நான் உன்னை மிகவும் புத்திசாலி என்று நினைத்துக் கொண்டிருந்தேன். எனக்கு முத்தமிட்டு, என்னோடு பேசி, எனக்கு நைவேத்தியம் ஊட்டி, என்னருகிலேயே நீ உட்கார்ந்து இருப்பதால், நான் உன்னருகிலே இருப்பதை அறிந்திருக்கிறாய், எதையும் தைரியமாக ஏற்றுக்கொண்டு நன்மை வந்தாலும், துன்பம் வந்தாலும் எனக்கு நன்றி சொல்கிறாய் என்ற நம்பிக்கையில் உன்னை நான் ஆர்வத்துடன் பார்த்துக் கொண்டிருக்கிறேன். அனால் நீயோ, "அப்பாவை (பாபாவை) காணவில்லையே.. தீமை என்னை சூழ்ந்துகொண்டதே" என்று கதறுகிறாய். - ஸ்ரீ சாயின் குரல்
சாயிராம்,
ஸ்தவன மஞ்சரி-யின் (துதிமாலை) சிறப்பு:-
சாய்பாபா ஷிரிடி-யில் வாழ்ந்தபோதே அவரின் ஆசி பெற்று பக்தர்களின் சகல நன்மைக்காக 1918 ஆண்டு செப்டம்பர் 9 ஆம் தேதி தாஸ்கணு (பாபாவின் ஆரத்தி படலை இயற்றியவர்) மஹராஜால் எழுதி முடிக்கப்பட்டது. இதற்க்கு பின் 37 நாட்களில், அக்டோபர் 15 ஆம் தேதி செவ்வாய்-கிழமையன்று பாபா திரு உடலை நீத்தார்.
தாஸ்கணு மகாராஜ் எழுதிய "ஸ்தவன மஞ்சரி" (தமிழ்) படிக்க விரும்பும் சாயி அன்பர்கள்
saibabasayings@gmail.com முகவரிக்கு ஈமெயில் அனுப்பவும்.
ஓம் சாயிராம்.
http://www.shirdisaibabasayings.com