Sunday, September 8, 2013

ஸ்ரீ சாயிபாபா-வின் பக்தர் அனுபவங்கள்


நேற்றைய தொடர்ச்சி 07-செப்-13...



சாயிபாபாவிடம் என் விசுவாசம் அதிகரித்தது. பிற மகான்களையும் நான் சாயிபாபாவாகவே காண்கிறேன். அவர்களை பணியும்போது வெளிப்படையாகவோ அல்லது எனக்குள்ளேயோ "சமர்த்த சத்குரு சாயிநாதனுக்கு நமஸ்காரம்" எனக் கூறிக்கொள்வேன். 1927ம் ஆண்டில் கேத்காம்பேட்டிற்குச் சென்று நாராயண மகராஜை இந்த வார்த்தைகளை மனத்துள் கூறிக்கொண்டே வணங்கினேன். அவர் என்னிடம் உரைத்தார்: "உனது குரு பரமகுரு. அவர் என்னை விட உயர்ந்த தன்மை படைத்தவர். நீ ஏன் இங்கு வந்தாய்? அங்கே செல். உன் எண்ணம் ஈடேறும்". இது நடந்தது பாபாவால் என் முந்தைய குழந்தை பிறந்தது பற்றி குறிப்பிட்டிருந்ததற்கு முன்னதாக.

1927ல் என் கிரகபலன் சுபகரமாக இல்லை! என் உடல்நிலை பாதிக்கப்பட்டது. பூனாவிலிருந்து சுமார் 40 மைல் தொலைவிலுள்ள ஜன்னர் என்ற இடத்திலிருந்து இரண்டு மைல் தூரத்தில் அமைந்திருந்த சீதாராம் உத்தரேச்வரர் (அதாவது சிவபெருமான்) ஆலயத்திற்கு சென்றேன். ஒவ்வொரு ஞாயிறும் அந்த ஈசனை வழிபட்டு வந்தேன். ஒரு ஞாயிறன்று காலை 7 மணி அளவில் ஈசனுக்கு "சாயிபாபாவுக்கு நமஸ்காரம்" எனக் கூறிக்கொண்டே மலர்களை சமர்ப்பித்தேன். அப்போது ஈசனுடைய திருவுருவத்தில் ஒரு ஒளியையும், அந்த ஒளியின் மத்தியில் எப்போதும் நான் நினைத்துக்கொண்டிருக்கும் சாயிபாபாவின் திருவுருவையும் கண்டேன். அதன் பின்னர் என் உடல் நிலையில் முன்னேற்றம் கண்டது. தளர்வடைந்த மனநிலை திடம் பெற ஆரம்பித்தது. அங்கே ஜானகி தாஸ் என்ற ஒரு மகான் உள்ளார். ஒவ்வொரு ஞாயிற்றுக் கிழமையும் நான் அவரிடம் சென்று, உதடுகள் சாயிபாபாவின் பெயரை உச்சரிக்க அவரிடம் பணிவேன். அப்போது அவர் என்னிடம் கூறினார்: "நீ ஒரு பெரும் மகானிடம் தஞ்சம் புகுந்துள்ளாய். என் போன்ற ஒரு எளிய சாதுவிடம் நீ ஏன் வரவேண்டும்.? என் போன்றவர்கள் சாயிபாபாவின் பாதங்களை பற்றுகிறோம்". பின்னர் நான் என் தங்கும் விடுதிக்குச் சென்று உறங்கினேன். சாயிபாபா என் கனவில் ஒரு பகீர் போன்று தோன்றி  "நீ மிகவும் சஞ்சல மடைந்துள்ளாய். எனக்கு பிட்சை கொடு. உனது உடல், மனம் முழுவதையும் பிட்சையாக கொடு". எனக் கூறினார். -ஸ்ரீ சாயிபாபா-வின் பக்தர் அனுபவங்கள்.

[தொடரும்...]


http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

புற்று நோயை குணப்படுத்திய பாபா

https://youtu.be/jfptSQq9dm4 http://www.shirdisaibabasayings.com http://www.facebook.com/shirdisaibabasayingsintamil