பாபாவுக்கு சேவை செய்யும் அடியவர்,இறைவனிடம் ஒன்றுகலந்த உணர்வை அடைகிறார்.இதர ஸாதனைகளைத் தள்ளிவைத்துவிட்டு குருசேவையில் பணிவுடன் ஈடுபடுங்கள்.அந்த சேவையில் சிறிது கவனக்குறைவு ஏற்பட்டாலும்,கபடமான சாமர்த்தியத்தின் நிழல் பட்டாலும்,பக்தனுக்கு தீமையே விளையும்.தேவை என்னவென்றால்,பாபாவின்மீது உறுதியான விசுவாசமே.மேலும்,பக்தன் சுயமுயற்சியால் என்ன செய்கிறான்?ஒன்றுமில்லையே!அவன் செய்வதையெல்லாம் பாபாவன்றோ லாவகப்படுத்துகிறார்!பக்தன் தனக்கு வரப்போகும் அபாயங்களைப்பற்றி ஏதும் தெரிவதில்லை.பாபா அந்த அபாயங்களை விளக்குவதற்காகச் செய்யும் உபாயங்களுங்கூட பக்தனுக்குத் தெரிவதில்லை.
மூவுலகிலும் தேடினாலும் சாய்பாபாவைப் போன்ற தர்மதாதாவைக் காண்பதரிது.சரணமடைந்தவர்களுக்கு மாபெரும் புகலிடமான பாபாவிடம் வேறெதையும் நாடாமல் பரிபூரணமாக சரணடைவோமாக.
http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil
http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil