Saturday, November 30, 2013

உங்கள் மீது நம்பிக்கை வையுங்கள்

யார் வேண்டுமானாலும், எதை வேண்டுமானாலும் பேசட்டும். உங்கள் பாதையில் உறுதியாகச் செல்லுங்கள். அவரிடம் நம்பிக்கை வையுங்கள் இவரிடம் நம்பிக்கை வையுங்கள் என்றெல்லாம் பிறர் சொல்வதைக் கேட்டு மயங்காதீர்கள். முதலில் உங்கள் மீது நம்பிக்கை வையுங்கள். உங்கள் மீது வைக்கிற அசைக்க முடியாத நம்பிக்கையே என் மீது நீங்கள் வைக்கிற நம்பிக்கையாகும். என்னால் எதுவும் முடியும் என்று சொல்லுங்கள், நிச்சயம் அது முடியும். காரணம், உன்னில் இருப்பது நீயல்ல, நான்! - ஷிர்டி சாய்பாபா        
http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Friday, November 29, 2013

என்னுடைய சக்தி

"எந்த விஷயத்திலும்,எந்த சமயத்திலும் நான் தன்னந்தனியானவன் என்ற பா(BHA)வம்  வராமல் பார்த்துக் கொள்ளுங்கள்.உங்களுக்கு நான் துணையாக இருக்கிறேன். இருப்பேன்.என்னை ஆராதிப்பவர் இருக்கும் வரை என் அனுபூதிகள் தோன்றிக்கொண்டே இருக்கும்.நான் இருக்கிறேன் என்ற உண்மையைத் தெரிவிக்கும்.உங்கள் பாவனை ஏதாக இருக்குமோ அதற்கேற்ற பலனையே நீங்கள் பெறுவீர்கள். உன்னுடைய விஸ்வாசமே என்னுடைய சக்தி"
                                                                          .-ஸ்ரீ சாயி திருவாய் மொழி.
http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Thursday, November 28, 2013

பாபா சீரிய அனுபவங்களை அளிக்கிறார்

எதெல்லாம் நடக்கவேண்டுமோ, அதெல்லாம் அதன்வழி நடக்கட்டும். ஆனால், நம்முடைய நல்வாழ்வு பாபாவை பற்றிய சிந்தனையில்தான் இருக்கவேண்டும். அப்படியிருக்க, விதியால் நிர்ணயிக்கப்பட்ட விபத்துக்களும் இன்னல் தரும் நிகழ்ச்சிகளும் விலகும்.! இளகிய மனம் படைத்த சாயி பக்தர்களின் எண்ணங்களைக் கண்டு அவர்களுடைய நம்பிக்கை (பக்தியை) பாராட்டும் வண்ணம் ஒன்றன்பின் ஒன்றாகச் சீரிய அனுபவங்களை அளிக்கிறார்.
http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Wednesday, November 27, 2013

அன்பைப் பொலிவார்

எனது பக்தன் எப்படி இருந்தாலும், நல்லவனோ கெட்டவனோ,அவன் என்னுடையவன்.அவனுக்கும் எனக்குமிடையே பேதம் எதுவுமில்லை.இப்போது அவன் பொறுப்பு முழுவதும் என்னிடமே உள்ளது.
                                                                                         -ஸ்ரீ ஷிர்டி சாய்பாபா.
http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Tuesday, November 26, 2013

நல்லதாகவே நடக்கும்

நான் என்று உன் கரம் பற்றினேனோ,அன்று முதல் இன்றுவரை நீ கேட்டாலும் கேட்காவிட்டாலும் உனக்கு நன்மை மட்டுமே செய்வேன் என கங்கணம் கட்டிக்கொண்டு உன்னைச் சுற்றி வருகிறேன்.ஆகவே கலக்கமடையாதே,திகைப்படையாதே,நடப்பதெல்லாம் நல்லதாகவே நடக்கும்.-ஷீரடிசாய்பாபா[ஸ்ரீ சாயியின் குரல்]
http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Monday, November 25, 2013

ஷிர்டி

பக்தர்: பாபா என்னை ஏன் இங்கு (ஷிர்டி) வரவழைத்தீர்கள்?

பாபா ஆயிரக்கணக்கானவர்கள் இருக்கின்றனர்.நான் அவர்களை  எல்லாம் இங்கு அழைப்பதில்லை .நீரும் நானும் பல ஜன்மங்களாக நெருங்கிய தொடர்பு உள்ளவர்கள்.நீர் அதை அறிய மாட்டீர்.ஆனால் நான் அறிவேன்.நேரம்  கிடைக்கும் போதெல்லாம்,ஷிர்டி வந்து போய் கொண்டிரும்.

                                                         -ஸ்ரீ ஷிர்டி சாய்பாபாவின் திருமொழிகள்.

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Sunday, November 24, 2013

இறைவன் சந்தோஷமடைவார்

முன்ஜன்ம சம்பந்தமில்லாமல் எவரும் எங்கும் போவதில்லை.ஆகவே மனிதனாயினும், மிருகமாயினும்,பறவையாயினும்,அவமதிப்பு செய்து விரட்டிவிடாதே.யார் உன்னிடம் வந்தாலும் தகுந்த மரியாதை கொடு.தாகத்தால் தவிப்பவர்களுக்கு நீரும்,பசியால் வாடியவர்களுக்கு உணவும்,ஆடையில்லாதவர்களுக்குத் துணியும்,திக்கற்றவர்களுக்கு இருப்பிடமும் அளிப்பாயாக.இவ்வாறு செய்தால் இறைவன் சந்தோஷமடைவார்.-ஸ்ரீ ஷிர்டி சாய்பாபா.
http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Saturday, November 23, 2013

தானதர்மங்கள் செய்யவேண்டும்

மனிதன் அடிக்கடி தானதர்மங்கள் செய்யவேண்டும்.பசிப்பிணியைக் களைவதையே முக்கியமான தானமாகக் கருதவேண்டும்.
நித்தியநியமமாக அன்னதானம் செய்வதையே தலையாய கடமையாகக்கொண்டு வாழவேண்டும்.மதியம் பன்னிரண்டு மணிக்கு அன்னமேதும் கிடைக்காவிட்டால் மனம் குழம்புகிறது.
நமக்கெப்படியோ அப்படியே பிறருக்கும்.இதை உள்ளுக்குள் நன்கு உணர்ந்தவன் உயர்ந்த மனிதன்.ஆசாரதர்மத்தில் பிராதனமானதும் முதலில் செய்யவேண்டியதுமான தானம் அன்னதானம்.இதுபற்றி நன்கு சிந்தித்துப் பார்த்தால் அதைவிட சிறந்த தானம் எதுவும் இல்லை என்பது நன்கு விளங்கும்.அதிதி(விருந்தாளி) நேரத்தோடு வந்தாலும்,நேரந்தவறி வந்தாலும், இல்லறத்தோன் அவருக்கு அன்னமிட்டுத் திருப்தி செய்யவேண்டும். அன்னமளிக்காமல் விருந்தாளியை அனுப்பிவிடுபவன் இன்னல்களுக்கு அழைப்புவிடுகிறான்;இதில் சந்தேகமே இல்லை.அன்னதானம் அத்தனை மஹத்துவம் வாய்ந்தது;ஆகவே பாபாவும் உலகியல் ரீதியைக் கடைப்பிடிக்கும் வகையில் ஜனங்களுக்கு உணவளித்துத் திருப்தி செய்தார்.
http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Friday, November 22, 2013

சாயி சிந்தனை

நம்முடைய மனமே நமக்கு விரோதி என்பதும், பரம விரோதியும் செய்ய நினைக்காத கெடுதல்களையும் உற்பத்தி செய்யும் என்பதும், எல்லோருக்கும் நிச்சயமாகத் தெரியும். மற்றவர்களுக்கு நமது எண்ணங்கள் தெரியாமல் இருக்கலாம். மகாராஜரான பாபாவுக்கு உடனே தெரிந்துவிடும். நம் மனத்தில் குதர்க்கமான எண்ணங்கள் எழலாம். அவற்றை அறவே விடுத்து, பாபாவின் பாதங்களின்மேல் மனத்தைச் செலுத்தினால், மனம் ஒருமுகப்படுத்தல் விருத்தியடையும். ஒருமுகப்பட்ட மனத்தில் சாயி சிந்தனை பின்தொடரும். இதைத்தான் சாயி நம்மைச் செய்யவைக்கிறார். எடுத்த காரியமும் தடங்கலின்றி நிறைவேறுகிறது.
http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Thursday, November 21, 2013

என்னை அறிந்துகொள்கிறார்கள்

யாருடைய பாவங்கள் விலக்கப்ப்பட்டுவிட்டனவோ
அந்தப் புண்ணியசாலிகளே என்னை அறிந்துகொள்கிறார்கள்;என்னை வழிபடுகிறார்கள்.-ஸ்ரீ ஷிர்டி சாய்பாபா.
http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Wednesday, November 20, 2013

பாபாவின் ஆணைப்படியே நடக்கிறது

என்ன நடக்கிறதோ,அது பாபாவின் ஆணைப்படியே நடக்கிறது.அவரே தூக்கிவிடுகிறார்; அவரே தள்ளியும்விடுகிறார்.அவரே சண்டையிடுகிறார்;அல்லது மற்றவர்களைச் சண்டையிடவைக்கிறார்.அவரே காரியங்களைச் செய்பவரும் செய்யவிருப்பவரும் ஆவார்.'இது என்னுடைய சாதனை;இது என்னுடைய அதிகாரத்தின் காம்பீர்யம்;இது என்னுடைய புத்திசக்தியின் வைபவம்'என்று கர்வம் கொள்ளலாகாது.பக்தன் எப்பொழுதும் பாபாவின் ஆதீனத்தில் வாழ்கிறான்.அவனுக்கென்று தனியான இருப்பு ஒன்றும் இல்லை.
                                                                                           
                                                   
http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Tuesday, November 19, 2013

சமர்த்த சத்குரு

பாபா ஒரு சாதாரண வித்தைகாரர் அல்ல,அவர் ஒரு சமர்த்த சத்குரு.பக்தர்களின் உள்ளங்களில் விசுவாமும் நம்பிக்கையும் நிரம்பி வழிய பாபா சில சமத்காரங்களையோ,வியக்கத்தகும் உத்திகளையோ கையாளுகிறார்.நன்றி உணர்ச்சி,பிரேமை,பக்தியாக மாறுகிறது.இவ்வாரு பாபாவின் செயல்பாட்டின் உண்மை நோக்கம் காணப்படுகிறது.கீழ்த்தரமான பற்றுக்களால் உண்டாகும் மாசுகளையும் அதன் விளைவுகளையும் பக்தர்களின் இதயங்களிலிருந்து போக்கி,தூய்மைப்படுத்தி,படிப்படியாக பக்தர்களின் ஆன்மாக்களை உயர்ந்த,மேன்மேலும் உயர்ந்த,நிலைகளுக்கு நடத்திச் சென்று அவர்கள் இறுதியில் தம்முடனே இரண்டறக் கலந்து விடும்படி செய்கிறார் பாபா.தங்கள் தேவைகள் யாவற்றையும் அளிக்கக் கூடிய வள்ளல் என்ற நோக்கத்துடன் மக்கள் பாபாவை அணுகுகின்றனர்.அவர்களது லௌகீக தேவைகளை பூர்த்தி செய்து கொள்ளவே பாபாவிடம் செல்கின்றனர்.ஆனால் பின்னர் பலர் பாபா ராமன்,சிவன் போலவே தங்கள் இஷ்ட தெய்வம் என்றும்,தங்கள் முன்னோர்களின் குல தெய்வமே பாபாவாக புதிய உருவில் தோன்றி வையகத்தில் புராதானதெய்வீக பணிகளை நிறைவேற்றுகிறது எனவும்,கண்டு கொண்டுவிடுகின்றனர்.
                                                                             -பூஜ்யஸ்ரீ நரசிம்ம சுவாமிஜி.
http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Monday, November 18, 2013

ஞானம்

விதிக்கப்பட்ட,விதிக்கபடாத,செயல்களிடையே உள்ள வித்தியாசம்  தெரியாமல் எப்பொழுதும் பாவச்செயல்களிலேயே புரண்டு கொண்டிருப்பவன் எவ்வளவு புத்திசாலியாக இருப்பினும் என்ன நன்மையை அடைந்துவிட முடியும்?அதுபோலவே,அலைபாயும் புலன்களால் குழப்பப்பட்ட மனத்துடன்,இதயத்தில் நிம்மதியின்றி எப்பொழுதும் சாந்தியற்ற நிலையில் இருப்பவன் ஞானத்தை எவ்விதம் அடைவான்?போதுமென்ற மனத்துடன்,குருபுத்திரனாக வாழ்ந்து,ஆசார அனுஷ்டானங்களைக் கடைப்பிடித்துத் தன்னையறியும் தேடலில் சலனமில்லாது நிற்பவன் ஞானத்தை அடைவான்-ஸ்ரீ சாயி இராமாயணம் .
http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Sunday, November 17, 2013

கருணாமூர்த்தி

நான்கு புருஷார்த்தங்களில் (அறம்,பொருள்,இன்பம்,மோட்சம்) கடைநிலை மோட்சம். ஆயினும் அதுவும் குருபாதங்களின் சக்திக்கு ஒப்பாகாது.அத்தகைய குருவின் பாததீர்த்ததை அருந்தியவனின் வீட்டைத் தேடிக்கொண்டு மோட்சம் சத்தம் செய்யாமல் வரும்.குரு கருணாமூர்த்தியாக அமைந்துவிட்டால்,சம்சார வாழ்க்கை சுகமாக இருக்கும்,நடக்காததெல்லாம் நடக்கும்.அரைக்கணத்தில் உம்மை அக்கறை சேர்ப்பார்.
"இந்த பாதங்கள் புராதனமானவை.உம்முடைய கவலைகள் எல்லாம் தூக்கியடிக்கப்பட்டுவிட்டன.என்னிடம்  பூரணமான நம்பிக்கை வையும்.சீக்கிரமே நீர் பேறுபெற்றவர் ஆவீர்"
                                                                                         -ஸ்ரீ ஷிர்டி சாய்பாபா.

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Saturday, November 16, 2013

ஸ்ரீ சாய் சத்சரித்திரம் படியுங்கள்

எந்த பக்தர் தமக்கு நன்மைகள் ஏற்படவேண்டுமென்ற ஆர்வத்தால் உந்தப்பட்டு பக்திபா(BHA)வத்துடனும் ஒருமுனைப்பட்ட மனத்துடனும் ஸ்ரீ சாய் சத்சரிதத்தை படிக்கிறாரோ,அவருடைய வழிபாடு என்றுமே வியர்த்தம் ஆகாது.சாயி அவருடைய வேண்டுகோள்களை நிறைவேற்றுகிறார்.உலகியல் தேவைகளையும் ஆன்மீகத் தேவைகளையும் பூர்த்திசெய்கிறார் .அவர் செய்யும் வழிபாடு என்றுமே வீண்போவதில்லை.கடைசியில் அவர் எல்லாப் பேறுகளையும் பெற்றவர் ஆகிறார்.
http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Friday, November 15, 2013

பாபாவின் லீலைகள்

"இந்த ஜகத்தில் நான் ஒருவனே இருக்கின்றேன்; என்னைத் 
 தவிர  வேறெதுவும் இல்லை.இப்பூவுலகம் மாத்திரமல்லாது
 மூன்று உலகங்களிலும் நான்,நான் மாத்திரமே இருக்கின்றேன்."
                                                                                                   -ஷிர்டி சாய்பாபா.
பாபாவின் லீலைகள் சூக்குமமானவை;ஆராய்ச்சிக்கு அப்பாற்ப்பட்டவை .யாரால் அவற்றைக் கற்பனை செய்ய முடியும்?எல்லாரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்திவிடுகின்றன!வேறெதையும் நாடாமல் சாயியின் பாதங்களில் எவர் சிரம் தாழ்த்துகிறாரோ  அவர்,தம்மைக் காக்கும் தெய்வமும் அபயமளிப்பவரும் நன்மையைச் செய்பவரும் தீமையை அழிப்பவரும் ஒரே அடைக்கலமும் சாயியே என்று உணர்ந்துகொள்வார்.

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Thursday, November 14, 2013

என்னில் கலந்துவிடுவீர்

அணுப் பிரமாணமும் 'நான்,எனது' என்ற உணர்வின்றி,உமது இதயத்தில் உறைகின்ற என்னிடம் சரணடைந்துவிடும்.உடனே உம்மிடமிருந்து அறியாமை-மாயை விலகும்.எங்கோ சென்று சொற்பொழிவுகளை மேலும் கேட்கவேண்டிய அவசியம் இல்லாமல் போய்விடும்.நீரும் நானும் ஒன்றே என்று பார்க்க ஆரம்பித்து,அப்பார்வையை விஸ்தாரப்படுத்தினால்,உலகில் உள்ளதனைத்தும் உம் குருவாகத் தெரியும்.நான் இல்லாத இடமாக எதுவும் தெரியாது.இவ்வாறான ஆன்மீகப் பயிற்சியைத் தொடர்ந்து செய்துவந்தால்,நான் எங்கும் வியாபித்திருக்கும் அனுபவம் உமக்குக் கிட்டும்.பின்னர் நீர் என்னில் கலந்துவிடுவீர்.அன்னியம் என்று ஒன்று இல்லை என்று உணர்வை அனுபவிப்பீர்.-ஸ்ரீ ஷிர்டி சாய்பாபா.
http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Wednesday, November 13, 2013

பாபா நம்மை பக்குவப்படுத்துவார்

நமது முதலாளி தன்னைப் பிடித்து நெருப்பில் போட்டுவிடு! என்று கூறினால் நாம் செய்வோமா? உளைச்சேற்றில் இறக்கிவிடு என்று கூறினால் அதைச் செய்வோமா? அப்படித்தான்,பாபாவும் நாம் கேட்டுக்கொண்டாலும் கூட நமக்கு எது நல்லதோ, எது நன்மை உயர்த்துமோ அதைச் செய்வார். தவறாக நாம் கேட்பதைத் தராமல் தட்டிக்கழிப்பதைப் போல காலம் தாழ்த்துவார். அந்த இடைக்காலம் வரை அனுபவங்களையும், உணர்வு மாற்றங்களையும் கொடுத்து நம்மை பக்குவப்படுத்துவார். ஸ்ரீ சாயி தரிசனம்.  
http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Tuesday, November 12, 2013

பாபா என்னுடையவர்

நீ நடக்கும் பாதையில் முட்கள் இருந்தால் நானே முன்பாகவே களைந்து விடுகிறேன்.நான் உன்னுடனையே வந்துக்கொண்டிருப்பதை நீ மறந்தால் நான் என்ன செய்ய முடியும்?பாபா என்னுடையவர் என்று நீ நினை,நீ என்னுடையவன் என்று நான் கருதுவேன்.-ஷீரடி சாய்பாபா.

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Monday, November 11, 2013

பாபாவின் அற்புதங்கள்-2

                                                     பாபாவின் அற்புதங்கள்-2 
மகல்சாபதி(பாபாவின் நெருங்கிய பக்தர்) தமது பல்லக்குடன் ஜேஜுரிக்கு பயணம் மேற்கொண்டார்.அங்கே பிளேக் நோய் பரவியிருந்தது.மகல்சாபதியும் அவருடன் வந்த சக பயணிகளும் பல்லக்கை கீழே வைத்தனர்;மிக்க மனவுளைச்சலுடன் மகல்சாபதி பல்லக்கின் மீது சாய்ந்தவர்.அமர்ந்திருந்தார்.அவருக்குப் பின் யாரோ இருப்பது போல் அவருக்கு தோன்றியது.பின்பக்கமாக அவர் திரும்பியபோது,அங்கே பாபாவைக் கண்டார்;ஆனால் அவர் உடனே மறைந்து விட்டார்.சகாக்களிடம் பாபா அவர்களுடன் இருப்பதாக அவர் கூறினார்.அவர்கள் எல்லோருக்கும் துணிவு வந்தது;மேலும் நான்கு தினங்கள் அங்கேயே தங்கினார்கள்.ஒருவரையும் பிளேக் நோய் பற்றவில்லை.எல்லோரும் நலமாக திரும்பிச் சென்றனர்.அவர்கள் திரும்பி வந்தபோது,-

பாபா: பகத்,உமக்கு நல்லதோர் யாத்திரை,நீர் பல்லக்கின் மீது சாய்ந்தவாறு உட்கார்ந்திருந்தீர்.அந்த சமயம்,
நான் அங்கே வந்திருந்தேன்.

இவ்விதமாக தமது அதிசயத்தக்க சக்திகளால் தாம் வாஸ்தவமாகவே அன்று ஜேஜூரியில் இருந்ததை உறுதிப்படுத்தி மகல்சாபதி பாபாவைக் கண்டது மனப்பிராந்தியோ,மாயையோ அல்ல என்பதையும் தெளிவாக்கினார்.

                                       அற்புதங்கள் தொடரும்.....
http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Sunday, November 10, 2013

ஸ்ரீ சாய்பாபாவின் அற்புதங்கள்

                                         ஸ்ரீ சாய்பாபாவின் அற்புதங்கள் -1

நானா சந்தோர்க்கர் (பாபாவின் பக்தர்) ஓர் கோடை நாளில் ஹரிச்சந்திரா குன்றின் மீது ஏறிக் கொண்டிருந்தார்; அவரை தாகம் பீடித்தது.அவ்விடத்தில்  சுற்றுமுற்றும் எங்கும் நீர் இல்லை.நானா, "பாபா இங்கிருந்தால்,
எனக்கு நீர் அளித்திருப்பார்" என கூறிக் கொண்டார்.அந்த நேரத்தில் பாபா நாற்பது மைல்களுக்கப்பால் உள்ள ஷீரடியில் இருந்தார்.

பாபா : (மசூதியில் அமர்ந்தவாறு) நானாவுக்கு தாகம்.கோடை வெய்யில் கடுமையாக இருக்கிறது.அவருக்கு ஒரு கை நிறையவாவது நீர் அளிக்க வேண்டாமா?

அங்கிருந்த பக்தர்களுக்கு பாபா பேசுவது புரியாமல் புதிராக இருந்தது.ஆனால் குன்றின் மேலிருந்த நானா ஒரு வேடுவன் மேலிருந்து இறங்கி வருவதைக் கண்டார்.

நானா : வேடுவ,எனக்கு தாகமாக உள்ளது.குடிப்பதற்கு நீர் கிடைக்குமா?

வேடுவன்: நீர் உட்கார்ந்திருக்கும் பாறையின் கீழேயே நீர் உள்ளது.
இவ்வாறு கூறிவிட்டு வேடுவன் சென்றுவிட்டான்.

பாறையை நகர்த்தி விட்டு பார்த்ததில் ஒரு கைநிறைய குடிநீர் காணப்பட்டது.நானா அதைப் பருகினார்.

பல தினங்களுக்குப் பின் நானா சாந்தோர்க்கர் சீரடிக்குச் சென்றனர்.
பாபா:நானா,நீர் தாகத்துடன் இருந்தீர்.நான் உமக்கு நீர் அளித்தேன்.நீர் குடித்தீரல்லவா ?
                                                      அற்புதங்கள் தொடரும்....

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Saturday, November 9, 2013

உபதேசங்கள் எல்லாம் வீண்

நான் இம்மசூதியில் அமர்ந்து அசத்தியம் பேசமாட்டேன்.என் சொற்களை நம்பி,உன் ஆர்வத்தை என்பால் திருப்பு.என் பார்வையை உன்மேல் வைப்பேன்.ஆகையால் மந்திரம்,தந்திரம்,உபதேசங்கள் எல்லாம் வீண்.என் பேச்சைகேள்.விரதத்தை கைவிட்டு உணவு உட்கொள்.என்னையே லட்சியமாகக் கொள்.உனக்கு நிச்சயம் சுபம் விளையும்.என் குரு எனக்கு இதைத்தவிர்த்து வேறொன்றையும் கற்றுக் கொடுக்கவில்லை.-ஸ்ரீ ஷிர்டி சாய்பாபா.
http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Friday, November 8, 2013

துவாரகாமாயி

நானாக இந்த மசூதிக்கு (துவாரகாமாயி) வருகிறேன் என்ற பாவத்துடன் நீங்கள் வருகிறீர்கள்.ஆனால் உண்மையான மர்மம் என்னவென்று தெரியுமா?உங்கள் ருசிக்கு தகுந்த ஏதோ ஒரு சங்கல்பத்தை இம்மசூதியே தோற்றுவிக்கும்.அந்த மசூதி மாயி அவ்விதமாக அவர்களை இங்கு அழைத்து வந்து,அவர்கள் விருப்பத்தைப் பக்கத்தில் வைத்து,உபயோகப்படும் தன்  விருப்பத்தை நிறைவேற்றிவிடும்.இக்காரணத்தால் உலக விருப்பங்கள்,பரமார்த்திக லாபத்தை பெறுவது நிகழும்.-ஸ்ரீ சாய் திருவாய்மொழி.
http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Thursday, November 7, 2013

கர்மவினை

பிறவிகள் மாறிக் கொண்டே இருக்கும்.தேகம் மாறிக் கொண்டே இருக்கும்.ஆனால் கர்மவினை நம் பின்னால் வந்து கொண்டே இருக்கும்.மீதமுள்ள கர்மவினைகளில் தான் பிறவிகள் தொடர்கின்றன.அனுபவிக்காமல் கர்மவினை நீங்காது.வேறுவழி இல்லை.அனுபவிக்காமலேயே அதற்கு மாற்று வழி இல்லாதது ஏதாக இருக்குமோ அதை கர்மாவின் உருவமாகவே கருத வேண்டும்.ஆனால் இவ்விஷயத்தில் பாபா ஏன் தேவைப்படுகிறார்? தேவை உள்ளது.பாபாவை ஆராதனை செய்து கொண்டிருந்தால்,அவரின் கதைகளைக் கேட்டுக்
கொண்டிருந்தால்,சாயி சாயி என்று எப்பொழுதும் நீங்கள் ஸ்மரணை செய்து கொண்டிருந்தால்,அதன்பலனாக இரும்பு போன்ற கர்மா பஞ்சு போலாகிவிடும்.கர்மாவை அனுபவிக்கும் சக்தியை,சக்தியே உருவான ஸ்ரீ சாய் பாபா பிரசாதிப்பார்.
http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Wednesday, November 6, 2013

இறை நாம மகிமை

இறை நாம மகிமை பற்றி எவ்வளவு சொன்னாலும் அது குறைவானதேயாகும்.ஆகையால் மாயையை நசிக்கும் சக்தி அந்த பரமாத்மனுக்கு மட்டுமே இருக்கும்.அவர் அனுக்கிரகம் கிடைக்கும் வரையில் ஆராதிக்க வேண்டும்.ஸ்மரணை செய்ய வேண்டும்.கலியுகத்தில் இறைநாமத்தைத் தவிர்த்து,தருணோபாயம் வேறொன்றுமில்லை.அது ஒன்றே அடைக்கலம்.-ஸ்ரீ சாயி திருவாய் மொழி.
http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Tuesday, November 5, 2013

குரு

தேகத்தையும், மனதையும், புத்தியையும் ஒரு குருவுக்கு மட்டுமே சமர்ப்பிக்க வேண்டும்.அவரையே தியானிக்க வேண்டும்.தியானம் தியானிக்கப்படும் பொருளாகவும் அவரே இருக்க வேண்டும்.அப்போது எங்கு பார்த்தாலும் அந்த குருவே பிரசன்னமாவார்.அந்த குரு உடலை விட்டு நீங்கி இருந்தாலும் ஆத்மார்த்த நட்புணர்ச்சி,ஆத்மா வடிவத்தில் சிஷ்யனைச் சுற்றியே திரிந்து கொண்டிருக்கும்.இவ்விதமாக குரு சிஷ்யர்கள் பௌதீகமாயும், உடலற்றபோதும்  (நிர்குண சாகாரத்தில்)
ஒன்றாக சேர்ந்தே இருப்பார்கள்.குரு ஆத்ம சொரூபனே என்ற பாவம் நிச்சயமாய் இருக்க வேண்டும்.அந்த பாவனை இல்லாத குரு பூஜை வீணாகிப்போகும்.குருவின் பாதங்களே சரணம்.-ஸ்ரீ சாயி திருவாய் மொழி.
http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Monday, November 4, 2013

கவசமாய் நான் இருக்கிறேன்.

உங்கள் உச்சிமுதல் உள்ளங்கால் வரை கவசமாய் நான் இருக்கிறேன்.உங்கள் தொழில் எதுவானாலும் உங்கள் வேலையை என்னுடையதாக மாற்றி விடுகிறேன்.பார்வையும் பார்க்கப்படும் பொருளும் நானாக இருக்கிறேன்.இவ்வளவாக நான் உழைத்துக் கொண்டிருப்பதால் பயம் ஏன்?பயமற்று இருங்கள்!ஏக்கம் ஏன்?எனக்காக ஏங்குங்கள்.பரபரப்பு ஏன்?என் மீதே மிக்க ஆவல் கொள்ளுங்கள்.கவலை ஏன்?எனக்காகவே  கவலைப்படுங்கள்.
பரஸ்பர அனுராகத்திலேயே நான் இருக்கிறேன்.ஆத்மார்த்த அன்பு எங்குண்டோ அங்கு நான் இருக்கிறேன்.விசாலமான சிருஷ்டியில் நம்பிக்கையை உதவியாகக் கொண்டு என்னுள் பிரவேசியுங்கள்.-ஸ்ரீ சாயி திருவாய் மொழி.
http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Sunday, November 3, 2013

எந்த துன்பமும் இருக்காது

இந்த சராசர சிருஷ்டியனைத்திலும்,உள்ளும் புறமும் நானே நிறைந்துள்ளேன்.உங்கள் செயல்கள் அனைத்தும் எனக்குத் தெளிவாகத் தெரியும்.இதை எப்போதும் மறக்காமலிருங்கள் .
நான் உங்கள் இதயத்துள் வசிப்பவன்.என்னை லட்சியமாகக் கொண்டவர்களுக்கு எந்த துன்பமும் இருக்காது.என்னை மறந்தவர்கள் மாத்திரம் மாயையின் சவுக்கடிகளை ஏற்பார்கள்-ஸ்ரீ ஷிர்டி சாய்பாபா.
http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Saturday, November 2, 2013

பாரத்தை நானே சுமக்கிறேன்

சாய் பக்தர்களுக்கு இனிய தீபாவளி நல் வாழ்த்துகள்.
யார் என்னிடமே ஆர்வமுள்ளவர்களாகவும்,என்னையே தியானிப்பவர்களாகவும்,என்னையே அடையத்தக்க குறிக்கோளாகவும்  கொண்டிருப்பார்களோ அவர்களின் யோகச் ஷேமங்களை நானே ஏற்றுக் கொள்கிறேன்.யார் என் நாமத்தை சதா உச்சரிக்கிறார்களோ,அவர்களின் விருப்பத்தை நிறைவேற்றி,அவர்களின் நம்பிக்கையை அதிகப்படுத்துகிறேன்.யார் எனது லீலைகளையும்,கதைகளையும் கானம் செய்கிறார்களோ அவர்களின் யோகச் ஷேமங்களை நானே கவனித்துக் கொள்வேன்.யார் தமது மனத்தையும் புத்தியையும் என் பாதங்களில் கிடத்துகிறார்களோ,அவர்களுக்கு எப்போதும் ஆனந்தத்தை உண்டாக்குவேன்.என் நாமசங்கீர்த்தனம் செய்பவர்களை விஷய வாசனைகள் பாதிக்காது.சாயி சாயி என்று எப்போதும் ஸ்மரிக்கும் என் பக்தர்களை மரண பயத்திலிருந்து காப்பாற்றுவேன்.அவர்களைப் பிணைத்துள்ள பவ-பந்த விலங்குகள் அகற்றப்படும்.என் மீது நம்பிக்கை வைத்து சரணடைந்தவர்களின்
பாரத்தை நானே சுமக்கிறேன்.இது என்னுடைய வாக்கு தானம்-ஸ்ரீ ஷிர்டி சாய்பாபா.

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Friday, November 1, 2013

மாயை

மாயை  மற்றும் அதன் செயல்பாடுகள் இருந்தால் இருக்கட்டுமே.மாயை எனது பாதங்களில் சரணடைந்து என் ஆதீனத்திலேயே இருக்கும்.என்னை எப்போதும் ஸ்மரிக்கின்றவர்களின் அருகில் கூட மாயை வராது.மாயையும் கூட எனது அம்சமே.எனது சேவையிலே மூழ்கி,என்னை சரணடைந்தவர்களுக்கு மாயையால் எவ்விதமான தீங்கும் வராது.என் வார்த்தைகளின் மேல் திடமான விஸ்வாசம் வையுங்கள்.-ஸ்ரீ ஷிர்டி சாய்பாபா.
http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

விசுவாசத்தின் ஆழத்திற்க்கேற்றவாறு பக்தனின் பக்தியை கௌரவிக்கிறார் பாபா !

பாபா,  தன் பக்தன் தன்மேல் வைக்கும் "நம்பிக்கை மற்றும் விசுவாசத்தின் ஆழத்திற்கேற்றவாறு",  அவருக்கு மிகச்சிறந்த அனுபவங்களைக் கொடுத்த...