Thursday, February 28, 2013

சந்தேகமற்ற சுகம்

ஓ, குருநாதா, இகத்திலும், பரத்திலும் எந்தெந்தப் பொருட்களைச் சுகம் என்று என்மனம் சந்தேகமறக் கருதுகின்றதோ அவற்றையெல்லாம் நீரே நிறைவேற்ற வேண்டும். உமது கருணையினால் இவ்வாறு செய்துவிடும், எனது மனதை அடக்கிவிடும்.  எனது எல்லாக் குற்றங்களையும் மன்னிக்க வேண்டுமென்று வேண்டுகிறேன். பக்தியின்மை, சந்தேகங்கள் போன்ற அலைகளை விரைவில் நீக்குவீராக. - ஸ்தவன மஞ்சரி-யில்,  ஸ்ரீ தாஸ்கணு மகாராஜ், 1840 வருடம்.http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Wednesday, February 27, 2013

கண்காணிப்பு
அயராத கண்காணிப்புடன் கூடிய எனது பார்வை என்னை நேசிப்பவர்கள் மீது எப்போதும் இருக்கும். செய்வது யாதாயினும், எங்கு இருப்பினும், எப்போதும் இதை நினைவில் வை. உனது ஒவ்வொரு செயலையும் நான் அறிவேன். ஸ்ரீ ஷிர்டி சாய்பாபா. 


http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil


Tuesday, February 26, 2013

பக்தர் நெருங்கிய பக்தர் யார்.

வேறெதிலும் ஈடுபடாத  விசுவாசத்துடன்,மனம்,வாக்கு,உடல்,செல்வம்,அனைத்தயும் சாயி பாதங்களில் சமர்ப்பணம் செய்துவிடுபவரே  பாபாவுக்கு மிக நெருங்கிய பக்தராகிறார்.-ஸ்ரீ சாயி இராமாயணம்.பக்தர் நெருங்கிய பக்தர் யார்.
http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Monday, February 25, 2013

நான் அங்கு இருப்பேன்

சிருஷ்டியின் எந்த மூலைக்கு  வேண்டுமானாலும் செல்லுங்கள்.கிட்டவோ, எட்டவோ எழுகடல் தாண்டியோ செல்லுங்கள்.எனது பக்தர்களின்மேல் உண்டான பிரேமை எல்லை அறியாதது.ஆகவே,கவலையின்றி எங்கும் செல்லுங்கள்.நீங்கள் செல்லும் இடத்திற்கு உங்களுக்கு முன்பாகவே சென்று நான் அங்கு இருப்பேன்.-ஷீரடி சாய்பாபா.
http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Sunday, February 24, 2013

குருவின் திருவாய்மொழி

யார் எதைச் சொன்னாலும் சொல்லட்டும்.அவையனைத்தையும் நாம் கேட்டுக்கொள்ளலாம்.ஆனால்,நம்முடைய  லட்சியப்பாதையிலிருந்து தடம்புறளகூடாது .நம் குருவின் வார்த்தைகளை மறந்துவிடக்கூடாது.
குருவின் திருவாய்மொழிதான் நமக்கு பரம மங்களங்களை விளைவிக்கும்.அதுதான் நம் போதியும் புராணமும் அனுஷ்டானமும் ஜபமும் தவமும்-அனைத்தும் ஆகும்.-ஸ்ரீ சாயி இராமாயணம்.
http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Saturday, February 23, 2013

இயல்பு

'உன்னுடைய இயல்பு நிர்ணயிக்கும் வழியில் நீ நட;மற்றவருடைய இயல்பு நிர்ணயிக்கும் வழியில் அவர் நடக்கட்டும்.பிறரை பின்பற்றும் முயற்சியில் உன் இயல்புக்கு எதிராக செயல்படாதே'.-ஸ்ரீ ஷீரடி சாய்பாபா.
http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Friday, February 22, 2013

அபிமானம்

எல்லாச் செயல்புரியும் சக்திகளையும் சாயி பாதங்களில் சமர்ப்பித்துவிடுங்கள்.பிறகு அவர் ஆணையிட்ட ரீதியிலேயே செயல்படுங்கள்.சாயி சர்வசக்தியும் நிரைந்தவரென்பதை அறிந்துகொள்ளுங்கள்.பாரத்தை அவர்மீது போட்டுவிட்டு அபிமானம் கொள்ளாது செயல் புரியுங்கள்;எல்லா சித்திகளையும் பெறுவீர்கள்.
மாறாக,மிகச் சிறிய அளவில் அபிமானம் ஒட்டிகொண்டிருந்து,'நான்தான் செய்கிறேன்' என்று நினைத்தால் ஒரு கணமும் தாமதமில்லாது உடனே அதனுடைய விளைவு தெரியும்.
http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Thursday, February 21, 2013

எல்லாம் வல்ல சாயிபாபா

பாபாவின் பாதங்களை கெட்டியாகப் பிடித்துக்கொள்பவர்  தூயவரானாலும் சரி,கபடரானாலும் சரி,கடைசியில் கரையேற்றப்படுவார்.செயல் புரியும் கடமை மாத்திரம் என்னுடையது;பலனை அளிப்பவர் 'எல்லாம் வல்ல சாயிபாபா'என்னும் திடமான நம்பிக்கை எவரிடம் உள்ளதோ,அவருடைய செயல்கள் அனைத்தும் வெற்றியடையும்.
http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Wednesday, February 20, 2013

சகிப்புத்தன்மை

பொறுமையும் சகிப்புத்தன்மையுமே தைரியம்.அதைத் தொலைத்துவிடாதீர்கள்.எப்பொழுது பிரச்சனைகளை எதிர்கொண்டாலும் அது உங்களைக் கரைசேர்க்கும்.
சகிப்புத்தன்மைதான்,ஒரு மனிதனிடம் இருக்கும் ஆண்மை.இதுவே பாவங்களையும் துன்பங்களையும் எதிர்ப்புகளையும் வெல்கிறது.சகிப்புத்தன்மை இல்லாத மனிதனின் நிலைமை பரிதாபகரமானது.
பண்டிதராக இருந்தாலும் சரி,நற்குணம் படைத்தவராக இருந்தாலும் சரி,சகிப்புத்தன்மை இல்லாவிடில் வாழ்க்கை வீணாகிவிடும்.
குரு  மஹாபலம் படைத்தவராக இருக்கலாம்.ஆயினும்,ஆழமாக பாயும் நுண்ணறிவையும் தம்மிடம் அசையாத நம்பிக்கையையும் சகிப்புத்தன்மையின் துணிவான பலத்தையும் தம் சிஷ்யனிடமிருந்து எதிர்பார்க்கிறார்.-ஷீரடி சாய்பாபா.[ஸ்ரீ சாயி இராமாயணம் ]
http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Tuesday, February 19, 2013

பாதுகாக்கிறேன்

"நீங்கள் என்னிடம் அனன்னியமான [வேறொன்றிலும் நாட்டமில்லாத]அன்பு செலுத்துங்கள்.நானும் உங்களை அவ்வாறே பாதுகாக்கிறேன்.காப்பவரும் அழிப்பவரும் குருவே என்னும் ஒரே உறுதியான நம்பிக்கையும் விசுவாசமும் இருந்தால் போதும்.குருவே பிரம்மாவும் விஷ்ணுவும் மஹேச்வரனும் ஆவார்.குருவின் முக்கியமான ஸ்தானத்தை உணர்ந்துகொண்டவன் மூவுலகங்களிலும் பேறு பெற்றவனாவான்".-ஷீரடி சாய்பாபா.
http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Monday, February 18, 2013

நீ துவாரகாமாயியின் குழந்தை

எப்போதும் திருப்தி உள்ளவனாக இரு.சஞ்சலத்திற்கோ கவலைக்கோ எப்போதும் இடம் கொடுக்காதே.நீ துவாரகாமாயியின் குழந்தை.துவாரகாமாயியின் நிழலில் வாழ்பவர் சுகத்தையும் சாந்தியையும் அளிக்கும் சிம்மாசனத்தில் உட்கார்ந்தவர் ஆகிறார்.-ஷீரடி சாய்பாபா.
http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Sunday, February 17, 2013

நம்பிக்கை ஆட்டம் காணும்..


அவர் காட்டிய வழியில் நடந்தால் ஆரம்ப காலத்தில் எல்லாமே சுகமாக இருக்கும். ஆனால் போகப்போக புதர் மூடிப்போய் எங்கே பார்த்தாலும் முள்ளாக இருக்கும். அப்பொழுது நம்பிக்கை ஆட்டம் காணும். மனம் சுலபமாக சந்தேகங்களால் அலை பாய்ந்து. சாயி ஏன் இந்தக் காட்டுவழிப் பாதைக்கு நம்மை கொண்டு வந்தார் என்று நினைக்கும்.     சத் சரித்திரம் 19 (125-126).  எது வந்தாலும் நீ கலங்காதே, சோதனையைத் தருகிற பாபா அதை தாங்கும் சக்தியையும் தருவார், தப்பிக்கிற வழிகள்பலவற்றையும் உருவாக்கி அளிப்பார். உனக்கு பின் இருப்பது அவற்றை விட பெரியவரான பாபா. உன்னை கைவிட மாட்டார். "உன்னைத் தொடுகிறவன் பாபா-வின்  கண்களைத் தொடுகிறவன் என்று உனக்கு ஆணையிடடுள்ளார்"  - சத் சரித்திரம்

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Saturday, February 16, 2013

போனஸ், அலவன்ஸ், ஊக்கப்படிநீ திடம் கொண்டு எழுந்து நில். கவலை, கஷ்டம், பிரச்சினை என உன்னை குறுக்கிடுகிற எதுவும் கடந்து போகக்கூடியவை . ஒரு முடிவுக்கு வருபவை. இவை மிகச் சாதாரணமானவை. இவையெல்லாவற்றையும் விட என் சாயி பெரியவர் என அடிக்கடி சொல்லிப்பழகு; அப்போது மிகப் பெரியவரான சாயி அனைத்தையும் நசுக்கிப் போட்டு, உன் நலனை விசாரித்து உனக்கு மிகுதியான பலனைத் தருவார். அதற்கு இப்போதிலிருந்தே உன்னை தகுதியாக்கிக்கொள்.நீ தகுதி படுத்திக் கொள்ளும்போதே உனக்கு போனஸ், அலவன்ஸ், ஊக்கப்படி என அற்புதங்களை அவர் கொடுப்பதை உனது கண்களால் கண்டு உள்ளத்தால் உணரலாம். ஸ்ரீ சாயி-யின் குரல். 

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Friday, February 15, 2013

மிகுந்த பலனை அடைவீர்கள்
நான் உங்களிடத்து இல்லை என்பதாகக் கவலை கொள்ளாதீர்கள். எனது எலும்புகள் உங்களது நலத்தை குறித்துப் பேசி விவாதிப்பதைக் கேட்பீர்கள். ஆனால் எப்போதும் என்னையே நினைவு கூறுங்கள். உள்ளம், உயிர் இவற்றால் என்னை முழுமையாக நம்பி சரணடைந்து விடுங்கள். அப்போதுதான் நீங்கள் மிகுந்த பலனை அடைவீர்கள். சத் சரித்திரம் 25   

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Thursday, February 14, 2013

லீலை

பாபாவே  எல்லா  லீலைகளையும்  புரிந்துவிட்டு அவற்றுடன்  எவ்விதத்  தொடர்பும் இல்லாததுபோல் தோற்றமளிக்கிறார்.அவரே  செயல்களைச்  செய்கிறார்.ஆனால் செய்யாததைப்  போன்று  காட்சியளிக்கிறார்.அவரின் லீலைகளை யார்தான் விவரிக்க இயலும்?-ஸ்ரீ சாய் சத்சரித்திரம்.

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Wednesday, February 13, 2013

எதற்காக பயப்படுகிறாய்

எல்லா திசைகளிலும் நான் உன்னை  சூழ்ந்து நிற்கையில் நீ எதற்காக பயப்படுகிறாய்?நீ  எனது பிடியிலேயே இருக்கிறாய்.நானே உனது தந்தை[பாதுகாவலன்].உனக்கு துன்பம் நேர நான் எப்படி அனுமதிப்பேன்.வெறும் தண்டத்துக்கா   நான் இங்கு இருக்கிறேன்?உனது எல்லா கவலைகளிலிருந்தும் எப்படி விடுவிக்கிறேன் என்று மட்டும் பார்.-ஷீரடி சாய்பாபா.
http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Tuesday, February 12, 2013

எதையும் வேண்டாதவராக ஆகிவிடுவீர்கள்

மனத்தைத் தூய்மைப்படுத்திக்கொண்டு நம்பிக்கையுடன் சாயியை வழிபட்டால்,நிச்சயம் உங்கள் குறிக்கோளை அடைவீர்கள்.உங்களுடைய அபூர்வமான இச்சைகளுங்கூடப் பூர்த்திசெய்யப்படும்.கடைசியில் நீங்கள் எதையும் வேண்டாதவராக ஆகிவிடுவீர்கள்.அகண்டமான சாந்தியும் திருப்தியும் உங்கள் இதயத்தை நிரப்பும்.
http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Monday, February 11, 2013

மனம் பாபாவைப்பற்றியே சிந்திக்கும்

மனத்தினுடைய வேலை சிந்தனை செய்வது,ஆலோசிப்பது.அதைச் செய்யாமல் மனம் ஒரு கணமும் சும்மா இராது.புலனின்பங்களை அதற்குக் கொடுத்தால் புலனின்பங்களைப்பற்றியே சிந்திக்கும்;பாபாவை அதற்குப் பொருளாகக் கொடுத்தால் பாபாவைப்பற்றியே சிந்திக்கும்.
http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Sunday, February 10, 2013

சாயீ சாயீ

உங்களுடைய சாதுரியமான வாதங்களையெல்லாம் விட்டுவிடுங்கள்.அதற்குப் பதிலாக,சாயீ சாயீ  என்று ஸ்மரணம் செய்யுங்கள்.
என்னுடைய சரித்திரத்தை படியுங்கள்.இறைவனுடைய அருள் இல்லாது இந்த ஆவல் எழாது.இறைவன் அருள்செய்ய விரும்பி முகம் மலர்ந்தால் மட்டுமே என் கதைகளை கேட்கவேண்டும் என்னும் விருப்பமும் ஆவலும் வரும்.-ஷீரடி சாய்பாபா.
http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Saturday, February 9, 2013

திடமாக நிற்கிறேன்

நீங்கள் எங்கிருந்தாலும் சரி,என் முன்னர் மன்றாடிக் கெஞ்சி பக்தியுடனும் விசுவாசத்துடனும் கை நீட்டினால்,நான் உங்களுடைய பக்திக்கும் விசுவாசத்திற்கும் ஏற்றவாறு இரவுபகலாக உங்கள் பின்னால் திடமாக நிற்கிறேன்.-ஷீரடி சாய்பாபா.
http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Friday, February 8, 2013

மஹாபாக்கியசாலி

"வீட்டினுள்ளோ,வெளியிலோ,அல்லது வழியிலோ,நீங்கள் எவரை எதிர்கொண்டாலும் அவர்களனைவரும் என்னுடைய வெளிப்பாடுகளே.
அவர்களனைவருள்ளும் நான் உறைகின்றேன்.பூச்சியோ,எறும்போ,நீரில் வாழும் பிராணிகளோ,வானத்தில் பறக்கும் பறவைகளோ,நிலத்தில் வாழும் நாய்,பன்றி போன்ற மிருகங்களோ-அவையனைத்திலும் நான் அவசியம் நிரந்தரமாக வியாபித்திருக்கிறேன்.ஆகவே,உங்களை என்னிடமிருந்து வேறுபட்டவர்களாக நினைக்காதீர்.தம்மிலிருந்து என்னை வேருபடாதவாறு அறிந்தவர் மஹாபாக்கியசாலி."-ஷீரடி சாய்பாபா.

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Thursday, February 7, 2013

குணம்

குணம் (சிறப்பாக) தெரிந்தால் அது சாயி-யினுடையது. குணத்தில் பிழை ஏதாவது இருப்பினும் அதுவும் அவருடையதே! நாம் பாபாவின் கையிலிருக்கும் பொம்மை. நூல்களின் இழுப்புக்கேற்ப நடனமாடுகிறோம். நூல்கள் அனைத்தும் பொம்மலாட்டக்காரரின் கைகளில் இருக்கின்றன. கதைக்கேற்றவாறு பலவிதமான வண்ணங்களிலும், உருவங்களிலும் உள்ள விசித்தரமான பொம்மைகளை கதாபாத்திரங்களாக்கி நடிக்கவைக்கிறார். 

http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Wednesday, February 6, 2013

அற்புதங்களை பெறும் வழி

சாயி பாபாவின் லீலைகளை அனுபவித்தவர்கள் மட்டுமே அவரது பக்தர்களாக நீடிக்கிறார்கள். மாறாத நம்பிக்கை, நீடித்த பொறுமை, உண்மையான அன்பு, பணிவான வேண்டுதல் இவையே பாபாவிடமிருந்து அற்புதங்களை பெறும் வழியாகும்.

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Tuesday, February 5, 2013

செவி சாய்த்தார்

பாபா எல்லா ஜீவராசிகளிடமும் தெய்வீகத்தைக்
கண்டார்.நண்பர்களும்,பகைவர்களும்  அவருக்கு ஒன்றே.அவாவற்றவராகவும் சமன் செய்யப்பட்டவராகவும் இருந்த அவர் தீயோருக்கும் கட்டுப்பட்டுச்  செவி சாய்த்தார்.-ஸ்ரீ சாய் சத்சரித்திரம்.

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Monday, February 4, 2013

வருத்தப்படாதே

வருத்தப்படாதே! அழாதே! குற்றமாகக்கருததே! தோல்வி வரும் போது துவண்டு போகாதே. துன்பத்தை பெரிதாக நினைத்து இன்பத்தை இழந்து போகாதே. உனக்கு நிறைய வாய்ப்புகளும், காலங்களும் உள்ளன. அவற்றை உனக்கு சாதகமாக மாற்றிக்கொள்வதற்காகவே இந்த சின்னச் சறுக்கல் என்பதை உணர்ந்து புத்துணர்ச்சியோடு எழுந்து நடமாடு.- ஸ்ரீ சாயி தரிசனம்     http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Sunday, February 3, 2013

அனைத்தையும் செய்பவர் அவரே

பாபாவின் பாதங்களை உறுதியாக பிடித்துகொள்பவர்  மற்றவர் பலவிதமாக சிரமப்பட்டும் அடையமுடியாததை சொற்ப முயற்சியாலே அடைந்துவிடுவர்.தனது பக்தர்களின் எல்லா வேலைகளையும் அவரே முன் நின்று நடத்துகிறார். இடற்பாடுகள் அனைத்தையும் அவரே கலைக்கிறார்.செய்வதறியாது இருக்கும் தனது பக்தனின் செயல்கள் அனைத்தையும் செய்பவர் அவரே...

JAI SARAM.,
DEVOTEES WHO WISH TO READ "GURUCHRITHRA""SAISATCHARITHRA",DASGUNU"STAVANA MANJARI".PLS MAIL US TO
SAIBABASAYINGS@GMAIL.COM
                                                                                       
http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Saturday, February 2, 2013

இதயப்பூர்வமான சரணாகதி

பாபாவிடம் இதயப்பூர்வமான சரணாகதி அடைதலே துயரங்களின் பிடிகளிலிருந்து விடுபடுவதற்கு மிகச்சிறந்த வழியாகும்.வெறும் உடலை மட்டும் பாபாவிடம் இருத்துவதால் லாபம் என்னவாக இருக்க முடியும்?சிந்தனையும் பாபாவை பற்றியதாக இருக்க வேண்டும்.அப்போது சுகம் உண்டாகும்.


http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Friday, February 1, 2013

எந்த வேண்டுதலையும் வைக்கத்தேவை இருக்காது


தனது பக்தர்களின் தேவையை பாபா நன்கு அறிவார்.அவர்களுக்கு எது நன்மையோ அதை மட்டுமே பாபா அளிப்பார்.பாபாவை நேசிக்கும் ஒருவன்,உண்மையில் அவரிடம் எந்த வேண்டுதலையும் வைக்கத் தேவையில்லை.எது நேரினும் அது பாபாவின் விருப்பம் என்பதை நன்கு அறிவோம்.
http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

விசுவாசத்தின் ஆழத்திற்க்கேற்றவாறு பக்தனின் பக்தியை கௌரவிக்கிறார் பாபா !

பாபா,  தன் பக்தன் தன்மேல் வைக்கும் "நம்பிக்கை மற்றும் விசுவாசத்தின் ஆழத்திற்கேற்றவாறு",  அவருக்கு மிகச்சிறந்த அனுபவங்களைக் கொடுத்த...