காலம் ஒரே மாதிரியாக இருக்கும் என்று கருதவேண்டாம்.தங்க சிம்மாசனங்களும் கண்மறைவாகிவிடும்.அதிகாரங்கள் மறைந்துபோகும்.செல்வவளம் சொல்லாமலேயே சென்றுவிடும்.கொடுக்கும் கரங்களே பெற்றுக் கொள்ளும் கரங்களாகிவிடும்.அப்போது கொடுப்பவர்கள் இருக்க வேண்டுமல்லவா!ஆகையால்[செல்வம்] இருப்பவர்கள் கொடுப்பதை பழக்கப்படுத்திக் கொள்ளவேண்டும்.விதையை அப்படி விதைத்துக் கொண்டால் பலன் கிடைக்காமல் போகாது.என்னுடையது எனக்கு மட்டுமே என்ற பாவத்துடன் நாட்களைக் கடத்தி,தேவை எற்பட்டபோது எனக்கு யாரும் இல்லை என்று கருதினால் பிரயோஜனம் என்ன? தானம் செய்தது வீண் போகாது.ஆறுதல் சொன்னால் அது வீணாகாது.உதவி வீணாகாது.நல்ல சொற்கள் வீணாகாது.அன்பு வீணாகாது.தேவை நேர்ந்தபோது,அதிக பலனை இக்குணங்களே அந்த இறைவனின் வடிவத்தில் பிரத்தியட்சமாகும்.இப்படிச் சேர்த்து வைத்தது எதுவோ அதுமட்டுமே ஜீவர்களுடன் வரும்.உயர்ந்த கதியை நல்கும்.ஆகையால் பிரம்ம ஞானத்தினால் பெரும் பிராப்தியை இவ்விதமாகவும் பெற முடியும்!என் சொற்களை மறந்து விடாதீர்கள்.-ஸ்ரீ ஷிர்டி சாய்பாபா.
http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil
http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil