நண்பனையும், விரோதியையும் சரிசமமாகவே பாருங்கள். எள்ளளவும் வித்தியாசம் காட்டாதீர்கள். எல்லோரையும் ஒன்று போலவே சமமாக பாருங்கள். அதிர்ஷ்டமோ, துரதிருஷ்டமோ சமநிலையில் இருந்து பாருங்கள். ஷிர்டி சாய்பாபா

அனைத்து சாய் அன்பர்களுக்கும் மற்றும் ஆன்மிக அன்பர்களுக்கும், ஷிர்டி சாய்பாபா-வின் பேச்சு சூத்திரங்களை போன்றது; அர்த்தமோ மிகவும் கம்பிரமானது; வெகு ஆழமான வியாபகமுள்ளது; இருப்பினும் பேச்சு சுருக்கமானது, அவரது திரு வாயின் முலம் உதிர்ந்த உபதேசங்களை, தினமும் பாபாவின் ஒரு செய்தி-யை இந்த வலைத்தளத்தில் தமிழில் வெளியிடப்படும். சாயி அன்பர்கள் கிழே தங்களது இ-மெயில் முகவரியை பதிவு செய்யலாம். ஓம் சாய் ராம்.
Thursday, October 31, 2013
Wednesday, October 30, 2013
அற்புதமான சக்தி.
மனதில் எந்த எண்ணத்துடன் ஒருவர் வந்தாலும்,சாயி அவருக்கு தரிசனம் தந்து அவருடைய பக்தியை வென்றுவிடுகிறார்.இது சாயியின்
அற்புதமான சக்தி.
http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil
Tuesday, October 29, 2013
தக்ஷிணை
பாபா: நான் எல்லோரிடமும் கேட்பதில்லை.ஆண்டவன் யாரை குறிப்பிட்டு காட்டுகிறாரோ அவரிடமிருந்து மட்டுமே கேட்கிறேன்.ஆனால் பதிலுக்கு,நான் பெற்றுக் கொண்ட தொகையைப் போல் பத்து மடங்கு அந்த நபருக்கு நான் கொடுக்க வேண்டியதாகிறது.எனது சொந்த உபயோகத்துக்காக நான் பணம் பெறுவதில்லை.எனக்கு குடும்பம் எதுவும் கிடையாது.
ஒவ்வொரு தினமும் காலையில் பாபா கையில் ஒன்றுமே இல்லாத எளிய பகீர்;பகல் முழுவதும் தக்ஷிணைகள் குவியும்.மாலை அல்லது இரவில் சேர்ந்த தொகை முழுவதும் பட்டுவாடா செய்து விடப்பட்டுவிடும்.பாபா மறைந்த போது சுமார் பத்து ஆண்டுகள் ஒரு கவர்னருடைய வருமானத்துக்கு சமமான தக்ஷிணையைப் பெற்று வந்த போதும்,அவர் கையில் எஞ்சி இருந்தது ரூ.16 மட்டுமே.பாபா ரூபாய்களை தூசாக மதிப்பவர்.அவர் விரும்புவது உங்கள் மனமும் இதயமும்,உங்கள் நேரமும் ஆன்மாவும் அவரிடம் ஈடுபடுத்தபட வேண்டுமென்பது மட்டுமே.
http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil
Monday, October 28, 2013
சாதனை
காரியங்களைச் செய்பவன் நான் அல்ல என்ற எண்ணம் தோன்றும் போது சகஜமாகவே அது நானாகத் தான் இருப்பேன். இந்த முயற்ச்சியை சாதனையாக மேற்கொண்டு என்னை அடையலாம். -ஷிர்டி சாய்பாபா
Sunday, October 27, 2013
http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil
Saturday, October 26, 2013
பாபாவின் கிருபை
இந்திரிய சுகங்களை யதேச்சையாக அனுபவிக்கும் போதுங்கூட உள்ளுக்குள்ளே எப்பொழுதும் சாயீபிரீதி இருக்கட்டும்.ஏனெனில்,அதுவே உலகியல் விஷயங்களுக்கும் ஆன்மீக விஷயங்களுக்கும் அபயமளிக்கும்.
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil
Friday, October 25, 2013
பாபாவின் அனுமதி
பக்தர் ஒருவர் ஷிர்டி சென்று பாபாவை தரிசிக்க விரும்பினால் அவரால் நினைத்த மாத்திரத்தில் ஷீரடிக்குச் சென்றுவிடமுடியது. அதற்கு பாபாவின் அனுமதி தேவை. பாபா விரும்பினால் ஒழிய யாராலும் ஷிர்டிக்குச் சென்றுவிட முடியாது.
பாபாவின் அருளால் ஷிர்டிக்குச் செல்லும் பேரு ஒருவருக்கு கிடைத்து விட்டால், அவர் ஷிர்டிக்குச் சென்று, தான் விருப்பப்பட்ட நாட்கள் வரை அங்கே தங்க இயலாது. பாபா அனுமதி கொடுக்கும் தினங்கள் வரையே ஷீரடியில் தங்க இயலும்.
முற்றிலும் மாறுபட்ட இந்த அனுபவம் சாயி பக்தர்கள் அனைவருக்கும் ஏற்படுவதுண்டு. பாபா தம் பக்தரைத் தன்னருகிலேயே இருக்கச் சொன்னாலோ, அல்லது விலகிப் போகும்படி சொன்னாலோ அதற்குப் பின்னணியில் வலுவான காரணம் இருக்கும்.
ஒரு முறை காகா மகாஜனி என்னும் பக்தர் ஒருவர் மும்பையிலிருந்து ஷிர்டிக்குச் சென்றார். அங்கே ஒருவாரம் தங்கியிருந்து கோகுலாஷ்டமி பண்டிகையைக் கண்டு மகிழ விரும்பினார்.
பாபாவின் தரிசனத்தை பெற்றவுடனே, பாபா அவரை, "எப்போது விட்டுக்கு திரும்பப் போகிறாய் ?" என்று கேட்டார்.
காகா மகாஜனிக்கு பாபாவின் இந்த கேள்வி விநோதமாகப்பட்டாலும். "தங்கள் எப்போது அனுமதி அளிக்கிறீர்களோ அப்போதே நான் புறப்பட்டு விடுவேன்" என்றார். உடனே பாபா, நாளைக்கு போ! என்று சொல்லிவிட்டார்.
பாபாவின் உத்தரவு ஏமாற்றத்தை அளித்தாலும் , ஆணைப்படி அவர் அடுத்த நாளே மும்பைக்குப் புறப்பட்டுச் சென்றார்.
மும்பையில் காகா மகாஜனி தமது அலுவலகத்துக்குப் போய்ச் சேர்ந்ததும்தான் அங்கே அவரது எஜமானர் அவரது வரவுக்காகக் கவலையுடன் காத்திருப்பதை அறிந்தார். ஒரு வாரம் கழித்து வர வேண்டியவர், முன்றாம் நாளே திரும்பி வந்ததைக் கண்டதும் அவரது எஜமானர் மிக மகிழ்ந்தார்.
பாபாவின் அருளை வியந்து, கண்களில் நீர் மல்க, காகா மகாஜனியால் மட்டுமே செயலாற்ற முடியும் வேலை ஒன்றை அவரிடம் ஒப்படைத்தார்.
Thursday, October 24, 2013
போட்டியும் போராட்டமும்

உலகம் தோன்றிய நாள் முதல் போட்டியும் போராட்டமும் மனித வாழ்க்கையின் பிரிக்க முடியாத அம்சங்களாகி விட்டன. உண்மையை எதிர்த்து பொய்மை போராடுவதும், நன்மையை எதிர்த்து தீமை போராடுவதும் அன்றாட நிகழ்ச்சிகள் ஆகிவிட்டன. இந்தப் போராட்டங்களின் தொடக்கத்தில் தீய சக்திகளின் கைகளே வலுப்பெற்று ஓங்கி இருப்பது போல் ஒவ்வொரு முறையும் தோன்றுவது உண்டு.
ஆனால், எப்போதும் இறுதியில் வெற்றி பெறுபவை, உண்மையும் நன்மையுமே என்பது கடந்த கால வரலாறு கற்றுத் தரும் பாடமாகும்.
ஷீரடியில், சாயிபாபாவுக்கும் மொஹித்தின் தாம்போலிருக்கும் நடைபெற்ற மல்யுத்தத்தைக் காண கிராம மக்கள் பெருந்திரளாகக் கூடி இருந்தனர்.
அவ்வப்போது கைதட்டியும் உரக்க குரல் எழுப்பியும் உற்சாகப்படுத்தினர். பாபாவே வெற்றி பெறுவார் என்று வெளிப்படையாகப் பலர் கூறினார். மொஹித்தின் தாம்போலியின் ஆதரவாளர்கள் சிலர் அதை வன்மையாக மறுத்தனர்.
ஒரு பக்கம், அவர்களிடையே விவாதம் வலுத்துக் கொண்டிருந்தது.
இந்த நேரத்தில் உக்கிரமான சண்டை ஒரு முடிவுக்கு வந்தது. அதன் முடிவு - மொஹித்தின் தாம்போலிக்குச் சாதகமாக அமைந்தது.
சாயிபாபாவின் ஆதரவாளர்கள் வியப்பும் வேதனையும் அடைந்தனர். ஆனால், பாபாவோ எப்போதும் போல் புன்முறுவல் பூத்த முகத்துடன் அந்த இடத்தை விட்டு அகன்றார்.
Wednesday, October 23, 2013
உபதேசமளிக்கிறார்
http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil
Tuesday, October 22, 2013
ஆன்மாவின் பயணம்
ஒவ்வோர் ஆன்மாவும் மிக நீண்ட, நெடிய பயணத்தை மேற்கொள்கிறது. அந்தப் பயணத்தின்போது அது பல்வேறு காலங்களில், பல்வேறு இடங்களில், பல்வேறு உடல்களில் தங்குகிறது. பல வகைப்பட்ட அனுபவங்களை அடைந்து, பக்குவப்பட்டு, பதப்பட்டு, புனிதப்பட்டு இறுதியில் ஆண்டவனுடன் இரண்டறக் கலந்து ஒன்றுபடுகிறது.
மனித வாழ்க்கை என்பது, ஆன்மாவின் பயணத்தில் வழியில் தங்கும் ஒரு சத்திரமாக, சாவடியாகத்தான் கருதப்படுகிறது.
அவதார புருஷரான சாயிபாபா, 'அன்னை இருக்கும் இடம்' என்று பொருள்படும் "துவாரகாமாயீ" என்ற மசூதியில்தான் முதலில் தங்கியிருந்தார்.
பின்னர், ஒரு நாள் இரவு மசூதியிலும், மறு நாள் இரவு மற்றோர் இடத்திலும் தங்குவதை வழக்கமாக்கிக் கொண்டார். அந்த இடம் ஊர் பொது இடமாகவும் வழிப்போக்கர்கள் தங்கும் விடுதியாகவும் விளங்கிய 'சாவடி' என்ற கட்டிடமாகும். சாவடியில் தங்கியதன் முலம், 'மனிதப் பிறவியே ஒரு சாவடியில் இருப்பதைப் போன்றது' என்பதைக் குறிப்பாக பாபா உணர்த்தியதாக பக்தர்கள் நம்புகின்றனர்.
Monday, October 21, 2013
சமாதி மந்திர்

மனிதன் எத்தனையோ விஷயங்களை முன்கூட்டித்திட்டமிடுகிறான். சில நேரம் நண்பர்கள், உறவினர்கள், வல்லுனர்கள் ஆகியோரைக் கலந்தாலோசிக்கவும் செய்கிறான்.
மனித முயற்சி வரவேற்கத்தக்கது என்றாலும் தெய்வ அருளும் கூடி வரும்போது எண்ணியது எண்ணியபடி அமையும். மனிதன் எவ்வளவு தான் முயற்சி செய்தாலும் தெய்வ சங்கல்பத்தின்படிதான் செயல்கள் நிகழும் என்பது மனிதனுக்கு காலம் கற்றுத் தரும் பாடம். காலம் கடந்த பின்னரே இதை நாம் புரிந்து கொள்கிறோம்.
ஷீரடியில் ஒரு மாளிகையைக் கட்டிய பாபுசாகேப் புட்டி, அதன் நடுவில் ஒரு மேடை அமைத்து அதில் முரளிதரனின் சிலையை வைக்க பாபாவின் சம்மதம் வேண்டினார். பாபாவும் அதற்கு சம்மதித்து, "கோவில் வேலை முடிந்தவுடன் நான் அங்கு தங்குவேன்!" என்று கூறினார். தான் கட்டி முடித்த மாளிகையில் பாபா வந்து தங்கப்போகிறார் என்பதை அறிந்த புட்டி, மிகவும் மனம் மகிழ்ந்தார். ஆனால் 'நடக்கப் போவது என்ன?' என்பது அப்போது அவருக்கு தெரியவில்லை.
சாயிபாபா, தான் உடலைத் துறக்கும் நாள் வெகு தொலைவில் இல்லை என்பதை அறிந்திருந்தார். புட்டியின் மாளிகையைத் தனது சமாதிக் கோவிலாகத் தேர்ந்தெடுத்திருந்தார். எனவே, புட்டியின் வேண்டுகோளுக்குச் சம்மதித்த பாபா, அங்கு முரளிதரனாக தானே வரப்போவதைக் குறிப்பாக உணர்த்தும் விதத்தில்தான், "கோவில் வேலை முடிந்தவுடன் நான் அங்கு தங்குவேன்!" என்று கூறினார்.
Saturday, October 19, 2013
தள்ளி நிற்கிறார்கள்
என்றைக்கு என் பெயரைச் சொல்ல ஆரம்பித்தீர்களோ அன்றைக்கே உங்கள் பாவங்கள் தொலைந்து விட்டன. கெட்ட காலம் முடிந்துவிட்டன என்பதை கேள்விப்பட்டும் நம்பாமல் இருக்கிறவர்கள் என்னை நம்புகிறேன் என உதடுகளால் சொல்லி உள்ளத்தால் தள்ளி நிற்கிறார்கள் என்பதை உணர்ந்து கொள்ளுங்கள். ஸ்ரீ சாயி தரிசனம்
Friday, October 18, 2013
தோல்வி
http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil
Thursday, October 17, 2013
விரும்பியதையெல்லாம் அளிக்கிறேன்
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil
Wednesday, October 16, 2013
வியாதிகள் நிவாரணம் செய்யப்படும்;
என்னுடைய கதைகளை மட்டும் கேட்டால்கூடப் போதும்,வியாதிகள் நிவாரணம் செய்யப்படும்;என்னுடைய நிஜமான பக்தனை நான் மரணத்தின் பிடியிலிருந்து விடுவிப்பேன்.
பக்தியுடன் என்னுடைய லீலைகளை செவிமடியுங்கள்;கேட்ட பிறகு அவற்றை ஆழமாக மனத்துள் பிரதிபலியுங்கள்;பிரதிபலித்தபின் தியானம் செய்யுங்கள்;உன்னதமான திருப்தியை பெறுவீர்கள்.-ஸ்ரீ ஷிர்டி சாய்பாபா.
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil
Tuesday, October 15, 2013
துன்பங்களிலிருந்து விடுதலையளிப்பவர்
http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil
Monday, October 14, 2013
சிற்றெறும்பின் காலில்..

பாபா அடிக்கடி சொல்வார்: "'சிற்றெறும்பின் காலில் கட்டியிருக்கிற மணியின் ஓசையைக் கூட என்னால் கேட்கமுடியும். நீ என்ன செய்தாலும் அதை உடனே நான் பார்த்துவிடுவேன். உன் செயல்கள் நல்லதாகவும், உனது நடத்தை சரியாகவும் இருந்தால் உனது அனைத்து விஷயங்களையும் நானே உடனிருந்து கவனித்துக் கொள்வேன்!" என்பார்.
நாம் செய்கிற அனைத்தையும் பாபா பார்த்துக் கொண்டிருக்கிறார் என்ற உண்மை தெரிந்துவிட்டால், நாம் படுகிற துன்பத்தைப் பற்றியோ, எதிர்பார்க்கிற விஷயத்தைப் பற்றியோ கவலை படமாட்டோம்.
அனைத்தையும் அவர் கண்கள் பார்க்க, அவரால் நடைபெறுகிறது என்பதை தெரிந்து அமைதியாக இருப்போம். அமைதியாக - பொறுமையாக அனைத்தையும் கவனியுங்கள். பாபா உங்களை கவனித்து வருகிறார்.
Sunday, October 13, 2013
பக்தியை அதிகப்படுத்துவேன்
http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil
Saturday, October 12, 2013
துன்பத்திலும் பொறுமை
துன்பம் வந்தபோதும் கூட என் மீது நம்பிக்கை குறைவுபடாமல் இருந்தால் அவர்களுக்கு என் உதவி கண்டிப்பாக கிடைக்கும்.-ஷிர்டி சாய்பாபா
Thursday, October 10, 2013
வெளிப்படையாக நான் செயல்படுவேன்
http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil
Wednesday, October 9, 2013
உணவு
உணவு கொடுப்பவர், உணவு உண்பவர் என் வடிவங்களே, காரியநிமித்தம் நீங்கள் சிரமப்பட்டுக் கொண்டிருகையில் நான் அவ்விதமாக அங்கு தோன்றிக் கொண்டிருப்பேன், எனக்கு ஒரு வடிவம் என்பதும் இல்லை, பெயரும் இல்லை. அப்படி அன்பு மழை பெய்விப்பவர் நானே என்று என்னை அறிந்து கொள்பவர் என் பக்தர்கள்.- ஷிர்டி சாய்பாபா
Tuesday, October 8, 2013
பாக்கியம்
ஒழுங்கிற்கு வந்து நிற்கும்.
ஓய்வெடுப்பதோ,பேசுவதோ,நடப்பதோ,எந்த வேலையை செய்தாலும் சரி,ஒவ்வொரு கணமும் அசைக்க முடியாத நம்பிக்கையை பாபாவிடம் கடைப்பிடித்தால்,பக்தன் தான் விரும்பிய மனோரதங்கள் அனைத்திலும் நிறைவு பெறுவான்.
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil
Monday, October 7, 2013
காணாத இடத்தில் திட்டுகிறார்கள்

மக்கள் தாம் எவ்வளவு வஞ்சனை உள்ளவர்களாக இருக்கிறார்கள்.அவர்கள் பாதங்களில் விழுகிறார்கள், தட்சணை அளிக்கிறார்கள். ஆனால், அந்தரங்கமாக, காணாத இடத்தில் திட்டுகிறார்கள். இது அற்புதமாக இல்லையா? சத் சரித்திரம் 21
Sunday, October 6, 2013
காரியங்கள் விரைவாக நிறைவேற்றபடுகின்றன
உங்கள் கோரிக்கைகளை நிறைவேறச் செய்யவே இரவும், பகலும் நான் உழைக்கிறேன். இதை தெரிந்து கொண்டு பாரத்தை என் மேல் சுமத்துபவனின் காரியங்கள் விரைவாக நிறைவேற்றபடுகின்றன. ஷிர்டி சாய்பாபா
Saturday, October 5, 2013
நேர்த்திக்கடன்
நேர்த்திக்கடன் எடுத்துக்கொண்டபோது இருந்த உம்முடைய குழம்பிய மனம். நிறைவேற்றுவதில் ஏற்பட்ட மிகுந்த தாமதத்தால் மனம் நொந்து பரிகாரமாக நீங்கள் ஏற்றுக்கொண்ட விரதம், அனைத்தையும் நீங்கள் ரகசியமாக வைத்திருப்பினும் நான் அறிவேன். ஷிர்டி சாய்பாபா. சத்-அத்-15-66.
http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil
Thursday, October 3, 2013
ரகசியமாக வருகிறேன்
எனக்கு கேட்கும்படி மிக சப்தமாக நீ என்னை அழைக்கிறாய். நான் தெரியாமல் மிக ரகசியமாக உன்னிடம் வருகிறேன்- ஷிர்டி சாய்பாபா
Wednesday, October 2, 2013
வருத்தம்
வார்த்தைகளால் மனிதர்களையோ, ஜீவராசிகளையோ, அடித்தோ இம்சிப்பதால் எனக்கு மிகவும் வருத்தம் ஏற்படுகிறது. ஷிர்டி சாய்பாபா
Tuesday, October 1, 2013
விசுவாசத்தின் ஆழத்திற்க்கேற்றவாறு பக்தனின் பக்தியை கௌரவிக்கிறார் பாபா !
பாபா, தன் பக்தன் தன்மேல் வைக்கும் "நம்பிக்கை மற்றும் விசுவாசத்தின் ஆழத்திற்கேற்றவாறு", அவருக்கு மிகச்சிறந்த அனுபவங்களைக் கொடுத்த...
