Sunday, June 30, 2013

சக்தி

என்னையே சார்ந்து எப்போதும் இருப்பாயாக!வீணான எண்ணங்களில் மனதை அலைபாய விடவேண்டாம்.வேதனையை நேரிடையாக அனுபவிக்காமல்,ஊழ்வினையை கடக்க இயலாது.வாஸ்தவமே.சுக துக்கங்களின் காரணம் கர்மாதான்.ஆகையால் உமக்கு நேருவதை தைர்யமாக தாங்கிக் கொள்ளும்.அந்த சக்தியையும் நானே உனக்கு அளிப்பேன்.என்னை பூரணமாக சரணடைந்து,உமது எண்ணம் எப்போதும் என்னிப்பற்றியே இருக்கட்டும்.பிறகு நான் என்ன செய்வேன் என்பதை நீர் பார்ப்பீர்.-ஸ்ரீ ஷிர்டி சாய்பாபா.
http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Saturday, June 29, 2013

அற்புதங்கள்

நானா(பாபாவின் பக்தர்);பாபா,தாங்கள் எல்லாவற்றையும் அறிவீர்கள்.தங்களுடைய பாதுகாப்பிலிருந்தும் கூடவா எங்களுக்கு இந்த துக்கங்கள் நேரவேண்டும்?[உறவினர்களின் பிரிவு,இழப்பு போன்றவை]

பாபா: உமக்கு நெருக்கமானவர்களின் நலனை எண்ணிக் கொண்டு அதன் பொருட்டு நீர் இங்கு வருகிறீரென்றால்,அது தவறு.இவற்றிற்காக நீர் எம்மிடம் வரவேண்டியத்தில்லை.இவை என் சக்திக்கு உட்பட்டவை அல்ல.
இவை(குழந்தை பிறப்பது,உறவினர் இறப்பது போன்றவை)ஊழ்வினையைப் பொருத்தது.தேவாதி தேவனானவரும்,உலகையே படைத்தவருமான,
பரமேச்வரனால் கூட இவற்றை மாற்றிவிட முடியாது.அவரால் சூரியனையோ சந்திரனையோ நோக்கி,'வழக்கமாக உதிக்கும் இடத்திலிருந்து இரண்டு கஜம் தள்ளி உதிப்பாய்' எனக் கூற இயலுமா?இயலாது,ஏனெனில் அவரால் முடியாதது மட்டுமின்றி,அவர் அப்படி செய்யவும் மாட்டார்.அது  ஒழுங்கின்மை,குழப்பம் விளைவிக்கும்.

நானா:அப்படி என்றால்,ஒருவரிடம் "உனக்கு குழந்தை பிறக்கும்"என தாங்கள் கூறுகிறீர்கள்,அவருக்கு குழந்தை பிறக்கிறது.மற்றொருவரிடம்"உனக்கு வேலை கிடைக்கும்"என் சொல்லுகிறீர்கள்,அவருக்கு வேலை
கிடைக்கிறது.இவை எல்லாம் தங்களுடைய அற்புதங்கள் அல்லவா?

பாபா:இல்லை,நானா.நான் எந்த சமத்காரமும் செய்வதில்லை.கிராமத்து ஜோதிடர்கள் சில தினங்கள் முன்னதாகவே பின்னர் நடக்கப் போவதைக் கூறுகிறார்கள்.அவற்றுள் சில பலிக்கின்றன.நான் அவர்களை விட எதிர்காலத்தை தீர்க்கமாகப் பார்க்கிறேன்.நான் கூறுவதும் நடக்கிறது.என் வழியும் ஒருவகை ஜோதிடத்தைப் போன்றதே.உங்களுக்கெல்லாம் இது புரிவதில்லை.உங்களுக்கு.என் சொற்கள் அற்புதங்களாகத் தோன்றுகின்றன;
ஏனெனில் நீங்கள் எதிர்காலத்தை அறியமாட்டீர்கள்.ஆகையால் நிகழ்ச்சிகளை  நீங்கள் எமது அற்புதங்கள் நிகழ்த்தும் சக்தியாக முடிவு செய்து,எம்மிடம் மதிப்பும் மரியாதையும் காட்டுகிறீர்கள்.பதிலுக்கு நான் உங்கள் பக்தியை இறைவனிடம் திருப்பி உங்களுக்கு நலம் உண்டாகச் செய்கிறேன்.
http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Friday, June 28, 2013

பயனற்றவை

 உமக்கு பிடித்திருந்தால் திடமான விசுவாசத்தை என் இடத்தில் வையும்.உமது இப்போதைய அலைச்சலும் குழப்பமும் பயனற்றவை.-ஸ்ரீ ஷிர்டி சாய்பாபா.
http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Thursday, June 27, 2013

பொறாமை

பொறாமை என்கிற வேண்டாத குணத்தைப் பொறுத்த வரை நமக்கு எந்த விதமான(நேரிடை)லாபமோ,நஷ்டமோ கிடையாது.பொறாமை என்பது இன்னொருவருக்கு கிட்டியிருக்கும் லாபம் அல்லது வளம் கண்டு தாளாமை.வேறு ஒருவருக்கு ஒரு அதிருஷ்டமோ,செல்வாக்கோ கிட்டி விட்டால்,நம்மால் அதை சகித்துக் கொள்ள முடியாமல்,அவரை அவதூறாகப் பேசுகிறோம்.அவருக்கு நஷ்டம் ஏற்பட்டுவிட்டால் மகிழ்ச்சியடைகிறோம்.இது நல்லதா?அந்த மனிதன் வளம் பெற்றால்,நமக்கு என்ன நஷ்டம் ஏற்ப்பட்டுவிட்டது?ஆனால் ஜனங்கள் இந்த விதத்தில் சிந்திப்பதில்லை.அவனுக்கு நலம் கிட்டினால்(அவனுடன் சேர்ந்து)நாமும் மகிழ்வோமே?நமக்கும் நலம் கிட்டியது,நாமும் பாக்கியசாலிகள் என் எண்ணுவோமே?அல்லது அதே நலம் நாமும் பெறுவோம்,அல்லது பெறுவதற்கு முயற்சி மேற்கொள்வோம்.அதுவே நமது விருப்பமும்,தீர்மானமுமாக இருக்க வேண்டும்.நம்மிடமிருந்து அவன் எதை எடுத்துச் சென்றுவிட்டான்?ஒன்றுமில்லை.அவனுடைய கர்மாவின் பலனாக அவன் வளம் பெற்றான்.அப்படியிருக்க அதைக் கண்டு நாம் ஏன் பொறாமை படவேண்டும்?ஆகவே,முதலில்
பொறாமையை வென்றுவிடு.-ஸ்ரீ ஷிர்டி சாய்பாபா.
http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Wednesday, June 26, 2013

சத்தியம்

இன்றும் நான் உயிருடன் இருக்கிறேன் என்பதை எப்போதும் உணர் .பக்தனாகிய
நீ அழைத்தால் நான் ஓடோடி வருவேன். இது சத்தியம் -ஸ்ரீ ஷிர்டி சாய்பாபா.


http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Tuesday, June 25, 2013

சரணாகதி

எவன் என்னை பூரண சரணாகதி அடைகிறானோ,எவன் என்னை விஸ்வாசத்துடன் வணங்குகிறானோ,எவன் என்னை நினைவில் இருத்தி நிரந்தரமாக தியானம் புரிகிறானோ,அவனுடைய எல்லா கஷ்டங்களில் இருந்தும் விடுவிப்பது எனது சிறப்பியல்பாகும்.-ஷீரடி சாய்பாபா[ஸ்ரீ சாய் சத் சரித்திரம்]
http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Monday, June 24, 2013

நான் உன்னுடனேயே இருப்பேன்

நீ எப்போதும் வாய்மையைக் கடைப்பிடிக்கவேண்டும்;நீ அளித்த வாக்குறிதிகள் யாவற்றையும் நிறைவேற்ற வேண்டும்.விசுவாசமும் பொறுமையும் பெற்றிரு.நீ எங்கே இருந்தாலும் எல்லா நேரங்களிலும் அப்போது நான் உன்னுடனேயே இருப்பேன்.-ஸ்ரீ ஷிர்டி சாய்பாபா.
http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Sunday, June 23, 2013

தர்மசிந்தனை உள்ளவனாக இரு

தான தர்மங்களில் பொருளைச் செலவு செய்ய வேண்டும்.ஆனால் எதிலும் மிதமிஞ்சி செலவு செய்யகூடாது.உடல் அழியக்கூடியதே.ஆயினும்,அது உள்ளவரை செல்வமும் ஒரு அளவுக்கு தேவையே.செல்வமே எல்லாம் என்று எண்ணி அதன் வசப்பட்டு லோபியாக மாறிவிடாதே.தாராளமாகவும்,தர்ம சிந்தனை உள்ளவனாகவும் இரு.ஆனால் மிதமிஞ்சியும்,பகட்டாகவும் செலவு செய்யாதே.-ஸ்ரீ ஷிர்டி சாய்பாபா,
http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Saturday, June 22, 2013

விரோதி

யாரைப் பற்றியும் அவன் எனக்கு எதிராளி எனக் கூறாதே.யார் யாருடைய
விரோதி?எவரிடமும் மனக்கசப்பை ஏற்படுத்திக் கொள்ளாதே.எல்லோரும் ஒன்றுதான்.-ஸ்ரீ ஷிர்டி சாய்பாபா.
http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Thursday, June 20, 2013

எல்லா பொறுப்புகளையும் ஏற்றுக்கொள்கிறேன்

ஒருவன் தனது சுமைகளை என் மீது இறக்கிவிட்டு,என்னையே நினைத்திருப்பானாகில் நான் அவனுடைய எல்லா பொறுப்புகளையும் ஏற்றுக்கொள்கிறேன்.அவனுடைய எல்லா காரியங்களையும் நானே முன் நின்று நடத்தி வைக்கிறேன்.-ஷிர்டி சாய்பாபா.
#http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Tuesday, June 18, 2013

கவலையை விட்டொழியும்

"கவலையை விட்டொழியும்; உறுதியுடன் இரும்;என் பக்தர்களை நான் துக்கப்பட விடுவதில்லை.சிர்டீயில் நீர் கால் வைத்த அக்கணமே உம்முடைய துன்பத்திற்கு முடிவேற்பட்டுவிட்டது.
நீர் தடங்கல்களின்  கடலில் கழுத்துவரை மூழ்கியிருக்கலாம்;துக்கமும் வேதனையுமாகிய படுகுழியில் ஆழமாக அமிழ்ந்துபோயிருக்கலாம்;ஆனால்,யார் இந்த மசூதிமாயியின் படிகளில் ஏறுகிறாரோ,அவர் சுகத்தின்மீது சவாரி செய்வார் என்று அறிந்துகொள்ளும்.இவ்விடத்திலிருக்கும் பக்கிர் மஹா தயாளன்;உம்முடைய வியாதியையும் வலியையும் நிர்மூலமாக்கிவிடுவான்.அனைவரின் மீதும் கருணை கொண்ட இந்தப் பக்கீர் அன்புடன் உம்மைப் பாதுகாப்பான்"-ஸ்ரீ ஷிர்டி சாய்பாபா
http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Monday, June 17, 2013

எந்தவிதமான பயமும் இல்லை

உன்னுடைய மனத்தையும் புத்தியையும் என்னிடம் ஸமர்ப்பணம் செய்துவிட்டு என்னையே எப்பொழுதும் நினைத்துக்கொண்டிரு.அவ்வாறான மனிதன்,தனது தேஹத்திற்கு எப்பொழுது என்ன நடந்தாலும் அதுப்பற்றிக் கவலைப்படமாட்டான்.அவனுக்கு எந்தவிதமான பயமும் இல்லை.-ஸ்ரீ ஷிர்டி சாய்பாபா.
http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Sunday, June 16, 2013

குழந்தை செல்வம்

பக்தர்களின் நலம் கருதி பாபா நிகழ்த்திய அற்புதங்களில் ஒன்று அவர் பக்தர்கள் வம்சம் விருத்தியாக அருளியது.ஏதாவது ஒரு பக்தைக்கு பிள்ளைப் பேறு  உண்டாகும் என் பாபா ஆசி வழங்கினால்,அனேகமாக அடுத்த பன்னிரண்டு மாதங்களுக்குள் பாபாவின் வாக்கின்படி அப்பெண்மணி ஒரு ஆண் அல்லது பெண் குழந்தை பெறுவது உறுதி.ஜாதகத்தின் படி புத்திர ஸ்தானத்தில் ஒரு பாபி அல்லது பாபகிரகம் இருப்பதால் இப்பிறவியில் சந்ததி உண்டாக வாய்ப்பில்லை என சோதிடர்கள் கூறியும்,பாபாவின் அருளால் குழந்தை பாக்கியம் பெற்ற பக்தர்கள் ஏராளம்.பிராரப்த கர்மா அல்லது ஊழ்வினையின் நியதிகளை மாற்றி பாபா இன்றும் தனது பக்தர்களுக்கு குழந்தை செல்வம் அளித்துவருகிறார்.
http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Saturday, June 15, 2013

திருப்தியுள்ளவனாக இரு

"ஏற்கனவே என்ன நடந்ததோ,என்ன நடக்கப்போகிறதோ,அதற்கேற்றவாறு வாழ்க்கை நடத்து!எது பிராப்தமென்று விதிக்கப்பட்டிருக்கிறதோ,அதை அறிந்துகொண்டு நட!எப்பொழுதும் திருப்தியுள்ளவனாக இரு!சஞ்சலத்திற்கோ கவலைக்கோ எப்பொழுதும் இடம் கொடுக்காதே!"-ஸ்ரீ ஷிர்டி சாய்பாபா.
http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Friday, June 14, 2013

பாபா தோன்றுவார்

 சாய்பாபா ஓர் பூரணமான லீலாவதாரி; நினைத்தமாத்திரத்தில் எங்கும் சஞ்சாரம் செய்யக்கூடியவர்.போவதும் வருவதும் மனிதப் பிறவிகளுக்கே.அவரோ எல்லாப் பொருள்களிலும் உள்ளும் புறமும் நிறைந்தவர்.அவர் அங்கிருந்து இங்கே வருவது,இங்கிருந்து அங்கே திரும்பி போவது,ஆகிய இரு செயல்களையும் வானமும் அறியாது.ஏனெனில்,அவர் வானத்திலும் நிரம்பி   இருக்கிறார்.பாபாவின்சஞ்சாரம்புரிந்துகொள்ளமுடியாதது.நகரும் நகராப் பொருள்கள் அனைத்திலும் அவர் நிரம்பியிருக்கிறார்.இவ்வாறிருக்க,அவர் வருவதென்ன,போவதென்ன!உண்மையான பக்தன் பாபாவை நினைத்தமாத்திரத்தில் நிச்சயமாக அவர்முன்
தோன்றுகிறார்..-ஸ்ரீ சாயி இராமாயணம் .
http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Thursday, June 13, 2013

நிவேதனம்

எவன் ஒருவன் எப்போதும் என்னை அவன் மனத்தில் இருத்தி,எனக்கு நிவேதனம் செய்யாமல் உணவை ஏற்கமாட்டானோ,நான் அவனுடைய அடிமை.என்னிடமே வேட்கை கொண்டு மற்றெல்லாவற்றையும் துச்சமாக கருதுபவனுக்கும் நான் அதேபோல் இருப்பேன்.-ஸ்ரீ ஷிர்டி சாய்பாபா.
http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Wednesday, June 12, 2013

திருப்தியடைந்து இருங்கள்

நீங்கள் துக்கப்படுபவர்களாக ஆக வேண்டாம்.கிடைத்தவற்றில்
திருப்தியடைந்து இருங்கள்.எதிர்ப்பார்ப்பது நடப்பதென்பது
சகஜம்.நிறைவேறாமற் போவதும் அவ்வளவு சகஜமே.நினைப்பதெல்லாம் நிறைவேறும் என்ற பாவம் கொள்ளலாகாது.அனுகூல,பிரதிகூல பலிதங்கள் இருக்கத்தான் செய்யும்.ஒவ்வொரு விஷயத்திலும் தீவிரமாக உணர்ச்சி வசப்படுதலும் கூட தீமையையே விளைவிக்கும்.காலத்தை அனுகூலமாக மாற்றிக் கொள்வதிலேயே தேர்ச்சி என்பது இருக்கும்.பொருமையின்மைக்கு தூரமாக இருந்தால் ஆனந்தம் என்பது தூரமாகாது.-ஸ்ரீ ஷிர்டி சாய்பாபா.
http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Tuesday, June 11, 2013

துணையாக நான் இருக்கிறேன்

எந்த விஷயத்திலும்,எந்த சமயத்திலும் நான் தன்னந்தனியானவன் என்ற பாவம் வராமல் பார்த்துக் கொள்ளுங்கள்.உங்களுக்கு துணையாக நான் இருக்கிறேன்.இருப்பேன்.நான் பின்பற்ற வேண்டிய கர்மங்கள் என்று ஒன்றும் இல்லை.இருந்தபோதிலும் உங்களைக் கடைதேற்றவே இவ்வுடலை மேற்கொண்டு இவ்வுலகில் அடியெடுத்து வைத்தேன்.இங்கு வந்தேன்.நான் ஜனன மரணத்திற்கு அப்பாற்பட்டவன்.என் இச்சையே நிறைவேறும்.என்னை ஆராதிப்பவர் இருக்கும் வரை என் அனுபூதிகள் தோன்றிக்கொண்டே இருக்கும்.நான் இருக்கிறேன் என்ற உண்மையை தெரிவிக்கும்.என் கதைகளை வெறுங்கதைகளாக நினைக்காதீர்கள்.அவற்றை என் உண்மை வடிவம் என்றே கருதுங்கள்.உங்கள் பாவனை ஏதாக இருக்குமோ அதற்கேற்ற பலனையே நீங்கள் பெறுவீர்கள்.என்னை யார் எப்படி ஆராதிக்கிறார்களோ.அப்படிப்பட்ட பலனே அவர்களுக்கு கிடைக்கும்.உங்கள் பௌதீக,ஆன்மீகத் துன்பங்களை நான் நீக்குவேன்.உன்னுடைய விஸ்வாசமே என்னுடைய சக்தி.-ஸ்ரீ  ஷிர்டி சாய்பாபா.
http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Monday, June 10, 2013

எல்லாவற்றிலும் உள்ள இறைவனாக பாபாவை வழிபடு

              எல்லாவற்றிலும் உள்ள இறைவனாக பாபாவை வழிபடு 

பாபா: நானா(பாபாவின் நெருங்கிய பக்தர்),எனக்கு பூர்ண போளி  வேண்டும்.அதை நைவேத்யமாக தயார் செய்து கொண்டு வா.
 
அதன்பிறகு நானா எட்டு பூர்ண போளிகளும் அதற்கேற்ற பண்டங்களையும் தயார் செய்ய வைத்து,பாபாவின் முன் கொண்டு வந்து சமர்பித்தார்.

நானா:பாபா உட்கொள்ளுங்கள்.

பாபா சற்று நேரம் தாமதித்தார்.போலியின் மீது ஈக்களும் எறும்புகளும் மொய்க்கலாயின.

பாபா:நல்லது,இந்த தட்டுகளை எடுத்துச் செல்.

நானா:அவற்றை தொட்டுக் கூட பாராமல் தாங்கள் என்னை எடுத்துச் செல்லச் சொல்வது எப்படி?தாங்கள் ஒன்றையும் உண்ணப்போவதில்லை என்றால் என்னை ஏன் இதை தயாரிக்க சொல்லவேண்டும்?கொஞ்சமாவது எடுத்துகொள்ளாவிட்டால் ,நான் தட்டுகளை எடுத்துச் செல்லமாட்டேன்.நானும் உண்ணமாட்டேன்.

பாபா:ஏதோ ஒரு நேரத்தில் நான் நீ கொண்டுவந்த போளியை சாப்பிட்டுவிட்டேன்.பிடிவாதம் வேண்டாம்.தட்டுகளை எடுத்துச் சென்று,உணவு உட்கொள்.

நானா சிணுங்கியவாறு மீண்டு சாவடிக்குச் சென்று விட்டார்.மறுபடியும் பாபா அவரை வரவழைத்தார்.

பாபா:நானா!நீ என்னுடன் பதினெட்டு ஆண்டுகளாக பழகுகிறாய்.இவ்வளவு தானா நீ அறிந்துகொண்டது!என்னைப் பற்றிய உனது கணிப்பு இவ்வளவுதானா!'பாபா' என்றால் உனக்கு கண்முன் தோன்றும் இந்த எண் ஜாண் உடல்தானா!அவ்வளவுதானா?
இதோபார்,நான் எறும்பு உருவிலும் உண்கிறேன்.மொய்க்கும் ஈயின் வாயிலாகவும் சாப்பிடுகிறேன்.எனக்கு தோன்றிய வடிவத்தை நான் எடுத்துக் கொண்டு அந்த வடிவத்தின் மூலம் உண்பேன்.உன் போளியை  வெகுநேரம் முன்பே சாப்பிட்டு விட்டேன்..அளவு கடந்த பிடிவாதம் பிடிக்க வேண்டாம்.

நானா:தாங்கள் இப்படிக் கூறினாலும்,என்னால் எதையும் புரிந்து கொள்ளமுடியவில்லை.என்ன செய்யட்டும்?எனக்கு புரிய வைத்தீர்களானால்,நான் தட்டுகளை எடுத்துச் செல்கிறேன்.சாப்பிடுகிறேன்.

அச்சமயம் பாபா ஒரு சமிக்ஞை செய்தார்.அது நானா ஆழ்மனதில் வேறு யாருக்குமே தெரியாத ஒரு ரகசியத்தை புதைத்து வைத்திருந்ததை பற்றியது.அது பாபா தனது அந்தராத்மா எனவும்,ஆகவே எல்லோரினுள்ளும்,எறும்பு உள்பட உறையும் சர்வாந்தர்யாமி எனவும் நானாவுக்கு திடமாக புலப்படுத்துயது.

 பாபா:நானா,நான் செய்த இந்த சமிக்ஞையை எப்படிப் பார்த்தாயோ,அவ்வாறே நான் (எல்லா உருவங்
களாகவும்)உண்கிறேன் என்பதை தெரிந்து கொள்.

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Sunday, June 9, 2013

கொத்தடிமை நான்

அல்லும் பகலும் உன்னை  பற்றியே எனது சிந்தனை.எனக்கு உறக்கம் இல்லை.திரும்பத் திரும்ப உன்னுடைய பெயரை உச்சரித்த வண்ணம் உள்ளேன்.ஒவ்வொரு அடியிலும் நான் உன்னை கவனித்துக் கொள்ள வேண்டியிருக்கிறது.உனக்கு என்ன நேரும் என்பதை நான் மட்டுமே அறிவேன்.கவனி,உன் பொருட்டு,உன் வேதனைகளை அகற்றி நான் அனுபவிக்க வேண்டியிருக்கிறது.உன்னை நான் ஒருபோதும் மறவேன்.இரண்டாயிரம் மைல்களுக்கு அப்பால் நீ இருப்பினும் உன்னை நினைவில் வைத்திருப்பேன்.நான் உன்னுடைய பக்தியை விரும்புகிறேன்.என் பக்தனுடைய கொத்தடிமை நான்.-ஸ்ரீ ஷிர்டி சாய்பாபா.
http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Saturday, June 8, 2013

இன்பமும் துன்பமும்

இன்பமும் துன்பமும் மாயையே.இவ்வுலகத்தில் தோன்றும் இன்பம் உண்மையான இன்பமாகாது.அதுவே உண்மையான இன்பம் என்று நம்பிவிடுவதால் உலகப்பற்றுள்ள மனிதன் அதனால் விசையுடன் கவரப்படுகிறான்.ஒவ்வொருவருடைய பிராரப்தத்தின் படி,ஒருவனுக்கு அறுசுவை உண்டிகள் கிடைக்கின்றன;ஒருவனுக்கு மக்கின ரொட்டி துண்டுகளும்,வேறு ஒருவனுக்கு தவித்துக் கஞ்சியும் கிட்டுகின்றன.பிந்தியவர்கள் அதனால் மனவருத்தமடைகின்றனர்;முந்தியவர்கள் தங்களுக்கு குறையொன்றுமில்லை என எண்ணிக்கொள்கின்றனர்.அனால் இவைகளில் எதை உண்பதாலும் கிட்டும் பலன் ஒன்றே,அதாவது பசி தீர்வது.ஒருவன் ஜரிகை துப்பட்டாவை போர்த்திக் கொள்கிறான்.இவருடைய நோக்கமும் ஒன்றே,அதாவது உடலை மறைத்துக் கொள்வது.இன்பமும்,துன்பமும் அவரவர் அபிப்பிராயத்தைப் பொருத்தது.இது மாயையின் தோற்றம்,அழிவைத் தரக்கூடியது.மனதில் சுகம்,துக்கம் என்ற எண்ணங்கள் தோன்றும் போது,அவற்றிற்கு இடம்கொடுக்காதே,எதிர்த்து நில்.அது முற்றிலும் மாயையே.-ஸ்ரீ ஷிர்டி சாய்பாபா.
http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Friday, June 7, 2013

புண்ணியம் கிடைக்கும்

தினமும் சமைத்தவுடன் ஒரு கவளமாவது வீட்டிற்கு வெளியே வைத்துவிட்டால் கண்ணுக்குத் தெரிகிற மற்றும் தெரியாத லட்சக் கணக்கான ஜீவராசிகளுக்கு அன்னதானம் அளித்த புண்ணியம் கிடைக்கும்.அதை உண்ண யாரையும் அழைக்கவோ,விரட்டவோ கூடாது.-ஸ்ரீ ஷிர்டி சாய்பாபா.
http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Thursday, June 6, 2013

விக்ரக வழிபாடு

ஏழு ஆண்டுகளாக குணப்படுத்த முடியாத தலைவலியுடன் பாபாவின் பக்தை வந்து பாபாவின் முன் அமர்ந்தார்.

பாபா:(அம்மாதின் சிரத்தை தொட்டு மென்மையாக வருடிக்
             கொடுத்து)உங்களுக்கு தலைவலி இல்லையா?

பக்தை :இருந்தது.இப்போது நின்றுவிட்டது.
               (தீராத தலைவலி உடனடியாக நிரந்தரமாக மறைந்தது).

பாபா:இவ்வளவு வருஷங்களாக எனக்கு நன்றாக உணவளித்து வருகிறீர்கள்.

பக்தை:நான் தங்களை தரிசிப்பது இப்போதுதான்.

பாபா:சிறுபிராயம் முதலே நான் உங்களை பார்த்துக் கொண்டிருக்கிறேன்.

பக்தை குழப்பமடைந்தார்.

பாபா:உங்கள் வீட்டில் என்ன பூஜை.

பக்தை:கணபதி பூஜை.

பாபா:உங்கள் தாயார் வீட்டில்?

பக்தை:கணபதி.நான் கணபதிக்கு எல்லாவித புஷ்பங்களும்,பழங்களும்,
               தின்பண்டங்களும் சமர்ப்பித்திருக்கிறேன்.

பாபா:அவை எல்லாம் என்னை வந்தடைந்தன.ஆகவே சிறுமியாக
            இருந்தகாலத்திலிருந்தே நான் உங்களை பார்த்து வருகிறேன்.

பக்தை :பாபா,என் கணபதியின் ஒரு கரம் உடைந்து விட்டதால் அந்த சிலை
                தூக்கி எறியப்பட வேண்டுமென்கின்றனர்.அது சரிதானா?

பாபா:உங்கள் குழந்தை கையை ஒடித்துக் கொண்டால்,அதை நீரிலே தூக்கி
            எறிவீர்களா?அந்த விக்கிரகத்தை தினமும் பூஜை செய்யவும்.

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Wednesday, June 5, 2013

என்னை வழிபடும் முறை

"சில சமயம் நான் ஒரு நாய்;சில சமயம் நான் ஒரு பன்றி;சில சமயம் நான் ஒரு பசுமாடு;சில சமயம் ஒரு பூனை;சில சமயம் ஓர் எறும்பு;ஓர் ஈ,ஓர் நீர்வாழ் பிராணி-பலவிதமான உருவங்களில் நான் இவ்வுலகில் உலவிவருகிறேன்.
உயிருள்ள ஜந்துக்கள் அனைத்திலும் என்னைப் பார்ப்பவரையே நான் விரும்புகிறேன் என்று அறிந்துகொள்ளும்..பேதபுத்தியை விட்டுவிடும்;அதுவே என்னை வழிபடும் சிறந்த முறையாகும்."-ஸ்ரீ ஷிர்டி சாய்பாபா.
http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Tuesday, June 4, 2013

தலையெழுத்தையே மாற்றிவிடுவார்

இதர தேவதைகள் அனைத்தும் மாயை;குருவே சாசுவதமான ஒரே தேவன்.அவரிடம் விசுவாசம் செலுத்தினால்,நம்முடைய தலையெழுத்தையே மாற்றிவிடுவார்.-ஸ்ரீமத் சாயி இராமாயணம்.
http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Monday, June 3, 2013

நாம உச்சாரணை

சாயி நாமத்தை மிஞ்சிய சக்தி வேறொன்றில்லை.சாயியுடன் ஐக்கியமடைய இந்த நாம உச்சாரணை பாலமாய் விளங்கும்.சாயி நாமம் உச்சரிக்கப்படும் இடத்தில் சாயிபாபா நேரடியாகவே தோன்றுவார்.-ஸ்ரீ சாயி திருவாய்மொழி.
http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Sunday, June 2, 2013

என்னை நம்புவாயாக

நீ எங்கு இருக்கின்றாயோ அங்கேயே இருந்துகொண்டு என்னை கேள்வி கேள்!தேவையில்லாது எதற்காகக் காட்டிலும், வனத்திலும் திரிந்து விடைகளைத் தேடுகிறாய்? நான் உன்னுடைய ஞான நாட்டத்தை திருப்தி செய்கிறேன். அந்த அளவிற்கு என்னை நம்புவாயாக.- நான் அனைவருள்ளும் வியாப்பித்திருக்கிறேன். நான் இல்லாத இடமே இல்லை. பக்தர்களுக்காக நான் எங்கும் , எப்படியாவது தோன்றுவேன்-ஸ்ரீ ஷிர்டி சாய்பாபா.

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Saturday, June 1, 2013

நல்லவனோ கெட்டவனோ

என் பக்தன் எப்படி இருந்தாலும்,நல்லவனோ கெட்டவனோ,அவன் என்னுடையவன்;அவனுக்கு தேவையானவை எல்லாம் நானே அளிப்பேன்.அவனுக்கும் எனக்குமிடையே பேதம் எதுவுமில்லை.இப்போது அவன் பொறுப்பு முழுவதும் என்னிடமே உள்ளது.-ஸ்ரீ ஷிர்டி சாய்பாபா.
http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

"குருபூர்ணிமா - சப்தாக பாராயணம் "

சாய் பக்தர்கள் அனைவருக்கும் வணக்கம்.. 🙏🙏 "குருபூர்ணிமா -  சப்தாக பாராயணம்" வரும் 13-07-2022ம் தேதி குருபூர்ணிமா தினம் கொண்டாடப்ப...