Monday, September 30, 2013

காரியங்களைச் செய்பவன்

காரியங்களைச் செய்பவன் நான் அல்ல என்ற எண்ணம் தோன்றும் போது சகஜமாகவே அது நானாகத்  தான் இருப்பேன். இந்த முயற்ச்சியை சாதனையாக மேற்கொண்டு என்னை அடையலாம். -ஷிர்டி சாய்பாபா

Sunday, September 29, 2013

தீர்வு

பாபாவிடம்  ஜாதி, உடம்பு, நிறம்,பணக்காரன், ஏழை, ஆண், பெண், திருநங்கை என்ற எந்தஒரு பேதமும் இருந்ததில்லை. சுத்தமான பக்தி, தூய்மையான மனம், நான் இந்த உடலல்ல, புனிதமான ஆன்மா என்ற ஒரு உணர்வு ஆகியவையே முக்கியம். இந்த உணர்வுகளோடு செல்பவருக்கு தீர்வு நிச்சயம் கிடைக்கும். ஸ்ரீ சாயி தரிசனம்.

Saturday, September 28, 2013

பரிட்ஷை

காகா சாஹேபின் (பிராம்மணர்)  முறை வந்தது. அவர் நல்ல "தங்கம்" தான் என்பதில் ஐய்யமில்லை இருந்தாலும் பரீட்சிக்கப்படவேண்டும். கத்தி ஒன்றை அவரிடம் கொடுத்து ஆட்டைக் கொல்லும்படி பாபா அவரைக் கேட்டார்.

காகாவின் கைகள் வெட்டுவதற்குத் தயாராக கீழே இறக்கப்படவிருந்த அதே தருணம் பாபா "நிறுத்து, எவ்வளவு கொடுமையானவனாய் இருக்கிறாய்! பிராமணனாய் இருந்துகொண்டு ஆட்டைக் கொல்கிறாய்" என்றார்.

காகா சாஹேப் கீழ்படிந்து கத்தியைக் கீழே வைத்துவிட்டு பாபாவிடம் கூறினார், "தங்கள் சொல்லே எங்களுக்கு சட்டமாகும். எங்களுக்கு வேறு எவ்விதச் சட்டமும் தெரியாது. எப்போதும் தங்களையே நினைவு கூர்கிறோம். தங்கள் ரூபத்தைத் தியானிக்கிறோம்.இரவும்,பகலும் தங்களுக்கே கீழ்ப்படிகிறோம்.கொல்வது சரியா, தப்பா என்பது எங்களுக்கு தெரியாது அல்லது அதை நாங்கள் கருதவில்லை.பொருட்களுக்கான காரணத்தை ஆராயவோ, விவாதிக்கவோ நாங்கள் விரும்பவில்லை. ஆனால் (பாபாவின்) தங்கள் கட்டளைகளுக்கு நம்பிக்கையுடனும், மாறாத உறுதியுடனும், ஒழுங்கான பணிவுடன் நடத்தலே எங்களது கடமையும், தர்மமும் ஆகும்"

பின்னர் காகா விடம் இருந்து கத்தி திரும்பப் பெறப்பட்டது. ஆடு தாமாகவே இறந்து விட்டது.

- ஸ்ரீ சாயி சத்ச்சரித்ரா 23

Thursday, September 26, 2013

இவ்வுலகனைத்திலும் நிரம்பிக் கிடக்கும் பாபா

'எல்லாம் பாபா செயல்' என்றால் பின் நாம் எதற்கும் ஏன் வருத்தப்படவேண்டும்?

'இட்டமுடன்' என் தலையிலே இன்னபடி யென்றெழுதிவிட்ட சிவன் செத்துவிட்டானோ! என்பார்கள்.

நக்ஷத்திரங்கள் எல்லாம் கடவுள் வழியால் சுழல்கின்றன. திரிலோகங்களும் அவனுடைய சக்கரத்தில் ஆடுகின்றன. நீ அவன், உன் மனம், உன் மனத்தின் நினைப்புகள் எல்லாம் அவனே. "சர்வம் விஷ்ணுமயம் ஜகத்" - அங்ஙனமாக, மானுடா, நீ ஏன் வீணாகப் பொறுப்பைச்  சுமக்கின்றாய்? பொறுப்பையெல்லாம் தொப்பென்று கிழே போட்டுவிட்டு, சந்தோஷமாக உன்னால் இயன்ற தொழிலைச் செய்து கொண்டிரு. எது எப்படியானால் உனக்கென்ன? நீயா இவ்வுலகத்தை படைத்தாய்? நீயா இதை நடத்துகிறாய்? உன்னை கேட்டா நீ பிறந்தாய்? எந்த விஷயத்துக்கும் நீ ஏன் பொறுப்பை வகித்துக் கொள்கிறாய்?

பாபாவை நினைத்து, அவர் செயலென்றும், அவர் பொருட்டாக செயல்படுவதென்றும் நன்கு நினைவில் நிறுத்தி, நீங்கள் எத்தொழிலைச்  செய்யப் புகுந்தாலும், அதில் பாவம் ஒட்டாது. தாமரை இல்லை மீது நீர் தங்காமல் நழுவி ஓடிவிடுவது போல் உங்கள் மதியைப் பாவம் கவர்ந்து நிற்கும் வலியற்றதாய் உங்களை விட்டு நழுவியோடிப் போய்விடும்.

Wednesday, September 25, 2013

நிறைவாக இருக்கவேண்டும்

எனக்கு படையல் போடுவதைவிட, பசித்தவனுக்கு உணவு கொடுப்பதையும், ஆதரவில்லாதவனுக்கு உதவி செய்வதையுமே நான் விரும்புகிறேன். ஏனென்றால், நீ சுகமாக இருப்பதால் உலகத்திற்கு நன்மை விளையும் என்பதால் நீ எல்லாவற்றிலும் வாழ்ந்து நிறைவாக இருக்கவேண்டும்.

Tuesday, September 24, 2013

கவலை

சிறிதளவும் கவலைக்கு இடம்கொடுக்காதிர்கள் எப்போதும் ஆனந்தம் நிரம்பியவர்களாக இருங்கள்.மரணம் பற்றிய கவலை வேண்டாம், கவலையே வேண்டாம்.. அனைத்திற்கும் சாட்சியாக நான் இருக்கிறேன். - ஷிர்டி சாய்பாபா

Sunday, September 22, 2013

கண் கொட்டாமல் விழித்துக்கொண்டிருகிறேன்

எங்கே பக்தர்கள் என்னுடைய பெருமையைப் பாடுகிறார்களோ, அங்கு கண் கொட்டாமல் விழித்துக்கொண்டிருகிறேன். ஷிர்டி சாய்பாபா

Saturday, September 21, 2013

உடல்

உடம்பைப் புறக்கணிக்கவோ, விரும்பிச் செல்லமாகப் பராமரிக்கவோ கூடாது. ஆனால் முறையாகப் பராமரிக்க வேண்டும். குதிரையில் சவாரி செய்யும் ஒரு வழிப்பயணி, தான் போகுமிடத்தை அடைந்து வீடு திரும்பும் வரையில் தனது குதிரையை எவ்வாறு பராமரிக்கிறானோ, அதைப் போல் இவ்வுடம்பைப் பராமரிக்கவேண்டும். ஸ்ரீ சாய் சத்ச்சரித்ரா 6

Friday, September 20, 2013

அனைத்திற்கும் சாட்சியாக நான் இருக்கிறேன்

சிறிதளவும் கவலைக்கு இடம்கொடுக்காதிர்கள் எப்போதும் ஆனந்தம் நிரம்பியவர்களாக இருங்கள்.மரணம் பற்றிய கவலை வேண்டாம், கவலையே வேண்டாம்.. அனைத்திற்கும் சாட்சியாக நான் இருக்கிறேன். - ஷிர்டி சாய்பாபா

Thursday, September 19, 2013

நானிருக்க பயமேன்என்னிடம் நம்பிக்கை இருக்கும் பொழுது இவ்விடத்தில் (துவாரகாமாயீ)  உங்களுடைய தலைமுடி ஒன்றுக்குகூடச் சேதம் விளையாது. நிலைமை இப்படிஇருக்க நீர் ஏன் கண்ணீர் சிந்துகீறிர்? ஷ்ரிடி சாய்பாபா. http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Wednesday, September 18, 2013

எங்கும் நிறைந்திருக்கிறேன்நான் நுழைவதற்கு கதவும் தேவையில்லை, எனக்கு வடிவமோ, இடமோ தேவையில்லை. நான் எங்கும் எப்பொழுதும் நிறைந்திருக்கிறேன் -ஷிர்டி சாய்பாபா.

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Tuesday, September 17, 2013

முடிவை அறிந்தவர்

குருவின் ஆணை தெளிவாக இருக்கும்போது, இது செய்யக்கூடிய செயலா, செய்யக்கூடாத செயலா, இது விரும்பத்தக்கதா, வெறுக்கத்தக்கதா என்றெல்லாம் கேள்வி எழுப்பும் பக்தன் கடமையிலிருந்து வீழ்ந்தவன் ஆகிறான்.

பாபாவின் பாதங்களிலேயே சித்தம் நிலைக்க வேண்டும்; உயிர் இருந்தாலென்ன, போனாலென்ன? எங்களுக்கு பாபாவின் ஆணையே பிரமாணம்.தொடர்ச்சியாக ஏற்படப்போவதையும் கடைசியான முடிவையும் அவரே அறிவார்! - ஸ்ரீ சாயி இராமாயணம்.

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Sunday, September 15, 2013

சாயி பாபா சந்தர்ப்ப வசமாகப் பேசுவதையும், சந்தர்ப்பத்திற்கு ஏற்ப நமக்குக் காட்சியளிப்பதையும் நாம் உணர்ந்திருப்போம். சில வேளைகளில் நம்மையும் மீறி பாபா பேசுவதை நாம் உணரவில்லை. நம்புவதும் இல்லை.

தாமு அண்ணா (சேட்) க்கு பாபா எழுதிய கடிதம்.

"கடவுள் கொடுத்ததைக் கொண்டு திருப்தியடையாமல் ஆகாயத்தை பிடிக்க முயற்சி செய்கிறான் போலிருக்கிறது. சேட்டுக்கு பைத்தியம் பிடித்துவிட்டது. இப்போது அவன் வீட்டில் எதுவும் தேவையிருக்கவில்லை. இருப்பதைக் கொண்டு திருப்தியடையச் சொல். லட்சங்களைப் பற்றி கவலைப்படாமல் இருக்கும் படி பதில் எழுது" பாபா கூறினார்.

கடிதத்தில் உள்ளது ஏற்கனவே தெரியும் என்றாலும் எதற்காக அவர் படிக்கச் சொன்னார் என பாபாவிடம் ஷாமா கேட்டபோது. "சந்தர்ப்பவசமாக நான் பேசுவேன்.. அதை யார் நம்பப் போகிறார்கள் " -பாபா.

உன்னுடையவன்

நான் உன்னுடையவன் என்ற விஷயத்தை மறந்து விடாதீர்கள். உங்களுடனேயே இருக்கிறேன் என்பதையும் மறந்து விடாதீர்கள். உங்கள் பசியை தணிக்காமல் நான் உண்ண முடியுமா?சொல்லுங்கள். - ஷிர்டி சாய்பாபா

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Saturday, September 14, 2013

எங்கிருந்தாலும் இழுக்கப்படுவான்என் பக்தன் ஆயிரம் மயில்களுக்கு அப்பால் இருந்தாலும், ஒரு குருவி யின் கால்களுக்கு கயிறு கட்டி இழுப்பது போல். இந்த மசுதி தாயிடம் இழுத்துக்கொண்டு வருவேன். ஷிர்டி சாய்பாபாhttp://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Friday, September 13, 2013

மகா புண்ணியசாலி

புருவத்தை உயர்த்துவதால் மட்டுமே ஓட்டாண்டியையும் பெரும் செல்வராக்கக்கூடிய சக்தி பெற்றவராயிருந்தும், ஜோலியை (பிச்சைக்காக துண்டை மடித்து கையேந்தும் பொருளாக பயன்படுத்துதல்) தோளில் மாட்டிக்கொண்டு வீடு வீடாகச் சென்றார்.

யாருடைய வீட்டு வாசலில் பாபா பிச்சைக்காக நின்று, "ஒ மகளே எனக்கு உன் சோள ரொட்டியிலிருந்து கால் ரொட்டி கொண்டு வா" என்று கரமேந்திப் பிச்சை எடுத்தாரோ, அவர் மகா புண்ணியசாலி. ஒரு கரத்தில் ஜோலியை ஏந்தி, மற்றொரு கரத்தில் ஒரு தகர டப்பாவை வைத்துக்கொண்டு சில குறிப்பிட்ட இல்லங்களுக்கு வாயில் வாயிலாகச் சென்றார். பாஜி, சாம்பார், பால்,மோர் போன்ற திரவ ரூபமான பதார்த்தம் எதுவாக இருந்தாலும், அது அவர் வைத்திருந்த தகர டப்பாவில் கொட்டப்பட்டது. ஆனால், சாதத்தையோ,சோள ரொட்டியையோ வாங்கிக் கொள்வதற்கு அவர் தமது ஜோலியை விரிப்பார்.

விதவிதமான பதார்த்தங்களை தனித்தனியாக ருசித்து சாப்பிடவேண்டும் என்கிற ஆவல் எங்கிருந்து எழும்? ஜோலியில் வந்து விழுந்த உணவை அவர் திருப்தியுடன் உண்டார். சுவையுள்ளதாயினும் சரி, சுவையற்றதாயினும் சரி, அதை பற்றிக் கவலைப்படவேயில்லை. நாக்கு சுவை உணர்வை இழந்து விட்டது போலும்!

ஒவ்வொரு நாளும் காலை நேரத்தில் அவர் பிச்சை எடுப்பார். கிடைத்ததைக் கொண்டு வயிற்றை நிரப்புவார். திருப்தியும் அடைவார். பிச்சையாவது ஒரு நியமனத்துடன் எடுத்தாரா? அதுவும் இல்லை. விருப்பப்பட்டபோதுதான் பிச்சை எடுக்க கிளம்புவார். சில நாட்களில் பிச்சை எடுக்கக் கிராமத்தினுள் பன்னிரண்டு சுற்றுகள் சென்றாலும் செல்வார்.

இம்மாதிரியாகப் பிச்சை எடுத்துச் சேர்க்கப்பட்ட உணவு, மசூதியில் இருந்த ஒரு வாயகன்ற மண் பாத்திரத்தில் கொட்டப்படும். இதிலிருந்து காகங்களும், நாய்களும் சுதந்திரமாக உணவு உண்டன.
பூனைகளையும், நாய்களையும்கூட கனவிலும் விரட்டாத மனிதர், எப்படி ஏழை எளியவர்களை விரட்டுவார்? அவரது வாழ்க்கை புனிதமானது. - ஸ்ரீமத் சாயி இராமாயணம். அத்தியாயம் 8.http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Thursday, September 12, 2013

உபதேசம் அளிக்கும் வழிகள்

ஒருவருக்கு ஒன்று, மற்றொருவருக்கு வேறு. தீஷை (உபதேசம்) அளிக்கும் வழிகள் எண்ணிலடங்கா. ஒருவரை தம்முடைய காலடியிலேயே கிடக்கச்சொன்னார். அச்சமயத்திலேயே மற்றொருவரை கண்டோபா கோவிலுக்கு அனுப்பினார். குடிப்பழக்கத்திற்கு அடிமையான ஒருவரின் கனவிலும் தோன்றினார். அவருடைய மார்பில் அமர்ந்துகொண்டு கைகளாலும், கால்களாலும் அவரை அமுக்கினார். குடிகாரர் தம்முடைய கைகளை காதுகளில் வைத்துக்கொண்டு இனி மதுவை தொடமாட்டேனென்றும் அறவே விட்டுவிடுவேன் என்றும் சத்தியம் செய்த பின்னரே அவரை விடுதலை செய்தார்.

http://www.shirdisaibabasayings.com

http://www.facebook.com/shirdisaibabasayingsintamilWednesday, September 11, 2013

பன்மடங்காகத் திருப்பிக் கொடுக்கிறார்

தொடர்ச்சி 10-செப்-13
என் சிறு வயதில், சுமார் ஏழு வயதானபோது, ஷீரடிக்கு சென்ற நான் பாபாவின் பாதத்தை பிடித்துக்கொண்டிருந்தேன். அச்சமயம் அங்கே வந்திருந்த குழந்தைகள் யாவருக்கும் பாபா இனிப்புகள் வழங்க ஆரம்பித்தார். என் கவனம் இனிப்புகள் மீது திரும்பி பாத சேவையில் சிரத்தை குறைந்தது. என் அருகில் இருந்த என் தாய் "இனிப்புகளை நினைத்துக்கொண்டு பாபாவின் தொண்டை மறந்துவிட்டாயா?" எனக் கூறி என்னை அடித்துவிட்டாள். "ஏன் அம்மா பையனை அடிக்கிறாய்?" எனக் கத்தினார் பாபா. பாபாவுக்கு பணிவிடை செய்வதில் நல்ல ஆவல் எனக்கு உண்டாக அருள்புரிய வேண்டுமென பாபாவிடம் பிராத்தித்தாள். "சிறுவன் எனக்கு சிறப்பாக பணிபுரிவான். மனதில் தூய்மையான ஆசைகள் எழ ஆண்டவன் அருள்புரிவார். அஞ்சவேண்டாம்! அவனை அடிக்காதே!" என பாபா மொழிந்தார். எனக்கு பன்னிரண்டு வயதான போது, எனக்கு மூத்தவனான மாற்றுச்சகோதரன் ஒருவனுடன் நான் ஷிர்டிக்குச் சென்றேன். எங்களிடம் 100 ருபாய் இருந்தது. பாபா தட்சிணையாக கேட்டார். முதலில் ரூ. 10 பின்னர் ரூ.15 இப்படியாக கேட்டு என் சகோதரன் சட்டைப் பையில் ரூ.25 மட்டுமே எஞ்சியிருந்தது. உடனே பாபாவுக்கு மேலும் கொடுப்பதற்காகவும், எங்கள் திரும்பும் பயணச் செலவுக்காகவும் தேவையான பணம் அனுப்பும்படி அகமத் நகரிலுள்ள எங்கள் வீட்டிற்கு கடிதம் எழுதினோம். அன்று மாலை பாபா என் சகோதரனிடம் ரூ.25 தரும்படி கேட்டார். அவன் "கொண்டுவந்த பணம் தீர்ந்துவிட்டது. நாங்கள் ஊருக்கு திரும்பிச்செல்லவே பணம் தேவை" என பதிலளித்தான். பாபா உடனே பதிலடி கொடுத்தார்! "ஏன் இந்த பொய்ப் பேச்சு! உன் பையின் மூலையில் ரூ.25 இருக்கிறது. நீ ஊருக்கு எழுதியுள்ளபடி நாளை மணியார்டர் மூலம் பணம் வந்துவிடும். கவலை வேண்டாம்!" என் சகோதரன் உடனே ரூ.25 அளித்துவிட்டான்.

"எனக்கு ஒன்று அளிப்பவருக்கு, நான் இரண்டு அளிப்பேன். இரண்டு அளிப்பவருக்கு ஐந்து, ஐந்து அளிப்பவருக்கு பத்து கொடுப்பேன்" என பாபா சொல்வது வழக்கம். ஒருவன் பகவானுக்கு அளிப்பதை அவர் பன்மடங்காகத் திருப்பிக் கொடுக்கிறார் எனும் வெளிப்படையான பொருளைத்தவிர, ஒரு கூடகமான (மறைந்து நிற்கும்) பொருளும் இதில் அடங்கியுள்ளது. - ஸ்ரீ சாயிபாபாவின் பக்தர் அனுபவங்கள்.

இப்பகுதி முற்று..

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Tuesday, September 10, 2013

ஸ்ரீ சமர்த்த சாயிநாத் அண்ட் கம்பெனி

தொடர்ச்சி 09-செப்-13

1931ல் வளையல் வியாபார பொறுப்பு என்னிடம் ஒப்படைக்கப்பட்டது. பாபாவின் பெயர் அந்த நிறுவனத்துக்கு சுட்டப்பட வேண்டுமென நான் நிர்ப்பந்தம் செய்தேன். (பாபாவின் படத்திற்கு முன் சீட்டுகள் போட்டு பார்த்து அனுமதி பெற்றபின்) அந்த நிறுவனம் 'ஸ்ரீ சமர்த்த சாயிநாத் அண்ட் கம்பெனி' என்ற பெயரைப் பெற்றது. நேர்மை, தெய்வ சிந்தை அடிப்படையில் அந்த வியாபாரம் நடத்தப்பட்டது. பாபாவின் பெயரில் ஆசி கூறி நான் அளித்த ஊதி, தீர்த்தம் பெறுபவருக்கு நிவாரணம் அளித்தது. - ஸ்ரீ சாயிபாபாவின் பக்தர் அனுபவங்கள்.

[தொடரும்...]

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Monday, September 9, 2013

ஸ்ரீ சாயிபாபாவின் பக்தர் அனுபவங்கள் தொடர்ச்சி..

நேற்றைய  தொடர்ச்சி 08-செப்-13

நான்: இந்த பிச்சையை அளித்துவிட்டு பின்னர் என் தந்தையிடம் தெரிவிக்கிறேன்.
பாபா: உன் தந்தையை கலந்தாலோசிக்காமல் நீ எப்படி இதை செய்வாய்?
நான்: என் வாழ்க்கையின் அதிகாரி நானே. என் தந்தைக்கு இதர புத்திரர்கள் இருக்கிறார்கள்; அவர் ஆட்சேபிக்கமாட்டார். குழந்தைகளை அளித்தவர் தாங்களே; ஆகவே என்னை தங்களுக்கு அர்ப்பணிப்பதில் எந்த ஆட்சேபனையும் இருக்க முடியாது.

பின்னர் சாயிபாபா என் உடலை தமது உள்ளங்களில் தாங்கி தமது சட்டைப்பையினுள் போட்டுவிட்டார். என்னை அவருடைய இதயத்துக்கு அருகில் இருத்திவிடும் அளவுக்கு அவர் என்னிடம் நிறைய அன்பு காட்டினார் என்ற எண்ணம் எழுந்து நான் பேரானந்தம் நிறையப் பெற்றேன். விழித்தெழுந்தபோது, நான் மகிழ்ச்சியுடன் இருந்தேன்; என் மனது உதாசீனம் அல்லது வைராக்கியம் (பற்றின்மை) பெற்றது. முன்புபோல் இப்போது பொருட்கள் என் மனதைக் கவரவோ ஆட்கொள்ளவோ இல்லை. இரண்டு மூன்று மாதங்களில், அதாவது 1928ம் ஆண்டு பங்குனியில் எனக்கு பண்டரிபுரத்தில் ஒரு மகன் பிறந்தான். பதினைந்து மாதங்களுக்குப் பின்னர் என் தந்தையும் நானும் ஷீரடிக்குச்  சென்றபோது என் தந்தை எனக்கு இன்னுமொரு பிள்ளை பிறக்க அருள்செய்ய வேண்டும் என பாபாவிடம் பிராத்தித்தார். 1931ல் எனக்கு இன்னுமொரு மகன் பிறந்தான்; அவனுக்கு சாயிதாஸ் என பெயர் சுட்டினேன். பிறந்த இரண்டாவது தினத்தில் அவனுக்கு அதிக காய்ச்சல் கண்டது. பாபாவின் ஊதியையும், தீர்த்தத்தையும் கொடுத்து ஒரு தாயத்தில் பாபாவின் துணிக்கந்தைகளிலிருந்து எடுத்த ஒரு துண்டை வைத்து அந்த தாயத்தை குழந்தைக்கு அணிவித்தோம். குழந்தை குணமடைந்தது. ஒரு வயது நிரம்பியவுடன் குழந்தையை ஷிர்டிக்கு எடுத்துச் சென்றோம். - ஸ்ரீ சாயிபாபாவின் பக்தர் அனுபவங்கள்.

[தொடரும்..
http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Sunday, September 8, 2013

ஸ்ரீ சாயிபாபா-வின் பக்தர் அனுபவங்கள்

நேற்றைய தொடர்ச்சி 07-செப்-13...சாயிபாபாவிடம் என் விசுவாசம் அதிகரித்தது. பிற மகான்களையும் நான் சாயிபாபாவாகவே காண்கிறேன். அவர்களை பணியும்போது வெளிப்படையாகவோ அல்லது எனக்குள்ளேயோ "சமர்த்த சத்குரு சாயிநாதனுக்கு நமஸ்காரம்" எனக் கூறிக்கொள்வேன். 1927ம் ஆண்டில் கேத்காம்பேட்டிற்குச் சென்று நாராயண மகராஜை இந்த வார்த்தைகளை மனத்துள் கூறிக்கொண்டே வணங்கினேன். அவர் என்னிடம் உரைத்தார்: "உனது குரு பரமகுரு. அவர் என்னை விட உயர்ந்த தன்மை படைத்தவர். நீ ஏன் இங்கு வந்தாய்? அங்கே செல். உன் எண்ணம் ஈடேறும்". இது நடந்தது பாபாவால் என் முந்தைய குழந்தை பிறந்தது பற்றி குறிப்பிட்டிருந்ததற்கு முன்னதாக.

1927ல் என் கிரகபலன் சுபகரமாக இல்லை! என் உடல்நிலை பாதிக்கப்பட்டது. பூனாவிலிருந்து சுமார் 40 மைல் தொலைவிலுள்ள ஜன்னர் என்ற இடத்திலிருந்து இரண்டு மைல் தூரத்தில் அமைந்திருந்த சீதாராம் உத்தரேச்வரர் (அதாவது சிவபெருமான்) ஆலயத்திற்கு சென்றேன். ஒவ்வொரு ஞாயிறும் அந்த ஈசனை வழிபட்டு வந்தேன். ஒரு ஞாயிறன்று காலை 7 மணி அளவில் ஈசனுக்கு "சாயிபாபாவுக்கு நமஸ்காரம்" எனக் கூறிக்கொண்டே மலர்களை சமர்ப்பித்தேன். அப்போது ஈசனுடைய திருவுருவத்தில் ஒரு ஒளியையும், அந்த ஒளியின் மத்தியில் எப்போதும் நான் நினைத்துக்கொண்டிருக்கும் சாயிபாபாவின் திருவுருவையும் கண்டேன். அதன் பின்னர் என் உடல் நிலையில் முன்னேற்றம் கண்டது. தளர்வடைந்த மனநிலை திடம் பெற ஆரம்பித்தது. அங்கே ஜானகி தாஸ் என்ற ஒரு மகான் உள்ளார். ஒவ்வொரு ஞாயிற்றுக் கிழமையும் நான் அவரிடம் சென்று, உதடுகள் சாயிபாபாவின் பெயரை உச்சரிக்க அவரிடம் பணிவேன். அப்போது அவர் என்னிடம் கூறினார்: "நீ ஒரு பெரும் மகானிடம் தஞ்சம் புகுந்துள்ளாய். என் போன்ற ஒரு எளிய சாதுவிடம் நீ ஏன் வரவேண்டும்.? என் போன்றவர்கள் சாயிபாபாவின் பாதங்களை பற்றுகிறோம்". பின்னர் நான் என் தங்கும் விடுதிக்குச் சென்று உறங்கினேன். சாயிபாபா என் கனவில் ஒரு பகீர் போன்று தோன்றி  "நீ மிகவும் சஞ்சல மடைந்துள்ளாய். எனக்கு பிட்சை கொடு. உனது உடல், மனம் முழுவதையும் பிட்சையாக கொடு". எனக் கூறினார். -ஸ்ரீ சாயிபாபா-வின் பக்தர் அனுபவங்கள்.

[தொடரும்...]

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Saturday, September 7, 2013

ஸ்ரீ சாய்பாபாவின் பக்தர் அனுபவங்கள்-3

06/09/13 தொடர்ச்சி

எனக்கு ஒரு இளைய சகோதரன். அவனுக்கு பாபா கூறியபடிய பெயரிடப்பட்டது. மணமாகி எனக்கு இரு பெண்களும் ஒரு பிள்ளையும் பிறந்தனர். ஆனால் அவர்கள் பிறந்து சில மாதங்களிலேயே இறந்தனர். ஆண் குழந்தை 1926ல் மாண்டது. என் மனைவியின் உடல் மிக்க பலவினமாக ஆனது. மிகவும் மனம் தளர்ந்த நான் பாபாவிடம் இவ்வாறு பிராத்தனை செய்தேன். "விரைவிலேயே மாண்டுவிடும் பல குழந்தைகளை அளிப்பதற்கு பதிலாக நீண்ட ஆயிளுடன் கூடிய ஒரு குழந்தையை அளிக்கவேண்டும்." நான் ஷீரடியில் ஓரிரவு உறங்கிக்கொண்டிருந்தேன். பாபா என் கனவில் தோன்றி நான் இறந்துவிட்டதாக வருத்தப்படும் ஆண் குழந்தை மூலா நக்ஷத்திரத்தில் பிறந்தால் பெற்றோர்களுக்கு கெடுதல் விளையும் எனக்கூறினார். கனவில் பாபாவின் மார்பில் சூரியனைப் போன்ற ஒரு ஒளிமிக்க வட்டத்தைக் கண்டேன். அந்த சூரியனுக்குள் இறந்துபோன என் ஆண் சிசுவை மடியில் வைத்துக்கொண்டு பாபா உட்கார்ந்திருக்க, அவர் என்னிடம் கூறுகிறார்: "இந்த ஆபத்தான குழந்தையை உன்னிடமிருந்து எடுத்துக்கொண்டுவிட்டேன். உனக்கு ஒரு நல்ல குழந்தையை அளிக்கிறேன், பயப்படாதே". இந்த காலத்திற்கு முன் எங்கள் குடும்பம் அகமத்நகரை விட்டு பூனாவில் குடியேறிவிட்டது. நான் வீட்டிற்கு திரும்பியவுடன் இறந்துபோன குழந்தையின் ஜாதகத்தை எடுத்துப்பார்த்தேன். அது மூலா நக்ஷத்திரத்திலேயே பிறந்திருந்தது. பதினைந்தே மாதங்களில் எனக்கு ஒரு மகன் பிறந்து இன்றும் ஆயிளுடன் இருக்கிறான். இது நடந்தது 1918ல். - ஸ்ரீ சாயிபாபாவின் பக்தர் அனுபவங்கள்.

[தொடரும்...]

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Friday, September 6, 2013

ஸ்ரீ சாய்பாபாவின் பக்தர் அனுபவங்கள்-2
05/09/13 தொடர்ச்சி ...

என்னுடைய ஐந்தாவது வயதில் (1990ம் ஆண்டில்) செளளம் செய்வதற்காக (சிகை வைப்பது - முடி கொடுப்பதற்கு) என்னை ஷீரடிக்கு அழைத்துச் சென்றனர். எனக்கு அக்ஷராப்யாசமும் (முதன் முறையாக எழுத பழுகுவது) நடந்தது. சாயிபாபா என் கையை பிடித்து சிலேட்டில் ஹரி எழுத வைத்தார். அதன் பின்னர் ஷிர்டியிலிருந்து பள்ளிக்கு அழைத்துச் செல்லப்பட்டேன். எனக்கு திருமணம்  நடத்த தீர்மானித்தபோது, நான்கு பெண்கள் பார்க்கப்பட்டனர். எந்த ஒரு முக்கியமான விஷயத்திலும் முன்னதாக பாபாவை கலந்தாலோசித்து அனுமதி பெறாமல் என் தந்தை முடிவு எடுக்கமாட்டார். அவர்  சாயிபாபாவிடம் சென்று எனக்கு மணம் செய்து வைக்க முடிவு செய்யப்பட்ட நான்கு பெண்களின் ஜாதகங்களையும் அவர் முன் வைத்தார். அவர்களுள் ஒரு பெண்ணுக்கு ரூ.2500 அல்லது ரூ.3000 வரதட்சிணை அளிப்பதாக முன் வந்திருந்தனர். பாபா நான்கு ஜாதகங்களில் ஏழ்மையான ஒரு பெண்ணின் ஜாதகத்தை எடுத்து என் தந்தையின் கைகளில் கொடுத்தார். அந்த பெண்ணையே நான் மணந்தேன். பண்டரிபுரத்தில் நடைபெறவிருந்த திருமணத்திற்கு வருகை தரும்படி பாபாவை என் தந்தை அழைத்தார். ஆனால், "பாபா, நான் உன்னுடனேயே இருக்கிறேன். அஞ்ச வேண்டாம்!" எனப் பகன்றார். மேலும் என் தந்தை திருமணத்திற்கு வரவேண்டுமென பாபாவை வற்புறுத்தினார். ஆனால் பாபாவோ வருவதற்கு மறுத்து, "ஆண்டவனின் சித்தமின்றி என்னால் செய்யக்கூடியது எதுவுமில்லை. என் சார்பில் திருமணத்தில் பங்கேற்க சாமாவை அதாவது மாதவராவை அனுப்பி வைக்கிறேன்" எனக் கூறிவிட்டார். பண்டரிபுரத்தில் நிகழ்ந்த திருமணத்தில் சாமா பங்கேற்றார். - ஸ்ரீ சாயிபாபாவின் பக்தர் அனுபவங்கள்.

[தொடரும்...]

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Thursday, September 5, 2013

ஸ்ரீ சாய்பாபாவின் பக்தர் அனுபவங்கள்

நானா சாகேப் ராஸனே அல்லது தவுலத்ஷா என்கிற தத்தாத்ரேய தாமோதர் ராஸனே
(தாமோதர் ஸாவல்ராம் (அண்ணா) ராஸனே, காசர் அவர்களது புதல்வர், வயது 40, வசிப்பது ரவிவார்பேட், பூனே - மே, 1936

என் தந்தை சாயிபாபாவின் பழம் பெரும் பக்தர், நானா சாகேப் சந்தோர்க்கர் பாபாவிடம் சென்ற அதே காலத்தில் என் தந்தையும் சென்றார். அப்போது என் தந்தைக்கு குழந்தைகள் இல்லை; புத்திரப்பேறு கிடைக்க ஆசி பெற பாபாவிடம் செல்ல விரும்பினார். சுமார் 1900ம் ஆண்டு ஒரு பக்தர் பாபாவுக்கு ஒரு கூடை மிகச்சிறந்த கோவா மாம்பழங்கள் அனுப்பியிருந்தார். அவற்றுள் ஆறு பழங்களை தனியாக எடுத்துவைத்துவிட்டு எஞ்சியதை அங்கு வந்திருந்த அனைவருக்கும் பிரசாதமாக பாபா விநியோகம் செய்துவிட்டார். அவர்கள் எஞ்சிய ஆறு பழங்களையும் விநியோகிக்கும்படி கேட்டனர். ஆனால் அவற்றை தாம்யாவுக்காக (அதாவது என் தந்தைக்கு) எடுத்து வைத்திருப்பதாக பாபா கூறிவிட்டார். 'தாம்யா இங்கு இல்லையே?' என்றனர். 'கோபர்காமுக்கு வந்துவிட்டார், விரைவில் இங்கு வருவார்' என பாபா பதிலளித்தார். சிறிது நேரம் கழித்து என் தகப்பனார் அங்கு வந்து பாபாவுக்கு மலர் மாலைகள், ஆடை போன்றவற்றை சமர்ப்பித்தார். அப்போது பாபா "தாம்யா, இந்த பழங்களை இப்போது எடுத்துப்போ. அவற்றை உண்டு சாவாயாக" எனக் கூறினார்.

பாபாவின் இந்த சொற்களை கேட்டு என் தந்தை நடுங்கிப்போய்விட்டார். ஆனால் அங்கிருந்த மஹல்சாபதி பாபாவின் காலடியில் இறப்பதும் ஒருவித அனுக்ரஹமே எனக் கூறினார். இவ்வாறு ஊக்குவிக்கப்பட்ட என் தகப்பனார் பழங்களை உண்ணலாமென நினைத்தார். ஆனால் பாபா,"இந்த பழங்களை நீயே உண்டுவிடாதே, உன் இளைய மனைவியிடம் கொடு. உனக்கு முதலில் 2 பிள்ளைகள் பிறப்பார்கள். முதல்வனுக்கு தவுலத்ஷா என்றும் இரண்டாவது மகனுக்கு தானாஷா என்றும் பெயர் வை" எனக்கூறி என் தந்தைக்கு ஆறுதலளித்தார். அகமத் நகரிலுள்ள தமது வீட்டிற்குத் திரும்பிய என் தந்தை இளைய மனைவியிடம் பழங்களை கொடுத்தார். பிறகு ஒரு குறிப்பேட்டில் பிறக்கப்போகும் பிள்ளைகளுக்கு இட வேண்டிய பெயர்களை குறித்துக்கொண்டார். ஒரு வருடத்திற்குப்பின் நான் பிறந்தேன். பதினைந்து மாதங்கள் நிரம்பியிருந்த என்னை என் தந்தை ஷிர்டியிலுள்ள சாயிபாபாவின் தரிசனத்துக்கு அழைத்துச் சென்றார். அப்போது அவர் பாபாவிடம் "இந்த குழந்தைக்கு என்ன பெயர் வைப்பது?" எனக் கேட்க, பாபா, "நான் உன்னிடம் கூறியதை மறந்து விட்டாயா? உன் குறிப்பேட்டில் முன்றாவது பக்கத்தில் அதை எழுதி வைத்துள்ளாய். குழந்தைக்கு தவுலத்ஷா என்ற பெயரை சூட்டும்படி நான் கூறவில்லையா?" என பதிலளித்தார். - ஸ்ரீ சாய்பாபாவின் பக்தர் அனுபவங்கள்.

[தொடரும்..]

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Tuesday, September 3, 2013

நன்மை

பக்தர்கள் திட்டம் போடுகிறார்களே தவிர,எது நன்மை தரும் என்பது அவர்களுக்குத் தெரியாது.பாபாவுக்குத்தான் நடந்ததும் நடப்பதும் நடக்கப்போவதும் பக்தனுக்கு எது நன்மை தரும் என்பதும் தெரியும்.
தம்முடைய ஆசைகளை ஒருவர் தம் மனத்தின் அடி ஆழத்தில் இருக்கும் விருப்பத்தை சாயிபாதங்களில் பிரேமையுடன் நிவேதனம் செய்துவிட்டு பூரண விசுவாசத்துடன் பலனை எதிர்ப்பார்க்கும்பொழுது,சாயி அவரை நல்ல வழியிலேயே நடத்துகிறார்.அனன்னியமாக சரணாகதியடைந்த பக்தனை எந்தவிதமான ஆபத்தும் வாராமல் காப்பாற்றுவது அவருடைய விரதம் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.
http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

பாபா-வின் கணக்கு

திரு. பி.வி.தேவ்.(ஓய்வு பெற்ற தாசில்தாரர், ஸ்டேஷன் ரோடு, தானே , மும்பை)
டிசம்பர் 13. 1936

தொழுநோயை (வம்சாவளியாக வந்ததோ, தொத்திக் கொண்டதோ எதுவாயினும் சரி), பார்வையின்மை, காது கேளாமை, வாத நோய், பேய் பிடித்திருப்பது, செய்வினை, சூன்யம் போன்றவற்றின் விளைவுகள் ஆகியவற்றை போக்குதல், தீய வேசிகள், இதர பாபிகள் ஆகியோரை தூய்மைப் படுத்துதல் போன்றவற்றில் சாயி பாபா இயேசு கிறிஸ்துவைப் போலவே நடந்து கொண்டாரா எனபது பற்றி, நான் துல்லியமான விவரங்களை நான் அறியேன். ஆனால்,தீய குணத்தை போக்குவதில், பல சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன. என் விஷயத்தை எடுத்துக்கொள்வோம்; லோபம் அல்லது பொருளாசையைக் கண்டித்தார். இதன் முழு விவரத்தையும் கூறுகிறேன்.

என் உத்தியோக காலம் முழுமையாக நிறைவடைந்த பின்னரும், எனக்கு முன்று மாத கால நீடிப்பு அளிக்கப்பட்டது. எனக்கென்னவோ ஓராண்டு கால நீடிப்பு கிடைக்க வேண்டுமென்ற எதிர்பார்ப்பு. கலெக்டர் இந்த விஷயத்தை விசாரித்தபோது நான் மேலும் ஓராண்டு பணியாற்ற விரும்புவதை அவரிடம் தெரிவித்தேன். இவ்வாறாக இவ்விஷயம் தீர்மானிக்கப்பட்டு, எனக்கு ஓராண்டு பணி நீடிப்புக் கிடைத்தது. அந்த சமயத்தில் நான் ஒரு கனவு கண்டேன். சாயி பாபா யாருடனோ அமர்ந்திருக்கிறார். அவர் முன் நான் விழுந்து வணங்குகிறேன்.

பாபா: அந்த புத்தகங்கள் என்ன என அறிவாயா?
நான்: தெரியாது
பாபா: அவை உன் கணக்குகள், நான் அவற்றை பார்த்துக்கொண்டிருந்தேன்.
நான்: என் கணக்கா, பாபா?
பாபா: ஆம். இங்கே உள்ளன அவை. இங்கே பார். நெ.17, நெ.16க்குப் பின் வருமா?
நான்: நெ.16 முதலில் வரும், 17-க்குப் பின் அல்ல.
பாபா: அப்படியானால் உன் கணக்குகளில் 17-க்குப் பிறகு 16 வருவதெப்படி?
நான்: அது எப்படி சாத்தியம், பாபா?
பாபா: பாபா, பார். இதோ உன் கணக்கு.

அவர் கணக்குப் புத்தகத்தை தூக்கி எறிகிறார். அதைப் படித்ததில் அது என்னுடைய கணக்கு தான் என தெரியவந்தது. 'ஆம். பாபா. இதோ 17-க்குப் பின் 16 வருகிறது. அது எப்படி?' பின்னர் கனவைப் பற்றி சிந்தித்துப் பார்த்தேன். முடிவுக்கு வந்தேன்.
- ஸ்ரீ சாயி பாபாவின் பக்தர் அனுபவங்கள்.

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Monday, September 2, 2013

கோபத்தை என்மீது காட்டு

காமம் எழும்போது என் விஷயமாக காமப்படு.கோபம் வரும்போது கோபத்தை என்மீது காட்டு.அபிமானத்தையும்  (தேஹத்தின் மீதுள்ள பிடிப்பையும்) துராகிருதத்தையும்(உரிமை இல்லாத இடத்து வலிய நிகழ்த்தும் செயலையும்)பக்தர்கள் என்னுடைய பாதங்களை நோக்கியே செலுத்தட்டும்.
காமம்,கோபம்,தேஹாபிமானம் போன்ற இயற்கையான உணர்ச்சிகள்  பொங்கியெழும்போது என்னைக் குறியாக ஆக்கி அவற்றை என்மீது ஏவுக.
நான்(பாபா) நிரந்தரமாகவே உன் அருகில் இருக்கிறேன் என்று உன் மனம் நம்ப ஆரம்பித்துவிட்ட பிறகு,உன் மனத்தின் வேகங்களும் தீவிரமான உணர்ச்சிகளும் தாமாகவே பலமிழந்துவிடும்.காலக்கிரமத்தில் வேருடன் அறுக்கப்படும்.மனம் வேகங்களிலிருந்து விடுபட்டுவிடும்.-ஸ்ரீ ஷிர்டி சாய்பாபா.
http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Sunday, September 1, 2013

மனமும் புத்தியும்

மனமும் புத்தியும் புலனுறுப்புகளும் உலக இன்பங்களைத் துய்க்க ஈர்க்கப்படும்போது முதலில் என்னை நினை.பிறகு அவற்றை அம்சம் அம்சமாக எனக்கு சமர்ப்பணம் செய்வாயாக.இவ்வுலகம் அழியும்வரை புலன்கள் அவற்றுக்குரிய நாட்டங்களால் ஈர்க்கப்பட்டே தீரும்;இதைத் தடுக்க இயலாது.ஆனால்,அந் நாட்டங்களை என்னுடைய பாதங்களில் சமர்ப்பித்துவிட்டால் அவை இயற்கையாகவே வலுவிழந்துவிடும்.-ஸ்ரீ ஷிர்டி சாய்பாபா.
http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

விசுவாசத்தின் ஆழத்திற்க்கேற்றவாறு பக்தனின் பக்தியை கௌரவிக்கிறார் பாபா !

பாபா,  தன் பக்தன் தன்மேல் வைக்கும் "நம்பிக்கை மற்றும் விசுவாசத்தின் ஆழத்திற்கேற்றவாறு",  அவருக்கு மிகச்சிறந்த அனுபவங்களைக் கொடுத்த...