Monday, December 31, 2012

நல்வாழ்வு

எதெல்லாம் நடக்கவேண்டுமோ, அதெல்லாம் அதன்வழி நடக்கட்டும். ஆனால், நம்முடைய நல்வாழ்வு பாபாவை பற்றிய சிந்தனையில்தான் இருக்கவேண்டும். அப்படியிருக்க, விதியால் நிர்ணயிக்கப்பட்ட விபத்துக்களும் இன்னல் தரும் நிகழ்ச்சிகளும் விலகும்.! இளகிய மனம் படைத்த சாயி பக்தர்களின் எண்ணங்களைக் கண்டு அவர்களுடைய நம்பிக்கை (பக்தியை) பாராட்டும் வண்ணம் ஒன்றன்பின் ஒன்றாகச் சீரிய அனுபவங்களை அளிக்கிறார்.

Sunday, December 30, 2012

நீ என்னை பார்க்க முடியும்

நடந்து கொண்டிருப்பதை நடத்திவைப்பது  உன் உள்ளிருக்கும் நானே என்று நீ கண்டுகொண்டால் ஒரு  க்ஷண காலத்தில் நீ  என்னை பார்க்க முடியும்.நான் என்ற விஷயத்தை நீ மறந்த அதே வினாடியிலேயே  நானாகவே உன் முன்பாக இருப்பேன்.உன்னுடைய  ஆத்ம சொரூபமே  நான்-ஷீரடி சாய்பாபா.

Saturday, December 29, 2012

நானே அதை சுமக்கிறேன்

கர்மங்களை குறைத்துக்கொள்ள வழி, அதை தைரியமாக அனுபவிப்பதே. நீங்கள் எப்போதும் என்னை நினைத்துக் கொண்டிருந்தால் என்பால் நம்பிக்கைக் கொண்டிருந்தால். அதை அனுபவிக்கும் சக்தியை நான் கொடுக்கிறேன். அது துன்பம் என்ற எண்ணம் உங்களில் ஏற்படாமல் நான் செய்கிறேன். உன்னில் இருக்கும் நானே அதை சுமக்கிறேன். ஷிர்டி சாய்பாபா       

Friday, December 28, 2012

என்னையே சார்ந்திரு

ஏங்குதல்,போராட்டங்களை  விடுத்து என்னையே சார்ந்திரு,நான் உன்னுடனையே இருப்பேன்.நான் உன்னுடைய தாகத்தை  தீர்ப்பதற்காக வருவதற்குள் உன் மனம் சஞ்சலமடைந்து,எங்கேயோ  செல்லுகிறாய்.நான் உனக்காகவே இருக்கிறேன். பாரத்தை என்மேல் சுமத்து சாந்தி ஏற்படும்.-ஷீரடி சாய்பாபா.                     

Thursday, December 27, 2012

நீ என்னுடையவன்

நீ நடக்கும் பாதையில் முட்கள் இருந்தால் நானே முன்பாகவே களைந்து விடுகிறேன்.நான் உன்னுடனையே வந்துக்கொண்டிருப்பதை நீ மறந்தால் நான் என்ன செய்ய முடியும்?பாபா என்னுடையவர் என்று நீ நினை,நீ என்னுடையவன் என்று நான் கருதுவேன்.-ஷீரடி சாய்பாபா.

Wednesday, December 26, 2012

அஹங்காரமின்மை

அஹங்காரமின்மையே என் வடிவம்,என் தத்துவம்.என் உதவியை வேண்டுபவர்கள் அஹங்காரமற்றவர்களாக இருக்க வேண்டும்-ஷீரடி சாய்பாபா.

Tuesday, December 25, 2012

ஆற்றலையும் அந்தஸ்தையும்

மழைக்காலத்தில் கடல், ஆறுகளுடன் கலப்பதுபோல் பக்தர்களுடன் பாபா  ஒன்றாகி அவர்களுக்குத் தம் ஆற்றலையும், அந்தஸ்தையும் அளிக்கிறார்.-ஸ்ரீ சாய் சத்சரித்திரம்.

Monday, December 24, 2012

பயப்படாதே

"பயப்படாதே. நான் உன்னோடு இருக்கிறேன். எப்போது எங்கே என்னை நீ நினைத்தாலும் நான் உன்னோடு இருப்பேன். பயப்படாதே, இதை நன்றாக மனப்பாடம் செய்துகொள்" - ஸ்ரீ ஷிரிடி சாய்பாபா.    

Sunday, December 23, 2012

நான் சுமக்கிறேன்

துன்பம் வந்தபோதும் கூட என் மீது நம்பிக்கை குறைவுபடாமல் இருந்தால் அவர்களுக்கு என் உதவி கண்டிப்பாக கிடைக்கும்.உங்கள் கர்மத்தை உங்களுக்கு பதில் நான் சுமக்கிறேன்.-ஷிரிடி சாய்பாபா    

Saturday, December 22, 2012

நாமம்

நாமம் என்றால்  சொருபத்தை ஒருமித்த உச்சரிப்பின் மூலம்,உண்மையை கிரகித்தலே.என் நாமத்தை உச்சரிப்பதால் வேறு சிந்தனைகள் தோன்றாது. அனர்த்ததமான துன்பங்கள் வராது.புளியினால் பித்தளைப் பாத்திரத்தின் களிம்பு நீங்குவது போல் என் நாம ஸ்மரணயினால் மாயை நசிக்கிறது.என் சுத்த தத்துவம் என் நாம ஸ்மரணயினால் தெரிய வரும்.-ஸ்ரீ சாய் சத்குருவாணி.

Friday, December 21, 2012

சாயி என்ற பரம்பொருள்

 பஞ்ச பூதங்களான இவ்வுடம்பு அழியக்கூடியது, நிலையற்றது.  ஆனால் அதனுள் இருக்கும் ஆன்மாவே பரம்பொருள்.  அதுவே அழியாததும், நிலையானதுமான பரிபூர்ண உண்மையாகும்.  இப்புனித மெய்மை, உணர்வுநிலை அல்லது பிரம்மமே மனத்திற்கும், புலன்களுக்கும் அதிபதியாகவும் ஆட்டுவிப்போராகவும் உள்ள சாயி என்ற பரம்பொருள்.-ஸ்ரீ சாய் சத்சரித்திரம்.

Thursday, December 20, 2012

விருப்பங்கள்

சாயிபாபா எப்போதுமே கருணை நிறைந்தவராக இருக்கிறார்.  அவர்பால் முழுமனதான பக்தியே நம்மைப் பொறுத்தவரை தேவைப்படுவதாகும்.  உறுதியான நம்பிக்கையும், பக்தியும் ஒரு பக்தன் பெறும்போது அவனது விருப்பங்கள் விரைவில் நிறைவேறுகின்றன.-ஸ்ரீ சாய் சத்சரித்திரம்.

Wednesday, December 19, 2012

அல்லா

 "அல்லா  உனக்கு தாராளமாக அளிப்பார்.  உனக்கு எல்லாவித நன்மைகளையும் செய்வார்"-ஷீரடி சாய்பாபா.

Tuesday, December 18, 2012

பக்தியுடனும் நம்பிக்கையுடனும்

பாபாவிடம் செல்ல பக்தன் எவ்வளவு அதிகம் கவலையுள்ளவனாக இருக்கிறானோ, எவ்வளவு அதிகம் பக்தியுடனும், நம்பிக்கையுடனும் இருக்கிறானோ, அவ்வளவு விரைவில் அவன் மனநிறைவு அடையும் வண்ணம் அவனது எண்ணம் நிறைவேற்றப்படும்.-ஸ்ரீ சாய் சத்சரித்திரம்.

Monday, December 17, 2012

நான் இருக்கிறேன்

புற உலகை நம்பி என்னை உதாசீனப்படுத்துகிறாய், மறந்துப்போகிறாய்.
அப்போது என் உதவி எப்படி உனக்குக் கிடைக்கும்.நான் இருக்கிறேன் என்ற விஷயத்தை நீ மறந்துவிடாதே.நான் உன்னைக் காப்பாற்றுகிறேன்.-ஸ்ரீ ஷீரடி சாய்பாபா.

Sunday, December 16, 2012

சேவை

நீ என்னை பரிபூரண சரணாகதியடைந்தால் நான் உன்னுடையவனே, உனக்கு சேவை செய்வதற்கு நான் தயாராக இருக்கிறேன்-ஸ்ரீ ஷீரடிசாய்பாபா

Saturday, December 15, 2012

ஐக்கியமாவார்கள்

இறுதிக்காலம் வரை எனக்காகவே ஏங்குபவர்கள் நிச்சயமாக என்னுள் ஐக்கியமாவார்கள்-ஸ்ரீ ஷீரடி சாய்பாபா[சாய் சத்குருவாணி]

Friday, December 14, 2012

கடமையும் தர்மமும்

 "அமிர்தத்தையொத்த தங்கள் சொல் எங்களுக்குச் சட்டமாகும்.  எங்களுக்கு வேறு எவ்விதச் சட்டமும் தெரியாது.  எப்போதும் தங்களையே நினைவு கூர்கிறோம்.  தங்கள் ரூபத்தைத் தியானிக்கிறோம்.  இரவும், பகலும் தங்களுக்கே கீழ்ப்படிகிறோம்.சரியா, தவறா என்பது எங்களுக்குத் தெரியாது அல்லது அதை நாங்கள் கருதுவதில்லை.  பொருட்களுக்கான காரணத்தை ஆராயவோ, விவாதிக்கவோ நாங்கள் விரும்புவதில்லை.  ஆனால் உங்களின்  கட்டளைகளுக்கு ஐயுறாப் பற்றுறுதிப்பாட்டுடன் ஒழுங்கான பணிவிணக்கப் பண்புடன் நடத்தலே எங்களது கடமையும், தர்மமும் ஆகும்."-ஸ்ரீ சாய் சத்சரித்திரம்.

Thursday, December 13, 2012

அனுமதிக்க முடியாது

பட்டினியாய் இருப்பது நன்றன்று.மனம்,உடல்,ஆரோக்கியம் மற்றும் இறைவனை அடைய மிதமான உணவு உட்கொள்ள வேண்டியது அவசியம்.
ஒரு புனிதமான நாளில் எனது குழந்தைகள் பட்டினியாயிருப்பதை என்னால் ஒருபோதும் அனுமதிக்க முடியாது.-ஷீரடி சாய்பாபா.

Wednesday, December 12, 2012

விளையாட்டுக்காரர்

மனிதன் தானே செய்விப்பவனும்,அனுபவிப்பவனும் என்று நினைத்துக்கொண்டு முடிவற்ற இடர்பாடினால் தன்னை தானே சிக்கவைத்துக் கொள்கிறான்.விடுவித்துக்கொள்ளும் வழியும் அவனுக்கு புலப்படவில்லை.பாபாவின் பாதத்தில் செலுத்தும் அன்பான  பக்தி ஒன்றே ஒரே வழி.
சாய்பாபா என்னும் மகத்தான விளையாட்டுக்காரர் தமது அடியவர்களை வழிநடத்துகிறார்,அவர்களை தாமாகவே,தமது பண்புருவாகவே மாற்றம் செய்து கொள்கிறார்.-ஸ்ரீ சாய் சத்சரித்திரம்.

Tuesday, December 11, 2012

துவாரகாமயீ

நம்முடைய துவாரகாமயீயைப் பற்றி தெரியுமா?அவளுடைய மடியில் அமர்ந்திருப்பவர்களுக்கு எந்த கஷ்டமும் துன்பமும் அவள் வரவிடுவதில்லை.அவள் மிகவும் கருணை உள்ளவள்.அவளுடைய மடியில் உட்கார்ந்த அந்த வினாடியே அவர்களுடைய ஆபத்துகளும் சோகங்களும் முடிவுக்கு விடுகின்றன.-ஷீரடி சாய்பாபா.

Monday, December 10, 2012

பூரணமாக சமர்ப்பிப்பீர்களாக

பெருமையையும், அகங்காரத்தையும் ஒழித்து விட்டு  எள்ளளவும் அவற்றின் அடையாளம் கூட இருக்காதபடி விலக்கு. உங்கள் இதயத்தே அமர்ந்துகொண்டிருக்கிற என்னிடம் உங்களை பூரணமாக சமர்ப்பிப்பீர்களாக. -ஷிரிடி சாய்பாபா    

Sunday, December 9, 2012

நான் அறிவேன்

உங்கள் மனதில் எழும் ஆழமான எண்ணங்களையும் நான் அறிவேன்.உங்களை ஒவ்வொரு நிமிடமும் கவனித்துக் காப்பாற்றிக்கொண்டு வருகிறேன்.நீங்கள் எந்த வேலையாக சென்றாலும், உங்களை விட முன்பாகவே நான் அங்கு சென்று இருப்பேன்.-ஷீரடி சாய்பாபா.

Saturday, December 8, 2012

வழிகாட்டுகிறேன்

நிலையற்ற புத்தியுள்ள மனிதன், ஒரு முறை கவலையை இறக்கிவைப்பான். இன்னொரு முறை அதை தன் மீது ஏற்றிக்கொண்டு திரிவான். அவனது மனதுக்கு உறுதி என்றால் என்ன என்பதே தெரியாது. அவனுக்கு உதவி செய்ய நான் இறக்கம் கொண்டுள்ளேன். உங்களுடைய நம்பிக்கையை என் மீது வைத்து அதை பற்றிக்கொள்ளுங்கள். நான் வழிகாட்டுகிறேன்.- ஷிரிடி சாய்பாபா  

Friday, December 7, 2012

நன்மைக்கே

நான் கொடுப்பதெல்லாம் நன்மைக்கே என்று நினைத்து நான் கொடுப்பதை பக்தி சிரத்தையோடும் அடக்கத்தோடும் நீங்கள் வாங்கிக் கொள்ளவேண்டும்.-ஷீரடி சாய்பாபா.

Thursday, December 6, 2012

கடவுள்

கடவுள் ஒருவர் தான் நம்மை காப்பவர்.அவரைத்தவிர வேறு யாரும் இல்லை.அவருடைய எண்ணம் மட்டுமே ஈடேறும்.-ஷீரடி சாய்பாபா.

Wednesday, December 5, 2012

பேராசை

பேராசையை வெல்லாத வரையில் நீங்கள் என்றுமே என்னை அடையமுடியாது.-ஷீரடி சாய்பாபா.

Tuesday, December 4, 2012

திருப்திப் படுத்துகிறார்

எவன் ஒருவன் பாபாவை முழு மனத்துடன் நேசிக்கிறானோ அவன் எந்த நேரத்திலும், எந்த இடத்திலும், அவரிடமிருந்து பதிலைப் பெறுகிறான். நமது அருகிலேயே அவர் எப்போதும் இருக்கிறார். எந்த ரூபத்தையும் அவர் எடுத்துக் கொள்கிறார். பிரியமுள்ள பக்தனிடத்துத் தோன்றி அவனை திருப்திப் படுத்துகிறார். ஸ்ரீ சாயி சத்ச்சரித்ரா அத் 33. 

Monday, December 3, 2012

நம்புங்கள்

ஜாதகம் ,கைரேகைக்காரர்களின் ஜோசியம் ஆகியோரின் முன்னோடி உரைகளைத் தூக்கியெறிந்துவிட்டு என்னை மட்டுமே நம்புங்கள்.என்னை நம்பி  என்பால் லயமாகும் மனிதனின் எல்லாக் காரியங்களையும் பொம்மளாட்டத்தைப் போன்று நான் நின்று நடத்துகிறேன்-ஷீரடி சாய்பாபா [ஸ்ரீ சாய் சத் சரித்திரம்]

Sunday, December 2, 2012

நல்லது கெட்டது

எவனொருவன் நல்லது கெட்டது இரண்டையும் ஒன்றாகப் பார்க்கிறானோ அவனே என்னை அதிகம் கவர்ந்தவனாகிறான்-ஷீரடி சாய்பாபா.

Saturday, December 1, 2012

கவலையை விடு

உன்னுடைய கடந்தகால புண்ணியங்கள் நிறைய இருப்பதால் இங்கு வந்திருக்கிறாய்.எவனொருவன் இந்த மசூதியில் காலடி எடுத்து வைக்கிறானோ அவனுக்கு இம்மையிலும் மறுமையிலும் எந்த கெடுதலும் ஏற்படாது.எனவே கவலையை விடு.-ஷீரடி சாய்பாபா.

பாபாவின் கருணாகடாக்ஷம் ஒன்றே போதும் !

பாபாவினுடைய கருணாகடாக்ஷமும் ஆசீர்வாதமும் பிரசாதமும் எல்லாத் துன்பங்களையும் ஒழிக்கின்றன; வேறெதுவும் தேவையில்லை ! - ஸ்ரீஸாயீ ஸத்சரித்திரம் htt...