பாபாவின் முன்பு குர்ரான் புனித நூல்களைப் படித்து அவரிடம் விளக்கம் பெற முசல்மான்கள் (முஸ்லிம்) யாரும் வரவில்லை. ஆனால் பல பகீர்களும், சாதுக்களும் இங்கு வந்தனர். எல்லா தெருக்களையும் பெருக்குவது, துப்புரவு செய்வது போன்ற பல பணிகளைச் செய்து பாபாவின் தொண்டில் நான் ஈடுபட்டு வந்தேன். பின்னர் பாபாவின் அருகில் குர்ரான் போன்ற நூல்களைப் படித்துக் கொண்டு இரவு முழுவதும் விழித்திருப்பேன். அவர் எனக்கு கூறிய அறிவுரை: "மிகக் குறைவாக சாப்பிடு. வகை வகையான பல பதார்த்தங்களை நாடாதே; ஒரே வகை உணவு போதும். அதிகம் தூங்காதே!" பாபாவின் அறிவுரையை நான் பின்பற்றி வந்தேன். மிகக் குறைவாகவே உண்டேன். இரவு முழுவதும் விழிப்புடன் இருந்து, மண்டியிட்டவாறு குர்ரான் முதலியவற்றை திரும்பத் திரும்ப படித்தும், பாபாவின் அருகிலேயே தியானம் செய்தும் வந்தேன். நான் படித்ததை தியானம் செய்யும்படி பாபா கூறினார். "நான் யார் என்பதை எண்ணிப்பார்" எனக் கூறுவார். - அப்துல் பாபா (சுல்தான் என்பவருடைய மகன், சுமார் 65 வயது, முசல்மான், ஷீரடியில் வசிப்பவர்).ஷிர்டி, மார்ச் 10, 1938.
http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil