Wednesday, July 31, 2013

பாபாவின் சக்தி

என்ன நடக்கப் போகிறதோ அது நடக்கட்டும்.ஆனால்,அது பாபாவின் விருப்பப்படியே நடக்கும் என்ற திடமான சங்கல்பத்தை ஏற்றுக்கொண்டு இருங்கள்.வேண்டுவதோ வேண்டாததோ,சுகமோ துக்கமோ,அமிருதமோ விஷமோ-இந்த இரட்டைச் சூழல்கள் நாம் சேர்த்த வினைகளுக்கு ஏற்றவாறு வெள்ளம்போல் நம்மை நோக்கிப் பாய்கின்றன.ஆகவே அவற்றைக் கண்டு சிரிக்கவும் வேண்டாம்,அழவும் வேண்டாம்.எது எது நேர்கிறதோ,அது அதைப் பொறுத்துக்கொள்ளவும்.பாபாவே நமது ரட்சகர்;எப்பொழுதும் அவரையே தியானம் செய்வீராக.பாரம் சுமப்பவர் அவரே!
" நீ என் பேரில் உன் பளுவை சுமத்தினால் நான் நிச்சயமாக அதை தாங்குவேன்"
பாபாவின் வாக்கு வெறும் சொற்களல்ல;பிரம்மதேவன் எழுதும் தலையெழுத்துக்கு சமம்.மனிதனுடைய கர்மவினையின் பலன்களையும் தடுத்து நிறுத்தும் சக்தி வாய்ந்தவை. 

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Tuesday, July 30, 2013

உதீயினுடைய குணம்

மஹானுபவரான சாயி மஹராஜைத்  தவிர உனக்கு  வேறெந்த துணையும் இல்லை.முழுமையான விசுவாசத்துடனும் பக்தியுடனும் நீர் பாபாவின் உதீயை ஏற்றுக்கொண்டால்,அது தன்னுடைய சக்தியைத் தானே வெளிபடுத்தும்.பக்தி பா(BHA)வத்துடன் உதீயை அணுகவும்.பிறகு அது விளைவிக்கும் அற்புதத்தைப் பார்க்கலாம்.அது உடனே உம்மை இன்னல்களிலிருந்து விடுவிக்கும்.உதீயினுடைய இயல்பான
குணம் இதுவே.
http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Monday, July 29, 2013

வெற்றி

சாய்பாபாவின்  பாதங்களில் நம் அகங்காரத்தை சமர்ப்பித்தாலன்றி நமது வேலையில் நாம் வெற்றி பெறமாட்டோம். நம் அகங்காரத்தை ஒழித்தால் நமது  வெற்றி உறுதி அளிக்கப்படுகிறது.
http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Sunday, July 28, 2013

நம்பிக்கையும் விசுவாசமும்

குருவைத் தவிர வேறெவருக்கும் இம் மனிதவுடலுக்கு நற்கதியளிப்பது எப்படி என்பது தெரியாது.குரு தமது கரங்களால் தூக்குவதால் தான் ஜடம் போன்ற மனிதர்கள் மேலெழுப்பப்படுகிறார்கள்.
குரு,மந்திரங்கள்,புனிதத்தலங்கள்,தேவதைகள்,வைத்தியர்கள்,-இந்த ஐந்திற்கும் ஒருவருடைய நம்பிக்கையை பொறுத்தே பலன்கள் அமையும்.
நம்பிக்கையும் விசுவாசமும் எவ்வளவு ஆழமோ,அதற்கேற்றவாறே சித்திகளின் பரிமாணமும் அமையும்.
http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Saturday, July 27, 2013

குருவே அன்னை

குருவே அன்னை;குருவே தந்தை.குரு,தேவர்களின் கோபத்திலிருந்தும் நம்மைக் காப்பாற்றும் சக்தியுடையவராவார்.குருவினுடைய கோபத்திலிருந்து நம்மைக் காப்பாற்ற எவராலும் முடியாது என்பதை நன்கு அறிக.உலகவாழ்க்கையின் வழிகாட்டி குரு.புத்தியின் கண்ணைத் திறந்துவிட்டு,மனிதனை அவனுடைய நிஜரூபத்தைக் காணும்படி செய்கிறார்.மஹா காருண்யமூர்த்தியான குரு,சிஷ்யனின் பக்தியால் விளைந்த ஆவல்களையும் ஏக்கங்களையும் நிறைவுறச் செய்கிறார்.ஆகவே,
எப்பொழுதும் பாபாவின் உறவை நாடுங்கள்.எல்லா பாவங்களும் ஒழிய அவருடைய பாதங்களை வழிபடுங்கள்.
http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Friday, July 26, 2013

எத்தனை பிறவிகள்

உன்னுடன் முன்னரே எத்தனை பிறவிகள் இருந்திருக்கிறேன் என்பதை அறிவாயா?மீண்டும் மீண்டும் நாம் சந்திப்போம்.இரவும் பகலும் உன்னை நான் பேணி வந்து,ஆண்டவனிடம் ஒவ்வொரு பைசாவுக்கும் கணக்கு கொடுக்க வேண்டியுள்ளது.-ஸ்ரீ ஷிர்டி சாய்பாபா.
http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Thursday, July 25, 2013

பந்தம்

 நம்மிருவரிடையே  பரஸ்பரம் தீர்த்துக் கொள்ளப்பட வேண்டிய கடன்கள்,ரீணானுபந்தம் உள்ளது.பல ஆண்டுகளாக இருந்து வரும்,ஆயிரம் ஆண்டுகளாகவும் இருக்கலாம்.கடன்களால் நமது பந்தம் பிணைக்கப்பட்டுள்ளது.ஆகையால் நம்மிருவரிடையே வித்தியாசம் எதுவுமில்லை,பிரிவும் என்றுமில்லை.-ஸ்ரீ ஷிர்டி சாய்பாபா.
http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Wednesday, July 24, 2013

என் தொழில்

குணங்களற்ற,பரிபூர்ணனான,நிர்குணனானவன் நான்.எனக்கு பெயர் கிடையாது.தங்குமிடமும் கிடையாது.எனக்கு வயது லக்ஷக்கனக்கான ஆண்டுகள்.ஆசிகள் வழங்குவதே என் தொழில்.எல்லா பொருட்களும் என்னுடையவை.ஒவ்வொருவருக்கும் ஒவ்வொன்றையும் நான் அளிக்கிறேன்.இவ்வையகம் முழுவதும் என்னுள் அடக்கம்.நான் எல்லாவற்றிலும்,அவற்றிற்கப்பாலும் இருக்கிறேன்.-ஸ்ரீ ஷிர்டி சாய்பாபா.
http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Monday, July 22, 2013

இழிவாகப் பேசாதே

உயிரினங்கள் அனைத்தையும் நேசி;யாருடனும் சண்டை செய்யதே.பதிலடி கொடுக்காதே,யாரையும் இழிவாகப் பேசாதே.உன்னைப் பற்றி (உனக்கு எதிராக) யாராவது பேசினால் சற்றும் கலங்காது சென்றுவிடு.அவனுடைய சொற்கள் உன் உடலை துளைத்துவிட முடியாது.பிறருடைய செயல்கள் அவர்களையே பாதிக்கும்.உன்னை அல்ல.உன்னுடைய செயல்கள் மட்டுமே உன்னை பாதிக்கும்.-ஸ்ரீ ஷிர்டி சாய்பாபா.
http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Saturday, July 20, 2013

கவலைப்பட வேண்டியதில்லை

வேறெதிலும் நாட்டமில்லாது சாயியிடம் சரணடைந்து,வருவதையும் போவதையும் சாயியின் கையில் ஒப்படைத்துவிட்ட பிறகு,நாம் எதைப்பற்றியும் கவலைப்பட வேண்டியதில்லை.பாபாவுடைய மஹத்தான சக்தியினுள் அடைக்கலம் புகுந்த நாம் ஏன் வீணாகக் கவலைப்படவேண்டும்?
சமர்த்த சாயியே சனாதன பிரம்மம்.அவருடைய வார்த்தைகளே நமது தலையெலுத்தாகும்.எவர் அவருடைய வார்த்தைகளில் விசுவாசம் வைக்கிறாரோ,அவர் பூரணமான அனுபவத்தைப் பெறுவார். 
http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Friday, July 19, 2013

ஆனந்தம்

பாபாவின் திட்டங்களை யாரால் அறிய முடியும்?அறிய முயன்றவர்கள் அவதிக்குள்ளானார்கள்!ஆனால்,நீங்கள் அஹங்காரத்தை விடுத்து,அவருடைய காலடியில் புரண்டால்,அளவுகடந்த ஆனந்தம் அனுபவிப்பீர்கள்.
http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Thursday, July 18, 2013

உதீயின் பெருமை

ராமபாணத்தைப் போன்று,குறி தவறாது விசித்திரமாகச் செயல்படும் வேறொரு மருந்து உதீயை தவிர எங்கும் இல்லை.சாயியை மனத்தில் நினைத்து,அவர்மேல் நம்பிக்கை வைத்து உதீயை நீருடன் கலந்து தினமும் குடித்தால் தீர்க்கமுடியாத வியாதிகளும் மறைந்துவிடும்.
http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Wednesday, July 17, 2013

என்னுடைய செயல்கள்

தர்க்கத்திற்கு எட்டாத தத்துவம் ஏதாகிலும் இருக்கிறதென்றால் அது என்னுடைய தத்துவமே. தர்க்கத்தால் நீங்கள் என்னை ஒருபோதும் தரிசிக்க முடியாது. என்னுடைய செயல்கள் மிகவும் முரண்பாடானதாகவும், புரிந்து கொள்ள முடியாததாகவும், ரகசியமானதாகவும் இருக்கும். - ஸ்ரீ ஷிர்டி சாய்பாபா
http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Tuesday, July 16, 2013

கவலை

கவலைகளை மறந்து என்னிடம் வந்து உட்கார்.என்னையே தியானி, என்மீதே மனத்தை வை. நடக்கப்போவதை ஒருமித்த மனத்துடன் அமைதியாய் பார்த்துக்கொண்டிரு, வானம் உன்மீது விழுந்தாலும் கவலைப்படாதே, உன்னைக் காப்பாற்ற நான் இருக்கும்போது இந்த கவலை எதற்க்கு? கலங்குவதால் என்னிடமிருந்து நீ தூரமாகிறாய். என்மேல் நம்பிக்கை இருந்தால், என்னால் உனக்கு முடியாத காரியம் என்று எதுவுமே இருக்க முடியாது. - ஷிர்டி சாய்பாபா    
http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Monday, July 15, 2013

நிரந்தரமாகக் காத்திருக்கிறேன்

"யார் என்னைப் பெரிதும் நேசிக்கிறாரோ அவருடைய பார்வையில் நான் அகண்டமாக (இடைவிடாது)இருக்கிறேன்.நான் இல்லாதது அவருக்கு சிருஷ்டியனைத்தும் சூனியமாகத் தெரியும்.அவருடைய வாயிலிருந்து என்னுடைய பெருமை மட்டுமே வெளிவரும்.அவர் என்னையே இடைவிடாது தியானம் செய்வார்;நாக்கு என்னுடைய நாமத்தையே ஜபம் செய்யும்.எங்கே போனாலும் எங்கிருந்து வந்தாலும் என்னுடைய சரித்திரத்தையே பாடிக் கொண்டிருப்பார்.இவ்வாறு என்னுடன் ஒன்றிய பிறகு,செயல்புரிவது,செயல்புரியாதிருப்பது இரண்டையுமே மறந்துவிடுவார்.எங்கே என்னுடைய சேவையில் இந்த அளவிற்கு பயபக்தி இருக்கிறதோ,அங்கே தான் நான் நிரந்தரமாகக் காத்திருக்கிறேன் ".-ஸ்ரீ ஷிர்டி சாய்பாபா.
http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Sunday, July 14, 2013

அஹங்காரம்

எவன் அஹங்காரத்தை அழித்துவிட்டு நன்றி நிறைந்த மனத்துடன் என் மீது தன் பாரத்தைப் போடுகிறானோ,அவனுடைய படகு கரை சேர்ந்துவிடும்.-ஸ்ரீ ஷிர்டி சாய்பாபா.
அஹங்காரம்.
http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Saturday, July 13, 2013

காரியம் கைகூடும்

என்னிடம் அடைக்கலம் தேடி வந்தவர் நிவாரணம் பெறவில்லை என்பது,சென்றகாலம்,நிகழ்காலம்,எதிர்காலம் ஆகிய முக்காலங்களிலும் நடக்காத விஷயம்.உங்களுடைய காரியம் கைகூடும் என்று அறீவீர்களாக .-ஸ்ரீ ஷிர்டி சாய்பாபா.
http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Friday, July 12, 2013

பாபாவின் நிழற்படம்

ஸ்ரீ சாயியின் நிழற்படத்தை தரிசனம் செய்வது அவரை நேரிடையாக தரிசனம் செய்வதற்கு சமானம் என்னும் கருத்தை விளக்கும் கதை.
பாலாபுவா சுதார் என்ற பெயர் கொண்ட பம்பாயைச் சேர்ந்த பக்தர் ஒருவர்,பாபாவை தரிசனம் செய்வதற்காக சிர்டிக்குச் சென்றார்.
அதுதான் அவருடைய முதல் தரிசனம்.அவர் அதற்கு முன்பு சாயியை தரிசனம் செய்ததில்லையெனினும்,அவரைப் பார்த்தவுடனே பாபா மிகத் தெளிவாகச் சொன்னார்,-
"இவரை எனக்கு நான்கு ஆண்டுகளாகத் தெரியும்"
பாபா எப்படி இவ்வாறு சொல்கிறார்,என்றெண்ணி பாலாபுவா வியப்படைந்தார்.பாபா சிர்டியை விட்டு எங்கும் வெளியே போனதில்லை.நானோ சிர்டிக்கு வருவது இதுதான் முதல் தடவை.பாபாவுக்கு எப்படி என்னை நான்கு ஆண்டுகளாகத் தெரிந்திருக்க முடியும்?இதுபற்றித் திரும்ப திரும்ப யோசித்தப்பின்,நான்கு ஆண்டுகளுக்கு முன்பு பாபாவின் நிழற்படத்தை ஒருமுறை நமஸ்காரம் செய்தது பளீரென்று ஞாபகத்திற்கு வந்தது.பாலாபுவாவுக்கு பாபாவின் வார்த்தைகளில் ஒளிந்திருந்த சத்தியம் விளங்கியது.பாபாவின் எங்கும் நிறைந்த தன்மையையும் பக்தர்களின்மேல் அவருக்கு இருக்கும் தாயன்பும் புரிந்தது.
இன்றுதான் பாபாவின் உருவத்தை முதன்முறையாகக் காண்கிறேன்.நான் நமஸ்காரம் செய்தது அவருடைய நிழற்படத்திற்கே.
அதுபற்றி நான் எப்பொழுதோ மறந்துவிட்ட போதிலும்,பாபா என்னை அடையாளம் கண்டுகொண்டார்!
ஆகவே பாபாவின் நிழற்படத்தை தரிசனம் செய்வது அவரைப் பிரத்யக்ஷமாக தரிசனம் செய்வதற்கு சமானம்.அனைத்தையும் இயல்பாகவே அறியும் பாபா நமக்கெல்லாம் அளிக்கும் படிப்பினை இதுவே. 
http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Thursday, July 11, 2013

வெற்றி

பூமியில் பிறந்த தேஹம் செயல் புரிந்தே ஆகவேண்டும்.இதில் சந்தேகம் ஏதுமில்லை.ஆகவே,மனைவி,மக்கள்,செல்வம்,வீடு,வாசல் இவற்றை மனம் நிறையும்வரை தேடி அடையுங்கள்.உலகியல் விவகாரங்களை விட்டுவிட வேண்டிய அவசியம் இல்லை.ஆயினும்,மனத்தை மட்டும் சாயியிடம் சமர்பித்தால்,உலகியல் விஷயங்களின் மீதான மோஹம்  தானாகவே விலகும்.முயற்சிகளும் சுலபமாக வெற்றியடையும்.-(ஸ்ரீ சாயி இராமாயணம்)
http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Wednesday, July 10, 2013

சாயிபாபா

ஒருமுறை சாயியைப் பிரேமையுடன் நோக்கினால்,அவர் ஜன்மம் முழுவதற்கும் நம்முடையவர் ஆகிவிடுகிறார்.அனன்னியப் பிரேமையைத் தவிர நம்மிடம் அவர் வேறெதையும் வேண்டுவாரில்லை.நாம் கூப்பிடும்போது காப்பாற்ற ஓடிவருகிறார்! அந்நேரத்தில் காலமோ இடமோ அவருக்குக் குறுக்கே நிற்கமுடியாது.சதாசர்வ காலமும் சாயிபாபா நமக்குப் பின்னால் உறுதியாக நிற்கிறார்.அவர் எங்கு,எவ்வாறு,எந்த விசையை இயக்குவார் என்று நமக்குத் தெரியாது.அவருடைய செயல்கள் புரிந்துகொள்ள
முடியாதவை.இம்மாதிரியாக அவர் செயல்படும்போது நம் மனத்தில் குதர்க்கமான எண்ணங்கள் எழலாம்.அவற்றை அறவே விடுத்து,அவருடைய பாதங்களின்மேல் மனத்தைச் செலுத்தினால்,தியானமும் தாரணையும்(மனம் ஒருமுகப்படுதல்)விருத்தியடையும்.ஒருமுகப்பட்ட மனத்தில் சாயிசிந்தனை பின்தொடரும்.இதைத்தான் சாயி நம்மைச் செய்யவைக்கிறார்.எடுத்த காரியமும் தடங்கலின்றி நிறைவேறுகிறது.

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Tuesday, July 9, 2013

நம்பிக்கை நிலையாக நிற்கவேண்டும்

இதயத்தைத் தொட்டுச் சிந்தனையை மேம்படுத்தாத வார்த்தை எதையுமே பாபா சொன்னதில்லை.பாபாவினுடைய வழிமுறை எப்பொழுதும் அவ்வாறே.இந்த ரீதியில்தான் பக்தர்களின் நம்பிக்கையை திடப்படுத்தினார்.அவர் காட்டிய வழியில் நடந்தால் ஆரம்பகாலத்தில் எல்லாமே சுகமாக இருக்கும்.ஆனால்,போகப்போக பாதை புதர் மூடிப்போய் எங்கே பார்த்தாலும் முள்ளாக இருக்கும்.அப்பொழுது நம்பிக்கை ஆட்டம் காணும்.மனம் சந்தேகங்களால் அலைபாய்ந்து,சாயி ஏன் இந்தக் காட்டுவழிப் பாதைக்கு நம்மை கொண்டுவந்தார் என்று நினைக்கும்.அந்தச் சூழ்நிலையில்தான் நம்பிக்கை நிலையாக நிற்கவேண்டும்.அதுமாதிரி சங்கடங்கள் தான் உண்மையான சோதனைகள்.அசைக்க முடியாத திடமான நம்பிக்கை வேரூன்றும் வழி  இதுவே.சாயி நாமத்தை இடைவிடாமல் ஜபித்துக்கொண்டு,சங்கடங்களை தைரியமாக நேருக்குநேராக சந்தித்தால்,எல்லா ஆபத்துகளும் பறந்தோடிவிடும்.சாயி நாமத்தின் சக்தி அவ்வளவு பிரம்மாண்டமானது.சங்கடங்களினுள்ளே மறைந்திருக்கும் பிரயோஜனம் இதுவே.ஏனெனில்,சங்கடங்களும் சாயியால் விளைவிக்கப்படுவனவே.சங்கடம் வரும்போதுதான் சாயியின் ஞாபகம் வருகிறது!சங்கடங்களும் அப்பொழுது விலகிவிடுகின்றன!
http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Monday, July 8, 2013

பாபா தென்படுகிறார்

பாபா யாரை எப்போது எப்படி இழுக்க வேண்டும் என திட்டமிடுகிறாரோ, அதை முடிப்பதற்காக தானே முன்கூட்டி அங்கு சென்று கவனிக்கப்படாத காட்சியாளனாக அமர்ந்து விடுகிறார். அவர் அங்கே ஆண்டுக் கணக்கில் இருந்தாலும் நாம் அவரை அடையாளம் கண்டு கொள்வதில்லை. நமக்கு விதிக்கப்பட்ட நேரம் எப்போது வருகிறதோ, அப்போது அவர் நமக்குத் தென்படுகிறார், அது மட்டுமல்ல, நம்மை பக்தனாக்கி, பித்தேற்றி எல்லாவற்றையும் துறந்து தன்னை மட்டுமே நினைக்கும்படி செய்துவிடுகிறார்.
http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Sunday, July 7, 2013

இன்பத்திற்கும் துன்பத்திற்கும்

வரவேற்றாலும்,முகத்தைத் திருப்பிக்கொண்டாலும்,நடப்பது நடந்தே தீரும்.பாபாவுடனான நமது தொடர்பு மட்டுமே நம்மை இன்பத்திற்கும் துன்பத்திற்கும் அப்பால் கொண்டு செல்ல முடியும்.-ஸ்ரீ ஷிர்டி சாய்பாபா.(ஸ்ரீ சாயி இராமாயணம் )
http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Saturday, July 6, 2013

நானே நீ

பக்தர் : பாபா நீண்ட நாட்களாக அடியேன் ஒருமைப் பாடான நிலைத்த மனத்துடன் தங்களுக்கு சேவை செய்து வருகிறேன்.அதற்கான பலன் கிட்டிவிட்டது என்பதை நான் எப்படி உணர முடியும்?

பாபா:நம்மிருவருடைய உள்ளங்களையுமே மகிழ்விக்கக் கூடிய உன் சேவையின் பலன் எப்போதெனில்,நீ ஒரு கப்னி அணிந்து,பிக்ஷையின் மூலம் உண்ண ஆரம்பிக்கும்போது(அதாவது நானே நீ என்ற உணர்வு பெற்று பற்றுக்களையும் துறக்கும் போது).
http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Friday, July 5, 2013

இறையனுபவம்

இறைவனை நினை;நானெனும் மமதையை கொன்று விடு.காமத்தை வெல்லாத ஒருவனால் இறைவனைக் காண முடியாது;அதாவது இறையனுபவம் பெற முடியாது.-ஸ்ரீ ஷிர்டி சாய்பாபா.
http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Thursday, July 4, 2013

தேவை

என்னிடம் திட விசுவாசம் கொண்ட எவருடைய தேவையும் கிட்டாமற் போகாது.-ஸ்ரீ ஷிர்டி சாய்பாபா.
http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Wednesday, July 3, 2013

தக்ஷிணை

புரந்தரே என்ற பக்தர் : தாங்கள்(பாபா) ஏன் இவ்வளவு பணம் தக்ஷிணையாக  கேட்கிறீர்கள்?

பாபா: நான் எல்லோரிடமும் கேட்பதில்லை.ஆண்டவன் யாரை குறிப்பிட்டு காட்டுகிறாரோ அவரிடமிருந்து மட்டுமே கேட்கிறேன்.ஆனால் பதிலுக்கு,நான் பெற்றுக் கொண்ட தொகையைப் போல் பத்து மடங்கு அந்த நபருக்கு நான் கொடுக்க வேண்டியதாகிறது.எனது சொந்த உபயோகத்துக்காக நான் பணம் பெறுவதில்லை.எனக்கு குடும்பம் எதுவும் கிடையாது.

ஒவ்வொரு தினமும் காலையில் பாபா கையில் ஒன்றுமே இல்லாத எளிய பகீர்;பகல் முழுவதும் தக்ஷிணைகள் குவியும்.மாலை அல்லது இரவில் சேர்ந்த தொகை முழுவதும் பட்டுவாடா செய்து விடப்பட்டுவிடும்.பாபா மறைந்த போது சுமார் பத்து ஆண்டுகள் ஒரு கவர்னருடைய வருமானத்துக்கு சமமான தக்ஷிணையைப் பெற்று வந்த போதும்,அவர் கையில் எஞ்சி இருந்தது ரூ.16 மட்டுமே.பாபா ரூபாய்களை தூசாக மதிப்பவர்.அவர் விரும்புவது உங்கள் மனமும் இதயமும்,உங்கள் நேரமும் ஆன்மாவும் அவரிடம் ஈடுபடுத்தபட வேண்டுமென்பது மட்டுமே.
http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Tuesday, July 2, 2013

விசுவாசம்

குரு தாமாக குரு ஆகிவிடுவதில்லை.நீயே அவரை குருவாக மதிக்க வேண்டும்,அதாவது அவரிடம்  விசுவாசம் வைக்கவேண்டும்.ஒரு ஓட்டாஞ்சில்லை எடுத்து வைத்துக் கொண்டு அதை உனது குருவாக பாவித்து வா.அப்போது உன் இலக்கு அல்லது குறிக்கோள் கிட்டிவிடுகிறதா இல்லையா என்று பார்.-ஸ்ரீ ஷிர்டி சாய்பாபா.
http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Monday, July 1, 2013

கவலைப்படாதே

கடவுள் நம்மை வைத்திருக்கும் நிலையில் நாம் திருப்தியடைவோம்;நம் சங்கல்பங்களை அவருடைய சங்கல்பத்திற்க்கு   அர்ப்பணிப்போம்.கிடைப்பதை ஏற்றுக்கொள்.திருப்தியுடனும்,மகிழ்ச்சியுடனும் இரு.ஒருபோதும்
கவலைப்படாதே.அவருடைய ஒப்புதல்,சங்கல்பம் இன்றி ஓரணுவும் அசையாது.-ஸ்ரீ ஷிர்டி சாய்பாபா.
http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

பாபாவின் கருணாகடாக்ஷம் ஒன்றே போதும் !

பாபாவினுடைய கருணாகடாக்ஷமும் ஆசீர்வாதமும் பிரசாதமும் எல்லாத் துன்பங்களையும் ஒழிக்கின்றன; வேறெதுவும் தேவையில்லை ! - ஸ்ரீஸாயீ ஸத்சரித்திரம் htt...