என்னைச் சார்ந்திருப்பவர்களின் யோகச் ஷேமங்களிலேயே என் ஆனந்தம் இருக்கும்.இது உண்மை.இதமானவற்றைச் சொல்லவே நான் இருக்கிறேன்.கேட்டும் கேளாதவர் போல் இருப்பவரை எந்த சக்தியாலும் காப்பாற்ற இயலாது.காலத்தின் ஓட்டத்தால் அவ்வாறு நிகழ்ந்ததுஎன்று சமாதானப்படுவதால் பலன் ஒன்றும் இல்லை.நாமாக பின்பற்ற வேண்டிய ஜாக்கிரதைகள் உள்ளன.சாத்தியமானவரை,சாமார்த்தியமாகத் தப்பித்துக் கொள்ளும் முயற்சியும் கூட செய்யவேண்டும்.புதை சேறு இருக்கிறதென்று தெரிந்தும் கூட,எப்படியிருக்குமோ பார்க்கலாம் என்று இறங்குபவர்கள் அதன் பலனை அனுபவித்தேயாக வேண்டும்.நான் உங்கள் பளுவைச் சுமப்பேன் என்பது வாஸ்தவமே.எப்போது சுமப்பேன்?எனது பேச்சை நீங்கள் கௌரவிக்கும்போது மட்டுமே.என்னைச் சரணடைந்த போது மட்டுமே பாரத்தைச் சுமப்பேன்.-ஸ்ரீ ஷிர்டி சாய்பாபா[ஸ்ரீ சாயி திருவாய்மொழி]
http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/
http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/