சாய் பக்தர்களுக்கு இனிய தீபாவளி நல் வாழ்த்துகள்.
யார் என்னிடமே ஆர்வமுள்ளவர்களாகவும்,என்னையே தியானிப்பவர்களாகவும்,என்னையே அடையத்தக்க குறிக்கோளாகவும் கொண்டிருப்பார்களோ அவர்களின் யோகச் ஷேமங்களை நானே ஏற்றுக் கொள்கிறேன்.யார் என் நாமத்தை சதா உச்சரிக்கிறார்களோ,அவர்களின் விருப்பத்தை நிறைவேற்றி,அவர்களின் நம்பிக்கையை அதிகப்படுத்துகிறேன்.யார் எனது லீலைகளையும்,கதைகளையும் கானம் செய்கிறார்களோ அவர்களின் யோகச் ஷேமங்களை நானே கவனித்துக் கொள்வேன்.யார் தமது மனத்தையும் புத்தியையும் என் பாதங்களில் கிடத்துகிறார்களோ,அவர்களுக்கு எப்போதும் ஆனந்தத்தை உண்டாக்குவேன்.என் நாமசங்கீர்த்தனம் செய்பவர்களை விஷய வாசனைகள் பாதிக்காது.சாயி சாயி என்று எப்போதும் ஸ்மரிக்கும் என் பக்தர்களை மரண பயத்திலிருந்து காப்பாற்றுவேன்.அவர்களைப் பிணைத்துள்ள பவ-பந்த விலங்குகள் அகற்றப்படும்.என் மீது நம்பிக்கை வைத்து சரணடைந்தவர்களின் பாரத்தை நானே சுமக்கிறேன்.இது என்னுடைய வாக்கு தானம்-ஸ்ரீ ஷிர்டி சாய்பாபா.
http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil