Friday, August 31, 2012

கௌரவத்தை விட்டுவிடுங்கள்

உங்களுக்கு ஏதாவது வேண்டுமானால் கடவுளிடம் இரந்து கேளுங்கள்.இவ்வுலக கௌரவத்தை விட்டுவிடுங்கள்.கடவுளின் அருளையும் ஆசியையும் பெற முயலுங்கள்.அவரின் சந்நிதானத்தில் கெளரவம் அடையுங்கள்.உலக கௌரவங்களால் வழி தவறி விடாதிர்கள்.-ஷீரடி சாய்பாபா[ஸ்ரீ சாய் சத்சரித்திரம்]

Thursday, August 30, 2012

மூலமாதா நானே

நானே அனைவருடைய அந்தரங்க ஆட்சியாளனாக இருதயத்தில் அமர்ந்து இருக்கிறேன்.இந்த உலகின் கண் அசையும் அசைவற்ற சர்வ ஜீவராசிகளையும் நானே அரைவணைக்கிறேன்.இப்பிரபஞ்சமென்னும் தோற்றத்தை நானே கட்டுபடுத்துபவன்,ஆட்டுவிப்பவன்.எல்லா வர்க்கங்களின் மூலமாதா நானே.நானே எல்லா உணர்ச்சிகளையும் உந்துபவன்,படைப்பவன்,காப்பவன்,அழிப்பவனுமாம்.-ஷீரடி சாய்பாபா[ஸ்ரீ சாய் சத் சரித்திரம்]

Wednesday, August 29, 2012

தைரியத்தோடு இருங்கள்

என்னையே புகலிடமாக கொண்ட பக்தனின் அடிமையாக நானிருக்கிறேன்.நீங்கள் என்னால் தெரிந்து கொள்ளப்பட்டவர்கள்,தேர்வு செய்யப்பட்டவர்கள் என்பதை உணர்ந்து தைரியத்தோடு இருங்கள்..காரியம் சித்திக்கும்.-சாயி தரிசனம்.

Tuesday, August 28, 2012

சாய்பாபாவின் தனித்தன்மைச் சிறப்பு

சாய்பாபாவின் உயர்வையும்,தனித்தன்மைச் சிறப்பையும்,போதுமான அளவிற்கு யாரும் விளக்க இயலாது.அவரின் பாதாரவிந்தங்களில் ஆனந்தத்தை நுகர்பவன் அவருடையதேயான ஆத்மாவிலேயே ஸ்தாபிக்கபடுகிறான்-ஸ்ரீ சாய் சத்சரித்திரம்.

Monday, August 27, 2012

நான் கவனிக்கிறேன்

என்னை மட்டுமே சிந்தித்து என் பால் லயமாகி விட்டால் போதும்,உனக்கு என்ன வேண்டும் என்பதை நான் யோசித்து யோசித்து உனக்குச் செய்கிறேன்.நீ எதை செய்தாலும் அதை எனக்கு செய்வதாக நினைத்துகொண்டு செய்..உனக்கு தேவையானதை நான் கவனிக்கிறேன்.-சாயி தரிசனம்.

Sunday, August 26, 2012

குருவின் பாதங்கள்

மூச்சையடக்கும் முயற்சி இங்கே தேவையில்லை.குருவின் பாதங்களில் நிரந்தரமாக மனத்தை இருத்தியவரின் இச்சைகளை இறைவன் பூர்த்தி செய்கிறான்-ஸ்ரீ சாய் சத்சரித்திரம்]

Friday, August 24, 2012

பேரின்பத்தை அடைவீர்கள்

எல்லோரிடமும் பணிவாகவும் அடக்கமாகவும் இருந்து,உள்ளத்தாலும் உயிராலும் என்னை வணங்க வேண்டும்.இதை செய்வீர்களானால் எல்லையற்ற பேரின்பத்தை அடைவீர்கள்.-ஷீரடி சாய்பாபா[ஸ்ரீ சாய் சத் சரித்திரம்]

Thursday, August 23, 2012

திருப்தியுடன் இருக்க வேண்டும்

கடவுள் தன்னை வைத்திருக்கும் நிலையிலேயே திருப்தியுடன் இருக்க வேண்டும்.ஆண்டவன் கொடுப்பது ஒருபோதும் இழக்கப்படுவத்தில்லை.மனிதன் கொடுப்பது ஒருபோதும் நீடித்து நிலைப்பதில்லை.-ஷீரடி சாய்பாபா[ஸ்ரீ சாயியின் திருவிளையாடல்கள்]

Wednesday, August 22, 2012

நானும் நீயும் வேறல்ல

நானும் நீயும் வேறல்ல.நான் உனக்குள் இருக்கிறேன்.நீ எனக்குள் இருக்கிறாய்.தொடர்ந்து இவ்விதமாகவே நினைத்துவா.அப்போது நீ அதை உணர்வாய்.-ஷீரடி சாய்பாபா[ஸ்ரீ சாயியின் திருவிளையாடல்கள்]

Tuesday, August 21, 2012

ஆண்டவனின் அருள்

ஆண்டவனின் அருள் ஊமையை ப் பேசவைக்கிறது.முடவனை மலையை கடக்கச் செய்கிறது.அவரின் விருப்பபடி காரியங்களைச் செயற்படுத்தும் தந்திரத்தை அவர் ஒருவரே அறிவார்-ஸ்ரீ சாய் சத்சரித்ரா.

Monday, August 20, 2012

அடிமை

எனக்கு அர்ப்பணிப்பதற்கு முன்,எவர் ஒருவர் ஒருபோதும் உணவை ருசிக்க மாட்டாரோ,அவருக்கு நான் அடிமை.-ஷீரடி சாய்பாபா[ஸ்ரீ சாயியின் திருவிளையாடல்கள்]

Sunday, August 19, 2012

உங்களை நோக்குவேன்

எங்கும் சிதறாத கவனத்துடன் என்னை நோக்குவீர்களாயின்,நானும் அப்படியே உங்களை நோக்குவேன்.நான்கு வித சாதனை முறைகளும் ஆறு வித சாஸ்திரங்களும் அவசியமில்லை.-ஷீரடி சாய்பாபா[ஸ்ரீ சாயியின் திருவிளையாடல்கள்]

Saturday, August 18, 2012

அமைதியாக அமர்ந்திரு

அமைதியாக அமர்ந்திரு.நான் உனக்கு தேவையானதை செய்வேன்.நான் உன்னைக் குறிக்கோளை அடையச் செய்வேன்.-ஷீரடி சாய்பாபா[ஸ்ரீ சாயியின் திருவிளையாடல்கள்]

Friday, August 17, 2012

வாதாடுதல் நன்றன்று


போராடி வாதாடுதல் நன்றன்று.எனவே விவாதிக்க வேண்டாம்.
மற்றவர்களுடன் போட்டி போட வேண்டாம்.எப்போதும் உங்களது அக்கறையினையும் நலத்தினையுமே கருத்தில் கொள்வீர்களாக.கடவுள் உங்களை காப்பாற்றுவார்-ஷீரடி சாய்பாபா[ஸ்ரீ சாய் சத்சரித்திரம்]

Thursday, August 16, 2012

குருவின் பார்வை

குருவின் பார்வையே ஒரு சிஷ்யனுக்கு உணவும் நீரும் ஆகிறது.என்னை உங்கள் எண்ணங்கள்,நோக்கங்கள் ஆகியவற்றின் ஒரே பொருளாக ஆக்கிக் கொள்வீர்களேயானால்,நீங்கள் மேலான லட்சியத்தை அடைவீர்கள்.-ஷீரடி சாய்பாபா[ஸ்ரீ சாயியின் திருவிளையாடல்கள்]

Wednesday, August 15, 2012

கர்மவினைகள்

உனது கர்மத்தின் பலனை நீ அனுபவித்தாக வேண்டும்.ஆனால் உனக்கு என் மீது நம்பிக்கை இருந்தால்,எனது ஸாந்நித்யத்தின் முன்னர் நெருப்பில் வைக்கோல் எரிவதை போன்று உனது கர்மவினைகள் எரிக்கப்படும்.-ஷீரடி சாய்பாபா[ஸ்ரீ சாயி சத் சரித்திரம்]

Tuesday, August 14, 2012

பூரண சரணாகதி

எவன் என்னை பூரண சரணாகதி அடைகிறானோ,எவன் என்னை விஸ்வாசத்துடன் வணங்குகிறானோ,எவன் என்னை நினைவில் இருத்தி நிரந்தரமாக தியானம் புரிகிறானோ,அவனுடைய எல்லா கஷ்டங்களில் இருந்தும் விடுவிப்பது எனது சிறப்பியல்பாகும்.-ஷீரடி சாய்பாபா[ஸ்ரீ சாய் சத் சரித்திரம்]

Monday, August 13, 2012

சாயி சாயி

பாபா தமது பக்தர்களுக்காக சுவாச நியமத்தையோ,அல்லது எத்தகைய வழிபாட்டு முறைகளையோ வகுத்துரைக்கவில்லை.அல்லது எவ்வித மந்திரத்தையும் எவர் காதிலும் அவர் ஓதவில்லை.எல்லா புத்திசாலித் தனத்தையும் விட்டொழித்துவிட்டு எப்போது "சாயி சாயி" என்று ஞாபகமூட்டிக் கொள்ளும்படி கூறினார்.-ஸ்ரீ சாய் சத் சரித்திரம்.

Sunday, August 12, 2012


இந்த பந்தம் நிரந்தரமாக இருக்க வேண்டுமானால் வேறுமார்க்கம் இல்லை, நீங்கள் என்னை பரிபுரணமாக நம்புங்கள். ஒளிவு, மறைவு விளையாட்டுகள் என்னிடம் வேண்டாம். யாருடைய இதயக் கதவுகள் எனக்காக திருந்துள்ளனவோ, அவர்களுடைய இதயத்தில் நானே நிறைந்திருப்பேன். ஷிர்டி சாய்பாபா 

http://www.shirdisaibabasayings.com

Saturday, August 11, 2012

நான் கடன்பட்டதாக உணர்கிறேன்

"என்னை எவன் மிகவும் விரும்புகிறானோ,அவன் எப்போதும் என்னைக் காண்கிறான்.என்னைவிட்டு நீங்கிவிடில் இவ்வுலகமே அவனுக்கு சூனியமாய் தோன்றுகிறது.அவன் எனது கதைகளைத் தவிர பிறவற்றைக் கூறுவதில்லை.இடையிறாது அவன் என்னையே தியானித்து என் நாமத்தையே ஸ்மரணம் செய்கிறான்.முழுமையும் எவன் தன்னை என்னிடம் சமர்பித்து என்னையே எப்போதும் நினைவில் கொண்டு இருக்கிறானோ அவனுக்கு நான் கடன்பட்டதாக உணர்கிறேன்".-ஸ்ரீ ஷிரிடி சாய்பாபா[ஸ்ரீ சாய் சத்சரித்திரம்]

Friday, August 10, 2012

உணவு

"பசியாய் இருப்போர்க்கு உணவு அளிப்பவன் உண்மையிலேயே எனக்கு உணவை பரிமாறுகிறான் என்று நிச்சயமாக அறிந்த கொள்வாயாக.இதை ஒரு ஆதார நீதியாகக் கருது"-ஷீரடி சாய்பாபா[ஸ்ரீ சாய் சத் சரித்திரம்]

Thursday, August 9, 2012

எனக்காக ஏங்குபவன்

என்னை நினைத்து,எனக்காக ஏங்குபவனையும்,எதையும் முதலில் என்னை நினைக்காமல் உண்ணாதவன்பாலும் நான் சார்ந்து இருக்கிறேன்.இங்ஙனம் என்னிடம் வருபவன் ஆறு கடலுடன் ஒன்றாவதுபோல் என்னுடன் இரண்டறக் கலக்கிறான்.-ஷிரிடி சாய்பாபா[ஸ்ரீ சாய் சத் சரித்திரம்]

Wednesday, August 8, 2012

விரதம்

பாபா ஒருபோதும் பட்டினி இருந்ததில்லை மற்றவர்களையும் பட்டினியிருக்க அனுமதிக்கவில்லை.விரதம் இருப்பவன் மனது அமைதியாய் இருப்பது இல்லை.வயிற்றில் உணவின் ஈரம் இல்லையாயின் அவர்தம் புகழை எந்நாவுடன்  நாம் இசைக்க முடியும்?கடவுளை எந்தக் கண்களுடன் பார்க்க முடியும்?அல்லது எந்தக் காதுகளால்தான் அவர் புகழைக் கேட்க முடியும்?எனவே பசியோடிருத்தலோ மிகவும் உண்பதோ ஆகாது.-ஸ்ரீ சாய் சத்சரித்திரம்.

Tuesday, August 7, 2012

வருவது வரட்டும்,விட்டு விடாதே

"வருவது வரட்டும்,விட்டு விடாதே.எனது பாதங்களை உறுதியாக பற்றிக்கொண்டு,எப்போதும் நிதானத்துடனும்,சதாகாலமும் என்னுடன் ஒன்றியம் இருப்பாய்.உள்ளம்,உயிர் இவற்றால் என்னை நம்பு,அப்போது நீ மிகுந்த பலனை அடைவாய்"-ஷீரடி சாய்பாபா[ஸ்ரீ சத்சரித்திரம்]

Monday, August 6, 2012

துவாரகாமாயி

"நீங்கள் அமர்ந்து கொண்டிருக்கும் இதுவே நமது துவாரகாமாயி,தனது மடியில் அமரும் குழந்தைகளின்,எல்லா ஆபத்துகளையும்,கவலைகளையும்,அவள் தடுத்து விளக்குகிறாள்.இந்த மசூதிமாயி மிகவும் கருணையுள்ளவல்,அவள் எளிய பக்தர்களின் தாயாவாள்.அவர்களைப் பேராபத்துகளிலிருந்து அவள் பாதுகாக்கிறாள். ஒரு மனிதன் அவள் மடியில் ஒரே  முறை அமர்ந்தால் அவனது எல்லா கஷ்டங்களும் முடிவடைந்துவிடும்.அவளது நிழலில் இளைப்பாறுவோர் பேரானந்தம் எய்துகின்றனர்".-ஷீரடி சாய்பாபா[சாய் சத் சரித்திரம்]

Sunday, August 5, 2012

ஐயங்களும் கஷ்டங்களும்

ஐயங்களும் கஷ்டங்களும் நம்மை சற்றே அசைத்து நம்பிக்கையை உறுதிப்படுத்தவே நம்மைச் சூழ்கின்றன.நாம் வாழ்க்கையில் சோதனைக்குள்ளாக்கப்படுகிறோம்.முழுநம்பிக்கையுடன் பாபாவைப் பற்றிக்கொண்டுநமது முயற்சிகளைத் தொடர்ந்து செய்வோமானால் நமது முயற்சிகள் அனைத்தும் முடிவாக வெற்றிமுடி சூட்டபெறும்-சாய்சத்சரித்திரம் 

Saturday, August 4, 2012

சந்தோஷமாக இருப்பீர்கள்

எனது லீலைகளை உள்ளத்தில் இருத்தி கொள்வீர்களேயானால் உங்களது நிலையம் கற்கண்டைப் போலவே சுவையுள்ளதாகும்.உங்களது எல்லா விருப்பங்களும் நிறைவேற்றப்படும்.நீங்களும் சந்தோஷமாக இருப்பீர்கள்.-ஷீரடி சாய்பாபா[ஸ்ரீ சாய் சத்சரித்திரம்]

Friday, August 3, 2012

என்னை மட்டுமே நம்புங்கள்

ஜாதகம் ,கைரேகைக்காரர்களின் ஜோசியம் ஆகியோரின் முன்னோடி உரைகளைத் தூக்கியெறிந்துவிட்டு என்னை மட்டுமே நம்புங்கள்.என்னை நம்பி  என்பால் லயமாகும் மனிதனின் எல்லாக் காரியங்களையும் பொம்மளாட்டத்தைப் போன்று நான் நின்று நடத்துகிறேன்-ஷீரடி சாய்பாபா [ஸ்ரீ சாய் சத் சரித்திரம்]

Thursday, August 2, 2012

தனித்தன்மை வாய்ந்தது

எனது நிகழ்முறை மிகவும் தனித்தன்மை வாய்ந்தது.என்னையே உங்களது எண்ணங்கள்,செயல்கள் இவற்றின் ஒரே குறிக்கோளாக அமைத்துக் கொள்ளுங்கள்.சந்தேகம் ஏதுமின்றி நீங்கள் நிச்சயம் உங்கள் குறிக்கோளை எய்துவீர்கள்.என்னை உங்களது முழு இருதயத்தோடு நோக்குங்கள்.பதிலாக நானும் அங்ஙனமே தங்களை நோக்குவேன்.ஷீரடிசாய்பாபா[சாய்சத்சரித்திரம்] 

Wednesday, August 1, 2012

நன்மை அடைவீர்கள்

எனது கருவூலம் நிறைந்திருக்கிறது.எவனுக்கும் அவன் விரும்புவதை நான் அளிக்க முடியும்.ஆனால் நான் கொடுப்பதை பெற்றுக்கொள்ளும் தகுதி அவனுக்கு இருக்கிறதா என்பதை நான் கவனிக்க வேண்டும்.என்னைக் கவனத்துடன் கேட்பீர்களானால் நீங்கள் உண்மையிலேயே நன்மை அடைவீர்கள்.-ஷீரடி சாய்பாபா[சத் சரித்திரம் .அத் 16-17]

விசுவாசத்தின் ஆழத்திற்க்கேற்றவாறு பக்தனின் பக்தியை கௌரவிக்கிறார் பாபா !

பாபா,  தன் பக்தன் தன்மேல் வைக்கும் "நம்பிக்கை மற்றும் விசுவாசத்தின் ஆழத்திற்கேற்றவாறு",  அவருக்கு மிகச்சிறந்த அனுபவங்களைக் கொடுத்த...