Saturday, May 18, 2013

பயமற்று இருங்கள்

உங்கள் உச்சிமுதல் உள்ளங்கால் வரை கவசமாய் நான் இருக்கிறேன்.உங்கள் தொழில் எதுவானாலும் உங்கள் வேலையை என்னுடையதாக மாற்றி விடுகிறேன்.பார்வையும் பார்க்கப்படும் பொருளாகவும் நானே இருக்கிறேன்.இவ்வளவாக நான் உழைத்துக் கொண்டிருக்கும்போது பயம் ஏன்?பயமற்று இருங்கள்!ஏக்கம் ஏன்?எனக்காகவே ஏங்குங்கள்.பரபரப்பு ஏன்?என் மீதே மிக்க ஆவல் கொள்ளுங்கள்.கவலை ஏன்?எனக்காகவே கவலைபடுங்கள்.பரஸ்பர அனுராகத்திலேயே நான் இருக்கிறேன்.ஆத்மார்த்த அன்பு எங்குண்டோ அங்கு நான் இருக்கிறேன்.விசாலமான சிருஷ்டியில் நம்பிக்கையை உதவியாகக் கொண்டு என்னுள் பிரவேசியுங்கள்.-ஸ்ரீ ஷிர்டி சாய்பாபா.[ஸ்ரீ சாயி திருவாய்மொழி]
http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

வாழ்க்கையின் துன்பங்கள் மறைந்து போகின்றன

குருவின் கிருபை உதித்தவுடன் உலக வாழ்வுபற்றிய பயமாகிய புதிர் விடுபடுகிறது ; மோட்சத்தின் கதவுகள் திறந்து கொள்கின்றன; துன்பமெல்லாம...