Tuesday, April 30, 2013

அனுபூதி

ஒரு விஷயத்தை நன்கு நினைவில் இருத்துங்கள்.உங்கள்  ஆராதனையை பலன் அற்றுப்போகும்படி விடமாட்டேன்.உங்கள் ஆசைகளை நிராசை செய்யமாட்டேன்.நிராசை,உற்சாகமின்மை,மனச்சோர்வு போன்றவற்றில் நான் இருக்கமாட்டேன்.என் உண்மையான சேவகர்களில் மட்டுமே நான் இருப்பேன்.நானே இருப்பேன்.நானாக இருப்பேன்.உங்கள் காரியங்களை உங்களுக்கு முன்பாகவே நானே செய்து முடிப்பேன்.இதுவெறும் பேச்சல்ல.வீணான வாக்கு தானம் அல்ல.உங்களுக்கு  அந்த அனுபூதி நேரிடையாய் கிடைக்கும்.-ஸ்ரீ சாயி திருவாய்மொழி.
http://www.shirdisaibabasayings.com
http://www.faceook.com/shirdisaibabasayingsintamil

Monday, April 29, 2013

ஆபத்துகள் பறந்தோடிவிடும்என் பெயரை இடைவிடாமல் ஜபித்துக் கொண்டு எல்லா விதமான சங்கடங்களையும் தைரியமாக நேருக்கு நேர் சந்தித்தால், எல்லாவிதமான ஆபத்துகளும் பறந்தோடிவிடும். என் நாமத்தின் சக்தி அவ்வளவு மகிமை வாய்ந்தது.

எப்போது சங்கடம் வருகிறதோ அப்போது என் நினைவு உனக்கு வரும். ஏனெனில், அப்போது தானே சங்கடம் விலகும். உனக்குத் தேவையான புத்தி அனைத்தையும் நான் கொடுத்து உன்னை விடுதலை செய்து காத்து ரட்சிப்பேன். இதை மனதில் வைத்துக்கொள். இன்றைக்கு என்ன உணர்வில் இருக்கிறாயோ, அதே உணர்வில் என்றும் இருக்கப் பழகு. எந்தவித முயற்சியும் இல்லாமல் உன்னை கரை சேர்த்துவிடுகிறேன். என்னிடம் திடமான நம்பிக்கை வைத்தாலே போதும், எல்லாம் தானே கிடைக்கும் என்பதில் தளர்வடையா நம்பிக்கைக் கொள்.எல்லா விளைவுகளுக்கும் ஒரு காரணம் உண்டு. அந்தக் காரணம் உனக்கு நன்மை தருவதற்கே ஏற்பட்டது என நம்பு. ஸ்ரீ சாயி-யின் குரல்.         

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Sunday, April 28, 2013

அன்புத் தந்தை நான்
என் மகனே! மகளே! நான் சத்திய தேவன். பொய் சொல்ல மாட்டேன். முழுமையான சரணாகதி அடைந்து நீ கரம் குவித்தால் ஓடி வரும் நாராயணன் நான். உன் விதியை அவ்வப்போது மாற்றிக் கொண்டிருக்கும் கலியுக பிரம்மாவும் நானே! உனது இன்னல்களை அழிக்கும் ஈசனும் நானே! கோபத்தின் போது வெளிப்படும் அக்கினியும், துக்கத்தின் போது வெளியாகும் கங்கையும் நானே! உன் நாசியில் வெளிவரும் வாயுவும் நானே! எங்கும் எதிலும் உனக்காக, உன் சார்பில் இருக்கும் அன்புத் தந்தை நான்.

நீ அமைதியாக இரு.. என் பெயரை சதா உச்சரித்துக் கொண்டிரு.. உனக்குத் தேவையானதை செய்வேன். கடைசி வரை உன் கூடவே இருந்து துணை செய்வேன். - ஸ்ரீ சாயியின் குரல்.

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Saturday, April 27, 2013

வேம்பை விதை; பின்னர் மரத்தை வெட்டு


பி.லகாதே, பி.ஏ., எல்.எல்.பி.
(ஸப் ஜட்ஜாக இருந்தவர், வயது 70, பூனா) ஜூலை 20, 1936.

1913 அல்லது 1914-ம் ஆண்டு வாக்கில் நான் சாயிபாபாவிடம் சென்றேன். நான் ஒரு இக்கட்டில் இருந்தேன்; அதிலிருந்து விடுதலை பெற ஆசிகளை நாடி நான் அவரிடம் சென்றேன். நான் அவரை அணுகிய போது, அவர் என்னிடம் தக்ஷிணை கேட்டார்; நான் கொடுத்தேன். அவராகவே "வேம்பை விதை; பின்னர் மரத்தை வெட்டிவிடு"* என என்னிடம் கூறினார். அவருடைய இந்தப் பேச்சு எனக்கு ஒன்றும் விளங்கவில்லை. நான் அவரிடம் வேண்டிச் சென்ற ஆசிர்வாதம் அல்ல அது. நான் மிகவும் ஏமாற்றமடைந்தேன்.

* குற்றவியல் நீதிமன்றத்தில் லஞ்சம் வாங்கியதாக அவர் மீது ஒரு ஊழல் வழக்கு தொடரப்பட்டு, அவர் குற்றவாளி எனக் கருதப்பட்டு கடும் அபராதத்துடன் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. மேல் முறையீட்டிலும் இது ஊர்ஜிதமாயிற்று. இந்த வழக்கு நிலுவையில் இருந்தபோது தான் இவர் (லகாதே) தாம் வெற்றிபெற ஆசிகோரி பாபாவை அண்டினார். வேம்பு விதைப்பதும், வேம்பு அறுவடை செய்வதும் கர்மாவின் நியதி பற்றிய பாபாவின் உபமானக் கதை. கசப்பானதை விதைத்தால், கிடைப்பது அதே ரகமாக, கசப்பாகத் தான் இருக்கும். ஆதலால், ஒருவன் தான் செய்த பாவச் செயலுக்கு உண்டான தண்டனை முழுவதும் அனுபவித்து கர்மவினையைப் போக்கிக் கொண்டு, இதை படிப்பினையாகக் கொண்டு எதிர்காலத்தில் பயனடைவதே சிறந்தது. - ஸ்ரீ சாயிபாபாவின் பக்தர் அனுபவங்கள்- பூஜ்ய நரசிம்ம சுவாமிஜி.           

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Thursday, April 25, 2013

எங்கும் வியாபித்துள்ளேன்


நான் இந்த பெளதீக உடலுடன் ஷிரிடியில் மாத்திரம் இருக்கிறேன் என்ற எண்ணத்தை விட்டு விடுங்கள். நான் எங்கும் வியாபித்துள்ளேன்- ஷிர்டி சாய்பாபா.


http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Wednesday, April 24, 2013

ஆராதனை
வெளிப்புறமாக நீங்கள் செய்யும் ஆராதனை, உங்களுக்குள் இருக்கும் என்னை அடைகிறது. அப்போது நான் சக்தி உடையவனாகி உங்களை காப்பாற்றுகிறேன். - ஷிர்டி சாய்பாபா

http://www.shirdisaibabasayings.com

http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Tuesday, April 23, 2013

சத்ச்சரித்ரா 6சாயி-யின் முன்னால் எவன் சாஷ்டாங்க சரணம் செய்து, தனது இதயத்தையும் உயிரையும் அவரிடம் சமர்பிக்கிறானோ, அவன் வாழ்கையின் நான்கு முக்கிய குறிக்கோளாகிய அறம் (தருமம்), பொருள் (செல்வம்), இன்பம் (ஆசை), வீடு (முக்தி) இவைகளை எளிதில் அடைகிறான்- ஷிர்டி சாய்பாபா (சாயி சத்ச்சரித்ரா 6 )


http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Monday, April 22, 2013

உண்மையான வாழ்க்கை பாதைஸ்ரீ சாயிசத் சரித்திராவை கவனமாகவும், தொடர்ந்து இடைவிடாதும் படியுங்கள். எல்லா விடைகளும் உங்களுக்கு கிடைக்கும். எல்லா ஆன்மீகப் புத்தகங்களும், குருக்களின் வாழ்க்கை வரலாறுகளும் அடிப்படையில் உண்மையான வாழ்க்கை பாதை பற்றியே கூறுகின்றன. 

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Sunday, April 21, 2013

நல்வழி காட்டுவார்பொறுமையை யார் கையாள்கிறாரோ, அவருடன் தாம் இருப்பதாக பாபா எப்போதும் சொல்லி வந்தார். ஆனால் உங்களால் இயன்றவரை எதிர்மறையான சூழ்நிலைகளிலிருந்து விலகி நிற்பது நன்று. அவரை வேண்டி நின்றால், உள்ளிருந்த வண்ணமே அவர் நல்வழி காட்டுவார். பயனற்ற விவாதங்களிலும், சச்சரவுகளிலும் வீணாக்காமல் உங்கள் பொன்னான நேரத்தை சேமித்து வைத்து பாபாவின் சேவைக்கு என ஒதுக்குங்கள். - சத்பதி  

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Saturday, April 20, 2013

கர்மாவின் தீவிரம்


உனக்கு ஒரு விஷயத்தை தெளிவுபடுத்த விரும்புகிறேன். கவனமாகக் கேள்! இதுவரை மட்டுமல்ல, இன்னமும் நீ அனுபவிக்கிற, எதிர் கொள்கிற ஒவ்வொரு செயலும் உன் முன் ஜென்ம கர்மாவின் படிதான் நடக்கிறது. இதை மாற்ற இயலாது. பரமேஸ்வரனாலேயே மாற்ற முடியாத ஒன்றை நீ அனுபவித்துதான் ஆகவேண்டும்.

கர்மாவை மாற்ற முடியாத கடவுளை எதற்காக கும்பிடவேண்டும் என நீ நினைக்கலாம். கர்மாவின் தீவிரத்தை குறைத்து, அதை நல்ல வழியில் மாற்ற வழி காட்டுவதற்கு குரு வழிபாடு வேண்டும்.  - ஸ்ரீ சாயியின் குரல்.
  

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Friday, April 19, 2013

எலும்புகள் பேசுவதை கேட்பீர்கள்நான் இல்லாமல் போய்விடுவேன் என்று ஒரு காலமும் கவலைபடாதீர்கள். உங்கள் நலன் கொண்ட விஷயங்களைபற்றி என்னுடைய எலும்புகள் பேசுவதை கேட்பீர்கள். - ஷிர்டி சாய்பாபா      


http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Thursday, April 18, 2013

வளம் பெருகும்
பாலக்ருஷ்ண ராமச்சந்திர கைரீகர், வயது 70, ஜூலை 27, 1936.

நான் முதன் முதலில் சாயி பாபாவைப் பற்றி கேள்விப்பட்டது அவர் ஒரு பைத்தியக்காரன் என்று. அது சுமார் 35 வருடங்களுக்கு முன்பு. ஆனால் எல்லோருமே அவரைப் பற்றிப் பேச ஆரம்பித்ததும் ஷிர்டியிலுள்ள எனது உறவினர் குல்கர்னி முலம் அவரை காணச் சென்றேன். நான் ஒரு பரம்பரை கிராம அதிகாரி. 1916-ம் ஆண்டில் அரசாங்கம் எங்களைப் பணியிலிருந்து நீக்கிவிட்டது. அந்தக் காலத்தில் மக்கள் சித்தலே, ஜல்காம், ராம்பூர், நாத்யட்ல்சா,வாடி, பிம்பல்வாடி வழியாக ஷிர்டி செல்வார்கள். அந்த சாலை உபயோகிக்கப்படாததால் இப்போது அது காணப்படவில்லை.

பாபா விளக்குகளில் நீர் ஊற்றி எரிய வைத்ததை நான் பார்த்திருக்கிறேன். 1908-ம் ஆண்டில் ஒரு சமயம் நான் பாபாவிடம் சென்றபோது மசூதியில் ஒரு தம்பிடி (பைசா) நாணயத்தின் மீது காலை வைத்துவிட்டேன். நான் அதை கையில் எடுத்து. "இதை பத்திரமாக வைத்துக் கொள்ளுங்கள். இது தங்களுடைய நாணயம்" எனச் சொல்லி பாபாவிடம் கொடுத்தேன். பாபா அதை என்னிடம் திருப்பிக் கொடுத்து, "அது சரி. இந்த நாணயத்தை உன் வீட்டிற்கு கொண்டு போ. மற்ற விக்ரகங்களுடன் இதையும் உன் பூஜையில் வை. உனக்கு வளம் பெருகும்" எனக் கூறினார். நான் அதை எடுத்துச் சென்று பூஜித்து வந்தேன். மூன்று ஆண்டுகள், அதாவது 1911-ம் ஆண்டு வரை, நான் வளமாயிருந்தேன். அதற்கு முன்பு, இரவு சாப்பாட்டுக்கு எனக்கு அரிசி கூட கிடைக்காது. ஆனால் இந்த பூஜை தொடங்கிய பின், என் மனைவி தங்க வளையல்கள் வாங்கிக் கொள்ளும் அளவுக்கு என் உத்தியோகத்தில் வருமானம் கிடைத்தது. பின்னர் பயணம் மேற்கொண்டு அசுத்தி ஏற்பட்ட சமயம் என் பூஜையையும், பாராயணம் செய்யும் புத்தகத்தையும், தம்படி (நாணயத்தை) ஒரு நண்பரிடம் கொடுத்து வைத்திருந்தேன்; சில நாட்களுக்கு பின்னர் நாணயம் காணாமற்போயிருந்தது. அது முதல் (1911) என்னை துரதிருஷ்டம் துரத்துகிறது. நாணயம் தொலைந்து 6 மாதங்களில் என் மனைவி இறந்தாள். 1916-ல் என் வேலை பறிபோயிற்று. 1917-18-ல் என் அன்னை இறந்தாள். இப்போது உணவை நான் யாசித்துப் பெறுகிறேன். ஓவ்வொரு ராம நவமிக்கும் ஷீரடிக்கு சென்று வருகிறேன். - ஸ்ரீ சாயிபாபாவின் பக்தர் அனுபவங்கள்.

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Wednesday, April 17, 2013

தற்கொலைக்கு முயச்சித்த சம்பவம்பூனாவில் வாழ்ந்த கோபால் ஆம்ப்டேகர் நாராயண் என்ற பக்தர், பிரிட்டிஷ் ராஜாங்கத்தில் கலால் வரி இலாக்காவில் 10 ஆண்டு வேலை பார்த்த பிறகு அந்த வேலையை விட்டு விட்டார். அதன் பிறகு கஷ்ட காலம் ஆரம்பித்தது. துன்பத்திற்கு மேல் துன்பம் நேரவே, எல்லா விதத்திலும் சோர்வடைந்து விட்டார். நிதி நிலைமை மோசமானது. ஆபத்துகள் வரிசையாக வந்தன. குடும்ப நிலைமை சகிக்க முடியாமல் ஏழு வருடம் திண்டாடினார். ஒவ்வொரு ஆண்டும் ஷிர்டி சென்று பாபாவை இரவு, பகலாக வணங்கி ஓப்பாரி வைத்து அழுதார். (பாபா உடம்போடு இருந்த காலம் அது.)

1916-ஆம் ஆண்டு, 2 மாதம் ஷீரடியில் தங்கினார். துன்பத்தை தாங்க முடியாமல் ஒருநாள் ஷிர்டி கிராமத்திலுள்ள ஒரு கிணற்றில் விழுந்து இறந்து விட முடிவு செய்து கொண்டு ஒரு மாட்டு வண்டி மீது உட்கார்ந்திருந்தார்.

அப்போது எதிர்பாராத விதமாக சகுண் மேரு நாயக் என்ற பாபாவின் பக்தர் ஒருவர், தன் வீட்டருகே கவலை தோய்ந்த முகத்துடன் இருக்கும் ஆம்ப்டேகரை கவனித்து, அவரிடம் வந்து அக்கல்கோட் மகாராஜ் பற்றிய புத்தகம் ஒன்றை கொடுத்து படிக்கச் சொன்னார். அதை வாங்கிய ஆம்ப்டேகர் அந்தப் புத்தகத்திலிருந்து சில பக்கங்களை புரட்டினார்.

அக்கல்கோட் மகராஜின் பக்தர் ஒருவர், வியாதியை தாங்கமுடியாமல் தற்கொலைக்கு முயச்சித்த சம்பவம் அந்த புத்தகத்தில் அவர் படித்த பக்கத்தில் இருந்தது. அந்த பக்தர் கிணற்றில் விழுந்து தற்கொலைக்கு முயன்ற போது அக்கல்கோட் மஹராஜ் தோன்றி அவரை காப்பாற்றி, தற்கொலையின் தீங்கு பற்றி உபதேசம்செய்தார் .

"எதை அனுபவிக்கவேண்டும் என்று இருக்கிறதோ அதை அனுபவித்தே தீரவேண்டும். பூர்வ ஜென்மத்தின் வினைகளை ரோகங்களாகவும் (வியாதி), குஷ்டமாகவும், வலி, கவலையாகவும் முழுவதும் அனுபவித்து தீர்க்கும் வரை தற்கொலை எதை சாதிக்க முடியும்? துன்பத்தையும், வலியையும் முழுமையாக அனுபவித்து தீர்க்காவிட்டால் அதை முடிப்பதற்காகவே இன்னும் ஒரு ஜென்மம் எடுக்கவேண்டும். ஆகவே, இந்த துன்பத்தை இன்னும் கொஞ்சம் பொறுத்துக்கொள். உன் உயிரை நீயே அழித்துக் கொள்ளாதே!" என்று உபதேசித்தார்.

இந்த செய்தியை படித்த ஆம்ப்டேகர் மனம் மாறி, தன் செயலுக்கு வருந்தினார். சமயத்தில் தகவலை அனுப்பி காப்பாற்றிய பாபாவுக்கு நன்றி சொன்னார்.     

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Tuesday, April 16, 2013

சிரத்தாவுடன் கூடிய சபூரிஎந்த ஒரு நிகழ்வுக்கும் பின்னால், தன் பக்தர்களுக்காக பாபா செய்யும் எல்லா செயல்களையும் அந்த பக்தர்கள் அந்த நேரத்தில் அறியமாட்டார்கள். பக்தருடைய முன்வினைகளை (முந்தைய கர்மாக்களை) நன்கு அறிந்த சத்குரு அமைதியாக பக்தரிடம் மனமாற்றத்தை ஏற்படுத்த முயற்சி செய்கிறார். கால ஓட்டத்திலும், மேலும் பாபாவால் நிர்ணயிக்கப்பட்ட அந்த குறிப்பிட்ட நேரத்திலும் பாபாவின் ஆசிகளின் பலனை ஒருவர் பெறவேண்டுமானால் அதற்கு மிகுந்த நம்பிக்கையும், பொறுமையும் தேவைப்படுகிறது. இக்காரணத்தினால்தான் சிரத்தாவுடன் கூடிய சபூரி அதாவது நம்பிக்கையுடன் கூடிய பொறுமை என்பதை பாபா முக்கிய தகுதிகளாகக் கூறியுள்ளார். 

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Monday, April 15, 2013

காத்திருத்தல் வேண்டும்ஒரு உண்மையான பக்தரின் கோரிக்கைகள் பாபாவினால் எப்போதும், எந்த சூழ்நிலையிலும் நிராகரிக்கப்பட்டதில்லை அசையாத தளராத நம்பிக்கையும், பொறுமையும் கொண்டு பாபாவின் பதிலுக்காக காத்திருத்தல் வேண்டும்.
http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Sunday, April 14, 2013

மாயத்தோற்றம்மாயை என்று அழைக்கப்படும் இவ்வுலக வாழ்க்கை நிகழ்வுகளுக்கு நடுவில் வாழும் வரை இந்நிலைமையை ஒருவரால் தவிர்க்க முடியாது. இவ்வுலக நடவடிக்கைகளை முற்றிலும் துறந்து ஒரு யோகி அல்லது சன்னியாசியாக மாறினால்தான் இந்த நிலையை தவிர்க்கமுடியும். அதே சமயத்தில் ஒருவர், பாபாவின் நாமத்தை ஜெபிப்பது, பாபாவைப் பற்றி மற்றவர்களிடம் பேசுவது, பாபாவைப் பற்றி படிப்பது, பாபாவையே நினைப்பது போன்ற சில வழிகளில் எப்போதும் பாபாவையே இறுகப் பற்றிக்கொண்டால், மாயையின் தாக்குதல்களை எதிர்க்கும் மனோபலத்தை வளர்த்துக் கொள்வதற்கும் பாபாவின் உதவி நமக்குக் கிடைகிறது. எவ்வளவுக் கெவ்வளவு பாபாவின்மீது உள்ள ஈடுபாடு அதிகரிக்கிறதோ அவ்வளவுக்கவ்வளவு மாயத்தோற்றமான இவ்வுலக நடவடிக்கைகளில் ஈடுபாடு குறைகிறது.       

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Saturday, April 13, 2013

கலங்கரை விளக்கம்நம்மில் பலர், நான் பாபாவிடம் சரணடைந்துவிட்டேன், பாபாவின் கதைகளையும், லீலைகளையும் தினமும் படிக்கிறேன், கேட்கிறேன், தியானமும் செய்கிறேன். ஆனாலும் எனக்கு வந்த கஷ்டங்கள் இன்னும் தொடருகின்றன. எப்போது பிரச்சனை முடியும் என்று தெரியவில்லை. அவர் எப்போது எனக்கு கலங்கரை விளக்காக இருக்கப் போகிறார்? எனப் புலம்புவார்கள்.

இது போன்றவர்கள் புலம்பும்போதும் கண்ணீர் விட்டுக் கதறும்போதும், சத்குருவே இவர்களுக்கு உடனடியாகத் தீர்வை தாருங்கள் என நம் மனம் கேட்டுக்கொண்டாலும், அவர்களுக்குள்ளேயே உள்ள நம்பகத் தன்மை, அகங்காரம், எதிர்பார்ப்பு இவைகளால் தாமதம் ஏற்படுகிறது. இதைப் பற்றி 24-ம் அத்தியாயம் தெளிவாகக் குறிப்பிடுகிறது.- ஸ்ரீ சாயி தரிசனம்

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Friday, April 12, 2013

ஜோதிடத்தை பொய்யாக்கினார் பாபாசத்சரித்திரம் ஒன்பதாவது அத்தியாயத்தில் தர்கட் குடும்பம் பற்றி அதிகமாக பேசப்படுகிறது. இந்த அம்மையார் மும்பை புறநகர்ப் பகுதி பாந்த்ராவைச் சேர்ந்தவர். இவரது கணவர் பெயர் ராமச்சந்திர ஆத்மா தர்கட். இவர்களது மகன் பாபு. இந்தக் குடும்பம் பாபா மீது தீவிர பக்தி செலுத்தியது. பாபு தேர்வு எழுத்தும் முன்பு இவனை ஆசீர்வதித்து ஜோதிடத்தை பொய்யாக்கினார் பாபா. பாபாவுக்கு முழு கத்தரிக்காய், தயிர்பச்சடி போன்றவற்றை தயார் செய்து பாபாவுக்கு அளிப்பார். முன் ஜென்மத்தில் பால் தரும் பசுவாக இருந்து சேவை செய்தவர் என இவரை பாபா போற்றியுள்ளார்.

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Thursday, April 11, 2013

நான் யார் என்பதை எண்ணிப்பார்


பாபாவின் முன்பு குர்ரான் புனித நூல்களைப் படித்து அவரிடம் விளக்கம் பெற முசல்மான்கள் (முஸ்லிம்) யாரும் வரவில்லை. ஆனால் பல பகீர்களும், சாதுக்களும் இங்கு வந்தனர். எல்லா தெருக்களையும் பெருக்குவது, துப்புரவு செய்வது போன்ற பல பணிகளைச் செய்து பாபாவின் தொண்டில் நான் ஈடுபட்டு வந்தேன். பின்னர் பாபாவின் அருகில் குர்ரான் போன்ற நூல்களைப் படித்துக் கொண்டு இரவு முழுவதும் விழித்திருப்பேன். அவர் எனக்கு கூறிய அறிவுரை: "மிகக் குறைவாக சாப்பிடு. வகை வகையான பல பதார்த்தங்களை நாடாதே; ஒரே வகை உணவு போதும். அதிகம் தூங்காதே!" பாபாவின் அறிவுரையை நான் பின்பற்றி வந்தேன். மிகக் குறைவாகவே உண்டேன். இரவு முழுவதும் விழிப்புடன் இருந்து, மண்டியிட்டவாறு குர்ரான் முதலியவற்றை திரும்பத் திரும்ப படித்தும், பாபாவின் அருகிலேயே தியானம் செய்தும் வந்தேன். நான் படித்ததை தியானம் செய்யும்படி பாபா கூறினார். "நான் யார் என்பதை எண்ணிப்பார்" எனக் கூறுவார்.  - அப்துல் பாபா (சுல்தான் என்பவருடைய மகன், சுமார் 65 வயது, முசல்மான், ஷீரடியில் வசிப்பவர்).ஷிர்டி, மார்ச் 10, 1938. 
  
http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Wednesday, April 10, 2013

கடன்பாக்கி

எனக்கு என்ன வீடா,வாசலா,குடும்பமா,குழந்தையா? நான் ஏன் தக்க்ஷினை கேட்கவேண்டும்?நான் எதையும் எவரிடமிருந்தும் பெற்றுக்கொள்வதில்லை.கடனைத் திருப்பி கேட்பவள் இந்த மசூதிமாயீ!
கொடுப்பவர் தம் கடனிலிருந்து விடுபடுகிறார்.
தேவைப்படும் நேரத்தில் மிகப் பணிவாகவும் இரக்கமாகவும் கெஞ்சுகிறார்கள்;
காரியம் கைகூடிய பிறகு அதைப்பற்றி சிறிதும் கவலைப்படுவதில்லை.
என் பக்தர்கள் எவர் கடன்பாக்கி இல்லாதவரோ அவரே எனக்கு சந்தோஷத்தை அளிக்கிறார்.-ஸ்ரீ ஷிர்டி சாய்பாபா.
http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Tuesday, April 9, 2013

கோபம்


எனக்கு வேகமாக கோபம் வருகிறது. அப்பொழுது உணர்ச்சியால் நான் செயலிழக்கிறேன். இதை போக்குவது எப்படி?
உங்களுக்கு கோபம் வரும்போது , ஸ்ரீ சாயிபாபாவை வேண்டுங்கள். அதோடு அவரின் வாழ்க்கை வரலாறான 'சாயிசத் சரித்திரம்' புத்தகத்தை படியுங்கள். நாளடைவில் உங்கள் கோபம் குறைந்து கொண்டே வரும். யாருடனாவது நீங்கள் கோபமாக இருந்தால் அங்கு நின்று சண்டையிடுவதைவிட நீங்கள் அந்த இடத்தை விட்டு அகலுவது நல்லது. சண்டையிடுபவர்களை விட, பொறுமையாக இருப்பவர்களையே தான் அதிகம் விரும்புவதாக பாபா கூறியுள்ளார். -குருஜி சத்பதி.

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Monday, April 8, 2013

அல்லா காப்பார்பெரும் துன்பம் ஏற்பட்டால், நான் எப்போதும் என் வீட்டிலுள்ள பாபா படத்தின் முன் கதறுவேன்; உடனையே அவர் என் முன் தோன்றி எனக்கு ஆறுதல் அளிப்பார். ஜாம்நேரில் (ஜாம்நகர்) பிரசவ காலத்தில் உடல் நிலை பாதிக்கப்பட்ட தனது மகளுக்கு உதவி செய்ய ஊதியுடன் (விபுதி) ஒருவரை பாபா அனுப்பியதாக நானா சந்தோர்கர் என்னிடம் கூறியுள்ளார்; அதாவது தான் அனுப்பி வைக்காத ஒரு டோங்காவாலா (குதிரை ஓட்டுபவர்), குதிரைகள் பாபாவின் தூதனை அழைத்து வந்து விட்டு மறைந்து விட்டனர். ராம் கீர் கோசாவி என்ற அந்த தூதர் இன்னமும் ஷீரடியில் வசிக்கிறார். பாபா அவரை பாபுகீர் என அழைப்பார்.

அத்வைதம் பற்றி பாபா என் முன் பேசியதில்லை."அல்லா காப்பார்". "கடவுள் யாவரையும், எளியோரையும் ரக்ஷிக்கிறார்" போன்றெல்லாம் எப்போதும் கூறுவார் . கரீபதோ அல்லா பாலீத் ஹை, அல்லா அச்சா கரேங்கா.

"ஜோ கோயீ யேமஸாஜீதமேம் ஆவே, ஜிஸ்கா மஸ்ஜீதஹே பாயி லகா, உஸ்கா பேடா பரா ஹை," அதாவது "மசூதியில் காலடி எடுத்து வைப்பவர் யாராயினும் அவருடைய லட்சியத்தை அடைவார்." - ரகுவீர் புரந்தரே, பூனா, மே 4, 1936. - ஸ்ரீ சாயிபாபாவின் பக்தர் அனுபவங்கள் - பூஜ்ய ஸ்ரீ நரசிம்ஹ சுவாமிஜி.

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Sunday, April 7, 2013

சுமைகளையும் பொறுப்புகளையும் நாமே ஏற்க வேண்டும்


நான் ஷீரடிக்கு சென்றதில்லை. நண்பர்கள் பாபாவைப் பற்றிப் பேச கேட்டிருக்கிறேன். என்னிடம் அவருடைய படம் இருக்கிறது. சாயி பாபாவின் படத்தை நான் பூஜிப்பதில்லை. அவரை ஒரு மகானாக கருதுகிறேன்.

1917-ல் நோர்வேகர் (கஜானன்) நோய்வாய்ப்பட்டார். அவருடைய மகன் ரூ.500-ஐ எடுத்துச் சென்று பாபாவிடம் அளித்தான். அதைப் பெற்றுக் கொண்டவுடன் பாபா ஜூரத்தால் நடுங்க ஆரம்பித்தார். விளக்கம் கேட்டபோது, "பிறருக்கு எதாவது செய்யவேண்டுமென நினைத்தால், அதன் சுமைகளையும் பொறுப்புகளையும் நாமே ஏற்க வேண்டும்" என பாபா பதில் அளித்தார். சில நாட்களில் கஜானன் நோர்வேகர் ஜூரத்திலிருந்து குணமடைந்தார்.

ஒருசமயம் மிக சிக்கலான ஒரு கிரிமினல் வழக்கு விஷயமாக நான் துப்பு துலக்க வேண்டியிருந்தது. நான் உதவிக்காக பாபாவிடம் பிராத்தனை செய்தேன். சாயி பாபா என் கனவில் தோன்றி, நான் எப்படி செயல்படவேண்டுமென சில வழிமுறைகளை எடுத்துரைத்தார். அதன்படி நடந்ததில் என் துப்பறியும் பணி வெற்றிகரமாக முடிந்தது. - ஜோசப் பெளஸ்தார்

ஜோசப் பெளஸ்தார்: (ஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரி - கிறிஸ்துவர், வயது 46, டர்னர் ரோடு, பந்த்ரா) செப்டம்பர் 26, 1936. - ஸ்ரீ சாயிபாபாவின் பக்தர் அனுபவங்கள் - பூஜ்ய ஸ்ரீ நரசிம்ஹ சுவாமிஜி.      

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Saturday, April 6, 2013

படைத்துக் காப்பவனும் நானே

உங்கள் தேவைகள், வேலைகள் எதுவானாலும் எனக்கு அர்ப்பணமாக செய்யுங்கள். நான் உங்கள் நலனில் அக்கறை உள்ளவன், காப்பாற்றுபவன்.உங்களை ஆட்டுவிப்பவன் நானே...எல்லாவற்றையும் படைத்துக் காப்பவனும் நானே...உலகத்தின் ஆதாரம் நானே..எவன் என்னை மனதார நினைக்கிறானோ அவனுக்கு எப்போதும் துன்பம் நேராது-ஸ்ரீ ஷிர்டி சாய்பாபா.
http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Friday, April 5, 2013

சேவை

சேவை செய்வதோ,செய்யாமலிருப்பதோ நமது இஷ்டம் என்ற எண்ணத்துடன் சேவை செய்வது சேவை ஆகாது.இந்த சரீரம் நமது உடமையல்ல,அது பாபாவினுடையது.அவருக்கு பணி புரிவதற்கென்றே  ஏற்பட்டது என்ற மனோபாவத்துடன் செய்யப்படும் பணியே சேவை ஆகும்.
http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Thursday, April 4, 2013

அனைத்து வியாதிகளும் குணப்படுத்தப்படும்


என்னுடைய கதைகள், உபதேசங்கள் இவைகளைக் கேட்போருக்கு நான் பணிவிடை செய்வேன். செய்வது மட்டுமல்ல, அவர்கள் ஆசைகளையும் பூர்த்தி செய்வேன். என்னுடைய கதைகள் வெறுமனே கேட்கப்பட்டால் கூட அவர்களது அனைத்து வியாதிகளும் குணப்படுத்தப்படும். என்னுடைய பக்தர்களை எக்கணமும் அச்சுறுத்துகின்ற ஆபத்துக்களின் கோரப்பற்களிலிருந்து நான் வெளியே இழுத்துவிடுவேன்.-ஷீரடி சாயிபாபா

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Wednesday, April 3, 2013

பாபாவின் அதீத சக்தி


மும்பையினை சேர்ந்த வியாபாரி சங்கர்லால் கே.பட். அவருக்கு கால் ஊனம்.  அவர் நடப்பது ஒரு மாதிரி கேலி செய்வது போலிருக்கும். இது அவரை மிகவும் வேதனைப்படுத்தியது.  எல்லாவித சிகிச்சை முறைகளையும் செய்து பார்த்தும் எந்த வித பிரயோசனமும் இல்லை.
மனதால் ரணப்பட்ட அவருக்கு என்ன செய்வது என்று தெரியாத நிலை. இதற்க்கு வழி தெரியாமல் இருட்டில் நிற்பது போல் உணர்ந்தார்.
தன் கால் ஊனத்திற்க்கு என்னதான் விடிவு என்பது சங்கர்லால் விசாரிக்க ஆரம்பித்தார்.  அப்போது அவருக்குத் தெரிந்தவர்கள் சீரடி சாயிபாபா பற்றியும் அவரின் வியத்தகு சக்தி பற்றியும் எடுத்துக்கூறினார்கள்.
1911-ம் ஆண்டு அவர் சீரடி வந்தார். பாபாவை வீழ்ந்து வணங்கினார். அவரது ஆசிர்வாதம் பெற்றார்.  பின் பாபா அனுமதியுடன் சீரடியினை விட்டு புறப்பட்டார்.  கொஞ்ச தூரம் நடந்ததும், அவரது நடையில் மாற்றம் தெரிந்தது.  முன்போல நொண்டி நொண்டி நடக்காமல் நன்றாகவே நடந்தார். அவர் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. தனது ஊனம் நிரந்தரமாகவே குணமானது பற்றி நினைத்து நினைத்து பாபாவிற்க்கு நன்றி கூறினார்.
பாபாவின் அதீத சக்தியை எண்ணி ஆச்சரியப்பட்ட அவர், ஊர் திரும்பியவுடன் பாபாவின் தரிசன மகிமை பற்றியும், வியத்தகு சக்தி பற்றியும் எல்லோரிடமும் சொல்லி அனைவரையும் வியப்படையச் செய்தார்.
பாபா தன்னிடம் வருபவர்களின் வேண்டுகோளை தனது ஆசியால் தனது பார்வையால் நிறைவேற்றி வந்தார். இப்பொதும் நிறைவேற்றி வருகிறார். அவரின் சமாதி அத்தனை மந்திர சக்தி வாய்ந்தது.  சமாதியில் இருந்துகொண்டே தனது பக்தனின் பிரச்சனைகளை அலசி ஆராய்ந்து தீர்வு தருகிறார் என்பதுதான் நிதர்சனமான உண்மை.

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Tuesday, April 2, 2013

பக்தர் அனுபவங்கள்


நானா சாகேப் தெங்களே எனும் ஒரு பக்தர் ஒரு முறை வெள்ளித்தட்டு நிறைய பலவகை ருசியான பண்டங்களை கொண்டு வந்து பாபாவிடம் அவற்றை சாப்பிட வேண்டுமென வேண்டினார். பாபா உரக்க கத்தினார். ஒரு கருப்பு நாய் ஓடி வந்து அந்த உணவின் ஒரு பகுதியை நக்கிவிட்டது. அருகில் நின்று கொண்டிருந்த நானா சாகேப் இதை அருவெறுப்புடன் நோக்கினார். "இந்த கீழ்த்தரமான நாய்க்காகவா நான் இவற்றை தயார் செய்தேன்!" என அவர் மனதில் எண்ணம் தோன்றியது. உடனே பாபா உணவுப் பொருட்களுடன் அந்த தட்டை தூக்கி எறிந்து. "இதை எடுத்துச் செல்" என உத்தரவிட்டார். அப்போது நான் அங்கிருந்தேன் - தாமோதர் ஸாவால்ராம் ராஸனே.   

ஈனமான ஜந்துக்களையும், தாழ்ந்த நிலையிலுள்ளோரையும் தமக்கு இணையாகவோ, அல்லது தாமாகவோ பாபா நடத்தி வந்ததை நான் எப்போதும் நினைவில் கொண்டுள்ளேன். ஒரு சமயம் பாபா எங்கும் வரமாட்டார், என் விடுதியில் உணவு ஏற்கமாட்டார் என நன்கு அறிந்த நான் பாபாவிடம் சென்று பாலா படேலை எனது விருந்தாளியாக அனுப்பி வைக்கும்படி கேட்டுக்கொண்டேன். பாலா படேல் தாழ்ந்த குலத்தை சார்ந்தவர்; ஆகவே அவரை அனுப்ப சம்மதித்த பாபா, "அவனிடம் தட் தட் எனக் கத்தாதே!" எனக் கூறினார். அதாவது நாம் சாப்பிடும் இடத்திலிருந்து விலகி தனியே இலை போட்டு அவரை உண்ணவைத்து அவரை அவமரியாதை செய்யக்கூடாது என்பது. நான் ஒப்புக்கொண்டேன். அறுசுவை உணவு தயார் செய்து, பாபாவுக்காக ஒரு இலை போட்டு எல்லா உணவு வகைகளையும் அதில் பரிமாறி  "பாபா!வருக!" என அழைத்தேன். ஒரு கருப்பு நாய் ஓடிவந்து அந்த உணவை உண்டது. அது சாப்பிட்டு முடிக்கும் வரை நான் பயபக்தியுடன் காத்திருந்து, அதன் பின்னர் பிறருக்கு விருந்தளித்து நானும் உண்டேன். என் அருகில் பாலாவுக்கு ஒரு இலை போட்டு சாப்பிட வைத்தேன். வீட்டுக்கு வெளியிலல்ல. - தாமோதர் ஸாவால்ராம் ராஸனே.

ஆதாரம்:ஸ்ரீ சாயிபாபாவின் பக்தர் அனுபவங்கள் - பூஜ்ய நரசிம்ஹ சுவாமிஜிhttp://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Monday, April 1, 2013

உனக்காகவே இருக்கிறேன்


ஏங்குதல்,போராட்டங்களை  விடுத்து என்னையே சார்ந்திரு,நான் உன்னுடனையே இருப்பேன்.நான் உன்னுடைய தாகத்தை  தீர்ப்பதற்காக வருவதற்குள் உன் மனம் சஞ்சலமடைந்து,எங்கேயோ  செல்லுகிறாய்.நான் உனக்காகவே இருக்கிறேன். பாரத்தை என்மேல் சுமத்து சாந்தி ஏற்படும்.-ஷீரடி சாய்பாபா.       


http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

பாபாவின் கருணாகடாக்ஷம் ஒன்றே போதும் !

பாபாவினுடைய கருணாகடாக்ஷமும் ஆசீர்வாதமும் பிரசாதமும் எல்லாத் துன்பங்களையும் ஒழிக்கின்றன; வேறெதுவும் தேவையில்லை ! - ஸ்ரீஸாயீ ஸத்சரித்திரம் htt...