
அனைத்து சாய் அன்பர்களுக்கும் மற்றும் ஆன்மிக அன்பர்களுக்கும், ஷிர்டி சாய்பாபா-வின் பேச்சு சூத்திரங்களை போன்றது; அர்த்தமோ மிகவும் கம்பிரமானது; வெகு ஆழமான வியாபகமுள்ளது; இருப்பினும் பேச்சு சுருக்கமானது, அவரது திரு வாயின் முலம் உதிர்ந்த உபதேசங்களை, தினமும் பாபாவின் ஒரு செய்தி-யை இந்த வலைத்தளத்தில் தமிழில் வெளியிடப்படும். சாயி அன்பர்கள் கிழே தங்களது இ-மெயில் முகவரியை பதிவு செய்யலாம். ஓம் சாய் ராம்.
Tuesday, July 31, 2012
Monday, July 30, 2012
பாபா உங்களை காப்பார்
சுகமோ துக்கமோ பாபாவும் நம்மோடு சேர்ந்து அதை அனுபவிக்கிறார்.நாம் அழும்போது அவரும் அழுகிறார்,நாம் சிரிக்கும்போது அவரும் சிரிக்கிறார்.நமது ஒவ்வொரு நிகழ்ச்சியிலும் அவரது பங்களிப்பு இருக்கிறது...இதை அவர்தானே உறுதியாகக் கூறியிருக்கிறார்.அவர் மீது எல்லாவற்றுக்கும் நம்பிக்கை வையுங்கள்.பாபா உங்களை காப்பார் -சாயி தரிசனம்.
Sunday, July 29, 2012
Saturday, July 28, 2012
Friday, July 27, 2012
நானே என்று அறிந்துகொள்
நான் எப்போதும் என்னை வெளிபடுத்துகிறேன்,யாரிடம் நீ மனம் விட்டு உன் குறைகளைப் பகிர்ந்து கொள்கிறாயோ அங்கிருந்தே நிவர்த்திக்கான வழிகளை நேர் செய்கிறேன்.யாரை தேடிப் போகிறாயோ அவராகவே நானிருந்து உன்னை உபசரிப்பேன்.யாரைப் பார்த்ததும் உன் இதயம் இளகுகிறதோ அவரது வாயிலாகவே நன்மை செய்கிறேன்.யார் வாயின் வழியாகவாவது ஆறுதல் சொன்னால் அதுவும் நானே என்றறி.சோதனையின் போது உன்னோடு சேர்ந்து அழுதால் அதுவும் நானே என்று அறிந்துகொள்.-ஷீரடிசாய்பாபா[சாயிதரிசனம்]
Thursday, July 26, 2012
சாயி சாயி
"சாயி சாயி"என்று எப்போதும் கூறிக் கொண்டிருப்பீர்களானால் நான் உங்களை
ஏழு கடலுக்கு அப்பால் எடுத்துச் செல்வேன்.இம்மொழிகளை நம்புங்கள்.நீங்கள் நிச்சயம் நன்மையடைவீர்கள்.வழிபாட்டின் உபசாரங்கள் எட்டோ பதினாறோ எனக்கு தேவையில்லை.எங்கு முழுமையான பக்தி இருக்கிறதோ அங்கு நான் அமர்கிறேன்.-ஸ்ரீ சாயி சத்சரித்திரம் [அத்தியாயம்13]
ஏழு கடலுக்கு அப்பால் எடுத்துச் செல்வேன்.இம்மொழிகளை நம்புங்கள்.நீங்கள் நிச்சயம் நன்மையடைவீர்கள்.வழிபாட்டின் உபசாரங்கள் எட்டோ பதினாறோ எனக்கு தேவையில்லை.எங்கு முழுமையான பக்தி இருக்கிறதோ அங்கு நான் அமர்கிறேன்.-ஸ்ரீ சாயி சத்சரித்திரம் [அத்தியாயம்13]
Wednesday, July 25, 2012
Tuesday, July 24, 2012
பயப்படாதிருப்பாய்
சோதனைக் காலம் வரும்போது நீ பயப்படாதே,கலங்காதே.நான் உன் தந்தை.உன் கூடவே இருக்கிறேன்.தந்தை தன் பிள்ளைகளை கண்டித்து நடத்துவதைப் போல இறைவனான நானும் நான் நேசிக்கிறவர்களைக் கடிந்து கொண்டு நடத்துகிறேன்.இதை புரிந்து கொண்டு நடக்கும்போது நான் உன்னை பொறுப்பு எடுத்துகொள்வேன்.எதற்கும் நீ பயப்படாதிருப்பாய்.-சாயி தரிசனம்.
Monday, July 23, 2012
Sunday, July 22, 2012
Saturday, July 21, 2012
Friday, July 20, 2012
Thursday, July 19, 2012
பாபாவால் தேர்வு செய்யப்பட்டவர்கள்
கஷ்டம் வந்துவிட்டது,நீங்கள் தோல்வியடைந்து கொண்டிருக்கிறீர்கள்,வழி தெரியாமல் தவிக்கிறீர்கள்,பிரச்சினையை எதிர்நோக்கி இருக்கிறீர்கள்,நெருங்கியவர்களால் புறக்கணிக்கப் படுகிறீர்கள் என்றால் சந்தேகமே வேண்டாம்,நீங்கள் பாபாவால் தேர்வு செய்யப்பட்டவர்கள் என்பது நூற்றுக்கு நூறு உண்மை.உங்களை முன்னேற்ற சாயி முடிவு செய்துவிட்டார் என்று பொருள் .-சாயி தரிசனம்
என் அற்புதங்கள்
என் அற்புதங்கள் கட்டுக் கதைகள் அல்ல,நிதர்சனமானவை.அவற்றை நீ அனுபவிக்க வேண்டும் என்றல்லவா உன் காலில் நூலைக் கட்டி என்னிடம் இழுத்துக் கொண்டேன்.என்னிடம் நீ இருக்கும்போது உன் சுயநலத்தை பற்றியே சிந்திப்பானேன்???உனது பிரச்சினை என்னவாக இருந்தாலும் சரி,அவற்றை நான் முற்றிலுமாகத் தீர்த்து வைப்பேன் -ஷீரடிசாய்பாபா[சாயியின் குரல்]
Wednesday, July 18, 2012
அற்புதங்களை காண்பீர்கள்
நான் நுழைவதற்கு எந்த சுவரோ,மலையோ தடையாக இருக்காது.ஆனால் உங்கள் மனதில் நம்பிக்கையின்மை,என் மீது முழுமையான விசுவாசமின்மை என்ற தடைகள் இருக்கின்றனவே...அவற்றைத் தாண்டி என்னால் வர முடியவில்லை.அவற்றை முதலில் விலக்குங்கள்.பிறகு நான் செய்யும் அற்புதங்களை கண்குளிர காண்பீர்கள்.-ஷீரடிசாய்பாபா[ஸ்ரீ சாயியின் குரல்]
Tuesday, July 17, 2012
Monday, July 16, 2012
Sunday, July 15, 2012
Saturday, July 14, 2012
Friday, July 13, 2012
என் மார்கம்
மிக்க மனகலக்கதுடன் எதிர்ப்பார்க்கக் கூடிய விஷயம் நமக்கு நன்மை செய்வதாக இருக்க வேண்டு.நீங்கள் மிகவும் ஏங்கி தவித்தும் கிடிக்காதது ஏதாகிலும் இருந்தால்,அது என் சங்கல்பம் அற்றதாகவே இருக்க முடியும்.என் ஏக்கம் என்ன என்பதை நீ கிரகிக்க முடிந்தால்,என் மார்கத்திற்கு நீங்களாகவே வருவீர்கள்.என் மார்கத்தில் கிடைக்கும் சாந்தி வேறு எங்கும் கிடைக்காது.-ஷீரடி சாய்பாபா[சத்குருவாணி]
Thursday, July 12, 2012
Wednesday, July 11, 2012
Tuesday, July 10, 2012
Monday, July 9, 2012
Sunday, July 8, 2012
Saturday, July 7, 2012
நான் சொல்வதை கேள்
நான் சொல்வதை கேள் .உன் தேகம் சம்பந்தமான வேலைகளை பௌதிக உலகிலிருந்து ஒதுங்கி விடும்படி நான் கூறவில்லை.உன் கடமைகளான தர்மத்தை நீ செய்.உன் கரங்களால் வேலை செய்.உன் வாயினால் பேசு,கண்களால் பார்,அவ்விதமாக உன் தேவைகளைப் பூர்த்தி செய்துக் கொள்.மனதை மட்டும் என்னிடம் லயமாக்கு .உன் சிரமத்திற்கு அதிகமாகவே நூறு மடங்கு நான் கொடுக்கிறேன்.ஷீரடி சாய்பாபா [சத்குருவாணி]
Friday, July 6, 2012
Thursday, July 5, 2012
எனது இருப்பிடம்
உன் இதயம் எனக்காக எங்கு ஏங்குகிறதோ அங்கு நான் இருக்கிறேன்.உன் பரிசுத்தமான இதயம் கொள்ளும் ஏக்கமே எனக்கு செய்யும் பூஜையாகும்.என் பக்தன் வசிக்குமிடமே எனது இருப்பிடம்.என்னிடம் மிகுந்த அன்பு கொண்டோர் இருப்பிடத்திலேயே மசூதி,துவாரகமாயி ,துணி ,சாவடி ஆகியவை இருக்கும் .அப்படிபட்டவர்களுடைய இல்லமே என்னுடைய சமாதிமந்திரம்.-ஷீரடி சாய்பாபா .[சத்குருவாணி]]
Wednesday, July 4, 2012
Tuesday, July 3, 2012
Monday, July 2, 2012
Sunday, July 1, 2012
கவலைகளை விடு
கவலைகளை விடுத்து என்னிடம் உட்கார்.என்னையே தியானி.என் மீதே மனத்தை வை.நடக்கப்போவதை ஒருமித்த மனத்துடன் சாந்தத்துடன் பார்த்துகொண்டிரு,வானம் உன்மீது விழுந்தாலும் சலிப்படையாதே.உன்னைக் காப்பாற்ற நான் இருக்கும்போது இந்தக் கவலை எதற்கு?கலங்குவதால் என்னிடமிருந்து தூரமாகிறாய்.என்மேல் நம்பிக்கை இருந்தால்,என்னால் உனக்கு முடியாத காரியம் ஏதாகிலும் உண்டா?-ஷீரடி சாய்பாபா.
Subscribe to:
Posts (Atom)
Fake Photographs displayed in Web Media and Social Networks as original Photographs of Shri Sai Baba
Fake Photographs displayed in Web Media and Social Networks as original Photographs of Shri Sai Baba http://www.shirdisaibabasayings.com ...

