shirdisaibabasayings.com
Tuesday, June 5, 2012
Monday, June 4, 2012
Sunday, June 3, 2012
Saturday, June 2, 2012
இசை அதை வாசிப்பவனையே சார்ந்தது
நம்பிக்கையோடு முயற்சி செய். எதற்காக முயற்சி செய்கிறாயோ அதற்காக பொறுமையாகக் காத்திரு. உன்னை யார் கைவிட்டாலும் நான் கைவிட மாட்டேன். நேர்மையோடு நீ செய்யும் எல்லா காரியத்தையும் நான் முடித்துத் தருவேன்.
இதைத்தான் தபோல்கர், நான் சாயி சரிதம் எழுத பேனாவை எடுத்தபோது, பாபாவே அதைச் செய்கிறார். நான் எழுத முடியாத நிலையில் இருந்தேன். ஆனாலும் பாபாவின் அருள் ஊமையை பேச வைக்கிறது . முடவனை மலை ஏற வைக்கிறது. புல்லாங்குழலிருந்து வரும் இசை அதை வாசிப்பவனையே சார்ந்தது. - ஸ்ரீ சாய் தரிசனம்
http://www.shirdisaibabasayings.com
Friday, June 1, 2012
Subscribe to:
Posts (Atom)
குருசரணம்
"இடையறாத குருநினைவே நமக்கு இகவுலக க்ஷேமமும் பரவுலக க்ஷேமமும். குருசரணங்களில் பணிவதே செய்யவேண்டிய செயல்கள் அனைத்தும்; அடையவேண்டிய பலன்கள...

