நான் உங்களுக்கு ஒரு விஷயம் சொல்லுகிறேன்.நன்றாக நினைவில் இருத்திக் கொள்ளுங்கள்.நீங்கள் துக்கப்படுபவர்களாக ஆக வேண்டாம்.கிடைத்தவற்றில் திருப்தியடைந்து இருங்கள்.நான் ஒரு பக்கீர்.வீடு வாசல் இல்லாதவன்.லௌகீக தாக்கங்கள் இல்லாதவன்.ஒவ்வொன்றையும் விட்டு விட்டு ஓரிடத்தில் உட்கார்ந்திருப்பவன்.இருந்த போதிலும் மாயை அடிக்கடி என்னையும் பாதித்துக் கொண்டே இருக்கும்.நான் அதை மறந்தாலும் அது என்னை மறக்கவில்லை.பிரம்மா முதல் சிறு பிராணி வரை இந்த மாயையில் விழாதவர்கள் இல்லை.ஹரி நாமம் ஜபிப்பவர்கள் மட்டும் இந்த மாயை ஒன்றும் செய்யாது.அவர்கள் இருக்கும் இடத்தின் பக்கத்திலும் செல்லாது.ஹரி நாம ஜபம் எப்பொழுதும் செய்து கொண்டே இருக்கவேண்டும்.ஆகையால்தான் நான் இறைவனின் நாமம் பற்றி அடிக்கடி சொல்லுகிறேன்.இறை நாம மகிமை பற்றி எவ்வளவு சொன்னாலும் அது குறைவானதேயாகும்.ஆகையால் மாயையை நசிக்கும் சக்தி அந்த பரமாத்மனுக்கு மட்டுமே இருக்கும்.அவர் அனுக்கிரகம் கிடைக்கும் வரையில் ஆராதிக்க வேண்டும்.ஸ்மரணை செய்ய வேண்டும்.அதுபோல் எப்போதுமே செய்து வரவேண்டும்.கலியுகத்தில் இறை நாமத்தைத் தவிர்த்து,தருணோபாயம் வேறொன்றில்லை.அது ஒன்றே அடைக்கலம்.-ஸ்ரீ ஷிர்டி சாய்பாபா[ஸ்ரீ சாயி திருவாய்மொழி]
http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil
http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil