Wednesday, October 31, 2012

எப்போதும் என்னை நினை

புலன் அனைத்தும்,மனமும் எப்போதும் இறைவனது வழிபாட்டிற்கே உரித்தாகப் படட்டும்.வேறு எவ்விதப் பொருள்களிலும் எவ்விதக் கவர்ச்சியும் வேண்டாம்.உடல்,செல்வம்,வீடு முதலிய வேறு எதைப்பற்றியும் மனது அலைந்து திரியாமல் எப்போதும் என்னை நினைத்துக் கொண்டிருப்பதிலேயே மனத்தை ஸ்திரபடுத்துங்கள்.அப்போது அது அமைதியாகவும்,அடக்கமாகவும்,கவலையற்றும் இருக்கும்.-ஷீரடி சாய்பாபா[ஸ்ரீ சாய் சத்சரித்திரம்]

Tuesday, October 30, 2012

கடவுளையரியும் நெறிகள்

யோகம்,தியாகம்,தவம்,ஞானம்,என்பன கடவுளையரியும் நெறிகள்.இந்த வழிகள் எதிலேனும் ஒன்றின் மூலம் நீங்கள் இதில் வெற்றி பெற இயலாவிடில்,உங்கள் பிறப்பு வீணேயாகும்.-ஷீரடி சாய்பாபா[ஸ்ரீ சாய் சத்சரித்திரம்]

குருவே ஒரே கடவுள்

நமது புலன்கள் எல்லாம் நல்லமுறையில் இருக்குந்தோறும் நிமிடத்திற்கு நிமிடம்,பாபாவை மனதில் இருத்திக் கொள்ள பழக வேண்டும்.மற்ற எல்லாத் தேவதைகளும் வெற்றுத் தோற்றமே.குருவே ஒரே கடவுள்.பாபாவின் புனிதத் திருவடிகளை நினைவு கூர்வோமானால்,அவர் மேலும் சிறப்பான நிலைக்கு நமது அதிர்ஷ்டத்தை மாற்றி விடுவார்.-ஸ்ரீ சாய் சத்சரித்திரம்.

Monday, October 29, 2012

உணவு

முதலில் பசியாய் இருப்போர்க்கு உணவு கொடுத்துப் பின் நீ உண்ணுவாயாக.இதை நன்றாக நினைவில் வைத்துக்கொள். நாய்,பூனைகள்,பன்றிகள்,ஈக்கள்,பசுக்கள் முதலியன என்னுடன் ஒன்றானவைகளாகும் .நான் அவைகளின் உருவத்தில் உலாவிக் கொண்டு இருக்கிறேன்.என்னை இவ்வனைத்துப் படைப்புயிர்களிலும் பார்க்கிறவன் எனக்கு உகந்தன்.-ஷீரடி சாய்பாபா[ஸ்ரீ சாய் சத்சரித்திரம்]

Sunday, October 28, 2012

அஞ்சாதீர்

நீர் உமது கடமையைச் செய்யும்.சிறிதளவும் அஞ்சாதீர்.என் மொழிகளில் நம்பிக்கை வையும்.என்னுடைய லீலைகளை நினைவில் கொள்.நான் உன்னுடைய ஆசைகளைப் பூர்த்தி செய்து உன்னுடைய பக்தியை அதிகப்படுத்துவேன்.-ஷீரடி சாய்பாபா[ஸ்ரீ சாய்  சத்சரித்திரம்]

Saturday, October 27, 2012

எனது சிறப்பியல்பு

தங்கள் மனதை எப்போதும் என்மீது ஸ்திரப்படுத்தியவர்களாய்  என்னையே முழு இருதயத்துடன் வழிபாடு செய்யும் அடியவர்களின் நலன்களைக் காப்பாற்றுவதை நான் எப்போதும் கவனிப்பதே எனது சிறப்பியல்பு.-ஷீரடி சாய்பாபா[ஸ்ரீ சாய் சத்சரித்திரம்]

Friday, October 26, 2012

எங்கும் இருக்கிறேன்

நான் எங்கும் இருக்கிறேன் - நீரிலும், நிலத்திலும், காய்ந்துபோன கொம்பிலும், மனிதர்களிடையேயும், வனத்திலும், இந்த தேசத்திலும், வெளிதேசங்களிலும் எங்கும் இருக்கிறேன். நான் எந்த தேசத்தின் எல்லைகளுக்கும் உட்பட்டவன் அல்லன். - ஷிர்டி சாய்பாபா  

Thursday, October 25, 2012

ஆசிர்வதிக்கிறார்

யார் அதிர்ஷ்டசாலியோ எவருடைய பாவங்கள் ஒழிந்தனவோ அவர்கள் சாய்பாபாவின்  வழிபாட்டை எய்துகிறார்கள்.தம்முன் வீழ்ந்து பணிந்து சரணாகதியடைந்த எந்த மனிதரையும் சாய்பாபா ஆசிர்வதிக்கிறார்.-ஸ்ரீ சாய் சத்சரித்திரம்.

Wednesday, October 24, 2012

அருள் செய்கிறார்

பாபா இப்போது உடல் உருவில் இல்லையாயினும்,அவர் அங்கும்,எங்குமிருந்து அவர் பூதவுடலுடன் இருந்த சமயம் எவ்வாறு பக்தர்களை நலமுடன் ஆதரித்தாரோ அவ்வாறே இப்போதும் அருள் செய்கிறார்.பாபாவைப்  போன்ற ஞானிகள் மனிதர்களைப் போன்று தோன்றினாலும்,இறப்பதே இல்லை.உண்மையில் அவர் கடவுளே ஆவார்.-ஸ்ரீ சாய் சத்சரித்திரம்.

Tuesday, October 23, 2012

அன்புடனும் பக்தியுடனும்

அன்புடனும் பக்தியுடனும் அளிக்கப்படும் எத்தகைய சிறிய பொருளையும்,பாராட்டுதல்களுடன் பாபா ஏற்றுக்கொள்வார்.ஆனால் அதுவே பெருமையுடனும்,இறுமாப்புடனும் அளிக்கப்பட்டால்,ஏற்றுக் கொள்ள மறுத்து விடுவார்.வெறும் புறச் சம்பிரதாயங்களை,அவர் பெருமளவு லட்சியம் செய்வதில்லை.அடக்க வொடுக்கத்துடனும்,பணிவான உணர்வுடனும்,ஒன்று சமர்பிக்கப்படுமானால் அதை அவர் வரவேற்று,பேரார்வத்துடனும்,மகிழ்ச்சியுடனும் ஏற்றுக் கொண்டார்.-ஸ்ரீ சாய் சத்சரித்திரம்

Monday, October 22, 2012

வியத்தகு அவதாரம்

அகங்காரத்தையும் உடல் உணர்வையும் ஒழிப்பதன் மூலம் சாய்பாபாவிடம் முழுவதும் சரணாகதியடைந்து,அவ்வாறாக அவருடன் ஒன்றி விடுபவனுக்கு,ஜாதி,தேசம் என்னும் கேள்விகள் குறித்துக் கருத்தில் கொள்வதற்கு ஏதுமில்லை.சாய்பாபாவைப் போன்ற அத்தகைய ஒருவர் ஜாதிகளுக்குள்ளேயும்,ஜந்துகளுக் குள்ளேயும் எவ்வித வேறுபாடும் காணவில்லை.பக்கிரிகளுடன் மாமிசமும் மீனும் அவர் உண்டார்.நாய்கள் அவைகளின் வாயால் அவ்வுணவைத் தீண்டியபோதும்,அவர் அருவருப்புக் காட்டவில்லை.சாய்பாபா அத்தகைய தனிச்சிறப்பு வாய்ந்த வியத்தகு அவதாரமாவர்.-ஸ்ரீ சாய் சத்சரித்திரம்.

Sunday, October 21, 2012

முழு மனதாக நம்புங்கள்

இந்த மசூதியில் அமர்ந்து கொண்டு நான் உண்மையே பேசுகிறேன்.உண்மையை தவிர வேறெதுவும் பேசவில்லை.என்னை முழு மனதாக நம்புங்கள்.எனது பெருமையை அறிபவன்,என்னையே பிரம்மா,விஷ்ணு,சிவனாக, அல்லா, இயேசு வாகவே நம்புபவன் ஆசிர்வதிக்கப் பட்டவனாகிறான்.-ஷீரடி சாய்பாபா[மாண்புமிகு மகான்கள்]

Saturday, October 20, 2012

உலகை ஆள்வேன்

நீங்கள் கலங்குவது வீண்,நான் சமாதியிலிருந்தே உலகை ஆள்வேன் என்பது உங்களுக்குத் தெரியாதா?இவ்வுலகை விட்டபிறகும் நான் சர்வ சக்தியுடன் வேலை செய்வேன்.பக்தியுடனும் அன்புடனும் என்னை நினைப்பவர்கள் பக்கத்தில் நான் காலம் காலமாக இருப்பேன்-ஷீரடி சாய்பாபா[மாண்புமிகு மகான்கள்]

Friday, October 19, 2012

மனத் தூய்மை

அஹங்காரம் முழுமையும் நிரம்பப் பெற்று புலன் உணர்வுப் பொருள்களையே  சதா சிந்தித்துக்கொண்டு இருப்பவனுக்கு எனது போதனைகள் கூடப் பயனற்றவை.மனத் தூய்மையே அறவே தேவைப்படுகிறது.-ஷீரடி சாய்பாபா[ஸ்ரீ சாய் சத்சரித்திரம்]

Thursday, October 18, 2012

மகிழ்ச்சி அடைவீர்கள்

யாரேனும் நூற்றுக் கணக்கான விஷயங்களை உங்களுக்கு எதிராகக் கூறட்டும்.ஆனால் கசப்பான எவ்விதத்திலும் அவர்களுக்கு பதில் அளிக்கும்படியான சீற்றங் கொள்ளாதீர்கள்.இவ்வாறான விஷயங்களை எப்போதும் சகித்துக் கொண்டிருப்பீர்களேயானால் நீங்கள் நிச்சயம் மகிழ்ச்சி அடைவீர்கள்.-ஷீரடி சாய்பாபா[ஸ்ரீ சாய் சத்சரித்திரம்]

Wednesday, October 17, 2012

தியானம் செய்யுங்கள்

எனது உருவமற்ற இயல்பை எப்போதும் தியானம் செய்யுங்கள்.இதைச் செய்யத் தங்களால் இயலாவிடில் இங்கே இரவும்,பகலும் காண்பதைப் போன்று,உச்சி முதல் உள்ளங்கால் வரையுள்ள எனது ரூபத்தைத் தியானம் செய்யுங்கள்.இதைத் தாங்கள் செய்து கொண்டே போகும் போது  தங்களின் எண்ணங்கள் ஒரே  இலக்கில் குவிக்கப்படும்.தியானம் செய்பவர்,தியானம்,தியானிக்கப்படும் பொருள் இவைகளிலுள்ள வேறுபாடு மறைந்துவிடும்.தியானம் புரிபவர் உச்ச உணர்ச்சித் திரளுடன் ஒன்றி,பிரம்மத்துடன் கலந்து ஐக்கியமாய் விடுவார்.-ஷீரடி சாய்பாபா[ஸ்ரீ சாய் சத்சரித்திரம்]

Tuesday, October 16, 2012

வெளிப்படையானவை

ஓர் பக்தன் எவ்வளவு தூரம் நெஞ்சுரங் கொண்டவனாகவும் தீர்மானமுள்ளவனாகவும் இருக்கிறானோ,அங்ஙனமே பாபாவின் உடனடியான பிரதிச் செயலும் இருக்கிறது.அவரது முறை திரையிடப்பட்டதோ இரகசியமானதோ அல்ல.ஆனால் முற்றிலும் வெளிப்படையானவை.-ஸ்ரீ சாய் சத்சரித்திரம். 

Monday, October 15, 2012

மனம்

புலன்கள் அவைகளுக்கிடபட்ட பணியை அல்லது கடமையைச் செய்யட்டும்.நாம் அவைகளின் வேலையில் குறுக்கிட வேண்டாம்.வீணாக கலங்கவும் வேண்டாம்.மனம் மெதுவாக படிப்படியாக அமைதிபெறும்.-ஸ்ரீ ஷீரடி சாய்பாபா[ஸ்ரீ சாய் சத்சரித்திரம்]

Sunday, October 14, 2012

பரப்பிரம்ம அவதாரம்

சாய்பாபாவின் பெருமை ஆலங்காண இயலாதது.அவ்வாறே அவர்தம் அற்புதமான லீலைகளுமாகும்.அவர்தம் வாழ்க்கையும் அங்நனமேயாகும்.ஏனெனில் அவரே பரப்பிரம்ம அவதாரம் ஆவார்.-ஸ்ரீ சாய் சத்சரித்திரம்.  

Saturday, October 13, 2012

செல்வமும், நலமும் நல்குவார்
சாயிபாபாவின் கதையைப் படித்தால் சாயி மனம் மகிழ்ந்து உங்கள் அறியாமையையும் ஏழ்மையையும் நீக்கி, உங்களுக்கு ஞானமும், செல்வமும், நலமும் நல்குவார். - மாண்புமிகு மகான்கள்  

http://www.shirdisaibabasayings.com

Friday, October 12, 2012

பதில் சொல்லும்

என்னை நோக்கி யார் அழைக்கிறார்களோ,அவர்களுடைய அபயக் குரலுக்கு என்னுடைய புழுதி கூட காற்றைவிட வேகமாக வந்து பதில் சொல்லும்.-ஷீரடி சாய்பாபா[மாண்புமிகு மகான்கள்]

Thursday, October 11, 2012

கடனைத் தீர்ப்பேன்

தன்னை என்னிடம் சமர்பித்துவிட்டு,எவன் எப்போதும் என்னையே நினைத்துக் கொண்டிருக்கிறானோ,அவனுக்கு நான் கடமைப்பட்டவன்.அவனை,அவனுக்கு உணர வைப்பேன்.அவனது கடனைத் தீர்ப்பேன்.-ஷீரடி சாய்பாபா[மாண்புமிகு மகான்கள்]

Wednesday, October 10, 2012

பக்தர்களின் அடிமை

"நான் பக்தர்களின் அடிமை.அவர்களுக்காகவே நான் இருக்கிறேன்.பக்தர் அழைக்கும்போதெல்லாம் மறு மொழி கூறுவேன்.அவர்களின் அன்புதான் எனக்கு உயிர்."-ஷீரடி சாய்பாபா[மாண்புமிகு மகான்கள்]

Tuesday, October 9, 2012

ஓடோடி வருவேன்

இன்றும் நான் உயிருடன் இருக்கிறேன் என்பதை எப்போதும் உணர்.பக்தனாகிய நீ அழைத்தால் நான் ஓடோடி வருவேன்.இது சத்தியம்.-ஷீரடி சாய்பாபா[மாண்புமிகு மகான்கள்]

Monday, October 8, 2012

என்னை நம்புங்கள்

கோபம்,பேராசை,காமம்,தவறான எண்ணம்,அகங்காரம்,பொறாமை என்கிற இந்த ஆறு எதிரிகளிடமும் நீங்கள் மிகவும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்.பேரானந்தத்தை நீங்கள் அடைய இந்த ஆறு எதிரிகளிடமும் போராடுங்கள்.நிச்சயமாக நான் அதற்க்கு உங்களுக்கு உதவுகிறேன்.என்னை நம்புங்கள்.-ஷீரடி சாய்பாபா[மாண்புமிகு மகான்கள்]

Sunday, October 7, 2012

மிகவும் சந்தோஷபடுவேன்

பசித்தவருக்கு  உணவு கொடுங்கள்.தாகத்தில் இருப்பவர்களுக்குத் தண்ணீர் கொடுங்கள்.உடையில்லாமல் இருப்பவர்களுக்கு ஆடைகளைக் கொடுங்கள்.அப்படிச் செய்தால் நான்  மிகவும் சந்தோஷபடுவேன்.-ஷீரடி சாய்பாபா[மாண்புமிகு மகான்கள்]

Saturday, October 6, 2012

ஆட்டுவிப்பவன் நானே

"நீங்கள் எங்கிருந்தாலும்,எதைச் செய்தாலும் அவை எல்லாவற்றையும் நான் அறிவேன்.உங்களை ஆட்டுவிப்பவன் நானே...எல்லாவற்றையும் படைத்துக் காப்பவனும் நானே...உலகத்தின் ஆதாரம் நானே..
எவன் என்னை மனதார நினைக்கிறானோ அவனுக்கு எப்போதும் துன்பம் நேராது"-ஷீரடி சாய்பாபா [மாண்புமிகு மகான்கள்]

Friday, October 5, 2012

என்னை நம்புங்கள்

நான்  உங்களிடத்து இல்லையென்பதாகக்  கவலை கொள்ளாதீர்கள்.ஆனால்  என்னையே எப்போதும் நினைவு  கூறுங்கள்.உள்ளம் உயிர் இவற்றால்  என்னை நம்புங்கள்.அப்போதுதான் நீங்கள் மிகுந்த பலனை அடைவீர்கள்.-ஷீரடி சாய்பாபா[ஸ்ரீ சாய் சத்சரித்திரம்]

Thursday, October 4, 2012

வருவது வரட்டும்

"வருவது வரட்டும்,விட்டு விடாதே.என்னையே  உறுதியாகப்  பற்றிக்கொண்டு
எப்போதும்  நிதானத்துடனும்,சதாகாலமும் என்னுடன்  ஒன்றியம்  இருப்பாய்"-ஷீரடி சாய்பாபா[ஸ்ரீ சாய் சத்சரித்திரம்] 

Wednesday, October 3, 2012

அடைக்கலம்

ஒரு மனிதன் கடலில் மூழ்கும்போது,எல்லா  தீர்த்தங்களிலும்  புனித  ஆறுகளிலும் நீராடிய  புண்ணியம் அவனை  வந்தெய்துகிறது.அதே  மாதிரியாக  ஒரு மனிதன் சாய்பாபாவின்  பாதங்களில் அடைக்கலம்  புகும்போது,அவன்  மூவரையும் பிரம்மா விஷ்ணு மஹாதேவரையும்,பரப்பிரம்மத்தையும்  வணங்கும் பேறு  அவனுக்கு உண்டாகிறது.-

Tuesday, October 2, 2012

ஆசிர்வதிக்கப்பட்டவன்

சாதனைகள் ஏதும்,ஆறு சாத்திரங்களில் கைதேர்ந்த அறிவு ஏதும் தேவை இல்லை.உங்களது குருவினிடத்தில்  நம்பிக்கையும் பற்றுறுதியும் கொள்ளுங்கள்.குருவே தனி ஒருவரான நடத்துனர்,இயக்குனர் என நம்புங்கள்.தனது குருவின் பெருமையை அறிபவன்,அவரையே ஹரிஹர பிரம்மமென்ற திரிமூர்த்தி அவதாரமென்று கருதுபவன்,ஆசிர்வதிக்கப்பட்டவன்-ஷீரடி சாய்பாபா[ஸ்ரீ சாய் சத்சரித்திரம்]<>

Monday, October 1, 2012

நம்பிக்கையுடன் இருங்கள்.பொறுமையுடன் இருங்கள்

"உங்களுக்குத் தாரக மந்திரம் ஒன்றைச் சொல்லித் தருகிறேன்.எதற்கும் கலங்காதீர்கள்.நம்பிக்கையுடன் இருங்கள்.பொறுமையுடன் இருங்கள்.இதுதான் அந்த மந்திரச் சொற்கள்.இதைக் கடைபிடித்து வந்தால் போதும்.இந்த உலகம் ஒரு நாள் தலைகீழாக மாறினாலும்,உலகத்தில் உள்ள மக்கள் தலைகீழாக மாறினாலும் கவலைபடாதீர்கள்.உங்களுடன் நான் எப்போதுமே இருக்கிறேன்.நல்லது மட்டுமே நடக்கும்.இதை நம்புங்கள்.-ஷீரடி சாய்பாபா[மாண்பிமிகு மகான்கள்]<>

விசுவாசத்தின் ஆழத்திற்க்கேற்றவாறு பக்தனின் பக்தியை கௌரவிக்கிறார் பாபா !

பாபா,  தன் பக்தன் தன்மேல் வைக்கும் "நம்பிக்கை மற்றும் விசுவாசத்தின் ஆழத்திற்கேற்றவாறு",  அவருக்கு மிகச்சிறந்த அனுபவங்களைக் கொடுத்த...