சாதே: குரு சரித்திரம் பாராயணம் செய்து முடித்த ஏழாவது நாளில் ஒரு கனவை கண்டு தீஷித்திடம் அதைப்பற்றி எடுத்துரைத்தார். "பாபா குரு சரித்திரத்தை தமது கரங்களில் வைத்துக் கொண்டு அதன் உட்பொருளை, முன்னால் அமர்ந்து கவனத்துடன் கேட்டுக்கொண்டிருந்த சாதேவிற்கு விவரித்துக் கொண்டிருந்தார்."மறுநாள் காகா சாஹேப் தீஷித்திடம் இக்காட்சியைப்பற்றி அவர் தெரிவித்து சாயிபாபாவிடம் அதன் பொருளைப்பற்றி அறிய விரும்பினார்.
தீஷித்: "தேவா (ஓ தெய்வமே) இந்தக் காட்சியால் சாதேவிற்கு எதனை குறிப்பிடுகிறீர்கள்?
பாபா: அவர் மற்றுமொரு சப்தாஹம் (7 நாள்) பாராயணம் செய்யவேண்டும். அதை அவர் கவனமாகக் கற்பாராயின் அவர் தூயவராகி நன்மை பெறுவார். பரமாத்மாவும் மகிழ்வடைந்து இச்சம்சார வாழ்க்கையின் பந்தங்களிருந்து அவரை விடுவிப்பார்"
http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil