Sunday, March 31, 2013

பக்தனின் அடிமை

என்னையே புகலிடமாக கொண்ட பக்தனின் அடிமையாக நானிருக்கிறேன்.நீங்கள் என்னால் தெரிந்து கொள்ளப்பட்டவர்கள்,தேர்வு செய்யப்பட்டவர்கள் என்பதை உணர்ந்து தைரியத்தோடு இருங்கள்..காரியம் சித்திக்கும்.
http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Saturday, March 30, 2013

ஜாதகம் கைரேகை


ஜாதகம் ,கைரேகைக்காரர்களின் ஜோசியம் ஆகியோரின் முன்னோடி உரைகளைத் தூக்கியெறிந்துவிட்டு என்னை மட்டுமே நம்புங்கள்.என்னை நம்பி  என்பால் லயமாகும் மனிதனின் எல்லாக் காரியங்களையும் பொம்மளாட்டத்தைப் போன்று நான் நின்று நடத்துகிறேன்-ஷீரடி சாய்பாபா [ஸ்ரீ சாய் சத் சரித்திரம்]


http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Friday, March 29, 2013

சாயி பாபாவை சரணடைந்தவர்கள்

"எது எப்படியிருப்பினும், நான் ஷீரடிக்கு சென்று பாபாவை பேட்டி காண்பேன் ஆனால், பாதங்களுக்கு வந்தனம் செய்யமாட்டேன்; தட்சிணை கொடுக்கவும் மாட்டேன்"

எவரெல்லாம் மனத்தில் இந்தக் குதர்க்க வாதத்தை திடப்படுத்திக்கொண்டு கிளம்பினார்களோ, அவரெல்லாம் தரிசன யோகம் கிடைத்த பின் சாயி பாபாவை சரணடைந்தார்கள். அவர்கள் அனைவரும் தங்களுடைய நிலையில் உறுதியாக நின்றனர். மறுபடியும் சந்தேகங்கொண்டு திரும்பி பார்க்கவே இல்லை. சாய்பாபா பாதங்களில் மூழ்கிவிட்டனர்.

    

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Thursday, March 28, 2013

தாய் ஆமை

குட்டி ஆமைகள் எப்பொழுதும் தாயைப்பற்றியே நினைத்துக் கொண்டிருக்கின்றன;குட்டிகள் வேறெதையும் செய்யத் தேவையில்லை.அவற்றுக்குப் பாலும் வேண்டா;புல்லும் வேண்டா;வேறெந்த உணவும் தேவையில்லை.தாயை உற்றுப் பார்த்துக் கொண்டிருப்பதே அவற்றுக்குப் போஷாக்கு.
தாய் ஆமையினுடைய கனிந்த பார்வை குட்டிகளுக்கு சுயானந்த புஷ்டியை கொண்டுவரும் அமிருத மழையாகும்.இதுவே பாபாவுக்கும் நமக்கும் உண்டாகும் ஐக்கிய அனுபவமாகும்.
http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Wednesday, March 27, 2013

குறை ஏதும் உண்டோ

பாபாவிடம் பக்தி உடையவருக்குக் குறை ஏதும் உண்டோ?அவர் மனத்தால் என்ன வேண்டுமென்று விருப்பப்படுகிறாரோ,அது அவரிடம் உழைப்பு ஏதுமில்லாமலேயே வந்து சேரும்.யாரை பாபா அரவணைக்கிறாரோ,அவர் தம்முடைய வீட்டிலிருந்தாலும் சரி,ஏதோ தீவிலிருந்தாலும் சரி,சர்வ நிச்சயமாக சாயி அவரருகில் இரவும் பகலும் இருக்கிறார்.பக்தர் எங்கே சென்றாலும் எவ்விடத்தில் இருந்தாலும்,சாயி அவருக்கு முன்னமேயே அங்கே சென்று சற்றும் எதிர்பாராத வகையில் தரிசனம் அளிக்கிறார்.
http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Tuesday, March 26, 2013

செய்யக்கூடிய சக்தி

இதோ பார்,உனக்கு நடப்பவையெல்லாம் மறைந்து வேலைசெய்யும் கர்மவினைகளின் வானளாவிய ஓட்டமே.நான் செய்பவனுமல்லேன்,செய்ய வைப்பவனுமல்லேன் என்பதை உறுதியாக அறிந்துகொள்.  ஆனாலும்,செய்யக்கூடிய சக்தி என் வாயிற்படியில் படுத்துக்கிடக்கிறது!
எவன் அஹங்காரத்தை அழித்துவிட்டு நன்றி நிறைந்த மனத்துடன் என்மீது தன் பாரத்தைப் போடுகிறானோ,அவனுடைய படகு கரை சேர்ந்துவிடும்.-ஸ்ரீ ஷிர்டி சாய்பாபா.
http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Monday, March 25, 2013

சரணாகதி

சரணாகதி என்ற ஒன்றினால் மட்டுமே நம்முடைய கர்மாக்கள் கரைந்துபோகும்,சரணாகதி செய்வதால் மட்டுமே நமது பிரச்சினைகள் தீர்ந்து போகும்.நமது வேண்டுதல்கள் கேட்கப்படும்.சரணாகதியே சகலமும்,சாயி நாமமே வேதங்கள் அனைத்தின் சாராம்சம்.சரணாகதி செய்து நமது நம்பிக்கையில் அசைக்க முடியாத உறுதியுடனும்,பொறுமையுடனும் காத்திருந்து பாபா அளிக்கும் விடுதலையைப் பெறுவோம்.
http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Sunday, March 24, 2013

ஆனந்தம்

என் பக்தனின் பெயரை உச்சரிப்பதே எனக்கு தியானம்.என் பக்தனோடு நடப்பதே எனக்கு ஆனந்தம்.என் பக்தனுடைய துன்ப வேளைகளில் இன்பத்தைக் கொண்டு வருவதே எனக்குக் கிடைக்கின்ற திருப்தி.என் பக்தன் தவறி விழும் நிலை ஏற்படும்போது எனது கரங்களை நீட்டுகிறேன்.ஒன்று இரண்டாக அல்ல நான்கு நான்காக நாலு மடங்குகளாக நீட்டி தாங்கிப் பிடிக்கிறேன்.அவன் ஒருபோதும் விழுந்து விட அனுமதிக்கவே மாட்டேன்.-ஸ்ரீ ஷிர்டி சாய்பாபா.

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Saturday, March 23, 2013

வீட்டு விலக்கம்

பாபாவுக்கு பிரியமான ஒரு பையன் இருந்தான். அவனது  பெயர் பாபு, அவனது முதல் ஆண்டு பிறந்த நாள் விழா மாதவ ராவ் தேஷ்பாண்டே வீட்டில் சிறப்பாக நடந்தது. இந்த விழாவுக்கு பாலா சாகேப் பாடே அழைக்கப்பட்டிருந்தார். அவர் வர இயலாமையைத் தெரிவித்துவிட்டு, பாபாவை பார்க்கச்சென்றிருந்தார்.

பாபா - "ப்ரதான் அளிக்கும் விருந்தில் சாப்பிட்டாயா"?
பாலா சாகேப்  - "இன்று வியாழக் கிழமை நான் சாப்பிடவில்லை"
பாபா - "இருந்தால் என்ன?"
பாலா சாகேப் - "குரு வாரங்களில் (நாட்களில்) நான் வெளியே சாப்பிடுவதில்லை. அது என் நியமம்!"
பாபா - "யாரை திருப்திப்படுத்த இந்த விதி?"
பாலா சாகேப் - "தங்களைத் திருப்திப்படுத்தவே!"
பாபா - "அப்படியானால் நான் சொல்கிறேன், பாவ் அளிக்கும் விருந்தில் சாப்பிடு"
பாபா - "விரதம் என்ற பெயரில் உன் உடல் நலனை கெடுத்துக் கொள்ளும் விதத்தில் பட்டினி கிடப்பது, சத்தற்ற உணவு உண்ணாமல் இருப்பது, வீட்டு விலக்கம் என காரணம் காட்டி ஒதுங்கியிருப்பது போன்றவை செய்யாதே!"   


       

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Friday, March 22, 2013

சர்வ சக்தி மூர்த்தயே நம

பாபாவை அணுகும் போது ஒருவன் என்ன பலன்களை எதிர்ப்பார்க்கிறான்?லௌகீகமானவையா,ஆன்மீகமானவையா?எதுவாயிருப்பினும் பாபாவால் அளிக்க முடியாத பலன் ஏதுமில்லை,"சர்வ சக்தி மூர்த்தயே நம" (எல்லா சக்திகளும் கொண்ட பெருந்தகையே போற்றி)என்பது போன்ற நாமாக்களால் தினமும் பக்தர்களால் துதிக்கப்படுகிறார்.எந்த விதமான பலன்கலானாலும் சரி,நோய் தீர்ப்பதோ(உடல் ரீதியானதாயினும் மனரீதியானதாயினும் சரி)மனப்பிராந்திகள்,ஊனங்கள் இவற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் இல்லங்களில் நிலவி வரும் துன்பங்களுக்கும் நிவாரணம் அளிப்பது போன்ற எந்த விதமான பலனாயினும்,பாபாவால் அளிக்க முடியும் என்பது பல பக்தர்களின் அனுபவங்கள் 
http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Thursday, March 21, 2013

அவதார புருஷரா அவலீயாவா

போதிப்பவர் குரு,போதித்து கடவுளிடம் இட்டுச் செல்பவர் சத்குரு,தங்களது சித்திகளையும் உயர்ந்த சக்திகளையும் பயன்படுத்தி பகவானிடத்தில் எல்லோரையும் வரவழைப்பவர் சமர்த்த சத்குரு.ஒரு குருவை மற்றொரு குருவுடன் ஒப்பிட்டு பார்க்கக் கூடாது.ஒப்பிட்டுப் பார்த்தால் அனேகமாக மனக்கசப்பை அளிக்கும்.பக்தனுடைய நலனுக்கும் அது ஒவ்வாது.பாபாவின் குணங்கள் அற்புதங்கள் பற்றி கேட்டறிந்தோ,தங்களுடைய சொந்த அனுபவங்கள் அல்லது பிறருடைய அனுபவங்கள் வாயிலாக புரிந்து கொண்டோ ஒருவர் பாபாவினால் வசீகரிக்கப்பட்டால்,அவர் உடனடியாக பாபாவுடன் மேலும் தொடர்பு கொண்டு அதன் மூலம் பயனடைய வேண்டும்.
பாபாவை எந்த வகையில் சேர்ப்பது,அதாவது அவர் அவதார புருஷரா,அவலீயாவா,தேவாத்மாவா,இந்துவா,முஸ்லீமா என்பது போன்ற சர்ச்சைகளில் ஈடுபடவேண்டிய அவசியமில்லை.உண்மையான பக்தன் இந்தமாதிரி விஷயங்களில் கவனம் செலுத்தமாட்டான்.

ஸ்ரீ சச்சிதானந்த சமர்த்த சத்குரு சாயிநாத மஹராஜருக்கு ஜெயம் உண்டாகட்டும்"
http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Wednesday, March 20, 2013

சமர்த்த சத்குரு

பாபா ஒரு சாதாரண வித்தைக்காரர் அல்ல,அவர் ஒரு சமர்த்த சத்குரு.பக்தர்களின் உள்ளங்களில் விசுவாசமும் நம்பிக்கையும் நிரம்பி வழிய பாபா சில அற்புதங்களையோ ,வியக்கத்தகும் உத்திகளையோ கையாளுகிறார்.நன்றி உணர்ச்சி,பிரேமை,பக்தியாக மாறுகிறது.தங்கள் தேவைகள் யாவற்றையும் அளிக்கக் கூடிய வள்ளல் என்ற நோக்கத்துடன் மக்கள் பாபாவை அணுகுகின்றனர்.அவர்களது லௌகீக தேவைகளை பூர்த்தி செய்து கொள்ளவே பாபாவிடம் செல்கின்றனர்.அனால் பின்னர் பலர் பாபா ராமன்,சிவன் போலவே தங்கள் இஷ்ட தெய்வம் என்றும்,தங்கள் முன்னோர்களின் குல தெய்வமே பாபாவாக புதிய உருவில் தோன்றி வையகத்தில் புராதன தெய்வீக பணிகளை நிறைவேற்றுகிறது எனவும் கண்டு கொண்டுவிடுகின்றனர்.
http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Tuesday, March 19, 2013

சர்வாந்தர்யாமி

பாபாவின் சொற்கள் பிரமாணம் நிறைந்தவை.வரண்ட பாறையில் தண்ணீர் உள்ளது என அவர் கூறும்போது,அங்கே தண்ணீர் கிட்டியது.பஞ்ச பூதங்களும் அவரது ஆணைக்கு கட்டுப்பட்டன.நெருப்பு,நீர்,காற்று ஆகியவை அவருடைய ஆணைக்கு கீழ்ப்படிந்தது.பலத்த காற்றும் மழையும் அவருடைய ஆணையை மதித்து நின்றன.கொளுத்தும் வெய்யில் காலத்தில் எரியும் நெருப்பின் அருகே குளுமையான காற்று வீச வேண்டுமென பாபா சங்கல்ப்பம் செய்ய,அவ்வாறே குளிர் காற்று வீசியது.மாண்டவர் மீண்டும் உயிர்பெற்றனர்.தம் முன் இருப்பினும் இல்லாவிடினும் ஒருவனது இதயத்தில் உள்ளதை அறியும் சக்தியும்.அதை சீர்படுத்தும் சக்தியும் அவரிடம் இருந்தது.அவர் சர்வாந்தர்யாமி என உணரப்பட்டார்.
http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Monday, March 18, 2013

நம்பிக்கை

நடக்கப் போவதை தடுக்க முடியாதென்றால்,பாபாவிடம் போவதால் பிரயோஜனம் என்ன?தலையெழுத்துப்படி நடப்பது நடந்தே தீரும் என்றால் சாய்பாபா என்று ஒருவரை எதற்காக வைத்துக்கொள்ளவேண்டும்?சீரடிக்கு போவதால் என்ன லாபம்?கர்மவினையை பாபாவால் என்ன செய்துவிட முடியும்?
சாய்பாபாவின் பதில்;"உனது கர்மத்தின் பலனை நீ அனுபவித்தாக வேண்டும்.ஆனால் உனக்கு என் மீது நம்பிக்கை இருந்தால்,எனது ஸாந்நித்யத்தின் முன்னர் நெருப்பில் வைக்கோல் எரிவதை போன்று உனது கர்மவினைகள் எரிக்கப்படும்".

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Sunday, March 17, 2013

ஸ்ரீ சாயி சத்சரித்திர பாராயண மகிமை

ஸ்ரீ சாயி சத்சரித்திரத்தை பயபக்தியுடன் படித்தால்,சமர்த்த சாயி இன்முகம் காட்டி தரித்திரத்தை அழித்து ஞானத்தையும் செல்வத்தையும் அருள்வார்.
சித்தத்தை ஒருமுகபடுத்தி நம்பிக்கையுடன் சத் சரித்திரத்தில் ஒரு அத்தியாயமாவது தினமும் படிப்பவருக்கு அளவற்ற சுகம் கிடைக்கும்.ரோகத்தால் பீடிக்கப்பட்டவர்கள் ஆரோக்கியம் பெறுவர்.தரித்திரர்கள் செல்வர்களாவர்கள்.சந்தேகங்களும் மனக்கோணல்களும் அகன்று,உறுதியும் தெளிவும் பிறக்கும்.சத்சரித்திரம்  தினமும் செவிமடுக்கப்பட்டாலும்,அல்லது நியமமாகப் பாராயணம் செய்யப்பட்டாலும்,சமர்த்த சாயியின் பாதங்கள் சங்கடங்களனைத்தையும் நிவாரணம் செய்யும்.உடலைச் சுத்தம் செய்துகொண்டபின்,பிரேமையுடனும் நம்பிக்கையுடனும் ஏழு நாள்களில் படித்து முடிப்பவரின் விருப்பங்கள் நிறைவேறும்.
http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Saturday, March 16, 2013

பரமானந்தம்

சாயியின் முகத்தை நிலைத்துபார்த்தால்,பசி,தாகம்,அனைத்தும் மறந்து போகின்றன.இதற்கு நிகரான சுகம் ஏதும் உண்டோ?வாழ்க்கையின் சோதனைகளும் வேதனைகளும் மறந்தே போகின்றன.சாயி ஆனந்தத்தின் சுரங்கம்;அவர் பரிபூரணமான சமுத்திரம்;உண்மையான சாயி பக்தன் பாக்கியசாலியாவான்;பரமானந்தம் அவனுக்குத் தேவையில்லை.
http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Friday, March 15, 2013

அன்னதானம்

"பசியால் வாடும் எந்த உயிருக்கும் அன்னதானம் செய்பவர் உண்மையில் அதை என்னுடைய வாயில் இடுகிறார் என்று அறிவாயாக!
இது எங்கும்,என்றும்,பிரமாணம் என்றும் அறிவாயாக."-ஸ்ரீ ஷீரடி சாய்பாபா.
http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Thursday, March 14, 2013

சாயிசாயிசாயி

சாயி நாமம் மலைபோன்ற பாவங்களை அழிக்கும்;சாயி நாமம்  கோடிக்கணக்கான தீயநாட்டங்களை நாசம் செய்து நிர்மூலமாக்கும்.சாயி நாமம் காலனின் கழுத்தை நெரிக்கும்.இவ்வளவு மகிமை உள்ள சாயி நாமத்தின் மீது ஆர்வத்தையும் ஆசையையும் அன்பையும் வளர்த்துக்கொள்ள வேண்டும்.எதிர்பாராமல் நாக்கில் தோன்றினாலும்,சாயி நாமம் தன்னுடைய பிரபாவத்தை வெளிபடுத்தும்.நம்மைப் பரிசுத்தமாக்கிக்கொள்ள நாமஜபத்தைவிட சுலபமான வலி வேறெதும் இல்லை.சாயி நாமத்தை தியானம் செய்வதற்கு நீராடல் தேவையில்லை.நாமம் சடங்குகளுக்கும் சாஸ்திரங்களுக்கும் உட்பட்டதன்று.
"என்னுடைய நாமத்தை இடைவிடாது ஜபம் செய்துவந்தால்,அக்கரை சேர்ந்து விடுவீர்கள்;வேறு உபாசனை ஏதும் தேவையில்லை;அதுவே மோக்ஷத்தை அளிக்கும்.எவர் சாயி சாயி என்று சதாசர்வகாலமும் ஜபிக்கிறாரோ,அவர் எல்லா பாவங்களிலிருந்தும் விடுபடுகிறார்.எனக்கு அவர் மிகச்சிறந்த மனிதரைவிடச் சிறந்தவராகின்றார்."-ஸ்ரீ ஷீரடி சாய்பாபா.
http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Wednesday, March 13, 2013

பரிபூரணமாக சரணடைவோமாக

பாபாவுக்கு சேவை செய்யும் அடியவர்,இறைவனிடம் ஒன்றுகலந்த உணர்வை அடைகிறார்.இதர ஸாதனைகளைத் தள்ளிவைத்துவிட்டு குருசேவையில் பணிவுடன் ஈடுபடுங்கள்.அந்த சேவையில் சிறிது கவனக்குறைவு ஏற்பட்டாலும்,கபடமான சாமர்த்தியத்தின் நிழல் பட்டாலும்,பக்தனுக்கு தீமையே விளையும்.தேவை என்னவென்றால்,பாபாவின்மீது உறுதியான விசுவாசமே.மேலும்,பக்தன் சுயமுயற்சியால் என்ன செய்கிறான்?ஒன்றுமில்லையே!அவன் செய்வதையெல்லாம் பாபாவன்றோ லாவகப்படுத்துகிறார்!பக்தன் தனக்கு வரப்போகும் அபாயங்களைப்பற்றி ஏதும் தெரிவதில்லை.பாபா அந்த அபாயங்களை விளக்குவதற்காகச் செய்யும் உபாயங்களுங்கூட பக்தனுக்குத் தெரிவதில்லை.
மூவுலகிலும் தேடினாலும் சாய்பாபாவைப் போன்ற தர்மதாதாவைக் காண்பதரிது.சரணமடைந்தவர்களுக்கு மாபெரும் புகலிடமான பாபாவிடம் வேறெதையும் நாடாமல் பரிபூரணமாக சரணடைவோமாக.
http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Tuesday, March 12, 2013

பந்தங்களிருந்து விடுவிப்பார்சாதே: குரு சரித்திரம் பாராயணம் செய்து முடித்த ஏழாவது நாளில்  ஒரு கனவை கண்டு தீஷித்திடம்  அதைப்பற்றி எடுத்துரைத்தார். "பாபா குரு சரித்திரத்தை தமது கரங்களில் வைத்துக் கொண்டு அதன் உட்பொருளை, முன்னால் அமர்ந்து கவனத்துடன் கேட்டுக்கொண்டிருந்த சாதேவிற்கு விவரித்துக் கொண்டிருந்தார்."மறுநாள் காகா சாஹேப் தீஷித்திடம் இக்காட்சியைப்பற்றி அவர் தெரிவித்து சாயிபாபாவிடம் அதன் பொருளைப்பற்றி அறிய விரும்பினார்.

தீஷித்: "தேவா (ஓ தெய்வமே) இந்தக் காட்சியால் சாதேவிற்கு எதனை குறிப்பிடுகிறீர்கள்?

பாபா: அவர் மற்றுமொரு சப்தாஹம் (7 நாள்) பாராயணம் செய்யவேண்டும். அதை அவர்   கவனமாகக் கற்பாராயின் அவர் தூயவராகி நன்மை பெறுவார். பரமாத்மாவும் மகிழ்வடைந்து இச்சம்சார வாழ்க்கையின் பந்தங்களிருந்து அவரை விடுவிப்பார்" 
  
http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Monday, March 11, 2013

சண்டையும் சச்சரவும்

யாராவது உனக்கு கெடுதல் செய்தாலும்,அவர்களுக்குப் பிரதிகாரம்[எதிரடி]செய்ய வேண்டாம்;உபகாரமே செய்ய வேண்டும்.வாதப்பிரதிவாதங்களும் சண்டையும் சச்சரவும் நமக்கு வேண்டாம்;ஒருவரோடொருவர் போட்டி போடுவதும் வேண்டாம்.அவரவர் அவரவருடைய ஷேமத்தைப்பற்றியே விசாரம் செய்யட்டும்.                                  ஸ்ரீ ஹரி  நம்மைக்  காப்பார்.-ஸ்ரீ ஷீரடி சாய்பாபா.
http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Sunday, March 10, 2013

அஷ்டமஹா சித்தி

பாபா அணிமா சித்தியை பெற்றவர்,கண்ணில் விழும் தூசியளவிளுங்கூட சௌகரியமாக மறைந்து கொள்ளலாம்.ஈயினுடைய உருவத்திலோ,எறும்பினுடைய  ரூபத்திலோ,புழுவினுள்ளோ பாபா சுலபமாக சஞ்சாரம் செய்தது இவ்விதமாகவே.அணிமா,மஹிமா,லகிமா என்னும் அஷ்டமஹா சித்திகளும் நவநிதிகளும் அவருடைய சந்நிதியில் கைகட்டிச் சேவகம் செய்தன.
http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Saturday, March 9, 2013

அறுவை சிகிச்சை

நானா சாஹேப் பாபாவின் மிகப்பெரிய பக்தர்; ஒருமுறை அவருக்கு முதுகுப்புறம் ஏற்பட்ட கட்டியின் காரணமாக அறுவை சிகிச்சை செய்தாகவேண்டும் என்று டாக்டர்கள் குழு தெரிவித்தது. அவரும் அவ்வாறே தயாரானார்.

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அடுத்த நாளில்; அவர் இருக்கும் அறையின் மேல்தளத்தின் ஓடுகள் சரியத்தொடங்கின, அதில் ஒரு கூர்மையான ஓடு மிகச்சரியாக குப்புறப்படுத்துக் கொண்டிருந்த நானாவின் முதுக்கட்டியின் மீது சரக்கென்று விழுந்து, சிதைத்தது. வழியால் துடித்தார் நானா. டாக்டர்கள் அதிர்ந்து போனார்கள்.

கட்டி உடைந்து, ரத்தமும், சீழுமாய் வெளியேறிற்று. டாக்டர்கள் அவசர அவசரமாய் நானாவை சோதித்தார்கள். என்ன ஆச்சரியம்! அறுவை சிகிச்சையே செய்யவேண்டாம் என்று சொன்னது மருத்துவக் குழு.  அத்தனை அற்புதமாக ஆபரேஷன் செய்யப்பட்டது. ஆம். ஏழெட்டு டாக்டர்கள் உத்திரவாதம் தராமல் செய்வதாக இருந்த அறுவை சிகிச்சையை, உத்திரத்திலிருந்து விழுந்த ஒரு ஓடு செய்துவிட்டது!

சில நாட்கள் சென்றன. நானா  சாஹேப் பூரண குணமடைந்ததும் பாபாவைக் காணச் சென்றார்.

"வா-வா .." என்று அவரை அழைத்த சாயிபாபா, தன் ஆட்காட்டி விரலை நானா சாஹேப் முன்னால் நீட்டினார். ஒன்றும் புரியாமல் பார்த்தார் நானா. பாபா புன்னகைத்தார். "என்னப்பா, என்னிடம் நீ சொல்லாவிட்டால் எனக்குத் தெரியாதா என்ன? இதோ என் ஆட்காட்டிவிரலால் கூரையிலிருந்து ஓட்டினைத் தள்ளி, உனக்கு சிகிச்சை செய்ததே நான்தான்!" என்று புன்னகைத்தார் ஷிர்டி சாயிபாபா.

பரவசத்தில் நெகிழ்ந்து போனார் நானா சாஹேப்.

ஆமாம். உங்களுக்கு என்ன பிரச்சனை இருந்தாலும் பாபாவை பிராத்தனை செய்யுங்கள். நீங்கள் பிராத்தனை செய்யாவிட்டாலும் பரவாயில்லை, பாபா உங்களை கவனித்துக் கொண்டுதான் இருக்கிறார், உங்கள் மேல் அக்கறையுடன்தான் இருக்கிறார் என்பதை மட்டுமாவது நம்புங்கள்.உளமார நம்புங்கள். அப்புறம் பாருங்கள், உங்கள் வாழ்வில் நடக்கும் அற்புதங்களை! நம்பவே முடியாத ஆச்சர்யங்களை. ஆமாம் அதுதான் பாபா. சாயிபாபா. ஷிர்டி சாயிபாபா. - மாண்புமிகு மகான்கள்.

    

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Friday, March 8, 2013

காப்பாற்ற ஓடிவருகிறார்

ஒருமுறை பாபாவை அன்புடன் நோக்கினால், அவர் ஆயுள் முழுவதற்க்கும் நம்முடையவர் ஆகிவிடுகிறார். உண்மையான அன்பைத் தவிர நம்மிடம் அவர் வேறெதையும் எதிர்பார்ப்பதில்லை. நாம் கூப்பிடும்போது காப்பாற்ற ஓடிவருகிறார். அந்நேரத்தில் காலமோ, நேரமோ அவருக்குக் குறுக்கே நிற்கமுடியாது. சதாசர்வ காலமும் அவர் நமக்குப் பின்னால் உறுதியாக நிற்கிறார். அவர் எங்கு, எவ்வாறு, எந்த விசையை இயக்குவார் என்று நமக்குத் தெரியாது. அவருடைய செயல்கள் புரிந்துகொள்ளமுடியாதவை.
http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Thursday, March 7, 2013

எங்கும் நிறைந்திருக்கிறார்

நகரும் நகராப் பொருள்கள் அனைத்திலும் சாயி நிரம்பியிருக்கிறார்.சாயி எல்லோருடைய அகத்திலும் புறத்திலும் இருக்கிறார்.சமர்த்த சாயி தீனதயாளர்.நம்பிக்கையுடன் பக்தி செய்து வணங்குபவர்களைப் பாதுகாப்பவர்.உயர்ந்த பிரேமைக்காகப் பசியோடிருப்பவர்.நம் ஊனக்கண்களுக்குத் தெரியாதபோதிலும்,அவர் எங்கும் நிறைந்திருக்கிறார்.தம்மளவில் சூட்சுமமாக இருந்தபோதிலும்,நம்மை அவர்பால் வசீகரித்து இழுக்கிறார்.அவருடைய மரணம் ஒரு பாசாங்கு மட்டுமே;நம்மை ஏமாற்றும் ஓர் உத்தியே.பூரணத்துவம் பெற்ற அவர் பல வேஷங்களில் நடிக்கிறார்.அவருடைய இதயத்தில் கனிந்த அபரிதமான அன்பை கெட்டியாகப் பற்றிக்கொள்வோமாக!அவருடைய மார்க்கத்தை நன்கு புரிந்துகொண்டு காரியசாதனை பெறுவோமாக!
http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Wednesday, March 6, 2013

சத்குரு

குருவின் கிருபையால் ஏற்படும் எழுச்சியும் விழிப்பும் கண்களுக்குப் புலப்படாது,அது எல்லா இந்திரியங்களுக்கும் அப்பாற்பட்டது.மூவுலகங்களிலும் தேடினாலும் சத்குருவைத் தவிர இதை அளிக்கக்கூடியவர் வேறெவரையும் காணமுடியாது.-ஸ்ரீ சாயி இராமாயணம்.
http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Tuesday, March 5, 2013

ஐக்கியமாகிவிடுகிறான்

என்னை வேறொன்றிலும் நாட்டமில்லாமலும் பிரதிபலன் ஏதும் எதிர்பாராமலும் இரவுபகலாகத் தொழுபவன் இரண்டென்னும் மாயையை வென்று என்னுடன் ஐக்கியமாகிவிடுகிறான்.விசுவாசம் நிறைந்த இதயத்துடன் என்னை நினைத்தால் போதும்.சுயநலம் கருதாது என்னை வழிபடுங்கள்;எல்லா மங்களங்களும் விளையும்.-ஷீரடி சாய்பாபா.
http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Monday, March 4, 2013

சாயி நாமம்

சாயி நாமத்தை இடைவிடாமல் ஜபித்துக்கொண்டு,சங்கடங்களை தைரியமாக நேருக்குநேராக சந்தித்தால்,எல்லா ஆபத்துகளும் பறந்தோடிவிடும்.சாயி நாமத்தின் சக்தி அவ்வளவு பிரம்மாண்டமானது.-ஸ்ரீ சாயி இராமாயணம்.
http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Sunday, March 3, 2013

பாபா காட்டிய வழி

பாபா காட்டிய வழியில் நடந்தால் ஆரம்பகாலத்தில் எல்லாமே சுகமாக இருக்கும்.ஆனால்,போகப்போக பாதை புதர் மூடிப்போய் எங்கே பார்த்தாலும் முள்ளாக இருக்கும்.அப்பொழுது நம்பிக்கை ஆட்டம் காணும்.மனம் சுலபமாக சந்தேகங்களால் அலைபாய்ந்து,சாயி ஏன் இந்தக் காட்டுவழிப் பாதைக்கு நம்மைக் கொண்டுவந்தார் என்று நினைக்கும்.அந்தச் சூழ்நிலையில்தான்  நம்பிக்கை நிலையாக நிற்கவேண்டும்.அதுமாதிரி சங்கடங்கல்தான் உண்மையான சோதனைகள்.அசைக்க முடியாத திடமான நம்பிக்கை வேரூன்றும் வழி இதுவே.-ஸ்ரீ சாயி இராமாயணம்.
http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

விருப்பங்களைப் பூர்த்திபண்ணுபவன்

உன்னுடைய மனதில் என்னென்ன தோன்றுகின்றனவோ  அண்ணன்ன விருப்பங்களைப் பூர்த்திபண்ணுபவன்  நானே.உமக்கு இகவுலகில் நல்வாழ்வும் பரவுலகில் மேன்மையும் மோக்ஷமும் அளிக்கக்கூடியவன் நானே.-ஸ்ரீ ஷீரடி சாய்பாபா. 
http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Saturday, March 2, 2013

சத்சரித்திரம் பாராயணம் செய்யும்

"நீர் இவ்விடம் வந்துசேர்ந்தது மிக உயர்ந்த பூர்வபுண்ணிய பலத்தாலேயே.இப்பொழுது என்னுடைய அறிவுரையைக் கேட்டு இந்த ஜென்மத்தைப் பயனுள்ளதாக செய்துகொள்வீராக.மனத்தையும் வாக்கையும் செயலையும் ஒருமுகப்படுத்தி,சத்சரித்திரம் பாராயணம் செய்யும்.
மற்ற விஷயங்களை ஒதுக்கிவைத்துவிட்டு சத்சரித்திரத்தை காதால் கேளும்;
அல்லது நீரே பாராயணம் செய்யும்.முழுநம்பிக்கையுடன் படித்து மறுபடியும் மறுபடியும் படித்ததை ஆழமாகச் சிந்தனை செய்யும்.இறைவன் சந்தோஷமடைந்து  உம்முடைய துக்கங்கள் அனைத்திற்கும் ஒரு முடிவுகட்டிவிடுவான்.மாயையும் மோகமும் விலகும்.அத்தியந்தமான சுகம் கிடைக்கும்"-ஸ்ரீ ஷீரடி சாய்பாபா.
http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Friday, March 1, 2013

செல்வம்

"செல்வம் என்றுமே நிரந்தரமில்லை.சரீரமோ ஒரு நீர்க்குமிழி.மரணம் எப்பொழுதுமே பக்கத்தில் உட்கார்ந்திருக்கிறது என்பதை அறிந்து தருமவழியில் நடப்பீராக".-ஷீரடி சாய்பாபா.
http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

விசுவாசத்தின் ஆழத்திற்க்கேற்றவாறு பக்தனின் பக்தியை கௌரவிக்கிறார் பாபா !

பாபா,  தன் பக்தன் தன்மேல் வைக்கும் "நம்பிக்கை மற்றும் விசுவாசத்தின் ஆழத்திற்கேற்றவாறு",  அவருக்கு மிகச்சிறந்த அனுபவங்களைக் கொடுத்த...