Sunday, September 30, 2012

பயப்படத் தேவையில்லை
இரவும் பகலும் எப்போதெல்லாம் நேரம் கிடைக்கிறதோ எவன் ஒருவன் என்னை நினைத்து தியானம் செய்கிறான, அவன் இனிப்பும் சர்க்கரையும்போல,அலையும் கடலும் போல,கண்ணும் ஒளியும்போல என்னுடன் முழுமையாக இணைகிறான்.அப்படிபட்டவன் எதற்கும் பயப்படத் தேவையில்லை.-ஷீரடி சாய்பாபா[மாண்புமிகு மகான்கள்<> 

Saturday, September 29, 2012

வெற்றிசத்குருவின் பாதங்களில் நாம் அகங்காரத்தை சமர்ப்பித்தாலன்றி நமது வேலையில் நாம் வெற்றி பெறமாட்டோம். நம் அகங்காரத்தை ஒழித்தால் நமது  வெற்றி உறுதி அளிக்கப்படுகிறது. ஸ்ரீ சாயி தரிசனம்


http://www.shirdisaibabasayings.com

Friday, September 28, 2012

எனது ஸர்கார்

எந்த ஒரு மனிதன் அளிப்பதும் நெடுநாள் இருப்பதில்லை.அது முழுமையடைவதுமில்லை.ஆனால்  எனது ஸர்கார் [கடவுள்]அளிப்பதோ காலமுடிவு  பரியந்தம் நிலைத்திருக்கிறது.அவரின் வெகுமதியை வேறெந்த வெகுமதியுடனும் ஒப்பிட முடியாது.-ஷீரடி சாய்பாபா[ஸ்ரீ சாய் சத்சரித்திரம்] 

Wednesday, September 26, 2012

'தரிசனத்தின் பெருமை'

"என்ன வியத்தகு சக்தி!பாபா  ஒன்றும்  பேசவில்லை.எவ்விதக்  கேள்வி  பதிலும்  இல்லை.ஆசிர்வதிக்கவில்லை.வெறும் தரிசனம்  ஒன்றே மகிழ்ச்சிக்கு அடிகோலுகிறது.எனவே  அமைதியின்மை அவரது வெறும் தரிசனத்தாலேயே  மறைந்து  இன்பவுணர்வு  ஏற்படுகிறது.இதுவே  'தரிசனத்தின்  பெருமை' எனப்படுவது"-ஸ்ரீ சாய் சத்சரித்திரம்<>  

Tuesday, September 25, 2012

சாயி லீலை

சாயி லீலைகளின் அமிர்தத்தை  பருகுவது  அறியாமையால்  மூழ்கியுள்ள  ஜீவன்களுக்கு  முக்தி  கொடுக்கும்.இல்லறத்தார்க்கு  மனநிறைவளிக்கும்.லட்சியவாதிகளுக்குச் சாதனை  கைகூடும்.-ஸ்ரீ சாய் சத்சரித்திரம்.

Monday, September 24, 2012

கைவிடமாட்டார்

பலவீனங்களைக்  கொண்டவர்களாகவும்,எவ்வித  ஏற்றமும்  அற்ற  நாம் "பக்தி" என்றால்  என்ன என்பதை அறியோம்.ஆனால் மற்றெல்லோரும் கைவிட்ட போதிலும்  சாயி  நம்மைக் கைவிடமாட்டார் என்ற அளவு  அறிவோம்.எவர்,அவர்தம்  பாதாரவிந்தங்களில்  சரணாகதி  அடைகிறார்களோ      
அவர்களின் முன்னேற்றம்  நிச்சயமானது.-ஸ்ரீ சாய் சத்சரித்திரம்<>

Sunday, September 23, 2012

மனநிறைவு

பாபாவிடம்  செல்ல பக்தன் எவ்வளவு  அதிகம்  கவலையுள்ளவனாக  இருக்கிறானோ,எவ்வளவு  அதிகம்   பக்தியுடனும்,நம்பிக்கையுடனும்  இருக்கிறானோ,அவ்வளவு விரைவில் அவன் மனநிறைவு  அடையும்  வண்ணம் அவனது எண்ணம் நிறைவேற்றப்படும்.-ஸ்ரீ சாய் சத்சரித்திரம்<>

Saturday, September 22, 2012

பாபாவின் அருள்

பாபாவை தரிசிக்க  அவனாகவே  செல்கிறானென்று  ஒருவன் நினைத்தால்  அது வெறும்  டம்பமேயாகும்.அவரின் அருளின்றி  எவரே அணுகி  அவரைத் தரிசிக்க இயலும்?மரத்தின் இலைகூட பாபாவின்  ஆணையின்றி அசைவதில்லை.-ஸ்ரீ சாய் சத்சரித்திரம்<>

Friday, September 21, 2012

அடைக்கலம்

"இம்மசூதியை  அடைக்கலம்  புகுவோர் இந்தப் பிறவியிலும்,காலத்தின் முடிவு  வரையிலும் எதைக் குறித்தும் கஷ்டமே படமாட்டார்கள்.இப்போது கவலையற்றிருங்கள்".-ஷீரடி சாய்பாபா[ஸ்ரீ சாய் சத்சரித்திரம்] 

Thursday, September 20, 2012

தக்ஷிணை

"எவரிடமிருந்தாவது  ஒரு  ருபாய்  தக்ஷிணையாகப்  பெற்றுக்கொண்டேன்  என்றால் அவர்களுக்குப்  பத்து  மடங்காகத் திருப்பித்  தரவேண்டியிருக்கிறது.நான் ஒருபோதும் எதையும்  விலை இல்லாமல் இலவசமாகப் பெறுவது கிடையாது.சீர்தூக்கிப் பாராது  நான் யாரிடமிருந்தும்  தக்ஷிணை  பெறுவதில்லை.எதிர்காலத்தில் கணிசமான  அறுவடை செய்வதற்கே  நீங்கள்  இப்போது  கொடுப்பதன் மூலம் விதைக்கிறீர்கள்."-ஷீரடி சாய்பாபா[ஸ்ரீ சாய்  சத்சரித்திரம்]   

Wednesday, September 19, 2012

பாபா எப்போதுமே வாழ்கின்றார்

"உடல் இருந்ததனால் பாபா வாழ்ந்து கொண்டிருந்தார் .உடலை விட்டு விட்டதனால் இறந்துவிட்டாரா?இல்லை.பாபா எப்போதுமே வாழ்கின்றார்.ஏனெனில் 'பிறப்பு இறப்பு' என்ற இருமையையும் கடந்தவர் அவர்.எவனொருவன் ஒருமுறை முழுமனதுடன் அவரை நேசிக்கிறானோ  அவன்,எந்த நேரத்திலும் எந்த இடத்திலும்.அவரிடமிருந்து பதிலைப் பெறுகிறான்.நமது அருகிலேயே அவர் எப்போதும் இருக்கிறார்.எந்த ரூபத்தையும்  எடுத்துக் கொள்கிறார்.பிரியமுள்ள பக்தனிடத்துத்  தோன்றி அவனை திருப்திபடுத்துகிறார்."-ஸ்ரீ சாய் சத்சரித்திரம். 

Tuesday, September 18, 2012

யார் இந்த "நான்"

நீங்கள் தொலை தூரமோ  அல்லது  எங்கெங்கேயோ  என்னைத் தேடிக்கொண்டு  போக வேண்டாம்.உங்களது  நாமத்தையும்,ரூபத்தையும் நீக்கினால்  உங்களுள்ளும்  அதைபோன்று  அனைத்து  ஜீவராசிகளுள்ளும்  உளதாயிருக்கும்  உணர்வு  அல்லது  ஸ்தாபிக்கபெற்றிருக்கும்  உணர்வு  நிலை காணபெருகிறது.அது நானேயாகும்.இதை உணர்ந்துகொண்டு  உங்களிடத்தும்,எல்லா  ஜீவராசிகளிடத்தும்  என்னைக்  காண்பீர்களாக.இதை நீங்கள் பயிற்சிப்பீர்களானால் சர்வ  வியாபகத்தை உணர்ந்து என்னுடன்  ஒன்றாகும்  நிலையை  நீங்கள்  பெறுவீர்கள்.-ஷீரடி சாய்பாபா[ஸ்ரீ சாய் சத்சரித்திரம்]  

Monday, September 17, 2012

பாபாவின் லீலைகள்

பாபாவே  எல்லா  லீலைகளையும்  புரிந்துவிட்டு அவற்றுடன்  எவ்விதத்  தொடர்பும் இல்லாததுபோல் தோற்றமளிக்கிறார்.அவரே  செயல்களைச்  செய்கிறார்.ஆனால் செய்யாததைப்  போன்று  காட்சியளிக்கிறார்.அவரின் லீலைகளை யார்தான் விவரிக்க இயலும்?-ஸ்ரீ சாய் சத்சரித்திரம்.

Sunday, September 16, 2012

எனது அருள்

எனது அருள்  பாரபட்சமற்றது.அதை நான் எல்லோருக்கும்  சமமாகவே வழங்குகிறேன்.என்  சங்கல்பமின்றி  ஒரு  துரும்பும் அசையாது-ஷீரடி சாய்பாபா.[சாயி சுதா]

Saturday, September 15, 2012

ஆற்றலையும் அந்தஸ்தையும் அளிக்கிறார்

துவைத உணர்வின்றி வித்தியாசமின்றி  பக்தர்கள்  கீழே விழுந்து வணங்கும்போது அவர்களை  அரவணைத்து எட்டி  அடைய முடியாத பொருளாகிய  தம்மையே[பாபா]   அவர்களுக்குக்  கொடுக்கிறார்.பக்தர்களுடன்  அவர்  ஒன்றாகி  அவர்களுக்கத்  தம் ஆற்றலையும்  அந்தஸ்தையும்  அளிக்கிறார்.-ஸ்ரீ சாய் சத்சரித்திரம். 

Friday, September 14, 2012

தியாகம் செய்வேன்

எனது  மொழிகளைக்  காப்பதற்கு  நான்  எனது  உயிரையே  தியாகம்  செய்வேன்.எனது  மொழிகளுக்கு  மாறுபட்டு நான்  இருக்கவே மாட்டேன்-ஸ்ரீ ஷீரடி சாய்பாபா[ஸ்ரீ சாய் சத்சரித்திரம்]

Thursday, September 13, 2012

நல்லதிர்ஷ்டம்

வைரத்தைப்  போன்ற பாபாவைக்  குருவாக  அடைந்த  நல்லதிர்ஷ்டம்  உள்ள ஒருவர் தாழ்வுணர்ச்சியுடன் அழுவதும் ,கவலைகொள்வதும்  பரிதாபமானது.
பாபாவிடம்  உங்களுக்கு அசைவற்ற  நம்பிக்கை  இருக்குமானால்  ஏன் உங்கள்  மனம்  சலனமடைய வேண்டும்???-ஸ்ரீ  சாய்  சத்சரித்திரம் 

Wednesday, September 12, 2012

அன்பும் பாசமுமுள்ள தாயாரைப் போல

கட்புலனுக்குத்  தென்படாத  சூட்சமுமான நூலால் தாங்கள்,அருகிலும்  தொலைவிலுமுள்ள  பக்தர்களைத்  தங்கள் பாத கமலங்களுக்கு ஈர்த்து  இழுத்து  அன்பும்  பாசமுமுள்ள  தாயாரைப்  போல அரவணைக்கிறீர்கள். தாங்கள் எங்கு இருக்கிறீர்கள்  என்பதை  அடியவர்கள் அறியவில்லை  என்றாலும் தாங்கள்  அவர்களின்  அருகிலேயே இருந்து அவர்களுக்கு உதவி  புரிந்து  ஆதரிக்கிறீர்கள் என்பதைக்  கடைமுடிவாக  அவர்கள்  உணர்ந்து கொள்ளும்படி அவ்வளவு சாமர்த்தியமாக நூலை  இழுக்கிறீர்கள்.-ஸ்ரீ சாய்  சத்சரித்திரம்.

Tuesday, September 11, 2012

.இரவும் பகலும்

ஒரு அடியவரை பாபா ஏற்றுக் கொண்டால்,அவரை அவர் தொடர்கிறார்.இரவும்,பகலும்,வீட்டிலும் வெளியிலும் அவருடனேயே இருக்கிறார்.அவர் விரும்பியவாறு  எங்கு வேண்டுமானாலும் செல்லட்டும்.அறிவுக்கெட்டாத வகையில்  எதாவது  ஒரு ரூபத்தில் அவருக்கு முன்பாகவே சென்று பாபா அங்கு இருக்கிறார்.-ஸ்ரீ சாய் சத்சரித்திரம் 

Monday, September 10, 2012

சாயியின் முகம்

சாயியின் முகம் புனிதமானது.சில கணங்களுக்கு நாம் நமது பார்வையை அவர்பால் செலுத்தினாலும் நமது முந்தைய பல பிறவிகளின் துக்கங்களையளித்து நம்மீது பேரானந்தத்தை அவர் பொழிகிறார்.கருணையுடன் அவர் நம்மீது நோக்குவாராயின் நமது முன்னைய கருமவினைக் கட்டுக்களெல்லாம் அறுபட்டு நாம் மகிழ்ச்சிக்கு வழிகாட்டப்படுகிறோம்-ஸ்ரீ சாய் சத்சரித்திரம் 

Sunday, September 9, 2012

ஆர்வமும் ஏக்கமும்

எங்கே உண்மையான  ஆர்வமும் , ஏக்கமும் இருக்கின்றதோ,பாபா தம்மைத்தாமே அவ்விடத்தில் பிரதிஷ்டை செய்து கொள்கிறார்-ஸ்ரீ சாய் சத்சரித்திரம்.  

Saturday, September 8, 2012

லட்சியம்உன் லட்சியம் நானாக இருக்கட்டும். நான் உன்னுடயவனாக இருப்பேன். உன் குறிக்கோளை அடையச்செய்யும் பொறுப்பு என்னுடையதாக இருக்கும், எப்படிப்பட்ட உதவி வேண்டுமானாலும் நான் உனக்கு செய்கிறேன். - ஷிர்டி சாய்பாபா

http://www.shirdisaibabasayings.com

Friday, September 7, 2012

பரிபூரண சரணாகதி

பக்தனானவன் தன்னை சாயியிடம்  பரிபூரண சரணாகதியாக்கிவிட்டால் தன்னுடைய  தனித்தன்மையை  இழந்து  அவருடன் ஐக்கியமாகி  கடலுடன்  நதி சங்கமிப்பது  போல அவருடன் ஒன்றாகிறான்.-ஸ்ரீ சாய் சத்சரித்திரம்  

Thursday, September 6, 2012

காப்பாற்றப்படுவது உறுதி

சாய்பாபாவிடம்  ஒரு மனிதன்  தூய உள்ளத்துடன்  அல்லது அவ்விதமின்றி[கள்ள உள்ளத்துடன்]சென்று அவரின் காலைப் பிடிக்கட்டும்.முடிவாக அவன் காப்பாற்றப்படுவது  உறுதி-ஸ்ரீ சாய் சத்சரித்திரம் 

Wednesday, September 5, 2012

குறிக்கோளை எய்துவாய்

"இப்பாதங்கள் தொன்மையானவை,புனிதமானவை.இப்போது உனக்குக் கவலையில்லை.என் மீது முழு நம்பிக்கையயும் வை.நீ சீக்கிரத்தில் உனது குறிக்கோளை எய்துவாய்"-ஷீரடி சாய்பாபா[ஸ்ரீ சாய் சத்சரித்திரம்]

Tuesday, September 4, 2012

செயல்களின் கர்த்தா

செயல்களின் கர்த்தாவாக உன்னையே ஏன் நீ ஆக்கிக் கொள்கிறாய்?
நற்கருமங்களையோ அல்லது தீய செயல்களையோ செய்யும் கர்த்தாவாக உன்னை நீயே எண்ணிக்  கொள்ளும் உணர்வை அனுமதிக்காதே.
எல்லாவற்றிலும் முழுமையாக அகந்தையற்றும் அகங்காரமற்றும்  இரு -ஷீரடி சாய்பாபா[ஸ்ரீ சாய் சத்சரித்திரம்] 

Monday, September 3, 2012

கடைக்கண் பார்வை

இன்பங்களால் பாபா உயர்ந்து போகவும் இல்லை.துரதிஷ்டங்களால் அவர் தாழ்ச்சியுறவும் இல்லை.அரசனும் ஆண்டியும் அவருக்கு ஒன்றே.அவருடைய கடைக்கண் பார்வை ஒன்றே பிச்சைக்காரனையும் அரசனாக்கும் வல்லமை படைத்தது.-ஸ்ரீ சாய் சத் சரித்திரம் 

Sunday, September 2, 2012

நன்மை

யாரேனும் ஏதாவது தீமையை உங்களுக்கச் செய்வானாகில்,அதற்குப் பழிக்குப் பழி வாங்காதீர்கள்.நீங்கள் ஏதேனும் செய்ய இயலுமானால் பிறருக்குச் சிறிது நன்மைகளைச் செய்வீராக.-ஷீரடி சாய்பாபா[ஸ்ரீ சாய் சத்சரித்திரம்]

Saturday, September 1, 2012

பரப்பிரம்மம்

சாயிபாபாவின் தரிசனமே நமது யோகசாதனம்.அவரின் திருவடிகளுக்கு நறுமண எண்ணெய் தேய்ப்பதே நமது திருவேணிப் பிரயாகை நீராடல்.அவரின் ஆணையே நமக்கு வேதம்.அவர் உதியை உண்ணலே எல்லாவற்றையும் தூய்மை ஆக்கும்.நமக்கு ஆறுதல் அளித்த அவரே நமது கிருஷ்ணர்,ராமர்.அவரே நமது பரப்பிரம்மம்.-ஸ்ரீ சாய் சத்சரித்திரம்]

விசுவாசத்தின் ஆழத்திற்க்கேற்றவாறு பக்தனின் பக்தியை கௌரவிக்கிறார் பாபா !

பாபா,  தன் பக்தன் தன்மேல் வைக்கும் "நம்பிக்கை மற்றும் விசுவாசத்தின் ஆழத்திற்கேற்றவாறு",  அவருக்கு மிகச்சிறந்த அனுபவங்களைக் கொடுத்த...