எந்த விஷயத்திலும்,எந்த சமயத்திலும் நான் தன்னந்தனியானவன் என்ற பாவம் வராமல் பார்த்துக் கொள்ளுங்கள்.உங்களுக்கு துணையாக நான் இருக்கிறேன்.இருப்பேன்.நான் பின்பற்ற வேண்டிய கர்மங்கள் என்று ஒன்றும் இல்லை.இருந்தபோதிலும் உங்களைக் கடைதேற்றவே இவ்வுடலை மேற்கொண்டு இவ்வுலகில் அடியெடுத்து வைத்தேன்.இங்கு வந்தேன்.நான் ஜனன மரணத்திற்கு அப்பாற்பட்டவன்.என் இச்சையே நிறைவேறும்.என்னை ஆராதிப்பவர் இருக்கும் வரை என் அனுபூதிகள் தோன்றிக்கொண்டே இருக்கும்.நான் இருக்கிறேன் என்ற உண்மையை தெரிவிக்கும்.என் கதைகளை வெறுங்கதைகளாக நினைக்காதீர்கள்.அவற்றை என் உண்மை வடிவம் என்றே கருதுங்கள்.உங்கள் பாவனை ஏதாக இருக்குமோ அதற்கேற்ற பலனையே நீங்கள் பெறுவீர்கள்.என்னை யார் எப்படி ஆராதிக்கிறார்களோ.அப்படிப்பட்ட பலனே அவர்களுக்கு கிடைக்கும்.உங்கள் பௌதீக,ஆன்மீகத் துன்பங்களை நான் நீக்குவேன்.உன்னுடைய விஸ்வாசமே என்னுடைய சக்தி.-ஸ்ரீ ஷிர்டி சாய்பாபா.
http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil
http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil