நேற்றைய தொடர்ச்சி 08-செப்-13

நான்: இந்த பிச்சையை அளித்துவிட்டு பின்னர் என் தந்தையிடம் தெரிவிக்கிறேன்.
பாபா: உன் தந்தையை கலந்தாலோசிக்காமல் நீ எப்படி இதை செய்வாய்?
நான்: என் வாழ்க்கையின் அதிகாரி நானே. என் தந்தைக்கு இதர புத்திரர்கள் இருக்கிறார்கள்; அவர் ஆட்சேபிக்கமாட்டார். குழந்தைகளை அளித்தவர் தாங்களே; ஆகவே என்னை தங்களுக்கு அர்ப்பணிப்பதில் எந்த ஆட்சேபனையும் இருக்க முடியாது.
பின்னர் சாயிபாபா என் உடலை தமது உள்ளங்களில் தாங்கி தமது சட்டைப்பையினுள் போட்டுவிட்டார். என்னை அவருடைய இதயத்துக்கு அருகில் இருத்திவிடும் அளவுக்கு அவர் என்னிடம் நிறைய அன்பு காட்டினார் என்ற எண்ணம் எழுந்து நான் பேரானந்தம் நிறையப் பெற்றேன். விழித்தெழுந்தபோது, நான் மகிழ்ச்சியுடன் இருந்தேன்; என் மனது உதாசீனம் அல்லது வைராக்கியம் (பற்றின்மை) பெற்றது. முன்புபோல் இப்போது பொருட்கள் என் மனதைக் கவரவோ ஆட்கொள்ளவோ இல்லை. இரண்டு மூன்று மாதங்களில், அதாவது 1928ம் ஆண்டு பங்குனியில் எனக்கு பண்டரிபுரத்தில் ஒரு மகன் பிறந்தான். பதினைந்து மாதங்களுக்குப் பின்னர் என் தந்தையும் நானும் ஷீரடிக்குச் சென்றபோது என் தந்தை எனக்கு இன்னுமொரு பிள்ளை பிறக்க அருள்செய்ய வேண்டும் என பாபாவிடம் பிராத்தித்தார். 1931ல் எனக்கு இன்னுமொரு மகன் பிறந்தான்; அவனுக்கு சாயிதாஸ் என பெயர் சுட்டினேன். பிறந்த இரண்டாவது தினத்தில் அவனுக்கு அதிக காய்ச்சல் கண்டது. பாபாவின் ஊதியையும், தீர்த்தத்தையும் கொடுத்து ஒரு தாயத்தில் பாபாவின் துணிக்கந்தைகளிலிருந்து எடுத்த ஒரு துண்டை வைத்து அந்த தாயத்தை குழந்தைக்கு அணிவித்தோம். குழந்தை குணமடைந்தது. ஒரு வயது நிரம்பியவுடன் குழந்தையை ஷிர்டிக்கு எடுத்துச் சென்றோம். - ஸ்ரீ சாயிபாபாவின் பக்தர் அனுபவங்கள்.
[தொடரும்..
http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil