இதயத்தைத் தொட்டுச் சிந்தனையை மேம்படுத்தாத வார்த்தை எதையுமே பாபா சொன்னதில்லை.பாபாவினுடைய வழிமுறை எப்பொழுதும் அவ்வாறே.இந்த ரீதியில்தான் பக்தர்களின் நம்பிக்கையை திடப்படுத்தினார்.அவர் காட்டிய வழியில் நடந்தால் ஆரம்பகாலத்தில் எல்லாமே சுகமாக இருக்கும்.ஆனால்,போகப்போக பாதை புதர் மூடிப்போய் எங்கே பார்த்தாலும் முள்ளாக இருக்கும்.அப்பொழுது நம்பிக்கை ஆட்டம் காணும்.மனம் சந்தேகங்களால் அலைபாய்ந்து,சாயி ஏன் இந்தக் காட்டுவழிப் பாதைக்கு நம்மை கொண்டுவந்தார் என்று நினைக்கும்.அந்தச் சூழ்நிலையில்தான் நம்பிக்கை நிலையாக நிற்கவேண்டும்.அதுமாதிரி சங்கடங்கள் தான் உண்மையான சோதனைகள்.அசைக்க முடியாத திடமான நம்பிக்கை வேரூன்றும் வழி இதுவே.சாயி நாமத்தை இடைவிடாமல் ஜபித்துக்கொண்டு,சங்கடங்களை தைரியமாக நேருக்குநேராக சந்தித்தால்,எல்லா ஆபத்துகளும் பறந்தோடிவிடும்.சாயி நாமத்தின் சக்தி அவ்வளவு பிரம்மாண்டமானது.சங்கடங்களினுள்ளே மறைந்திருக்கும் பிரயோஜனம் இதுவே.ஏனெனில்,சங்கடங்களும் சாயியால் விளைவிக்கப்படுவனவே.சங்கடம் வரும்போதுதான் சாயியின் ஞாபகம் வருகிறது!சங்கடங்களும் அப்பொழுது விலகிவிடுகின்றன!
http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil
http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil