Saturday, August 31, 2013

கவலைகளை மறந்து வந்து உட்கார்


கவலைகளை மறந்து என்னிடம் வந்து உட்கார்.என்னையே தியானி, என்மீதே மனத்தை வை. நடக்கப்போவதை ஒருமித்த மனத்துடன் அமைதியாய் பார்த்துக்கொண்டிரு, வானம் உன்மீது விழுந்தாலும் கவலைப்படாதே, உன்னைக் காப்பாற்ற நான் இருக்கும்போது இந்த கவலை எதற்க்கு? கலங்குவதால் என்னிடமிருந்து நீ தூரமாகிறாய். என்மேல் நம்பிக்கை இருந்தால், என்னால் உனக்கு முடியாத காரியம் என்று எதுவுமே இருக்க முடியாது. - ஷிர்டி சாய்பாபா   

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil
        

Friday, August 30, 2013

புத்திரபாக்கியம்

                                 பாபா புத்திரபாக்கியம் அருளுகிறார் 
ஹர்தாவைச் சேர்ந்த சிந்தே என்பவருக்கு ஏழு புத்திரிகள்,ஒரு புத்திரன் கூட இல்லை.1903-ம் ஆண்டில் அவர் கங்காபூருக்குச் சென்று ஒரு புத்திரனை வேண்டி தத்தரிடம் பிரார்த்தனை செய்து கொண்டார்.12 மாதங்களுக்குள் ஒரு மகன் பிறந்து விட்டால்,குழந்தையுடன் தரிசனம் செய்ய கங்காபூருக்கு வருவதாக நேர்ந்து கொண்டார்.அவருக்கு 12 மாதங்களில் மகன் பிறந்தான்;ஆனால் அவர் குழந்தையை எடுத்துக் கொண்டு கங்காபூருக்குச் செல்லவில்லை.1911-ம் ஆண்டு நவம்பர் மாதம் அவர் சீரடிக்கு பாபாவிடம் வந்தார்.

 பாபா:என்ன!திமிறு  ஏறி விட்டதா உனக்கு?உன் பிராரப்தத்தின் படி (விதிப்படி) உனக்கு ஏது  ஆண்  குழந்தை?நான் இந்த உடலை(தமது உடலைக் காட்டி) கிழித்து உனக்கு  ஒரு ஆண் மகவு அளித்தேன்.

தாமோதர ராசனே சம்பந்தப்பட்டவரை கூட,பாபா ஜோதிட பூர்வமான தடைகளையும் மீறி புத்திரபேறு அருளினார். 
http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Thursday, August 29, 2013

சாந்தி அளிப்பார்

"வேற்று மனிதர்களின் பேச்சு,அதனால் உமது நம்பிக்கை குலைந்தது எல்லாம் பாபாவின் லீலை.உலகம் என்ன பேசுகிறது அல்லது எத்தகைய துன்பம் அளிக்கிறது என்பது பற்றி யோசிக்காதீர்.பாபாவின் சரணங்களில் உமது உள்ளத்தை நிலைநிறுத்தும்,அப்போது பாபா உமக்கு சாந்தி அளிப்பார்."
http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Wednesday, August 28, 2013

கவலை வேண்டாம்

பாபா தனது பக்தரிடம் கூறியது;

நான் உன்னுடனேயே(கண்ணுக்கு புலப்படாமல்) வருவேன்.கவலை வேண்டாம்.நான் உன் அருகிலேயே இருக்கிறேன்.தாளிடப்பட்ட கதவுகள் என் நுழைவை தடுத்துவிட முடியாது.நானே அங்கு உன் இல்லாளையும் உன்னையும் காத்துக் கொண்டு அமர்ந்துள்ளேன்.நீ எங்கிருப்பினும்,என்னை நினை.நான் உன் பக்கத்தில் இருப்பேன்.-ஸ்ரீ ஷிர்டி சாய்பாபா.
http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Tuesday, August 27, 2013

நிலையான துணை
மனித ஆத்மாக்கள் தங்கள் கர்ம வினைகளிலிருந்தும், பல பிறவிகளிலிருந்தும் விடுபடுவதற்காக, அவர்களை தம் பக்கம் இழுத்து, உதவி செய்து, பண்படுத்தி, ஆன்மீக வழியில் முன்னேற்றம் அடையச்செய்வதே பரம சத்குருவான ஸ்ரீ சாயி நாதரின் முக்கியப் பணியாகும். 'ஸ்ரீ சாயி சத்ச்சரித்ரா' புத்தகத்தில் பாபா அவர் முன்பிறவியைப்பற்றி பல கதைகள் கூறியிருக்கிறார். அவர் பரமாத்மாவாக இருப்பதால், எல்லா ஜீவாத்மாக்களின் முற்பிறவிகள் பற்றியும் அறிந்திருக்கிறார்.

"ஆயிரக்கணக்கான மைல்களுக்கு அப்பால் என் பக்தர்கள் எவரேனும் ஒருவர் இறப்பை சந்திக்க நேரிடும்போது, அந்த ஆத்மாவை என்னிடம் இழுத்துக் கொள்ள முடியும். எல்லோரையும் பற்றி, எல்லாவற்றையும் நான் அறிந்திருக்கிறேன்". ஓர் உண்மையான பக்தனுக்கு, இப்படிப்பட்ட ஒரு சமர்த்த சத்குருவை பற்றிக்கொள்வதே அடிப்படையான மற்றும் இறுதியான தேவையாகும்.

ஆனால், சத்குரு ஒருவர் மட்டும்தான் இறப்பிற்குப் பிறகும் நம்முடனேயே வருகிறார். ஆகவே, அவரே நமது சிறந்த, நிலையான துணையாவார். நாம் கொண்டிருக்கும் ஆழ்ந்த அன்பு, பக்தி, நம்பிக்கை இவற்றை முழுமையாக அவர்பால் செலுத்தி அவரையே நாம் இறுகப் பற்றிக்கொள்வோம்.

இவ்வாழ்க்கையில் நாம் அனுபவிக்கும் சுக துக்கங்கள்யாவும் அவருடைய கட்டுப்பாட்டிற்கும் வழிகாட்டுதலுக்கும் உட்பட்டே நடக்கின்றன என்பதை நாம் உணரவேண்டும். இத்தகைய அனுபவங்கள் ஆத்மாவை உய்விக்கத்தான் என்பதால் அவை தேவையானவை என்றும் நாம் உணர வேண்டும். இத்தகைய தீவிர நம்பிக்கையும், பொறுமையும் உடையவர்கள், இவற்றை சீக்கிரமே இழந்து விடும் மற்றவர்களை காட்டிலும், விரைவாக முன்னேற்றம் காண்பார்கள், பாபா உறுதியளிக்கிறார்: "ஒரு கஷ்டமான நிலைமையை சந்திக்கும் போது மனம் உடைந்து போக வேண்டாம். பொறுமையுடன் என்ன நடக்கிறது என்பதை கவனித்த வண்ணம் இருங்கள் ஏனெனில் என்னுடைய குழந்தைகளையும், பக்தர்களையும், எப்படியாவது காப்பாற்றுவதே என்னுடைய கடமையாகும்." இதைவிட சிறந்த உறுதி மொழியை வேறு எவரால் நமக்கு கொடுக்க முடியும்?  

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Monday, August 26, 2013

அன்பைப் பொழிவார்

எனக்கு(பாபாவுக்கு) விசுவாசத்துடன் பணிபுரிபவனுக்கு,கடவுள் அன்பைப்
பொழிவார்.-ஸ்ரீ ஷிர்டி சாய்பாபா.
http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Sunday, August 25, 2013

வேண்டியது நிறைவேறும்

குருவை முழுமையான நம்பிக்கையோடு பக்தியுடன் சேவிப்பவர்களுக்கு அவரின் கருணை மழை பொழியும்.அப்படி சேவிக்கும் பக்தனின் கூடவே இருந்து காப்பாற்றுவதே அவரின் தர்மம்.அவர்களின் துயரங்கள் தீர்ந்து வேண்டியது நிறைவேறும்.-ஸ்ரீ குரு சரித்திரம்.
குரு பிரம்மா குரு விஷ்ணு குரு தேவோ மகேஷ்வர
குரு சாக்ஷாத் பர பிரம்மா 
தஸ்மை ஸ்ரீ குரவே நம:  

சாய் ராம்,  குரு சரித்திரம்,ஸ்ரீ சத்சரித்திரம்,ஸ்தவனமஞ்சரி படிக்க விரும்பும் சாயி அன்பர்கள் இந்த மின்னஞ்சல் முகவரிக்கு saibabasayings@gmail.com  கேட்டு எழுதுங்கள் தங்களுக்கு pdf file இலவசமாக அனுப்பபடும்.
http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Saturday, August 24, 2013

நன்மையை செய்

விரோதங்களையும்,வீண் வாதங்களையும் தவிர்த்துவிட்டால்,இறைவன் உன்னை காப்பாற்றுவார்.தீங்குக்கு தீங்கு என்பதை தவிர்.தீங்குக்கு பதிலாக
நன்மையை செய்.பிறருடைய சொற்கள் உனக்கு தீங்கிழைக்காது.-ஸ்ரீ ஷிர்டி சாய்பாபா.
http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Friday, August 23, 2013

கவலைப்படுவதால் பயன் ஒன்றும் கிடையாது

யாருக்கு எது நன்மை அளிக்குமோ அதற்க்கு ஏற்றவாறே நான் கொடுப்பேன். கொடுக்கப்பட்டது எதுவாக இருந்தாலும் அது நான் அளித்ததே என்பதை நீங்கள் அறிந்தால் என்னை அறிந்து கொண்டவரே ஆவர்.  இல்லாததை பற்றியோ, கிடைக்காதவற்றை பற்றியோ கவலைப்படுவதால் பயன் ஒன்றும் கிடையாது. ஷிர்டி சாய்பாபா    
http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Thursday, August 22, 2013

என் அருகில் இரு

என் அருகில் இரு;சும்மா இரு.மற்றவற்றை நான் கவனித்துக் கொள்கிறேன்.-ஸ்ரீ ஷிர்டி சாய்பாபா.
http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Wednesday, August 21, 2013

ஜுரம் நின்றதுதுகாராம் பார்கு, டிசம்பர் 9, 1936.

சாயி பாபாவுடன் நெருக்கமாக எனக்குச் சில அனுபவங்கள் ஏற்பட்டுள்ளன. 1912-ல், கோதாவரி வாய்க்கால்களில் முதன் முதலாக நீர் திறந்துவிடப்பட்டபோது, இருபது மைல் தொலைவிலுள்ள காரஞ்ஜிகாம் என்ற கிராமத்துக்கு, வேலை தேடி பிழைப்பை நடத்துவதற்காக புறப்பட்டுக்கொண்டிருந்தேன். கிளம்பிய போதே, ஷிர்டியிலே கோபர்காம் சாலையில் நான் இருந்த போதோ, லெண்டிக்கு செல்லும்போதோ, அங்கிருந்து திரும்பும்போதோ வழியில் பாபா என்னை சந்தித்தார். அவர் என் கழுத்தைச் சுற்றி தம் கையை என் தோளில் போட்டுக்கொண்டு, "போகாதே" எனக் கூறினார். அவருடைய சொல்லை மதியாது நான் அந்த கிராமத்துக்குப் போனேன். நான் அங்கு போய்ச் சேர்ந்த தினம் எனக்கு காய்ச்சல் ஆரம்பித்தது, நீண்ட காலம் விடவே இல்லை. பிழைப்புக்கு வேலை செய்வது எனபது நடவாது காரியம் ஆனது; ஆகவே என்னை கவனிப்பதற்கு என் உறவினர்களின் தயவை நாடியிருக்கும்படி ஆனது. பதினைந்து நாட்கள் காய்ச்சலுக்கு பிறகு, ஷீரடிக்கு திரும்பிச் செல்லும் அளவுக்கு எனக்கு தெம்பு வந்தது. ஆனால் இங்கு வந்ததும் சுமார் 45 நாட்கள் ஜுரத்தால் அவதிப்பட்டேன். பிறகு பாபாவின் ஊதியைப் பெற்று வரும்படி என் தாயை அனுப்பினேன். அதை இட்டுக் கொண்ட மறு தினமே ஜுரம் நின்றது. - ஸ்ரீ சாய்பாபாவின் பக்தர் அனுபவங்கள். 

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Tuesday, August 20, 2013

ஆசைப்படாதே

"'நான்' 'என்னுடையது' என்னும் உணர்வுகளை அறவே ஒழித்துவிட்டுப் பற்றற்ற செய்கைகளைச் செய்துகொண்டு வாழ்வாயாக.இறைவன் அளிப்பதை தியாக பூர்வமான உணர்வுடன் ஏற்றுக்கொள்.எவருடைய உடைமைக்கோ சொத்துக்கோ ஆசைப்படாதே."-ஸ்ரீ ஷிர்டி சாய்பாபா.
http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Monday, August 19, 2013

வசை பாடினர்அப்துல் ரஹீம் ஷம்சுதீன் ரங்காரி  - செப்டம்பர் 11, 1936.

1913-ல் என் ஷிர்டி விஜயத்தின் போது.

பாபா : நீ எங்கிருந்து வருகிறாய்?
நான் : தானா
பாபா : எதற்காக?
நான் : என் மனைவிக்கு தொண்டையில் வீக்கம், முதலியன.
பாபா : அவளை மசூதிக்குள் வரச்சொல்.

நான் அவளை மசூதிப் படிகளில் ஏற்றி அழைத்து வந்தேன். அவள் பாபாவை வணங்கினாள். அவர் அவள் கையைத் தொட்டு, "குதா அச்சா கரேகா" (அதாவது கடவுள் நன்மை செய்வார்) எனப் பகன்றார். அவர் கேட்காமலேயே நான் அவரிடம் ரூ.1-4-0 அளித்தேன். அவர் அதை ஏற்றுக்கொண்டு ஊதி வழங்கினார். அதன் பின்னர் 2 மணி நேரம் தங்கினேன். என் மனைவியின் வீக்கம் விரைவாக வடிந்து கொண்டிருந்தது.

மேலும் அவர் சொன்னார்: நீ நேற்று வந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்.

நான் : ஏன்?
பாபா : சங்கீர்த்தனம் நடந்தது. இரவு முழுவதும் நான் அழுதேன். அவர்கள் என் மீது வசை பாடினார்கள்.
நான் :  ஏன் அவர்கள் தங்கள் மீது வசை பாடவேண்டும்?
பாபா : நான் "வசை பாடினார்கள்" என்று சொன்னால் மக்கள் புரிந்துகொள்வதில்லை. ஆனால் நீ புரிந்துகொள்வாய்.

நான் : "வசை பாடினர்" என்றால் உண்மையில் புகழ் பாடினர் என நான் எண்ணினேன்.

(சில மகான்கள் புகழ்ச்சியை இகழ்ச்சி எனப் பேசுவதன் மூலம் அதை தாங்கள் பொருட்படுத்துவதில்லை என்பதை காண்பிக்கின்றனர். மேலே குறிப்பிட்டுள்ள பஜனையில், முழுவதுமே பாபாவை உயர்வாக புகழ்ந்து பாடியிருக்க வேண்டும்; அதை இகழ்ச்சி போலவே பாவித்து அவர் அதை பொருட்படுத்தாமலிருந்திருக்க வேண்டும். மேலும் இந்த புகழ் மாலையில், பகவானிடம் இறங்கச் செய்யத்தக்க பிராத்தனைகளுடன் நெஞ்சை உருக்கும் இன்னிசை கலந்து விடும். அதனால் பாபா அழுவார்).

நான் : கடவுளை துதித்து பாடும்போது, ஆண்டவனிடம் பக்தி செலுத்துபவன் அழுவான், சிரிப்பான் அல்லது கூத்தாடுவான்.
பாபா : அதேதான். நீ சொன்னது சரி. உனக்கென ஒரு  குரு உள்ளாரா?
நான் : ஆம். ஹபீ பலீஷா சிஸ்தி நிஜாமி.
பாபா : அதனால் தான் உன்னால் புரிந்து கொள்ள முடிகிறது.

நான் ஷீரடிக்கு செல்வதற்கு 12 ஆண்டுகளுக்கு முன்பே சமாதியடைந்து விட்ட என் குரு வெளியே செல்லும் போதெல்லாம் இன்னிசையும் பின் தொடரும் என்பதை நான் நினைவு கூர்ந்தேன். - ஸ்ரீ சாய்பாபா பக்தர் அனுபவங்கள்.  
     
http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Sunday, August 18, 2013

பக்தி

நீங்கள் எங்கிருந்தாலும் சரி, என் முன்னர் பக்தியுடனும், விசுவாசத்துடனும் கை நீட்டினால், நான் உங்களுடைய பக்திக்கும், விசுவாசத்திற்க்கும் ஏற்றவாறு இரவு பகலாக உங்களுடன் திடமாக நிற்கிறேன்.-
ஷிர்டி சாய்பாபா
http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Saturday, August 17, 2013

ஏழைகளின் தோழன்

மிக உயர்ந்த செல்வம் ஏழ்மையே;ஒரு பிரபுவின் அந்தஸ்தைக் காட்டிலும் அது உயர்ந்தது.ஏழைகளின் தோழன் இறைவன்.பகீரே உண்மையான பேரரசர். துறவுத் தன்மை அழிவதில்லை.ஆனால் சாம்ராஜ்யம் விரைவில் மறைகிறது.-ஸ்ரீ ஷிர்டி சாய்பாபா.
http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Friday, August 16, 2013

பட்டினி

வைதீகம், பட்டினி, சிலவற்றை ஒதுக்கி வைக்கும்முறை - இவற்றுக்கு பாபா முக்கியத்துவம் கொடுத்ததில்லை. அவர் விரும்புவது எல்லாம் தன் பக்தனிடம் உளப்பூர்வமான நம்பிக்கையை மட்டுமே.  
http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Thursday, August 15, 2013

என்னை மட்டுமே சார்ந்தவன்

நீ என்னை சார்ந்தவன்,என்னை மட்டுமே சார்ந்தவன்.ஒவ்வொரு அடியிலும் நான் உன்னை கவனித்துக் கொள்ள வேண்டியிருக்கிறது.உனக்கு என்ன நேரும் என்பதை நான் மட்டுமே அறிவேன்.உன்னை கரையேற்றும் பொறுப்பை நான் தான் வகிக்க வேண்டும்.என்னை விட்டால் உனக்கு வேறு எவர் உளர்?-ஸ்ரீ ஷிர்டி சாய்பாபா.
http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Wednesday, August 14, 2013

இலவசம்

பிறருடைய உழைப்பை (பொருள் உட்பட)இலவசமாக ஒரு போதும் பெறாதே.இது உன் வாழ்க்கையில் ஒரு விதியாக இருக்க வேண்டும்.-ஸ்ரீ ஷிர்டி சாய்பாபா.
http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Tuesday, August 13, 2013

விசேஷ காரணங்கள்

பக்தர்: பாபா,என்னை ஏன் இங்கு (ஷிர்டி) வரவழைத்தீர்கள்?

பாபா: உலகில் ஆயிரக் கணக்கானவர்கள் உள்ளனர்.அவர்கள் எல்லோரையும் வரச் சொல்கிறேனா?உம்மை மட்டும் தருவிக்க ஏதாவது
விசேஷ காரணங்கள் இருக்க வேண்டாமா?

பக்தர்: இருக்கலாம்.ஆனால் எதையும் என்னால் காண முடியவில்லை.

பாபா: நீயும் நானும் பல ஜன்மங்களில் ஒருவருக்கொருவர் நெருக்கமாக இருந்திருக்கிறோம்.உமக்கு அது தெரியாது;ஆனால் நான் அறிவேன்.ஆகையால் நேரம் கிடைக்கும்போதெல்லாம் அவ்வப்போது இங்கே {ஷிர்டி}வந்து போய்க் கொண்டிரும்.
http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Monday, August 12, 2013

எப்போதும் நினைத்திருப்பேன்

எனது பக்தனை நான் மறக்கமாட்டேன்.அவன் இரண்டாயிரம் மைல்களுக்கு அப்பால் இருந்தாலும்,நான் எப்போதும் அவனை நினைத்திருப்பேன்.அவன் இல்லாமல் ஒரு துளி கூட நான் உண்ணமாட்டேன்.-ஸ்ரீ ஷிர்டி சாய்பாபா.
http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Sunday, August 11, 2013

விசுவாசம்

உனது பிரேமையை தவிர வேறு எதையும் நான் விரும்பவில்லை.செயல் புரியாதது போல் நான் காணப்படினும்,ஒருபோதும் உன்னை கவனியாமலிருந்தது  இல்லை.என்னுடைய கிருபையால் நீ இப்போதைய நிலையை அடையப் பெற்றிருக்கிறாய்.உனக்கென்ன நிர்ணயிக்கப்பட்ட கடமையை செய்;உனது உடல்,வாக்கு,உயிர் முழுவதையும் எல்லாவற்றையும் வியாபித்து நிற்கும் தன்மையுடைய என்னிடம் அர்ப்பணம் செய்யவேண்டும்.என்னிடம் விசுவாசம் வைப்பது இப்போது உனக்கு மிகவும் அவசியமாகிறது.-ஸ்ரீ ஷிர்டி சாய்பாபா.
http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Saturday, August 10, 2013

பிரம்மாவிலிருந்து புல்பூண்டு வரை

படைக்கும் தெய்வமாகிய பிரம்மாவிலிருந்து புல்பூண்டு வரை இப்பிரபஞ்சத்தில் எங்கும் நிலவியிருக்கும்,அளவற்றதும் முடிவற்றதும் பின்னமில்லாததுமான முழுமுதற்பொருளே சாய்பாபாவாக உருவெடுத்திருக்கிறது.சாயி ஒரு சாதாரண மனிதரே என்று நினைப்பவர்கள் மந்தமதி படைத்தவர்கள்;துரதிருஷ்டசாலிகள்.அரிதாகக் கிடைக்கும் இவ்வதிருஷ்டத்தை அவர்கள் எவ்வாறு அனுபவிக்க முடியும்?சாயி ஆத்மபோதத்தின் சுரங்கம்;பூரணமான ஆனந்தத்தை அனுபவிக்கும் விக்கிரஹம்.சம்சார சாகரத்தை முழுமையாகவும் பாதுகாப்புடனும் கடப்பதற்கு அவரைச் சட்டென்று பற்றிக்கொள்வோமாக!
http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Thursday, August 8, 2013

பாபாவின் ஆணை

எந்நேரமும் பாபாவிற்கு சேவை செய்வதிலேயே கண்ணாக இருந்து ,பாபாவின் ஆணைக்குக் கீழ்படியும் பக்தர்,தான் செய்யும் செயல்களின் முடிவை பாபாவின் தலைச்சுமைக்கு விட்டுவிடுகிறார்.வெற்றியாக இருந்தாலும் தோல்வியாக இருந்தாலும்,அது பாபாவின் ஆணை.பாபாவின் ஆணைக்கு பக்தன் அடிமை.சுதந்திரமான கருத்தென்பது அவருக்கு இல்லை.பாபாவின் வசனத்தை எந்நேரமும் பரிபாலனம் செய்யும் ஆர்வத்தில்,நல்லதா/கெட்டதா என்ற ஆராய்ச்சியும் அவருக்கு இல்லை.
http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Wednesday, August 7, 2013

சேவை

சிந்தனையை சாயியின் நினைவில் வைத்து,கண்கள் சமர்த்த சாயியின் பாதங்களில் நிலைபெற்று,மனம் சாயி தியானத்திலேயே ஈடுபடுபவருடைய தேஹம் முழுவதும் சாயியின் சேவைக்கு அர்ப்பணமாகிறது.
http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Tuesday, August 6, 2013

துவாரகாமாயீ

"துவாரகாமாயீயை அடைந்த மாத்திரத்தில் பெரும் துன்பத்திற்கு             உள்ளானவர்களும் மிகுதியான சந்தோஷத்தை அடைவார்கள்".
பாபாவின் திருவாய்மொழியை விகற்பமாகப் பார்ப்பவர்களுக்கு எந்த சங்கற்பமும் நிறைவேறாது.சங்கற்பம் சக்தியில்லாததும் பலனளிக்காததுமான பிதற்றலாகவே முடியும்.பாபாவின் வசனத்தின் பொருளை எவர் வணக்கத்துடன் ஏற்றுக்கொள்கிறாரோ,அவர் இகத்திலும் பரத்திலும் நலம் பெறுவார்.எவர் அதில் தோஷமும் குதர்க்கமும் காண்கிறாரோ,அவர் அதலபாதாளத்தில் வீழ்கிறார்.
 http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Monday, August 5, 2013

வாழ்க்கையில் நிறைவு

பாபாவினுடைய இரு பாதங்களையும் பற்றிக் கொண்டவர்களுடைய பாவங்கள் அனைத்தும் அழியும்.பூர்வஜன்ம நல்வினைகளின் பலன் மேல் தளத்திற்கு எழும்பும்.வாழ்க்கை பாதையில் பயமோ தடைகளோ வாரா.பக்தர்களின் மனோரதங்களை சாயி பரிபூரணமாக அறிவார்;அவற்றை நிறைவேற்றவும் செய்கிறார்.அதன்மூலமாக,பக்தர்கள் வாழ்க்கையில் நிறைவு பெற்றவர்களாகிறார்கள்.
http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Sunday, August 4, 2013

பிரதிபலன்

என்னை வேறொன்றிலும் நாட்டமில்லாமலும் பிரதிபலன் ஏதும் எதிர்பாராமலும் இரவுபகலாகத் தொழுபவன் இரண்டென்னும் மாயையை வென்று என்னுடன் ஐக்கியமாகிவிடுகிறான்.-ஸ்ரீ ஷிர்டி சாய்பாபா.
http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Saturday, August 3, 2013

ஆண்டியையும் அரசனாக்க வல்லவர்

ஊரும் பெயரும் இல்லாத சாயி அளவுகடந்த மஹிமை வாய்ந்தவர்.கடைக்கண் பார்வையால் ஆண்டியையும் அரசனாக்க வல்லவர்!
தனது பக்தனின் எல்லா காரியங்களையும் முன் நின்று நடத்துபவர் அவரே.அதேசமயம் எந்த விஷயத்திலும் சம்பந்தபடாதவர் போல் தோன்றுகிறார்.அவர் எவர்களுக்கெல்லாம் கிருபை செய்ய விரும்புகிறாரோ அவர்களிடமெல்லாம் பலவிதமான மாறுவேஷங்களில் தோன்றுகிறார்.கணக்கற்ற அற்புதங்களை திட்டமிட்டு
நிறைவேற்றுகிறார்.அவரை தியானத்தாலும் பிரேமை பொங்கும் பஜனையாலும் அணுக முயல்பவர்களுடைய தேவைகள் அனைத்தையும்  நிறைவேற்றி அவர்களைப் பாதுகாக்கிறார்.
http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Friday, August 2, 2013

ஓடிவருகிறேன்

நான் யார் மீதாவது கோபப்படுவது போலத் தெரிந்தாலும்,என்னுடைய இதயத்தில் கோபமே கிடையாது.தாய் தன் குழந்தையை எட்டி உதைத்துத் தள்ளினால் தான்,கடல் ஆற்றை வராதே என்று திருப்பியடித்தால் தான்,நான் உங்களை வெறுத்து ஒதுக்கி இன்னல் செய்வேன்.நான் என் பக்தர்களின் பிடியில் தான் இருக்கிறேன்;அவர்கள் பக்கத்தில் நிற்கிறேன்.எப்பொழுதும் அவர்களுடைய அன்பை தாகத்துடன் நாடுகிறேன்;துன்பத்தில் அவர்கள் கூப்பிடும்போது ஓடிவருகிறேன்.-ஸ்ரீ ஷிர்டி சாய்பாபா.
http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Thursday, August 1, 2013

சொரூபம்

ஸ்ரீ சாய்பாபாவின் வழிமுறைகள் ஆராய்ச்சிக்கு அப்பாற்பட்டவை!பாபாவின் பாதங்களில் மூழ்காமல்,அவருடைய யதார்த்தமான சொரூபம் கைக்கு எட்டாது.பாபாவின் பாதங்களில் ஒட்டிக்கொள்வதே நமக்கு எல்லாவற்றுக்கும் மேன்மையான லாபம்.
http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

விசுவாசத்தின் ஆழத்திற்க்கேற்றவாறு பக்தனின் பக்தியை கௌரவிக்கிறார் பாபா !

பாபா,  தன் பக்தன் தன்மேல் வைக்கும் "நம்பிக்கை மற்றும் விசுவாசத்தின் ஆழத்திற்கேற்றவாறு",  அவருக்கு மிகச்சிறந்த அனுபவங்களைக் கொடுத்த...